“எனது பிள்ளைகள் இரவில் நித்திரையில் இருக்கும் போது யாராவது எனது வீட்டுக்குள் எறிகணை (ரொக்கட்) களை அனுப்பினால் அதனை தடுப்பதற்கு என்னால் ஆன அத்தனையையும் செய்வேன். அதைத்தான் இஸ்ரேல் செய்திருக்கிறது.”
மேலே குறிப்பிடப்பட்டது எனது கருத்தல்ல 2008 டிஸம்பர்27ம் திகதி காஸா மீது தொடுக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதலின் பின்னர் தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஹுஸைன் பராக் ஒபாமாவின் கூற்று.
சட்ட விரோத இஸ்ரேல் நாட்டின் தென்பகுதி நகரான செதரத் நகருக்கு விஜயம் செய்த ஒபாமா இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான படுகொலைகளை இந்த வார்த்தைகளைக் கொண்டுதான் ஆசிர்வதித்தார்.
சுமார் பதினைந்து லட்சம் மக்கள் வாழுகின்ற காஸா பிரதேசம், மனித உரிமைகள் மறுக்கப்படுகின்ற அக்கிரமம் நிகழ்த்தப்படுகின்ற ஒரு திறந்த வெளிச் சிறை. அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க யாரும் இந்த உலகில் இல்லை. காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.
தனது வீட்டுக்கு எறிகணை அனுப்புபவர்களைப் பற்றி கதைக்கும் ஒபாமா, 60 வருடங்களுக்கு மேலாக தனது நாடும், வீடும், உரிமைகளும் அபகரிக்ப்பட்டு, தனது சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதியாக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? எப்படியெல்லாம் போராட நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்ற யதார்த்தத்தை மறந்து சிறு பிள்ளைத்தனமாக பேசி இருந்தார்.
தனது வீட்டுக்கு வருகின்ற எறிகணையை தடுக்க ஒபாமாவிற்கு இருக்கும் அதிகாரம் மற்றவர்களுக்கும் இருக்கிறது என்ற உண்மையைதான் பலஸ்தீன, லெபனானிய, ஈராக்கிய போராளிகள் இன்று நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பலஸ்தீன் மீது தொடுக்கப்படுகின்ற எறிகணைத் தாக்குதல்கள் தனது தாய் மண் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்களாக, தனது பிள்ளைகள் உறங்கும் போது வந்து விழுகின்ற எறிகணைகளாக தான் பலஸ்தீனர்கள் பார்க்கின்றார்கள்.
ஒபாமாவின் கருத்துப்படி பார்த்தால்.... பலஸ்தீனை அபகரித்து இன்று அந்த ம்களை, அந்த மண்ணின் மைந்தர்களை அகதி முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கின்ற, அந்த மக்கள் மீது அநியாயம் புரிகின்ற இஸ்ரேலை தாக்குகின்ற, அழிக்கின்ற தார்மீக உரிமை பலஸ்தீனர்களுக்குத் தான் இருக்கிறது.
இந்த ஒபாமாவின் தத்துவப் படி...
எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ஈராக்கிற்குள் புகுந்திருக்கும் அமெரிக்கப் படைகளை தாக்குகின்ற, அழிக்கின்ற தார்மீக உரிமை உரிமை ஈராக்கியர்களுக்கு இருக்கிறது.
தனது பிராந்திய அரசியல் நலனை ஸ்த்திரப்படுத்த ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்க கூலிப்படையான நேட்டோ படைகளை அழிக்கின்ற ஒழிக்கின்ற உரிமை ஆப்கானியருக்கு இருக்கிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் ஒற்றை ஏகாதிபத்தியம் ஒன்றுக்குள் உலகை சிக்க வைக்கும் அமெரிக்க அரசியலுக்கும், அதன் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக எழுகின்ற உரிமை அனைவருக்கும் இருக்கிறது.
மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் என்ற நாட்டை சட்டவிரோதமாக உருவாக்கி சகல ஆயுத வல்லமைகளுடனும், அதிகாரத்துடனும் செயற்படுகின்ற ஒரு நாடாக அதனை உருவாக்கி தனது ஏகாதிபத்திய ஏஜன்ட் ஆக இஸ்ரேலை அந்த பிராந்தியத்தில் நிலை நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா.
மத்திய கிழக்கில் இஸ்ரேலை நேசக்கரங்களோடு அணைத்து போஷித்து வரும் அமெரிக்கா, அதே நேசக்கரங்களோடு அரபு நாடுகளையும் அரவணைத்து நிற்கிறது.
150 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்த சர்வதேசிய சமூகம். சுமார் 150 இலட்சம் (ஒன்றரை கோடி) யூதர்களின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கிடக்கிறது. விகிதாசாரத்தில் 100 க்கு ஒன்று. சனத்தொகை 100 முஸ்லிம்களுக்கு ஒரு யூதர்.
ஏன் இந்த நிலை? எங்களை நாங்களே கேட்டுக்கொள்வோம்.
இதை காஸா படுகொலையின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி தந்த செய்தியாக மனதில் பதித்து வைத்துக் கொள்வோம்.
Wednesday, 29 December 2010
Sunday, 26 December 2010
விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி
விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி “இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த போர்ச் சித்திரத்தை ஈராக் ஆவணங்கள் கொடுக்கின்றன.” By Jerry White அக்டோபர் 22ம் திகதி, தவறுகளை வெளிப்படுத்தும் வலைத்தள அமைப்பாக விக்கிலீக்ஸ் கிட்டத்தட்ட 400,000 அமெரிக்க இராணுவ உள்ளறிக்கைகளை வெளியிட்டது. இவை ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி கண்டனத்திற்கு ஆளாகின்ற சான்றுகளை அளிக்கின்றன. வரலாற்றிலேயே இராணுவ இரகசியத் தகவல்களின் மிகப் பெரிய கசிவான“ஈராக்கியப் போர்க் குறிப்புக்கள்” உள்ளடக்கியுள்ள SIGACT அல்லது முக்கியமான நடவடிக்கை அறிக்கைகள் அமெரிக்க இராணுவத்தினர் ஜனவரி 2004 ல் இருந்து டிசம்பர் 2009 வரை பதிவு செய்தவற்றைக் கொண்டுள்ளன. இவை “ஈராக்கியப் போர்க் களத்தில் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் பார்த்து, கேட்ட விரிவான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன, அமெரிக்க அரசாங்கம் மட்டுமே இதுவரை அறிந்திருந்த இரகசிய வரலாறு பற்றி உண்மையான பார்வை இப்பொழுது முதல் முதலாகக் கிடைக்கிறது.” என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆவணங்களில் வெளிப்பட்டுள்ள முக்கிய தகவல்களில் இதுவரை வெளியிடப்படாத 15,000 சாதாரணக் குடிமக்கள் இறப்புக்கள் மற்றும் அமெரிக்க துருப்புக்கள் இராணுவச் சோதனை சாவடிகளில் குறைந்தது 834 பேர்களில் 30 குழந்தைகள் உட்பட 681 பொதுமக்களை கொன்றதும் அடங்கும். இந்த ஆவணங்கள் ஈராக்கிய கையாட்களின் படையும் பொலிசும் கைதிகளைச் சித்திரவதை செய்ததில் அமெரிக்க உடந்தை பற்றியும் விவரிக்கின்றன. பார்க்கவும்: “The WikiLeaks documents and the rape of Iraq ”) |
Monday, 20 December 2010
முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!
முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!
by Dr. Paul Craig Roberts
முஸ்லிம்களோ ஜனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன ‘இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்’ மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் ‘பாரசீக வளைகுடா’ என்கிறார்கள், அரேபியர் ‘அராபிய வளைகுடா’ என்கிறார்கள். இதுதான் பிரச்சினை!
இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற முடியாதிருப்பதற்குக் காரணமும் முஸ்லிம்களுக்கிடையே காணப்படும் பிரிவினைதான். மேலும், அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதும், அனேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கைப் பாவைகளை ஆட்சியில் அமர்த்தி அடக்கியாண்டுகொண்டு வருவதும் இதே பிரிவினையின் விளைவுதான்.
Saturday, 18 December 2010
கர்பலா! கண்ணீரின் ஈரத்தால் கனத்த பாரம்!
கர்பலாவின் கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
இமாம் ஹுசைனை
இழந்த நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!
கர்பலாவின்
கண்ணீர்த் துளியே
நெஞ்சில் பாரமனதே!
கொடுமை நிறைந்த
கர்பலா என்
கல்பில் என்றும் ஈரமே!
(இது இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான என்னால் இயற்றப்பட்ட பாடல்)
கர்பலா உன்
ஷஹாதத் காயம்
உம்மத்திற்கு பாரமே!
கர்பலாவின்
கதையை கேட்டு
கர்பலாவின்
கொடுமை கேட்டு
அண்ணல் நபியின்
பேரர் பூவே
களத்தில் கசங்கி
வீழ்வதா?
அந்த துயரை
மறந்து நாங்கள்
மயங்கி இன்னும் வாழ்வதா?
பூக்கள் நொந்து போனதே!
தென்றல் வெந்து போனதே!
அன்பு நபியின்
பேரர் பூவை
தீமை கொண்டு போனதே!
வஹி தந்த கிலாபத்தை (இமாமத்தை)
உலகம் இன்று இழந்ததே!
தலைமை இல்லா
அனாதை போல
உம்மத் இன்று ஆனதே!
றஸுலுல்லாஹ் (ஸல்)
தந்த ஒளியை
ஊதி அணைக்க முடியுமா?
தலைவன் இன்றி
தவிக்கும் எங்கள்
வாழ்க்கை என்று விடியுமோ?
தீமை ஒழிந்து போகுமே!
தீயில் எரிந்து போகுமே!
உண்மை எழுந்து வாழுமே!
உலகம் தன்னை ஆளுமே!
இமாம் ஹுஸைனை
இழந்த நெஞ்சம்
மீண்டும் எழுந்து ஆளுமே!
கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
இமாம் ஹுசைனை
இழந்த நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!
கர்பலாவின்
கண்ணீர்த் துளியே
நெஞ்சில் பாரமனதே!
கொடுமை நிறைந்த
கர்பலா என்
கல்பில் என்றும் ஈரமே!
(இது இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான என்னால் இயற்றப்பட்ட பாடல்)
கர்பலா உன்
ஷஹாதத் காயம்
உம்மத்திற்கு பாரமே!
கர்பலாவின்
கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
கண்கள் பூத்துப்போனதே!
கல்பில் என்றும் ஈரமே!
தீனை காக்க
கொடியைத் தாங்கி
உங்கள் கைகள் உயர்ந்ததே!
தீய மனிதர்கள்
செய்த கொடுமையில்
உங்கள் தலையும் வீழ்ந்ததே!
பேரர் பூவே
களத்தில் கசங்கி
வீழ்வதா?
அந்த துயரை
மறந்து நாங்கள்
மயங்கி இன்னும் வாழ்வதா?
பூக்கள் நொந்து போனதே!
தென்றல் வெந்து போனதே!
அன்பு நபியின்
பேரர் பூவை
தீமை கொண்டு போனதே!
வஹி தந்த கிலாபத்தை (இமாமத்தை)
உலகம் இன்று இழந்ததே!
தலைமை இல்லா
அனாதை போல
உம்மத் இன்று ஆனதே!
றஸுலுல்லாஹ் (ஸல்)
தந்த ஒளியை
ஊதி அணைக்க முடியுமா?
தலைவன் இன்றி
தவிக்கும் எங்கள்
வாழ்க்கை என்று விடியுமோ?
தீமை ஒழிந்து போகுமே!
தீயில் எரிந்து போகுமே!
உண்மை எழுந்து வாழுமே!
உலகம் தன்னை ஆளுமே!
இமாம் ஹுஸைனை
இழந்த நெஞ்சம்
மீண்டும் எழுந்து ஆளுமே!
கர்பலாவின் கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
இமாம் ஹுசைனை
இழந்து நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!
Friday, 17 December 2010
Thursday, 16 December 2010
எச்சரிக்கை! சுதந்திரமாய் சுற்றித் திரிகிறான் கொலைக் குற்றவாளி!
விக்கீலீக்ஸ் தகவல்களால் அமெரிக்கா திண்டாடி போயிருக்கிறது.
அடாவடித்தன அரசியலை ஏனைய நாடுகள் மீது திணிக்கும் சர்வதேச பொலிஸ்காரனான அமெரிக்கா இன்று உலக அரங்கில் நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கிறது.
உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செயற்படுகின்ற அதன் துாதுவராலயங்கள். உளவுவேலை பார்க்கின்ற அமைப்புகளாய் செயற்பட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
விக்கிலிக்ஸ் அண்மையில் வெளியிட்ட தகவல்களில் அனேகமானவை இராஜதந்திர மட்டத்தில் இடம்பெற்ற வெறும் “சங்கதி”களாய் இருந்தபோதும்,
2007 ம் ஆண்டு ஈராக்கில் பக்தாத் நகரில் நிராயுதபாணியான மக்கள் மீது ஹெலிகப்டர் மூலம் தொடுக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் மறைக்க முடியாதது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இது ஒன்றே அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டிய சாட்சியுள்ள ஒரு சிறந்த ஆவணமாகும்.
இது வெறுமனே தாள்களில் பதியப்பட்ட தகவல்களாய் வராமல், அச்சொட்டாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றாகவே வெளிவந்தது. அந்த ஒளிப்பதிவில் சிறுவர்களை சுட்டுக்கொன்று விட்டு கேலியாக சிரித்துக் கொண்டு “ சிறுவர்களை ஏன் இவர்கள் யுத்தக்களத்திற்கு அழைத்து வருகிறார்கள்?” என்று கிண்டலடித்து ஏளனமாய் ஈராக்கிய மக்களை பார்க்கும் அமெரிக்க இராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கை அந்த ஒளிப்பதிவு உலகிற்கே எடுத்துக் காட்டியது.
பக்தாத் கொலைக்களம் தொடர்பாக இந்த ஒளிப்பதிவு வெளிவந்த உடனே மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமெரிக்கா என்ன செய்தது?
குற்றமிழைத்த இராணுவத்தைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவது ஒரு நல்ல நாட்டுக்கு அழகு. ஆனால் அமெரிக்கா என்ன செய்தது? அந்த காணொளியை விக்கிலீக்ஸுக்கு வழங்கினார் என்ற சந்தேகத்தில் அதன் இராணுவ உளவுப்பிரிவில் கடமையாற்றிய பிரட்லி மென்னிங் ( Bradley Manning) ஐ கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் சட்டத்தைப் பாருங்கள்.
கொலை செய்வது குற்றமல்ல, கொலையாளியை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் குற்றம்.
அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. அந்த க் கொலைக்காட்சிகளை வெளியே கசிய விட்டார் என்ற குற்றத்திற்காக பிரட்லி மென்னிங் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் மிகவும் ஆதாரபூர்மான ஆவணம் பக்தாத் கொலை வீடியோ தான். அது வெளிவந்ததும் ஏற்பட்ட பரபரப்பு அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆயிரக்கணக்கான வம்புக் கதைகள் அடங்கிய ஆவணங்களோடு அப்படியே அடங்கி விட்டது.
அந்த போர் குற்றத்திற்காக அமெரிக்காவை தட்டிக் கேட்கும் திராணி இவ்வுலகில் யாரிடமுமில்லை.
அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அல்லது பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டு ஓரம்கட்டப்படுகின்றார்கள்.
சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் கூட பாலியல் குற்றவாளிகளை பாய்ந்து பிடிப்பதிலுள்ள அவசரம், கொலைக் குற்றவாளிகள் விடயத்தில் அறவே இல்லை. அது கொலைக் குற்றவாளிகளொடு கொஞ்சிக் குலாவுகிறது.
விக்கிலீக்ஸ் அண்மையில் வெளியிட்ட மற்றும் வெளியிட தயாராக இருக்கும் வம்புக் கதைகளுடன் கூடிய காகித அடுக்குகளுக்குள் ஆதாரபூர்வமான ஒளிப்பதிவாய் வெளிவந்த பக்தாத் கொலைகள் அமிழ்ந்தே போய் விடும்.
இதைப் பார்க்கும் போது ஏற்கனவே விக்கிலீக்ஸால் வெளிவந்த ஆதார பூர்வமான போர்க்குற்றத்தை மூடி மறைக்க அமெரிக்காவே விக்கிலீக்ஸுக்கு வேண்டுமென்றே வெறும் கதைகள் அடங்கிய தகவல்களை கசிய விட்டதுவா என்று சந்தேகம் வருகிறது.
Thursday, 9 December 2010
விக்கிலீக்ஸ் - சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம்
| |||
சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது சவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும் களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20 - 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டதாகவும் இவர்களைத் தடுப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் கூட அஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தகைய களியாட்டங்கள் சவூதி நாட்டின் இளவரசர்களிடையே தற்போது சகஜம் எனவும் சிலரின் வீடுகளுக்குள்ளேயே மதுபானசாலை, டிஸ்கோ ஆகியவை உள்ளதாகவும் அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அவ் ஆவணத்தினை இங்கு காணலாம் http://213.251.145.96/cable/2009/11/09JEDDAH443.html நன்றி வீரகேசரி இணையம் 12/9/2010 12:42:13 PM |
Wednesday, 1 December 2010
விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!
விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!
அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கிலீக் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் ஒன்று சர்வதேச காவல்துறையான இன்டர்போலுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இரண்டு பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்ததாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும், உலகின் மீது அது திணிக்க முயலும் ஏகாதிபத்திய வெறித்தனத்தையும், அந்த வெறித்தனத்தால் உலகிற்கு ஏற்பட்ட விளைவுகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
தனது சுரண்டல் அரசியலுக்காக பல உயிர்களை அமெரிக்கா குடித்திருக்கிறது. குறிப்பாக ஆப்கான், ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளை அது துவம்சம் செய்து வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகும் அரபு நாடுகள் தனது இனத்தையே கொள்ளும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்தாசை வழங்கியிருப்பதை, வழங்கவிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
எது எப்படியிருப்பினும் பாலியல் குற்றத்திற்காக விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் தயாராக இருக்கிறது,
அமெரிக்கா இராணுவம் இராக்கில் நிகழ்த்திவரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு எந்த நீதிமன்றமும் இதுவரை இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கவில்லபோலும்.
எனவே விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களை ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் எப்போது முன் வரும் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனங்களிலும் எழுகிறது.
Saturday, 30 October 2010
ஒரு சோகமான பாடல் ! இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.
ஒரு சோகமான பாடல் !
இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.
இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.
சிங்கள இனவாதம் தமிழர்களை நசுக்கிய போது அதற்கு எதிராக எழுந்த விடுதலைப் போராட்டம் தனது பூமியில் வாழ்ந்த சகோதர சிறுபான்மையான முஸ்லிம்கள் மீது தனது அடக்கு முறையை ஆயுத ரீதியாக பிரயோகிக்க ஆரம்பித்தது.
சிங்கள பெரும்பான்மை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை அதே பாணியில் தமிழ் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு மிக மோசமாக இழைத்தது.
இருபது வருடங்களுக்கு முன் முஸ்லிம்கள் தமது தாயக பூமியிலிருந்து புலிகளால் விரட்டி அடிக்கப்பட்டனர்.
Sunday, 17 October 2010
ஈரானோடு மோத தாலிபான்களோடு இணங்கிப்போகிறது அமெரிக்கா?
ஈரானை தாக்குவதற்காக தனது நேச நாடான சஊதி அரேபியாவிற்கு கோடிக்கணக்கான டொலர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து சஊதியை இராணுவ மயப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. ஆப்கானில் தனது வியுகத்தை தலை கீழாக மாற்றி இருக்கிறது. தாலிபான்கள் விடுதலை பேச்சுவார்த்தை என்ற பின்னணியில் அமரிக்காவிற்கு எதிராக இருக்கும் ஆப்கான் தளத்தை ஈரானுக்கு எதிராக திருப்பும் ஒரு முயற்சியாக இதை பார்க்க முடியும்.
அதன் முதற் கட்ட நடவடிக்கையாக தாலிபானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனியை பாகிஸ்தான் அரசு மூலம் விடுதலை செய்திருக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தத்திற்கு பக்க பலமாக நின்று தாலிபான்களோடு போராடிய பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவின் தேவைக்காக அந்த அமைப்போடு சுமுகமான உறவைப் பேண முயற்சி செய்து வருகின்றது.
தாலிபான்களை அழித்து உலகையே பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றி விட்டே ஊர் திரும்புவோம் என்று சபதமிட்டு வந்த அமெரிக்கா வின் தாலிபான்கள்தொடர்பான போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் அண்மைய நிலைப்பாட்டில் பெரும் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.
அண்மைக்காலமாக தாலிபான்களின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் நேட்டோ படைகள் திண்டாடுவது போன்ற ஒரு நிலையை மேற்கத்தைய ஊடகங்கள் பரப்பி வருகின்றன்.
பல ஆண்டுகள் போராடி ஒழித்த தாலிபான்களின் பலம் மீண்டும் புதிய வேகத்தில் வளர்வது போன்ற ஒரு பிரமையை அமெரிக்க ஊடக்ஙகள் ஏற்படுத்தி வருகின்றன.
எனவே அமைதியான ஆப்கான் ஒன்றின் உருவாக்கத்திற்கு அமைதிப் பேச்சுவார்த்தை அவசியம் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து தாலிபான்களின் பயங்கரவாதத்தை உட் பிளவுகளை வைத்து ஈரானுக்கு எதிராக திருப்பிவிடும் ஓரு சதியையும் அமெரிக்கா செய்து வருகிறது.
விடுதலை செய்யப்பட்டிருக்கும் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனியை வைத்து பேச்சுவார்த்தை நாடகத்தை ஆரம்பித்து அவர்களை அமைதி படுத்தி தனது பொது எதிரியான ஈரானோடு தனது யுத்தத்தை ஆரம்பிக்கவும் அதற்கேற்ற தளமாக ஆப்கானையும் ஏனைய முஸ்லிம் நாடுகளையும் உருவாக்க அமெரிக்கா பல வழிகளில் முயற்சித்து வருகிறது.
Thursday, 7 October 2010
அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ... இனிமேல் மனிதர்களுக்கு எருமை என்று திட்டி எருமைகளை அவமானப்படுத்துவதை விட்டு விடுவோம்!
அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ...
Tuesday, 28 September 2010
கத்தார் ! கிலாபத் சிந்தனையின் கனவு ராஜ்ஜியம் ?
கத்தார் ! கிலாபத் சிந்தனையின் கனவு ராஜ்ஜியம்?
பிரச்சாரப் பணிக்ககாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடையூறு இன்றி இடம் கொடுக்கும் நாடு கத்தார் . எமது நாட்டின் புத்திஜீவிகள் பலர் அடிக்கடி பிரச்சாரப் பணிக்காக கத்தருக்கு சூறாவளி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
Thursday, 2 September 2010
ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!
MupatjpAk; rt+jpapd; Mzp mறைjYk;;
KOg; g+rdpf;fhia Nrhw;wpy; kiwf;Fk; rt+jp J}jufk;!
,yq;ifg; gzpg;ngz; Mupatjpapd; clk;gpy; Vw;wg;gl;l Mzpfs; jkf;F re;Njfj;ij Vw;gLj;Jtjhf nfhOk;G rt+jp J}jufk; njuptpj;jpUg;gjhf Clfq;fs; nra;jp ntspapl;bUf;fpd;wd.
Rt+jp J}jufk; mk;gyj;jpw;F tUk; jdJ ehl;bd; mrpq;fq;fis rfpj;Jf;nfhs;s Kbahky; mtrug;gl;L ,e;j mwpf;ifia ntspapl;L ,Uf;fpwJ.
Mupatjpapd; tptfhuk; Mjhug+h;tkhdJ!
clypy; nrYj;jg;gl;bUe;j Mzpfs; mWit rpfpr;ir %yk; ntspnaLf;fg;gl;bUf;fpd;wd. itj;jpah;fs; mWit rpfpr;ir nra;Ak; fhl;rpfs; Clfq;fspd; %yk; KO cyfpw;Fk; fhl;lg;gl;bUf;fpd;wd.
Mupatjp xU kdNehahspah vd;W gupNrhjpj;j itj;jpau;fs; mtu; rpwe;j kdepiyapy; ,Ug;gjhf cWjpaspj;Jk; cs;sdu;. New;W rpur njhiyf;fhl;rp nra;jpapy; itj;jpaNu ,jid cWjpg;gLj;jpdhu;.
,J ,g;gbapUf;f
Saturday, 28 August 2010
பணிப் பெண்ணின் உடம்பிற்குள் 23 ஆணிகள். சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்
பணிப் பெண்ணின் உடம்பிற்குள் 23 ஆணிகள்.
(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)
சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.
இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.
சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்.
அமெரிக்க குவான்டானமோ மற்றும் ஈராக்கிய அபூ கிரைப் சிறைகள் மட்டும் தான் மனிதாபிமானத்திற்கு முரணான, மிருகத்தனமான சித்திரவதைகள் செய்யப்படும் வதைமுகாம்கள் என வாசித்திருப்பீர்கள்.
ஆனால் இஸ்லாத்தின் புனித பூமியாகிய சவூதி அரேபியாவில் பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தால் ஜாஹிலிய்யா என்ற அறியாமைக்காலத்தில் தான் தொடர்ந்தும் அந்த நாடு இருந்து வருகின்றது என்ற உண்மை புலனாகும்.
(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)
சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.
இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.
Tuesday, 8 June 2010
WikiLeaks இரகசிய காணொளி விவகாரம் - அமெரிக்க வீரர் கைது!
ஈராக்கில் அமெரிக்க இராணுவம் 2007ல் புரிந்த படுகொலை வீடியோ ஒன்றை WikiLeaks இணையம் வெளியிட்டு அமெரிக்காவின் மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இணையதளத்திற்கு இந்த வீடியோவைஇரகசியமாக வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் Bradley Manning என்ற அமெரிக்க இராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஈராக்கில் கடமையாற்றிய பிரேட்லி மென்னிங் கைது செய்யப்பட்டு தற்போது குவைத்தில் உள்ள அமெரிக்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Saturday, 5 June 2010
இஸ்ரேல் -அமெரிக்கா - அரபு நாடுகள் ! முக்கோண நட்பும் முஸ்லிம் உம்மத்தும்.
சட்டவிரோத இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
பலஸ்தீன் மக்களின் தாயக பூமியை அபகரித்து, இரத்த தாகம் கொண்ட இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் திணித்ததன் மூலம், இஸ்லாத்தின் தாயக பூமியான மத்திய கிழக்கை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.
கடந்த 62 வருடங்களாக பல லட்சம் பலஸ்தீனா்களை அது கொன்று குவித்திருக்கிறது . அப்பாவிப் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடு பார்க்காது கொன்றுக் குவிப்பதில் இஸ்ரேலுக்கு நிகராக இவ்வுலகில் எந்நாடும் கிடையாது.
கடந்த மூன்று வருடங்களாக காஸா மக்கள் மீது அது விதித்திருக்கும் பொருளாதார தடையினால் பலஸ்தீன் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
Thursday, 3 June 2010
இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.
Freedom Flotilla என்ற பெயரில் காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற துருக்கியின் மனிதாபிமான நடவடிக்கை கப்பல் மீது தொடுக்கப்பட்ட இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து 04.06.2010 அன்று கொழும்பில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைகளுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையிலுள்ள சமூக நல இயக்கங்கங்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் முற்போக்கு அரசியல் கட்சிகள் இணைந்து நடாத்தவிருக்கின்றன.
இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைகளுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையிலுள்ள சமூக நல இயக்கங்கங்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் முற்போக்கு அரசியல் கட்சிகள் இணைந்து நடாத்தவிருக்கின்றன.
Saturday, 15 May 2010
இஸ்ரேலின் பாதையில்..... இலங்கை?
இஸ்ரேலின் பாதையில் ... இலங்கை?
பலஸ்தீன் மேற்குக்கரையில் சட்டவிரோதக் குடியிருப்புகள் என்ற போர்வையில் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்படுவதை ஊடகங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
பலஸ்தீனில்
அண்மையில் இலங்கையில் அரங்கேறிவரும் அரச அட்டசாகங்களைப் பார்க்கும் போது மற்றுமொரு இஸ்ரேலாக இது மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
கொழும்பு கொம்பனித்தெரு மிவ்ஸ் வீதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அந்த இடத்திலிருந்து பலாத்கதரமாக பாதுகாப்பு தரப்பினரால் அடித்து உதைத்து வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டு அவர்களின் கண் முன்னாலேயே அவர்களின் வீடுகளை புல்டோசர்களை வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இலங்கையில்
பாதுகாப்பு, பொலிஸ் படைகளின் உதவியினால் நடாத்தப் பட்ட இந்த வேட்டையை எந்த ஊடகமும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் தேர்தல்களின் போது கொழும்பு முஸ்லிம்கள் ஆளும் மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது வாக்குகளை அளித்து வந்திருக்கின்றனர். தமது தேர்தல் பிரசார காலங்களில் ஆளும் தரப்பினரும், அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களும் இதை அடிக்கடி பல இடங்களில் குற்றச்சாட்டாய் முன் வைத்தும் இருந்தனர்.
இன்று முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.
அண்மைய இலங்கையின் இந்த நகர்விற்கு பின்னணியில் முஸ்லிம் விரோத வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் செயற்படுகிறதா என்ற அச்சமும் ஏற்பட்டு வருகிறது.
இதற்குச் சான்றாக கடந்த 12ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இஸ்ரேல் நாட்டின் 62வது சுதந்திர தின விழாவை குறிப்பிடலாம். காலி முகத்திடலிலுள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இந்த விழா இடம்பெற்றது. இஸ்ரேல் நாடு பகிரங்கமாக இலங்கையில் கொண்டாடிய ஒரு விழாவாக இதனை சுட்டிக்காட்ட முடியும்.
காரணம் பலஸ்தீன் மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர் என்று ஜனாதிபதி தன்னை அடிக்கடி சொல்லி வருபவர்.
பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பலஸ்தீன் நட்புறவு கமிட்டியில் பல ஆண்டுகளாக தலைமை வகித்தவர். இத்தகைய பின்னணிகளுக்கு மத்தியில் மஹிந்த அரசாங்கத்தின் அண்மைய நகர்வுகள் பலருக்கு சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.
பலஸ்தீன் மேற்குக்கரையில் சட்டவிரோதக் குடியிருப்புகள் என்ற போர்வையில் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்படுவதை ஊடகங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
பலஸ்தீனில்
அண்மையில் இலங்கையில் அரங்கேறிவரும் அரச அட்டசாகங்களைப் பார்க்கும் போது மற்றுமொரு இஸ்ரேலாக இது மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
கொழும்பு கொம்பனித்தெரு மிவ்ஸ் வீதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அந்த இடத்திலிருந்து பலாத்கதரமாக பாதுகாப்பு தரப்பினரால் அடித்து உதைத்து வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டு அவர்களின் கண் முன்னாலேயே அவர்களின் வீடுகளை புல்டோசர்களை வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இலங்கையில்
பாதுகாப்பு, பொலிஸ் படைகளின் உதவியினால் நடாத்தப் பட்ட இந்த வேட்டையை எந்த ஊடகமும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் தேர்தல்களின் போது கொழும்பு முஸ்லிம்கள் ஆளும் மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது வாக்குகளை அளித்து வந்திருக்கின்றனர். தமது தேர்தல் பிரசார காலங்களில் ஆளும் தரப்பினரும், அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களும் இதை அடிக்கடி பல இடங்களில் குற்றச்சாட்டாய் முன் வைத்தும் இருந்தனர்.
இன்று முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.
அண்மைய இலங்கையின் இந்த நகர்விற்கு பின்னணியில் முஸ்லிம் விரோத வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் செயற்படுகிறதா என்ற அச்சமும் ஏற்பட்டு வருகிறது.
இதற்குச் சான்றாக கடந்த 12ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இஸ்ரேல் நாட்டின் 62வது சுதந்திர தின விழாவை குறிப்பிடலாம். காலி முகத்திடலிலுள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இந்த விழா இடம்பெற்றது. இஸ்ரேல் நாடு பகிரங்கமாக இலங்கையில் கொண்டாடிய ஒரு விழாவாக இதனை சுட்டிக்காட்ட முடியும்.
2010 மே மாதம் 12ம் திகதி கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இஸ்ரேலிய சுதந்திர தின விழாவிற்காக மேற்படி ஹோட்டல் வாசலில் ஏற்றப்பட்டிருந்த இஸ்ரேலிய தேசிய கொடி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இந்த இஸ்ரேலிய சுதந்திர விழா இலங்கையில் அவரது ஜனாதிபதி அலுவலகத்திற்கு மிக அண்மையில் நடைபெற்றிருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.
காரணம் பலஸ்தீன் மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர் என்று ஜனாதிபதி தன்னை அடிக்கடி சொல்லி வருபவர்.
பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பலஸ்தீன் நட்புறவு கமிட்டியில் பல ஆண்டுகளாக தலைமை வகித்தவர். இத்தகைய பின்னணிகளுக்கு மத்தியில் மஹிந்த அரசாங்கத்தின் அண்மைய நகர்வுகள் பலருக்கு சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.
Wednesday, 12 May 2010
சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில் கோல் பேஸ் ஹோட்டலில் தனது 62 வது சுதந்திர தினத்தை (12.05.2010) இன்று கொண்டாடுகிறது .
சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில் கோல் பேஸ் ஹோட்டலில் தனது 62 வது சுதந்திர தினத்தை (12.05.2010) இன்று கொண்டாடுகிறது .
இலங்கை பாலஸ்தீன் மக்களோடு , அந்த மக்களின் போராட்டத்தோடு மிகவும் நெருங்கிய உறவை வைத்திருக்கும் ஒரு நாடாகும் . இலங்கை ஜனாதிபதி திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர். இதற்கு சான்றாக பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ வீதி என்று கூட பெயரிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இன்று ( 12.05.2010 )இலங்கையில் இஸ்ரேலின் சுதந்திர தின வைபவம் இடம்பெறுவது இவை அனைத்தையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறது.
பாலஸ்தீன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த மக்களின் தாயக பூமியை சுதந்திர நாடாக அறிவிக்கும் உரிமை இந்த கொலைக்கார நாட்டுக்கு அறவே இல்லை.
Tuesday, 20 April 2010
19.04.2010 அன்று தடுப்புக் காவல் நீடிக்கப்பட்ட நிலையில்.....அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”
அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”
“இருளிலிருந்து ஒளி”க்கு என்ற இஸ்லாம் சார்ந்த சிங்கள் நூலை வெளியிட்டு இலங்கை காவல் துறையினரால் கடந்த ஒரு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சாரா மாலினி பெரேரா.
19.04.2010 அன்று சகோதாரி சாரா மாலினி பெரேரா கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும், அவருக்கு சரீர பிணை நிற்பதற்கு கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இருவர் தேவைப்படுவதாகவும் சதோரரர்கள் இம்ராஸ், கலீலுர் ரஹ்மான் ஆகியோரிடமிருந்து தகவல் கிடைக்க நீதிமன்றை நோக்கி விரைந்தேன்..
சாரா மாலினி சிறை வைக்கப்பட்ட நாள் முதல் இந்தப் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாய் நினைத்து ஒரு மாத காலமாக முயற்சி செய்து வரும் சகோதரர் அஜ்மல், மேமன் இனத்தைச் சேர்ந்த சகோதரர் அபூ ஆகியோர் சாரா மாலினியின் விடுதலைக்கான பெரும் எதிர்பார்ப்போடு நீதிமன்றில் காத்திருந்தனர். கூடவே கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இரண்டு சகோதரர்கள் பிணை நிற்பதற்காக காத்திருந்தனர்.
செய்தி கேசரிக்க வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரும் காலை முதல் மாலை வரை காத்திருந்தனர்.
ஆனால் அன்று மாலை வரை அவரை காவல் துறை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல், தடுப்புக் காவலை மீண்டும் ஒரு மாத காலத்திற்கான நீடிப்பதற்கான ஆணையைப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றிருப்பதாக எமக்கு அறியக் கிடைத்தது.
இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மூன்று இன மக்களில் அதிகப்படியான அரசியல் கட்சிகளையும், அதிகப்படியான இயக்கங்களையும் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றது.
ஆனால், சாரா மாலினி இன்று தனிமைப்பட்டிருக்கிறார்.
Tuesday, 6 April 2010
இரகசிய காணொளி ( Secret Video) - ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள்!
அமெரிக்க வான் படை ஈராக்கிய அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கும் படுகொலைக் காட்சிகளடங்கிய இரகசிய ஒளி நாடா ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும் இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..
அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும் இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..
Tuesday, 23 March 2010
யெஹுதிகளைப் பாதுகாக்கும் சஊதியின் நிகழ்ச்சி நிரல்!
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது.
எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண்பரொருவரின் சகோதரர் ஒருவருமான றஸீன் மாஸ்டர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சகோ. ரஸீனின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக மையவாடியில் நண்பர்களொடு காத்திருந்தேன்.
அமைதி உலாவும் இடமான அந்த மையவாடியில் அந்த காலை வேளையில்... அமைதியை சிதைத்துக்கொண்டு.. சர்ச்சையொன்று புகைவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
தனது சகோதரரின் ஜனாஸாவை வழமைக்கு மாற்றமாக சுமந்து வரும் முறையில் அதிருப்தியுற்ற எனது நண்பன் ஜனாஸா ஊர்வலத்திலிருந்து விலகி முச்சக்கர வண்டியில் ஏறி ஜனாஸா வருவதற்கு முன்பே மையவாடிக்கு வந்து விட்டார்.
அவரின் அதிருப்தியை விசாரித்த போது தனது சகோதரரின் ஜனாஸாவை தனது குடும்ப அங்கத்தவர்களின் விருப்பத்தையும் மீறி, ஒரு கும்பல் “சுன்னத்தான” முறையில் அடக்கம் செய்யப்போவதாக கூறி, சந்தூக்கில் வைத்து, வழமைக்கு மாறாக சந்தூக்கை துணி ஒன்றால் மூடாமல் கபனிடப்பட்ட ஜனாஸா தெரியும் படி ஊர்வலமாக சுமந்து வருவதாக அறிய வந்தது.
அமைதி உலாவும் இடமான அந்த மையவாடியில் அந்த காலை வேளையில்... அமைதியை சிதைத்துக்கொண்டு.. சர்ச்சையொன்று புகைவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
தனது சகோதரரின் ஜனாஸாவை வழமைக்கு மாற்றமாக சுமந்து வரும் முறையில் அதிருப்தியுற்ற எனது நண்பன் ஜனாஸா ஊர்வலத்திலிருந்து விலகி முச்சக்கர வண்டியில் ஏறி ஜனாஸா வருவதற்கு முன்பே மையவாடிக்கு வந்து விட்டார்.
அவரின் அதிருப்தியை விசாரித்த போது தனது சகோதரரின் ஜனாஸாவை தனது குடும்ப அங்கத்தவர்களின் விருப்பத்தையும் மீறி, ஒரு கும்பல் “சுன்னத்தான” முறையில் அடக்கம் செய்யப்போவதாக கூறி, சந்தூக்கில் வைத்து, வழமைக்கு மாறாக சந்தூக்கை துணி ஒன்றால் மூடாமல் கபனிடப்பட்ட ஜனாஸா தெரியும் படி ஊர்வலமாக சுமந்து வருவதாக அறிய வந்தது.
Sunday, 21 March 2010
இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும் “இளிச்ச”வாயர்களைக் கொண்ட இஸ்லாமிய சமூகமும்!
இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும்
இளிச்சவாயர்களைக்கொண்ட
இஸ்லாமிய சமூகமும்!
இஸ்லாமிய சமூகமும்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு விஜயம் செய்து அதன் தலைவர் உட்பட அதன் செயலாளருடன் “மகிழ்ச்சி”கரமாக கருத்துப்பறிமாறுகின்றார்.
முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா. அதன் அடாவடித்தனத்தாலும், ஆக்கிரமிப்பாலும், அநியாயத்தாலும் இராணுவ பலத்தாலும் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இலடசக் கணக்கானோர் காயங்களோடு கப்றுகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
அமெரிக்க இராணுவத்தால் கணவன்மார் கொலை செய்யப்பட்டு விதவைகளான ஆயிரக்கணக்கான எங்கள் உடன் பிறவா சகோதரிகள் ஈராக் வீதிகளில் விபசாரத்தை தனது தொழிலாக மாற்றியிருக்கின்றார்கள்.
தாய், தந்தையை இழந்த அனாதைச் சிறுவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்ற போர்வையில் அமெரிக்கா வடிவமைக்கும் குண்டு வெடிப்புகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.
ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல உயிர்களை காவு கொள்ள காரணமாய் இருந்ததும் காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பு அரசியலை முஸ்லிம் நாடுகளில் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் இரத்தத்தையும், அந்நதந்த நாடுகளின் வளங்களையும் உறிஞ்சிக் குடிப்பதை குறிக்கோளாய் கொண்டு அதன் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமானது.
அதன் இராணுவ சப்பாத்துகளின் கீழ் நசுங்குண்டு ஈராக் தன் இன்று இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்களை பாதுகாக்கும் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தில் சிக்குண்டு பலஸ்தீன் திறந்த வெளிச்சிறையொன்றில் தவித்துக் கொண்டிருக்கிறது. உணவு, மின்சாரம், தண்ணீர் என்று அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அவர்கள் வாழ்வுக்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆப்கான் அழிந்துக்கொண்டிருக்கிறது.
முஸ்லிம் உலகின் மீது இவ்வளவு அக்கிரமங்களையும் நிகழ்த்திக் கொண்டு ஒரு சில முஸ்லிம் நாடுகளோடும், ஒரு சில முஸ்லிம் இயக்கங்களோடும், அமைப்புகளோடும் மறைமகமாவும், நேரடியாகவும் கொலைகார அமெரிக்கா நட்பை பேணி வருகிறது.
இந்த அமெரிக்க முஸ்லிம் (?) நட்பின் மூலம் முஸ்லிம் உலகை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை இந்தக் கைக்கூலி கும்பல்கள் சாதுர்யமாக செய்தும் வருகின்றன.
Saturday, 13 February 2010
பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் .... உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.
பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் ....
கொழும்பில் ...உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.
உலமா சபையின் ஹலால் பத்வா விவகாரம் அடிக்கடி இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சா்ச்சைகளை கிளப்பி வருகின்றது. கண்மூடித்தனமாக உலமா சபை கொடுக்கும் பத்வா பல பல்தேசிய நிறுவங்களை (குறிப்பாக அமெரிக்க, பிரித்தானிய கம்பனிகளை) அதிக லாபமீட்டும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.
ஹராமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனங்களுக்கு இலட்சக் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்வாவை உலமா சபை வழங்கி வருகின்றது.
இது முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டு ஹராத்தை திணிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சிக்கு உலமா சபை பலியாகி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.
2010 ஹலால் மாநாடு என்ற போர்வையில் பன்றி இறைச்சியை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான கீல்ஸ் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கிறது. அதற்கு இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதான பாத்திரமேற்றிருக்கிறது.
UTO/Educonsult என்ற ஒரு அமைப்போடு சேர்ந்து உலமா சபை இந்த மாநாட்டை நடாத்த விருப்பதாக பத்திரிகைகளில் விளப்பரப்படுத்தப் பட்டிருந்தன. இம் மாநாட்டில் பங்கு பற்றுபவர்களிடமிருந்து ரூபா 6000 முதல் 16000 வரை அறவிடப்படவிருப்பதாகவும் அந்த விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹலால் ஹராம் என்ற ஷரீஅத்தின் கட்டளைகள் வர்த்தக மயமாக உருவாகி வரும் அபாயத்தையும், மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் , மிகவும் தந்திரமாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தையாக இஸ்லாமிய ஷரீஆவை பயன்படுத்துவதையும் இந்த சதிக்கு உலமா சபை தொடர்ந்து பலியாகி வருவதையும் அவாதனிக்கக் கூடியயதாக இருக்கின்றது.
அதேவேளை, அல்லாஹ்வின் சட்டத்தை, ஹலால் அங்கீகாரத்தை, பத்வாவாகபணத்திற்கு விற்பனை செய்வதை இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கின்றதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.
கொழும்பில் ...உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.
உலமா சபையின் ஹலால் பத்வா விவகாரம் அடிக்கடி இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சா்ச்சைகளை கிளப்பி வருகின்றது. கண்மூடித்தனமாக உலமா சபை கொடுக்கும் பத்வா பல பல்தேசிய நிறுவங்களை (குறிப்பாக அமெரிக்க, பிரித்தானிய கம்பனிகளை) அதிக லாபமீட்டும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.
ஹராமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனங்களுக்கு இலட்சக் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்வாவை உலமா சபை வழங்கி வருகின்றது.
இது முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டு ஹராத்தை திணிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சிக்கு உலமா சபை பலியாகி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.
2010 ஹலால் மாநாடு என்ற போர்வையில் பன்றி இறைச்சியை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான கீல்ஸ் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கிறது. அதற்கு இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதான பாத்திரமேற்றிருக்கிறது.
UTO/Educonsult என்ற ஒரு அமைப்போடு சேர்ந்து உலமா சபை இந்த மாநாட்டை நடாத்த விருப்பதாக பத்திரிகைகளில் விளப்பரப்படுத்தப் பட்டிருந்தன. இம் மாநாட்டில் பங்கு பற்றுபவர்களிடமிருந்து ரூபா 6000 முதல் 16000 வரை அறவிடப்படவிருப்பதாகவும் அந்த விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹலால் ஹராம் என்ற ஷரீஅத்தின் கட்டளைகள் வர்த்தக மயமாக உருவாகி வரும் அபாயத்தையும், மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் , மிகவும் தந்திரமாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தையாக இஸ்லாமிய ஷரீஆவை பயன்படுத்துவதையும் இந்த சதிக்கு உலமா சபை தொடர்ந்து பலியாகி வருவதையும் அவாதனிக்கக் கூடியயதாக இருக்கின்றது.
அதேவேளை, அல்லாஹ்வின் சட்டத்தை, ஹலால் அங்கீகாரத்தை, பத்வாவாகபணத்திற்கு விற்பனை செய்வதை இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கின்றதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.
Sunday, 10 January 2010
காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!
காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!
பலஸ்தீன் பிரச்சினை சமகாலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா .
பல தசாப்தங்கள் உலகில் மாற்றமடையாமல் இருக்கும் ஒரே தலைப்பு “ மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடி ” என்றார் நோம் சொம்ஸ்கி.
பலஸ்தீன் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை அடையாளப்படுத்த இதனைத் தவிர வேறு ஒரு வார்த்தைகள் அவசியமில்லை.
காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஒரு வருடம் நிறைவாகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் முற்றாக மறுக்கப்பட்டு ஒரு திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
உணவு, மருந்து, தண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அந்த மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
2006ம் ஆண்டு பலஸ்தீன் அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸ் இயக்கம் போட்டியிடடு வெற்றியீட்டியதைத் தொடர்ந்து மேற்குலகம் கடுமையான தடைகளையும் நெருக்குதல்களையும் கொடுத்து ஹமாஸ் அரசை செயலிழக்கச் செய்தது.
ஹமாஸ் பாராளுமன்ற அமைச்சர்கள், அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகிறார்கள்.
ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் யாரும் இதற்காக ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனிகளாக இருக்கின்றார்கள்.
அடிப்படை வசதிகளும், அத்தியாவசிய பொருட்களும் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் பலஸ்தீன் உலகிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஹமாஸ் மீதான மேற்குலகின் இந்த நெருக்குதல்களுக்கு பின்னணியில் மத்திய கிழக்கின் அரசியல் மறைந்திருக்கின்றது. பலஸ்தீனில் இஸ்லாமிய ஆட்சியமைப்பைக் கொண்ட ஜனநாயக ரீதியாக ஏற்படும் பாராளுமன்ற அரசியல் கட்டமைப்பு தமது மன்னராட்சியின் மகுடங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரபு நாடுகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன.
பலஸ்தீனில் உருவாகும் பாராளுமன்ற அரசியலின் கவர்ச்சி தனது நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்ற அச்சம் அரபு நாடுகளுக்கு இருக்கவே செய்கின்றது.
பலஸ்தீனில் உருவாகும் இஸ்லாமிய அடிப்படையிலான பாராளுமன்ற கட்டமைப்பு அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுக்கு எப்படி அச்சுறுத்தலோ அதே போன்று அந்த பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகும்.
இந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பை விரும்பாத அரபு நாடுகள் தமது மன்னர் ஆட்சி கட்டமைப்பைக் காத்துக்கொள்வதற்காக வேண்டி, பலஸ்தீன் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் திணித்த பொருளாதார தடைகளை மௌனமாக இருந்தது அங்கீகரித்து வருகின்றன.
காணொளி
"அரபிகளே! பலஸ்தீனத்தை பாதுகாக்க எழுந்து வாருங்கள்!!" - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் George Galloway.
"அரபிகளே! பலஸ்தீனத்தை பாதுகாக்க எழுந்து வாருங்கள்!!" - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் George Galloway.
Subscribe to:
Posts (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...