Tuesday, 7 June 2011

உலகமயமாக்கலும் எதிர்ப்பும்: நோம் சொம்ஸ்கியுடனான உரையாடல்
INTERVIEW: TRANSLATION BY GIFFRY HASSAN


உலகில் பலராலும் அறியப்பட்ட சிந்தனையாளரான நோம் சொம்ஸ்கி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்க தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மொழியியற்துறைப் பேராசிரியராகப் பணிபுரிபவர். அமெரிக்காவின் ஜனநாயக விரோதப் போக்குகளை மக்கள் விரோதப் போக்குகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருபவர். இதனால் பல அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருபவர். பல்துறைசார்ந்த அறிவுஜீவியான இவர் அண்மையில் சீனாவுக்குச் சென்றபோது ளுழரவாநசn ஆநவசழிழடவையn னுயடைல  என்ற சீனப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை பிரசுரித்திருந்தது. அந்த நேர்காணலை நமது வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம். இப்பேட்டியில் அவர் சர்வதேச அரசியலில் சீனா பெற்று வரும் முக்கியத்துவம், அமெரிக்கா மற்றும் உலகமயமாக்கல் குறித்து தெளிவுபடுத்துகிறார்.
தமிழில்: ஜிஃப்றி ஹாஸன்
———————————————————————————————————————-
SMD– அதிகமான சீனர்கள் உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்டுவிட்டனர். கடந்த மூன்று தசாப்தங்களில், குறிப்பாக உலக வர்த்தக ஸ்தாபனத்தில் (றுவுழு) சீனா இணைந்ததையடுத்து அநேகமான சீனர்கள் அதிகம் நன்மையடைந்தார்கள். ஆனால், நீங்களோ ஓர் மங்கிய ஒளியில் உலகமயமாக்கலைப் பார்ப்பதாகத் தோன்றுகின்றதே.

சொம்ஸ்கி – சீனாவின் பொருளாதார அடைவென்பது உலகமயமாக்கலோடு குறைந்தளவிலேயே தொடர்பு கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி வர்த்தகத்துடனேயே தொடர்புபட்டுள்ளது. சீனா ஒரு ஏற்றுமதி மைய நாடாக படிப்படியாக மாறி வருகிறது. நான் உட்பட எவரும் இந்த ஏற்றுமதிகளுக்கு எதிரானவர்களல்ல் ஆனால் இதுவல்ல உலகமயமாக்கல், உண்மையில் சீனா வட-கிழக்காசிய உற்பத்தி முறையில் ஒரு தொழிற்சாலையாக மாறியுள்ளது. முழுப்பிராந்தியத்தையும் நீங்கள் எடுத்து நோக்கினால், நீங்கள் ஒரு பாரிய சக்தியைக் காண்பீர்கள.; சீனாவின் ஏற்றுமதி அளவு அளவிட முடியாததாகவுள்ளது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விடயமொன்றும் இங்குள்ளது. சீனாவுடைய ஏற்றுமதி பாரியளவில் ஜப்பான், கொரியா, அமெரிக்கா  போன்ற நாடுகளின் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. இந்நாடுகள் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்குகின்றன. சீனா இத்தொழில்நுட்ப உற்பத்தியில் இங்கு வெறும் ஒன்றியமாகத்தான் செயற்படுகின்றது. இவைகளைப் பயன்படுத்தி அது மேற்கொள்ளும் இறுதி உற்பத்தியில் ‘அயனந in உhiயெ’ என்ற முத்திரையைக் குத்தி விடுகிறது அவ்வளவுதான்!
அறிவுபூர்வமான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சீனா வேகமாக அபிவிருத்தி அடைகின்றது. மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்ற போதிலும் சூழலியல் அழிவு போன்ற இழப்புக்கள் உயர்வாக உள்ளன. இவை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றன. பொருளியலாளர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால் இறுதியில் இந்த இழப்புகளுக்காக சிலர் விலை கொடுக்க வேண்டியுள்ளது. அது உங்களுடைய பிள்ளையாக அல்லது பேரப்பிள்ளையாக இருக்கலாம். இது உலகமயமாக்கலுடனோ அல்லது றுவுழு உடனோ  எந்த விதத்திலும் தொடர்புபட்டதல்ல.

Monday, 6 June 2011

போர்க் குற்ற அறிக்கை - உலமா சபையும் இஸ்ரேலும் ஒரே நிலைப்பாட்டில்?


               இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் (Mark Sofer )

ஜூன் மாதம் முதலாம் திகதி இந்தியாவிலிருந்து செயற்படும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் Mark Sofer  கொழும்பு பிளஸ் பார்க் ஸ்டீட் ஹோட்டலில் plush Park Street Hotel நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.நா நிபுணர் குழுவினால் (தருஸ்மான் அறிக்கை)Darusman report முன்வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரசு யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கையை மனித உரிமை என்ற போர்வையில் வெறும் அரசியல் சுய லாபங்களுக்காக மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஒன்று என்று சாடியுள்ளார்.


இதேமாதிரியான ஒரு அறிக்கையை இலங்கையில் உலமாக்களின் சபையான ஜம்இய்யதுல் உலமாவும் அண்மையில் வெளியிட்டது. 


இந்த ஐநாவின் அறிக்கை தொடர்பாக இஸ்ரேலின் கருத்தும், ஜம்இய்யதுல் உலமா சபையின் கருத்தும் ஒரு மையப் புள்ளியில் சந்தித்திருக்கின்றன.


இஸ்ரேலின் இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன் உலமா சபையின் முக்கிய அங்கத்தவரான பிரபலமான மார்க்கமேதையும், நவீன சிந்தனையாளர் என்று சிலரால் போற்றப்படுகின்ற அகார்முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உலமா சபையின் அறிக்கை தொடர்பாக தெளிவு பெற முயற்சித்தேன். 


அவர் பதிலளிக்கவில்லை. எனது தொலைபேசி இலக்கத்தை இனம் கண்டுகொண்ட அவர் பதிலளிக்க வில்லை. பின்னர் மேல்மாகாண சபை அங்கத்தவர் சகோதரர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் தொலைபேசியில் கதைத்த போது அவரின் இலக்கம் அகார் முஹம்மதின் தொலைபேசியில் இல்லாமல் இருந்ததன் காரணமாக அவர் பதிலளித்தார்.


நான் அறிஞர் அகார் முஹம்மதிடம் 2009 ம் ஆண்டு இஸ்ரேல் காஸா மீது தொடுத்த கொடிய யுத்தத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறி யுத்தக் குற்றம் புரிந்திருப்பதாக இதேமாதிரியிலான ஒரு அறிக்கையை கோல்ட் ஸ்டோன் அறிக்கை  Goldstone Report  என்ற பெயரில் கொண்டு வந்ததை ஞாபகப்படுத்தி அது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டேன்.

Sunday, 5 June 2011

அமெரிக்காவும் பாகிஸ்தானும் உருவாக்கிய அடுத்த பலிகடா இலியாஸ் காஷ்மீரி!


பாகிஸதானும், அமெரிக்காவும் தனது அரசியல் தேவைக்காக உருவாக்கிய அடுத்த பலிகடாவான இலியாஸ் காஷ்மீரி கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிஙது.

ஆம் ! இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க உளவு விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

அமெரிக்காவின் கைக்கூலியும் இஸ்லாமிய ஜிஹாதின் (?) முன்னோடியுமான பாகிஸ்தான் வழமைப் போல தனக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது என்று கையை விரித்திருக்கிறது.

மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவரும், பாகிஸ்தானின் பயங்கரவாத முக்கியத் தலைவருமான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானின் பிராந்திய அரசியலுக்காக ஜிஹாதிய பாலுாட்டி வளர்க்கப்பட்டவர்.

Friday, 3 June 2011

பின் லாடன் – பிரபாகரன் : ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல்

                                                                                              யமுனா ராஜேந்திரன்-விநோதமாக இவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஓசாமா பின்லேடனும், பிரபாகரனும் ஒன்றுதான் என்கிறார் ரோபர்ட் பிளாக். உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாதிகள் பின்லாடனும் பிரபாகனும் என இலங்கை மண்ணில் வைத்து அதிகாரபூர்வமாகப் பேசியிருக்கிறார் ரோபர்ட் பிளேக். ஆமாம், ஆமாம் ஒன்றுதான் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது எனும் அளவி மௌலானா பின் லேடனின் யுத்தம் புனித யுத்தம் என்கிறார். பிரபாகரன் வெறும் பயங்கரவாதி என்கிறார்.
இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அபத்தம் நமக்குப் புரிகிற அதே பொழுதில், இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல் ஒரு ஒற்றுமையைக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் மாறுபாடுகள், கருத்தியல், இலக்குகள் என்பதனைத் தாண்டிய வகையில் நிச்சயமாகவே சே குவேரா-பின் லாடன்- பிரபாகரன் போன்றோரின் ‘படுகொலைகள் நிகழ்ந்த விதம்’ ஒப்பீட்டுக்கு உகந்ததும் ஒற்றுமை கொண்டதும்தான் என்பதை நாம் திட்டவட்டமாக நிறுவ முடியும்.

ஜப்பான் நெருப்பாற்றில் நீந்தி வந்த ஒரு நாடு!

ஜப்பான் நெருப்பாற்றில் நீந்தி வந்த ஒரு நாடு! எரிந்து விழுந்து, சாம்பலில் இருந்து எழுந்து வந்து சரித்திரம் படைக்க முடியும் என்பதற் கு ஜப...