Posts

Showing posts from July, 2009

சஊதி நிதியும் சதியும்

Image
சஊதி நிதியும் சதியும்

முஸ்லிம்களைப் பிளவுபடுத்தும் மூல மந்திரம்!
சஊதி நிதி இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சிந்தனைக் குழப்பங்களை தோற்றுவித்து வருகிறது. ஒரே மஸ்ஜித் நிர்வாகத்ததில் ஆயிரம் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம், இந்த முஸ்லிம் சமூகம். இப்போது இந்த சமூகத்தில் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. மஸ்ஜிதுக்கு மஸ்ஜித் குரோதம் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் கருத்து முரண்பாடுகளுடன் ஒரு பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணங்கி வந்த இந்த சமூகம், ஒரே உறவுகளாய் ஒரே ஜமாஅத்தாராய் வாழ்ந்த இந்த சமூகம், ஊர்களில, நகரங்களில், கிராமங்களில் பிரிந்து நின்று சண்டையிடுகின்றன. குடும்பங்கள் பிளவுபட்டு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் இல்லங்கள் முஸ்லிமின் இரத்தத்தில் உறைந்து அவமானப்படுகிறது. எம்மை பிரிக்க சதி செய்தோர் பின்னால் இருந்து பார்த்து ரசிக்கின்றனர்.
ஒற்றுமையின்மையும், சண்டையும், சச்சரவுகளும் நோய்களாய் இந்த உம்மத்தை எப்படி பற்றின?

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்

Image
உலகளாவிய ஏகாதிபத்தியம் அடக்குமுறையின் மூலம் முழு உலகையும் ஆட்டிப் படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
எகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இரையாகாமல் தப்பி வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது. தனது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை தனக்கே உரிய அதிகார சக்தியாய் ஆக்கிக்கொண்ட அமெரிக்கா மனிதம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு மனிதநேயத்திற்கு எதிராக எழுந்தக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அநியாயத்தின் பொதுச்சின்னமாக அது அடையாளமாகியிருக்கிறது.

அமெரிக்க அடிவருடிகளும் அழிக்கப்பட்ட ஆபகானிஸ்தானும்

Image
80களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு எதிராக போராடுவதற்கு, ஜிஹாத் என்ற போர்வையில் அந்த நாட்டு மக்கள் ஆயுதபாணிகளாக்கப்பட்டார்கள். ஸீ.ஐ.ஏ பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் இணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய துருப்புகளை விரட்டுவதற்கு திட்டம் தீட்டியது. இதற்கு சஊதி அரசு கோடிக்கணக்கான பணத்தை “ஆப்கான் ஜிஹாதிற்காக” கொட்டித் தீர்த்தது.
நீண்ட நாட்களாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் மௌனமாக இடம்பெற்று வந்த பனிப்போரை ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராக மாற்ற ஸீ.ஐ.ஏ க்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பாமரர்களை அதிகம் கொண்ட ஆப்கான் நாட்டிற்கு “ஜிஹாத்” எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஆனது. சஊதி பணத்தால் ஒட்சிசன் பெற்று வந்த இஸ்லாமிய இயக்கங்கள் எழுந்து நின்றன.
ஜிஹாத் உணர்ச்சியால் இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர்கள் வீதிக்கு வந்தனர். ரஷ்யாவிற்கு எதிரான இந்த ஜிஹாதை சவூதி பணத்தில் இயங்கும் அமெரிக்க நேச இயக்கங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டன. சஊதி அரசு ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை தெரிவு செய்தது. ஜமாஅதே இஸ்லாமி ரஷ்யாவிற்கு எதிரான போர் ஜ…

இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!

Image
இஸ்ரேலின் நண்பன் அமெரிக்காஅமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.
இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.
ஒன்று இஸ்ரேல்
மற்றையது சஊதி அரேபியா.
வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.
ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலுக்கு உள்ள இரண்டு நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.

சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக (?) சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு. இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானது. அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியல்” மத்திய கிழக்கை அதிக்கம் செலுத்துவதற்கு சஊதி பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.
மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.
ஒன்…