Posts

Showing posts from April, 2012

கொழும்பு ஆர்ப்பாட்டம் - முப்தியும் முரண்பாடும்?

Image
இதுவரை உலமா சபை எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடையாக இருந்தது இல்லை யாராவது அப்படி ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அதற்கு தாம் அதரவு தெரிவிப்போம்!, இக்கூட்டத்தில் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவை சந்தோஷமாக ஆதரிப்போம்! அதற்காக பிரார்த்தி்ப்போம்!ஆதரவு -இது 24ம் திகதி அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி வழங்கிய ஆதரவு)


 பேச்சின் ஒலி வடிவம்


எதிர்ப்பு -இது 27ம் திகதி தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஒரு சூழ்ச்சி என்று அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை யும் முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து விடுத்த முரண்பாடான முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவித்தல்



தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை எதிர்த்து 27.04.2012 அன்று கொழும்பில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்புப் பேரணி பௌத்த இனவாத சக்திகளினதும்,  பேரினவாதத்திற்கு துணைபோகின்ற அரசியல் மற்றும் இஸ்லாமிய அறிவு மேதைகளினதும் போலி பிரசார பித்தலாட்டங்களையும் முறியடித்து மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

40 வருடங்கள் பழமயான பள்ளி…

தம்புள்ளை பள்ளிவாசல் - வெறிபிடித்த அகிம்சைவாதிகள்!

Image

காணொளி- தம்புள்ளை மஸ்ஜிதை தகர்க்கும் பௌத்த வெறியர்கள்

Image

காணொளி - இனவாத பிக்குகளின் வெறியாட்டம்! இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் தகர்ப்பு!

Image
இலங்கையில் தம்புள்ளையிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசலை உடைக்கக் கோரி பௌத்த பிக்குகள் ஆரம்பித்த ஆா்ப்பாட்டம் கூர்மையடைந்து வரும் இலங்கையின் இனவாத அரசியலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.

அரசாங்கம் புண்ணிய பூமியாய் பிரகடனப்படுத்தியிருக்கும் தம்புள்ளைப் போன்ற பிரதேசங்களில் மாற்று மதத்தினரின் எவ்வித வணக்கஸ்தலங்களோ அடையாளங்களோ இருக்கக் கூடாதென பௌத்த தீவிரவாதிகள் அண்மைக்காலமாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த இனவாத செயற்பாடு இதுவரை அனுராதபுரத்திலுள்ள ஒரு தர்காவையும், தம்புள்ளையிலுள்ள ஒரு பள்ளிவாசலையும் பதம் பார்த்திருக்கிறது.

நாளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இந்த இனவாத நோய் பரவக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

அரசாங்கமும் இனவாத சக்திகளின் இந்த மோசமான நிலைப்பாட்டை  ஆதரிக்கும் நிலையில் இருப்பது, இந்த நாட்டின் எதிர்காலத்தை மீண்டுமொரு முறை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் என்பதில் எவ்வித சந்ததேகமுமில்லை.

அரசியல் ரீதியாக இடம்பெறும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை தமது இராணுவ பொலிஸ் படைகளை வைத்து கடுமையாக சனநாயக உரிமைகளை மீறி கண்ணிர்ப்புகை,  குண்டாந்தடி பிரயோகம் போன்றவற்றால் அ…