Wednesday, 1 December 2010

விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!


விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது  இன்டர்போல்!

அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கிலீக் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை  கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம்   ஒன்று சர்வதேச காவல்துறையான  இன்டர்போலுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இரண்டு பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்ததாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் இணையதளம்  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும், உலகின் மீது அது திணிக்க முயலும் ஏகாதிபத்திய வெறித்தனத்தையும்,  அந்த வெறித்தனத்தால்  உலகிற்கு ஏற்பட்ட விளைவுகளையும்  வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தனது சுரண்டல் அரசியலுக்காக  பல உயிர்களை அமெரிக்கா குடித்திருக்கிறது.  குறிப்பாக  ஆப்கான், ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளை அது துவம்சம் செய்து வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகும்  அரபு நாடுகள் தனது இனத்தையே கொள்ளும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்தாசை வழங்கியிருப்பதை, வழங்கவிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

எது எப்படியிருப்பினும் பாலியல் குற்றத்திற்காக   விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை  சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் தயாராக இருக்கிறது,

அமெரிக்கா இராணுவம் இராக்கில் நிகழ்த்திவரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு எந்த நீதிமன்றமும் இதுவரை இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கவில்லபோலும்.

எனவே விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களை ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் எப்போது முன் வரும் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனங்களிலும் எழுகிறது.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...