Thursday, 16 December 2010
எச்சரிக்கை! சுதந்திரமாய் சுற்றித் திரிகிறான் கொலைக் குற்றவாளி!
விக்கீலீக்ஸ் தகவல்களால் அமெரிக்கா திண்டாடி போயிருக்கிறது.
அடாவடித்தன அரசியலை ஏனைய நாடுகள் மீது திணிக்கும் சர்வதேச பொலிஸ்காரனான அமெரிக்கா இன்று உலக அரங்கில் நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கிறது.
உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செயற்படுகின்ற அதன் துாதுவராலயங்கள். உளவுவேலை பார்க்கின்ற அமைப்புகளாய் செயற்பட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
விக்கிலிக்ஸ் அண்மையில் வெளியிட்ட தகவல்களில் அனேகமானவை இராஜதந்திர மட்டத்தில் இடம்பெற்ற வெறும் “சங்கதி”களாய் இருந்தபோதும்,
2007 ம் ஆண்டு ஈராக்கில் பக்தாத் நகரில் நிராயுதபாணியான மக்கள் மீது ஹெலிகப்டர் மூலம் தொடுக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் மறைக்க முடியாதது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இது ஒன்றே அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டிய சாட்சியுள்ள ஒரு சிறந்த ஆவணமாகும்.
இது வெறுமனே தாள்களில் பதியப்பட்ட தகவல்களாய் வராமல், அச்சொட்டாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றாகவே வெளிவந்தது. அந்த ஒளிப்பதிவில் சிறுவர்களை சுட்டுக்கொன்று விட்டு கேலியாக சிரித்துக் கொண்டு “ சிறுவர்களை ஏன் இவர்கள் யுத்தக்களத்திற்கு அழைத்து வருகிறார்கள்?” என்று கிண்டலடித்து ஏளனமாய் ஈராக்கிய மக்களை பார்க்கும் அமெரிக்க இராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கை அந்த ஒளிப்பதிவு உலகிற்கே எடுத்துக் காட்டியது.
பக்தாத் கொலைக்களம் தொடர்பாக இந்த ஒளிப்பதிவு வெளிவந்த உடனே மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமெரிக்கா என்ன செய்தது?
குற்றமிழைத்த இராணுவத்தைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவது ஒரு நல்ல நாட்டுக்கு அழகு. ஆனால் அமெரிக்கா என்ன செய்தது? அந்த காணொளியை விக்கிலீக்ஸுக்கு வழங்கினார் என்ற சந்தேகத்தில் அதன் இராணுவ உளவுப்பிரிவில் கடமையாற்றிய பிரட்லி மென்னிங் ( Bradley Manning) ஐ கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் சட்டத்தைப் பாருங்கள்.
கொலை செய்வது குற்றமல்ல, கொலையாளியை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் குற்றம்.
அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. அந்த க் கொலைக்காட்சிகளை வெளியே கசிய விட்டார் என்ற குற்றத்திற்காக பிரட்லி மென்னிங் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் மிகவும் ஆதாரபூர்மான ஆவணம் பக்தாத் கொலை வீடியோ தான். அது வெளிவந்ததும் ஏற்பட்ட பரபரப்பு அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆயிரக்கணக்கான வம்புக் கதைகள் அடங்கிய ஆவணங்களோடு அப்படியே அடங்கி விட்டது.
அந்த போர் குற்றத்திற்காக அமெரிக்காவை தட்டிக் கேட்கும் திராணி இவ்வுலகில் யாரிடமுமில்லை.
அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அல்லது பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டு ஓரம்கட்டப்படுகின்றார்கள்.
சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் கூட பாலியல் குற்றவாளிகளை பாய்ந்து பிடிப்பதிலுள்ள அவசரம், கொலைக் குற்றவாளிகள் விடயத்தில் அறவே இல்லை. அது கொலைக் குற்றவாளிகளொடு கொஞ்சிக் குலாவுகிறது.
விக்கிலீக்ஸ் அண்மையில் வெளியிட்ட மற்றும் வெளியிட தயாராக இருக்கும் வம்புக் கதைகளுடன் கூடிய காகித அடுக்குகளுக்குள் ஆதாரபூர்வமான ஒளிப்பதிவாய் வெளிவந்த பக்தாத் கொலைகள் அமிழ்ந்தே போய் விடும்.
இதைப் பார்க்கும் போது ஏற்கனவே விக்கிலீக்ஸால் வெளிவந்த ஆதார பூர்வமான போர்க்குற்றத்தை மூடி மறைக்க அமெரிக்காவே விக்கிலீக்ஸுக்கு வேண்டுமென்றே வெறும் கதைகள் அடங்கிய தகவல்களை கசிய விட்டதுவா என்று சந்தேகம் வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...
No comments:
Post a Comment