Posts

Showing posts from May, 2011

ஒசாமா - அபோதாபாத் வீடு, சீ.ஐ.ஏ., ஐ.எஸ்ஐ. யின் நண்பனான தாவுத் இப்றாஹீம் நிர்மானித்தது!

Image
தாவுத் இப்றாஹிம்
ஒசாமா பதுங்கியிருந்ததாக அமெரிக்கா கூறிவரும் பாகிஸ்தான் அபோதாபாத் நகரத்தில் அமைந்துள்ள வீடு, அமெரிக்க இராணுவ தொழில் நுட்பவல்லுனர்களினால் இராணுவ கட்டட இரகசியங்களை உள்ளடக்கியதாக மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு , மும்பாய் பாதாள உலக தலைவனான தாவுத் இப்றாஹிமின் Safari constructions என்ற நிறுவனத்தினால் கட்டப்பட்டதாக அறிய வருகிறது.
ஆபோதாபாத் நகரில் உள்ள இராணுவ அதிகாரிகளின் அத்தனை வீடுகளும் அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களினால் வடிவமைக்கப்பட்டவையென்றும் , இரகசிய பதுங்கு குழிகளும், குண்டு துளைக்காத ஜன்னல்களும், குண்டு தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.


இந்தியாவிற்கு மிகவும் வேண்டப்படும் நபரான தாவுத் இப்றாஹீம் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் உதவியுடன் சீஐஏ வோடு மிகவும் நெருக்கமான உறவு வைத்திருப்பவராவார்.  


இராணுவத்தினருக்கான வீடுகளை அமைப்பதில் ஈடுபட்ட Safari constructions நிறுவனத்தின் உரிமையாளர்கள் தாவுத் இப்றாஹீமும் அவரது சகாவான சோட்டா ஷகீலுமாகும்.


தாவுத் இப்றாஹிமின் கட்டட நிறுவனமான Safari …

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்! இக்வான்களின் 'புதிய இஸ்லாமிய' அரசியல்(?)

Image
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது. இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது. ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  துற்றியும் வந்தனர். இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ ப…

ஒசாமாவின் வீடு? வெள்ளை மாளிகையின் போலியான வடிவமைப்பு

Image
மேலே நீங்கள் காண்பது அமெரிக்கா வெளியிட்ட போலியான படம் இது ஒசாமாவின் டிஷ் எண்டனா பொறுத்தப்பட்ட வீடு


இவை உண்மையான படங்கள்
                                           டிஷ் எண்டனா எங்கே போனது?

ஒசாமாவின் வீட்டின் படம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட படங்கள் கணினியில் மாற்றி வடிவமைக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.

உலகின் பலம் பொருந்திய ஒரு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக பெயர் சூட்டப்பட்டதே ஒசாமாவின் அல்காயிதா அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் இல்லாத வெறுமையில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.

பின்னர் அமெரிக்கா அவரது வீடு என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்தில் ஒரு டிஷ் எண்டெனா பொருத்தப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டது.

ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இந்த டிஷ் எண்டனா இல்லாமல் இருந்தது. பிறகு வந்த படங்களில் டிஷ் எண்டனாசேர்க்கப்பட்டிருக்கிறது.

நவீன தகவல் தொழிற் நுட்பத்துடனும், மனித குலத்தை நொடியில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடிய அதி நவீன ஆயுதங்களுடனும் ஆதிக்கச் ச…

ஒசாமா இறந்தது 2006-06-26 அன்று செச்னிய சீ.ஐ.ஏ உளவாளி தகவல்!

Image
ஒசாமாவை அபோத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொன்று உடலத்தை கடலில் எரிந்து விட்டதாக அமெரிக்க கூறியிருக்கும் நிலையில் செச்னிய சீஐஏ உளவாளியான பெர்கன் அஷர் Berkan Ashar  ரஷ்ய தொலைக்காட்சியான Channel One Russiaவிற்கு ஒசாமா 2006 ம் ஆண்டு இறந்ததாகவும் அவரது உடலம் பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

நரேந்திர மோடியும் குஜராத்தும்!! வெளிவரும் உண்மைகள்!!

Image
2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 
இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன.

தமிழின உரிமை பேசும் தோழர்களும் கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று.

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!

Image
மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது. சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.

இலங்கை பல்கலைக்கழக மாணவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி ! இடி விழுந்த நிலையில் இஸ்லாமிய சமூகம்!

Image
இவ்வருடம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இராணுவத்தில் பயிற்சி வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

பயிற்சியில் கலந்து கொள்ளாதோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற மாட்டார்கள் என்று உயர் கல்வி அமைச்சர் எச்சரித்திருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவை சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவ அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இராணுவத் தளங்களுக்கு பெண் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புவதை, அந்தத் தளங்களில் பிள்ளைகளைத் தங்க வைப்பதை நினைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல இன பெற்றோரும் அச்சமுற்று இருக்கின்றனர்.

இந்த இராணுவப் பயிற்சி இஸ்லாமிய சமூகத்திற்கோ பெரும் இடியாக வந்திறங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களின் கலாசாரம் இதற்குக் காரணமாகும்.

உயர் கல்வியில் கீழ் நிலையில் இருந்த இந்த சமூகம் தவழ்ந்து வந்து உயர் கல்வியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யும் இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு இடையுறாக தடையாக இந்த இராணுவப் பயிற்சி வந்திருக்கிறது.

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!

Image
இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் சகோதர மத்ததைச் சேர்ந்த சகோ.ஆத்மார்த்தி என்பவரால் எழுதப் பட்டது.
 இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.
நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டு…

சல்மான் ருஷ்தியின் நாவல் இலங்கையில் படமாகிறது!

Image
ஸல்மான் ருஷ்தி எழுதிய 'Midnight's Children' என்ற நாவல் தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் படமாக்கப்படுகிறது.


கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளில் மேற்படி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கடந்த வாரம் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை டில்லி நகரின் சனநெருசல் உள்ள ஓர் ஒழுங்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உயிர் வாழும் ஒசாமா?

Image
இணையத்தில் உலா வரும் இந்தப் புகைப்படம் ஒசாமா என்ற கதாபாத்திரம் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசியலை நகர்த்துவதற்கு எப்படி களமாக அமைந்தது என்ற கருத்தை அழகாக சொல்லும் சிறந்த ஒரு கருத்துப்படம்.. ஒசாமா கொலை செய்யப்படுவதை வெள்ளை மாளிகையிலிருந்து ஒசாமாவும் பார்ப்பது போல் இப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒசாமா மரணம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட போலி புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை மறந்திருக்க மாட்டீர்கள்.  இந்த புகைப்படமும் அதே மாதிரி வந்திருக்கும் ஒரு புகைப்படமே. ஆனால் இதன் கருத்து வித்தியாசமானது.

பாகிஸ்தான் - பயங்கரவாதத்தின் பண்ணை

Image
ரொனால்ட் றேகனின் காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆப்கான் ஜிஹாத் வடிவமைக்கப்படுகிறது. முஜாஹிதீன்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடல்


80களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹாமித் குல், (இடதுபக்கம்) அப்போதைய சீ.ஐ.ஏ யின் பணிப்பாளர்  வில்லியம் வெப்ஸ்ரர் , சீ.ஐ.ஏ யின் நடவடிக்கைளுக்கான உதவிப் பணிப்பாளர்  கிளயார் ஜோர்ஜ் ,சீ.ஐ.ஏ இன் பாகிஸ்தான் பெஷாவர் நிலைய முஜாஹிதீன்களுக்கான பயிற்சிக்குப் பொறுப்பான மில்ட் பெயார்டன் ஆகியோர் 1987ம் ஆண்டு பெஷாவரில் எடுத்துக்கொண்ட படம்
"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.''

இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்துகிறது.
அமெரிக்கா என்ற பயங்கரவாதத்தோடு உறவு வைத்து அதன் ஏகாதிபத்திய நிகழ்ச்சிக்கு ஏற்ற தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் இன்று ஆடிப்போய் நிற்கிறது.

புனித மக்காவில் போலி ஸம்ஸம் தண்ணீர்?

Image
உலகமயமாக்கல் மற்றும் திறந்த பொருளாதாரம் மனித உணர்வுகளை மலினப்படுத்தி இருக்கிறது.

நீதி, நியாயத்தை ஓரம்கட்டிவிட்டு பணத்திற்கு பின்னால் ஓடுகின்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கியிருக்கும் இன்றைய பொருளாதார முறை, எதையும் விற்று பணமாக்கும் மனநிலையை மனிதர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது.

ஊடகங்களில் ஹஜ், உம்ரா போன்ற வணக்க வழிபாடுகள் பணத்தைக் குறியாய்க் கொண்ட முகவர்களினால் இன்று முற்றாக வர்த்தகமயமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வரிசையில் இப்போது  ஸம்ஸம் தண்ணீரும் சேர்ந்திருக்கின்றது.

ஸம்ஸம் தண்ணீர்என்று கூறி புனித மக்கா வீதிகளில் போலியாக தண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் விற்கப்படுவதாக அரப் நிவுஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
http://arabnews.com/saudiarabia/article388908.ece

எதிரி (?) இஸ்ரேலுக்கு எரி வாயு (Gas) கத்தார் நாட்டின் கைங்கரியம்!

Image
இஸ்ரேல் கத்தார் உறவு -இஸரேலிய வெளிவிவகார அமைச்சராக இருந்த ஸிபி லிவினிக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னர்

இஸ்ரேல் கத்தார் உறவு - இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னரும் அவர் மனைவியும்

இஸ்ரேல் கத்தார் உறவும் - கர்ளாவி கத்தார் உறவும்  இஸ்ரேலோடு நெருக்கமான உறவு வைத்திருக்கும் கத்தார் மன்னனின் மனைவிக்கு கர்ளாவி கை கொடுக்கிறார்
கிலாபத் சிந்தனையாளர்களின் கனவு இராஜ்யமான கத்தார் நாடு இரத்த வெறி பிடித்த இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற முறையில் எரி வாயு வழங்க முடிவு செய்திருப்பதாக இஸ்ரேலிய இணையதளமான Ynet  http://www.ynetnews.com/articles/0,7340,L-4064547,00.html செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் எகிப்தே இஸ்ரேலுக்கான எரிவாயுவை வழங்கி வந்தது. இஸ்ரேல் ஆதரவாளரான முபாரக் அந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் இஸ்ரேலுக்கான எரிவாயு வழங்கல் தடைப்பட்டிருந்தது.
எனவே இஸ்ரேலுக்கு அடுத்த நேச நாடாக திகழும் கத்தார் நாடு, சந்தை விலையை விட குறைந்த விலையில் இஸ்ரேலுக்கு எரிவாயுவை வழங்க முடிவு செய்திருக்கிறது.

பல வருடங்களாக பலஸ்தீன் காஸா மக்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள இஸ்ரேல், அந்நாட்…

ஒசாமாவின் மரணமும் ஒபாமாவின் கரணமும்!

Image
ஒசாமாவின் மறைவும் 10 ஆண்டு நிறைவும்? ஓபாமாவின் அரசியல் காய் நகர்த்தல் மே 3ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளின் படங்கள்


ஒபாமா அரசியல் சாகச விளையாட்டில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

கரணம் தப்பினால் மரணம் என்றவொரு பழமொழி இருக்கிறதே! ஒபாமாவின் சாகச விளையாட்டைப் பார்க்கும் போது அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

கொஞ்சம் சறுக்கினால் அவர் தனது அரசியல் சாகச விளையாட்டிலிருந்து கீழே விழுந்து நொருங்கி விடும் அபாயம் நெருங்கியே இருக்கிறது.

ஒசாமாவை வைத்து அமெரிக்கா அதிகம் லாபமீட்டியது.

ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்டியது முதல் ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்பு வரை அதன் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஆதாரமாக ஒசாமாவின் செயற்பாடுகளைத்தான் காரணமாக முன்வைத்தது.

புஷ்ஷின் அடிச்சுவட்டை அதே பாணியில் பின்பற்றும் ஒபாமா இன்று சரிந்துக்கொண்டிருக்கும் தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒசாமாவின் மரணத்தை(?) ஓர் ஆயுதமாக பாவிக்கும் தந்திரத்திற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ஒசாமாவின் மரணத்தைப் பற்றி கருத்துத்தெரிவிக்கும் போது இது ஒசாமாவின் இரண்டாவது மரணம் என்று குறிப்பிட்டதோடல்லாமல் ஒசாமாவி…

ஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள் (வீடியோக்கள்)!

Image
பின்லேடன் கொலையில் தொடரும் சந்தேகங்கள் (வீடியோக்கள்)!

ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்த…

ஒபாமாவின் ஒசாமா வேட்டை.. கசிந்துள்ள புகைப்படங்கள்!

Image
எச்சரிக்கை !  கொடுரமான காட்சிகள் இளகிய மனமுள்ளவர்கள் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.ஒசாமாவின் இருப்பிடம் என்று கூறப்படும் அபோத்தாபாத்தில் உள்ள வீட்டின் மீது அமெரிக்க படை தாக்கியதில் இறந்த மூவரின் உடலங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தாக்குதல் இடம்பெற்று சரியாக ஒரு மணித்தியாலத்தின் பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் இவை.

பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் இந்தப் படங்களை எடுத்துள்ளனர். நிராயுத பாணிகளான இவர்கள் மீது பயங்கரமாக சுட்டு தள்ளியிருப்பது இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள இவர்களது உடலங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வீடியோ : ஒசாமா உண்மையில் கொல்லப்பட்டாரா? சந்தேகம் வலுக்கிறது

Image
ஒசாமா வாழ்ந்ததாக கூறப்படும் அப்போதாபாத் பிரதேச மக்களின் கருத்தை பிரஸ் ரிவி ஒளிபரப்பியது.  அப்பிரதேச மக்கள் ஒசாமா அங்கு வாழவில்லை என்று கூறுகின்றார்கள்.

இது விடயமாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி வருகிறது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறிவருவதாக 04.05.2011 அன்று இரவு பிபிஸி தமிழோசை செய்தி வெளியிட்டது.

இதுதான் அந்த செய்தி:

பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது. அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் ல…

ஒசாமா விவகாரம்- வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் படங்கள்!

Image
ஒசாமா மீதான தாக்குதல் விவகாரமும், அது தொடர்பான அமெரிக்காவின் செயற்பாடுகளும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருக்கும் இந்நிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் படங்கள் சில ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.

இது ஒசாமா வாழ்ந்ததாக அமெரிக்க கூறும் உயர் பாதுகாப்பு வலய வீடு

இராணுவ நடவடிக்கையின் போது விழுந்து நொருங்கிய ஹெலிகப்படர் சிதைவுகள் வண்டியில்....

ஒசாமா தாக்குதலுக்கு இலக்கான அறை

இராணுவ நடவடிக்கையின் போது விழுந்து நொருங்கிய ஹெலிகப்படர் 

தாக்குதல் இடம் பெற்ற அந்த இரவு

ஒசாமா கொலை! இன்றல்ல அன்று...?

Image
ஒசாமா பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாஸிர் பூட்டோ 2007ம் ஆண்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஒசாமாவின் கொலை தொடர்பாக அமெரிக்கா சொல்கின்ற “கதை”கள் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.  பாகிஸ்தானில் எவ்வித பாதுகாப்பும் (?) இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை தாக்கியழித்தாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பாதுகாப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை உயிருடன் பிடித்து நிறைய தகவல்களை பெற முடியுமான நிலையை அமெரிக்கா உளவு நிறுவனம் ஏன் அவசரப்பட்டு இல்லாமல் செய்து கொண்டது என்ற கேள்வி மறுபுறம் எழுகின்றது.

ஒசாமாவைப் பிடிக்கச் சென்ற களநிலவரங்களைப் பார்த்தால் அவரை ஒரு எலியைப் பிடிப்பது போன்று இலகுவாக உயிருடன் பிடித்திருக்க முடியும்.

அமெரிக்க சீ.ஐ.ஏ வடிவமைத்த நிகழ்ச்சி நிரல் என்பதால் ஒசாமாவின் போராட்டம் பல சிக்கல்களையும், சந்தேகங்களையும் கொண்ட  ஒரு புதிராகவே இன்றுவரை இருந்து வருகிறது.

ஒசாமா அமெரிக்க சீ.ஐ.ஏ என்ற உளவு நிறுவனத்தினால் பயிற்றப்பட்ட ஒரு தீவிர உளவாளி!. அவர் அமெரிக்காவோடு நேசம் வைத்திருந்த காலத்தில் …