Tuesday 8 June 2010

WikiLeaks இரகசிய காணொளி விவகாரம் - அமெரிக்க வீரர் கைது!


ஈராக்கில் அமெரிக்க இராணுவம் 2007ல் புரிந்த படுகொலை வீடியோ ஒன்றை WikiLeaks  இணையம் வெளியிட்டு அமெரிக்காவின் மிலேச்சத்தனத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


இணையதளத்திற்கு இந்த வீடியோவைஇரகசியமாக  வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் Bradley Manning என்ற அமெரிக்க இராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


ஈராக்கில் கடமையாற்றிய பிரேட்லி மென்னிங் கைது செய்யப்பட்டு தற்போது குவைத்தில் உள்ள அமெரிக்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



இன்று மனித உரிமை பற்றியும் ஜனநாயகம் பற்றியும் ஏனைய நாடுகளுக்கு உபதேசம் புரிந்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா , ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக் ஆப்கான் போன்ற நாடுகளில் தனது இராணுவம் புரியும்  மனித உரிமை மீறல்களையும் ;கொடுமைகளையும்  மூடி மறைத்து வருகின்றது.


விக்கிலீக் இணையம் வெளியிட்ட வீடியோ மனித உரிமை வீராப்பு பேசும் அதன் இராணுவ பலத்தையும் ஜனநாயகத்தையும் வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது.


அந்த வீடியோ வெளியிட்டிருக்கும்  தகவல்களின்  அடிப்படையில் ஈராக்கில் அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்களை விசாரணை செய்து தண்டிக்காமல் அதன் கொலைக் கலாசாரத்தை வெளியிட்ட  குற்றத்திற்காக பிரேட்லி மென்னிஙை்கை இப்போது கைது செய்திருக்கிறது.


அமெரிக்க அராஜகத்திற்கும், அக்கிரமத்திற்கும்  துணையாக நின்று செயற்படும் அதன் உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ.,  WikiLeaks இணைய தளம் அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக செயற்படுவதாக  குற்றம் சாட்டியிருக்கிறது.  


அமெரிக்க இராணுவத்தின் அராஜகங்களை வெளிப்படுத்தி, அநீதிக்கு எதிராக செயற்படுவது அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுவதாக அவர்களே அர்த்தப்படுத்தி இருக்கின்றார்கள்.


   

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...