Posts

Showing posts from June, 2014

மஹிந்த பிரஸ்தாபிக்கும் ”மகா லொக்கு ஹா்த்தாலய”

Image
அளுத்கமவில் இடம்பெற்றிருப்பது ஒரு சிறு சம்பவமாம், இப்போது அதுவும் தீா்க்கப்பட்டு விட்டதாம். வடக்கில் புலிகளின் பிரச்சினை இருக்கும் போது யாரும் இப்படி ஹா்ததால் செய்யவில்லையாம்.

நேற்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் எண்ணெய் களஞ்சிய தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளாா்.

இந்த உரையை அஸ்வா் பேசியிருந்தால் முஸ்லிம்கள் ஆத்திரமோ, ஆச்சாியமோ படமாட்டாா்கள். ஏனென்றால் வாயைத் திறக்கும் போது மூளை ”ஓப்” ஆகும் நோய் அஸ்வருக்கு மட்டடும் இருப்பதை முஸ்லிம்கள் நன்றாக அறிந்திருக்கின்றாா்கள்.

ஆனால் எங்கள் நாட்டின் ஜனாதிபதி தஹிந்த ராஜபக்ஸ இப்படி பேசியிருப்பது வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.

ஏழுபேரை கொலை செய்து, நூற்றுக்கும் அதிகமானோரை காயப்படுத்தி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிய இந்த இனக்கலவரத்தை அதை செயற்படுத்திய இந்த சிங்கள இனவாதிகளை ஜனாதிபதி கடிந்து கொள்ளாமல், எச்சரிக்காமல் முஸ்லிம்களையே மறைமுகமாக தாக்குகின்ற பணியை செய்திருக்கின்றாா்.

அளுத்கம, பேருவளை பகுதிகளில் இடம்பெற்றிருப்பது ஒரு சிறு சம்பவ…

நோலிமிட் நிறுவனத்திற்கு தீ

Image
முஸ்லிம்களுக்கு சொந்தமான இலங்கையின் மிகப்பாரிய வலையமைப்பைக் கொண்ட ஆடை நிறுவனமான நோலிமிட் நிறுவனத்தின் பாணந்துறை கிளை தீபற்றி எாிவதாக செய்தி வெளிவந்திருக்கிறது.

இன்று காலை 3.30 மணியளவில் இந்நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டுளளதாக தெரிய வருகிறது.

அஜித் ரோஹன - பொதுபலசேனாவின் ஊடகப் பேச்சாளா்?

Image
பொலிஸாருக்கும் அதன் கூட்டாளியான பொதுபலசேனாவுக்கும் கொழும்பு ஹா்த்தால் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது! பொய் வதந்திகளைப் பரப்பி முஸ்லிம்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகின்றனா். ஹா்த்தாலை வெற்றிபெற வைத்து இந்த இனவாத சக்திகளுக்கு பதிலடி கொடுப்பது எமது கடமைாகும்!

அஜித் ரோஹன - பொதுபலசேனாவின் ஊடகப் பேச்சாளா்?

பொய் சொல்வதில் பிரசித்தம் பெற்ற ஒருவராய் இலங்கை நாட்டு மக்களால் போற்றப்படுகின்ற ஒருவா் தான் இந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளா் அஜித் ரோஹன.

பொய்க்கும் இவருக்கும் உள்ள தொடா்பு எப்படியென்றால் அதிகமாக பொய் கூறும் ஒருவரை “அஜித் ரோஹன“ என்று கூறும் அளவிற்கு இந்த பொலிஸ் ஊடக பேச்சாளா் உருமாறியிருக்கின்றாா்.

நாளை 19ம் திகதி நடைபெறவிருக்கும் ஹா்த்தால் தொடா்பாகவும் முஸ்லிம் உாிமைகளுக்கான அமைப்பு தொடா்பாகவும் வழமை போல் ஒரு பொய் பூச்சாண்டியை ஊடகங்களுக்கு காட்டியுள்ளாா் இந்த அஜித் ரொஹன.

அதாவது, முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு என்ற பெயாில் ஒரு அமைப்பு இலங்கையில் இல்லையென்றும் அதனால் விடுக்கப்பட்ட ஹா்த்தால் அழைப்பை யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் இப்படி அழைப்பு விடுக்கும் தீவிரவாதிகளின் கோாிக்கைகளை முஸ்ல…

முஸ்லிம்களின் ஒற்றுமையை காட்டுவதற்கு ஓரணியில் திரண்டது இந்த முஸ்லிம் சமூகம்!

அல்ஹம்துலில்லாஹ், 

முஸ்லிம்களின் ஒற்றுமையை காட்டுவதற்கு ஓரணியில் திரண்டது இந்த முஸ்லிம் சமூகம். 

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் ஹா்த்தாலுக்கான அதரவை வழங்கினா். ஒரு சில ஊா்களில் பள்ளிவாசல் நிா்வாகத்தின் வேண்டுகோளின் போில் ஹா்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை என எமக்கு அறிய கிடைக்கிறது.

எது எப்படியிருந்தாலும் இனவாதிகளுக்கும், மஹிந்த அரசுக்கும் ஜனநாயக ரீதியில் ஒரு செய்தியை நாம் வழங்கியிருக்கின்றோம்.

கொழும்பைப் பொறுத்த வரை மிக வெற்றிகரமாக ஹா்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

சில புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்கள் கடைகளைத் திறந்து தமது வியாபார நடவடிக்கைகளை தொடர்ந்திருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

தெஹிவலை நோ லிமிட் ஸ்தாபனம் வழமை போல் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

கொழும்பில் அதிகமான தமிழ் மக்கள் தமது கடைகளை மூடி முஸ்லிம் சமூகத்தின் இந்த சாத்வீக போராட்டத்திற்கு கைகொடுத்தனா்.

அவா்களுக்கு இந்த முஸ்லிம் சமூகத்தின் சாா்பில் ஆழ்ந்த நன்றியை தொிவித்துக் கொள்கின்றோம்.

முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு

பொலிஸ் பரப்பும் பொய் !

Image
முஸ்லிம்கள் தொடர்பாக அப்பட்டமான பொய்களைச் சொல்லி இனவாத காடையா்களை பாதுகாத்து வருகின்ற காவல்துறையின் செயற்பாட்டை கண்டிப்போம்!


19ம் திகதி வியாழக்கிழமை முழுநாள் ஹா்த்தாலுக்கான அழைப்பு!

Image

ஆர்ப்பாட்டத்தை பொலிஸாா் ஏன் தடுக்கவில்லை..?

Image

அளுத்கம- இனவாத பொறிக்குள் இலங்கை முஸ்லிம்கள்!

Image
இலங்கையின் தென்மாகாண நகரமான அளுத்கம மற்றும் தர்கா நகரில் முஸ்லிம்களின்  வியாபார நிலையங்கள்  தாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தக்கொண்டிருக்கின்றன.

ஒரு பௌத்த பிக்குவை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக பொய்க் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தி பௌத்த இனவாதிகளால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலங்களில் ராஜபக்ஸ அரசுக்கு எதிராக நடைபெறவிருந்த பல்கலைக்கழக மாணவா்களின் அனேக ஆா்ப்பாட்டஙகள் நீதிமன்ற தீா்ப்பின் மூலம் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற போா்வையில் தடைசெய்யப்பட்டன.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் செய்த பல போராட்டங்களை ராஜபக்ஸவின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் படை துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை கொன்று ஆா்ப்பாட்டங்களை முடக்கியது.

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை ஆதரித்து இடம் பெற்ற பௌத்த பி்க்குகளின் உண்ணாவிரத போராட்டத்தை அடித்து உதைத்து கலைத்தது.

தனது அரசைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுத பலத்தை பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை நசுக்கும் மஹிந்த அரசு, …

வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்

Image
வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்

வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
ஓர் இலக்கியக் கலந்துரையாடலின் போது முழுச் சபை யினதும் கவனத்தைக் கவர்ந்து நண்பர் அஸீஸ் நிஸாருத்தீன் ஒரு சிறுகதை குறித்துச் சிலாகித்துப் பேசிய போது எனக்கும் ஆச்சரிய மாகத்தான் இருந்தது. அக்கதை வெளி வந்த காலப் பகுதி, வெளிவந்த பத்திரிகை பற்றி அவருக்குச் சரியான தெளிவு இல்லாதிருந்த போதும் அக்கதை முழுவதையும் சபைக்கு ஒப்புவித்து ஒரு குறுந் திரைப் படத்துக்கு மிகவும் பொருத்தமான கதை என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. முதன் முதலில் அக்கதையைப் படித்த போது அது தன்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்றும் இன்றும் அக்கதையைத் தன்னால் மறக்க முடியவில்லையென்றும் கூடச் சொன்னார். அதிர்ஷ்டவசமாக கதையின் தலைப்பும் படைப்பாளியின் பெயரும் அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போன்று அவருக்கு ஞாபக மறதி இல்லை என்பதற்காகவும் சக இலக்கியப் படைப்பாளி யின் திறமையை இருட்டடிப்புக் குணம் இன்றிப் பகிரங்கமாகப் பாராட்டிய அவரது பண்புக்காகவும் அவருக்கு நான் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும். நான் கதையைத் தேடிப் படிக்க வேண்டும் என்று எண்ணினேன்.

 கைக்கெட…

ஹைக்கூ கவிதை

Image

ஓர் ஆபிரிக்க கவிதை

Image

முஸ்லிம்களுக்கெதிரான கலவரம் - பூனாவில் நடந்தது என்ன!

Image
வாட்ஸ்அப் என்கிற இயங்கு வலைதளம்மூலமாக முக நூலில் சிவாஜி, பால்தாக்கரே ஆகி யோரைப்பற்றி விமரிசனம் உள்ள பதிவு இருந்ததை மய்யப்படுத்தி அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள்மீது கல்வீச்சு என்று வன்முறை வெடித் துள்ளது - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கொல்லப்பட்டார். இதனால், பூனா நகரே கலவரமய மாகி உள்ளது.  சத்ரபதி சிவாஜி, சிவ சேனைக்கட்சி நிறுவனர் பால் தாக்கரே குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட படங் களை  முகநூலில் பதிவு செய்ததைத் தொடர்ந்தே வன்முறை வெடித்துள்ளது. அமைதிப்படுத்த சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மராட்டிய மன்னன் சிவாஜி, சிவ சேனைக்கட்சியின் மறைந்த தலைவரான பால் தாக்கரே மற்றும் பலருடைய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பிரச்சினைக்குரிய முகநூல் பதிவால் எதிர்ப்பாளர்களான சிவசேனைக்கட்சி, பாஜக, வலதுசாரி அமைப்பான ஹிந்து ராஷ்டிர சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்ட வன்முறை யால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 33 காவல் நிலையங்களில் 24 காவல்நிலையங்கள் சனிக்கிழமை31-5-2014 அன்று இரவு நேரத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அதே இரவில் சமூகவிர…