சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில் கோல் பேஸ் ஹோட்டலில் தனது 62 வது சுதந்திர தினத்தை (12.05.2010) இன்று கொண்டாடுகிறது .


சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில்  கோல் பேஸ் ஹோட்டலில் தனது  62 வது சுதந்திர தினத்தை (12.05.2010)  இன்று  கொண்டாடுகிறது .

இலங்கை  பாலஸ்தீன் மக்களோடு , அந்த மக்களின் போராட்டத்தோடு  மிகவும் நெருங்கிய உறவை வைத்திருக்கும் ஒரு நாடாகும் .  இலங்கை ஜனாதிபதி திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர். இதற்கு சான்றாக பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ வீதி என்று கூட பெயரிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று ( 12.05.2010 )இலங்கையில் இஸ்ரேலின் சுதந்திர தின வைபவம் இடம்பெறுவது இவை அனைத்தையும்  கேள்விக் குறியாக்கி இருக்கிறது.

பாலஸ்தீன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட  அந்த மக்களின் தாயக பூமியை சுதந்திர நாடாக அறிவிக்கும் உரிமை இந்த கொலைக்கார  நாட்டுக்கு அறவே இல்லை.அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் தனது ஆதிக்க அரசியலை மத்திய கிழக்கில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக இந்த இஸ்ரேலை உருவாக்கி, அதனை அணுவாயுத நாடாக போஷித்து வருகின்றன. அது செய்யும் மனித உரிமை மீறல்களை மௌனமாக பார்த்து ரசிக்கின்றன.

உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் என்ற சட்ட விரோத நாட்டின் பெயர் அழிக்கப்படும் வரை போராடும், பலஸ்தீன் மக்களின் போராட்டத்திற்கு உதவுவது மனிதநேயம் கொண்ட அத்தனை பேரினதும் கட்டாயக் கடமையாகும்.

இந்த இரத்த வெறி பிடித்த ,கொலைக்கார இஸ்ரேலிடமிருந்து  பாலஸ்தீன் மக்கள் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.  அவர்கள் ஒரு திறந்வெளிச் சிறையில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின்  விடுதலைக்காக ஒத்துழைப்பு வழங்குவது நீதியை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.

இஸ்ரேலின் அக்கிரமங்களை இனியும் பார்த்திருக்காது அனைவரும் ஓரணி திரள்வோம்.

இன்று காலிமுகத்திடலுக்கு  அருகில் உள்ள கோல்பேஸ் ஹோட்டலுக்கு முன்னால் சரியாக 5 மணிக்கு வாருங்கள்.

பலஸ்தீனில் இரத்தம் குடிக்கும் இஸ்ரேலியனுக்கும்
சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு?

ஆக்கிரமிப்பை, அநீதியை , அக்கிரமத்தை சுதந்திரம் என்ற சொல்லால் மூடிமறைக்க   முடியாது என்பதை கூட்டாக சேர்ந்து கோஷமிட்டு சொல்வோம்.

வாருங்கள்.

சுதந்திர பலஸ்தீனத்திற்கான நண்பர்கள்
Friends of Free Palestine

Comments

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !