Posts

Showing posts from 2012

புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !

Image
கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகாசேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல்போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னிஅல்மார்ஹம் சுல்தான் ஓமர் அலி சாய்புதீன்சாஅதுல் காய்ரி வாத்தியன் ஜிசிபி, ஜிசிஎம்ஜி(கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க) என்ற பெயர் படைத்த புருணே சுல்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர்.
1946-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சுல்தானுக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர்.  ராணி அனக் சலேஹா முதல் மனைவியாக செயல்படுகிறார். சுல்தானது இரண்டாவது மனைவி ராணி மரியத்தை 2003-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்போதைய இரண்டாவது மனைவி அஸ்ரினாஸ் மஹர் ஹக்கீம் சுல்தானை விட 32 வயது இளையவர். சுல்தானின் 5 வது மகள் 32 வயதான ஹபிசா வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் 29 வயதான முகமது ருசானியை அவர் 2012 செப்டம்பர் 20-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு 40 மில்லியன் யூரோ (சுமார் ரூ 270 கோடி) செலவாகியிருக்கிறது. 3000 விருந்தினர்கள் கலந்து கொண்ட 4 நாட்கள் திருமணத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணைப் பறிக்கும…

குஜராத்தை சூழ்ந்திருக்கும் மோடி பயம் வகுப்பு வாதத்தின் வெற்றி!

Image
ஆச்சரியங்களை ஒன்றும் ஏற்படுத்தாமல் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய நரேந்திர மோடியின் தொடர்ச்சியான 3-வது வெற்றிக்கு தடை போடும் அளவுக்கு குஜராத் வாக்காளர்களுக்கு ஜனநாயகரீதியான உணர்வு ஏற்படவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2002-ஆம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலைகளின் கதி கலங்க வைக்கும் நினைவலைகள் குஜராத் மாநிலத்தில் ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கொள்கைகளை ஊக்கமளிப்பதற்கு பதிலாக ஹிந்துத்துவா வன்முறை அரசியல் வேர்ப்பிடிக்க உரமாக மாறியது. குஜராத் புவியல் ரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாகும். ஆனால், மனோரீதியாக அவ்வாறல்ல. இந்திய சமூகம் நெஞ்சில் சுமக்கும் சகிப்புத் தன்மை, நல்லிணக்கம் ஆகியன குஜராத்திற்கு இப்பொழுது அந்நியமாகவே தென்படுகிறது. தேர்தல் முடிவுகள் இதனை நிரூபித்துள்ளன. 

துவேசத்தின் தத்துவத்தை அரசியல் அதிகாரத்திற்கான குறுக்கு வழியாக மாற்றுவது என்பது பா.ஜ.கவுக்கு கைவந்த கலை. குஜராத் ஹிந்துத்துவா கொள்கைகளின் சோதனைக் கூடம் என்பதை மோடியின் தொடர்ச்சியான வெற்றி நிரூபித்துள்ளது. பா.ஜ.க வெற்றி …

கொழும்பில் சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது . முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய !

Image
கொழும்பில்  சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது .  முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய ! (ஏ எம் எம் முசம்மில் பதுளை )  “இன்று இந்தநாட்டில் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளை வழங்கப்படவில்லை எனும்  சர்வதேச அழுத்தங்கள் இந்தநாட்டின் மீது பிரயோகிக்கப்படும் நிலையில் , இந்தநாட்டு சிரும்பான்மையினத்தவர்களின் இனப்பரம்பலை குறிப்பிடும் போது கொழும்பில் பௌத்தர்களை விட முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் விகிதாசாரம் கூடியுள்ளதை பிறநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதன் மூலமாக இந்தநாட்டில் சிறும்பான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் நான் எடுத்துக்காட்டிஇருக்கின்றேன்.” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷே அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர் “முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் ஒரு சிறு எண்ணிக்கையை கொண்டவர்கள். அவர்களைப்பற்றி தூக்கிப்பிடித்து நாங்கள் செயற்படுவதால் அவர்களை வீர…

“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .

Image
“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .
எ எம் எம் முஸம்மில்.  பதுளையில் முஸ்லிகள் தற்போது எதிர் நோக்கி உள்ள இனவாத செயற்பாடுகளுக்கும் இலங்கையில் பிற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும்  இனவாத செயற்பாடுகளுக்கும் வெளிநாட்டு உதவிகளே காரணம்  என்று இவ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக உள்ள விமல் வீரவன்ச என்னிடம் தெரிவத்தார். இந்நாட்டின் எந்த ஒரு அரசாங்கமும் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. ஆகவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் இன்று இவ்வாறு சில தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் வீறுகொண்டு எதிர்க்க மாட்டாது என்றும் இச்செயற்பாடுகளுக்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கநேரிடும் ஆகவேதான் ஒரு அசட்டுத் தனமான தைரியத்தில் தமது தீவிரமான செயற்பாடுகளில் ஈடு பட்டுள்ளனர். எவ்வாறாயினும்  பதுளையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை ஜனாத…

இலங்கை -பதுளை முஸ்லிம்கள் இலக்கு வைக்க பட்டுள்ளார்கள் !!! , காத்திரமான தலைமைத்துவம் இன்மையே காரணம் !!!!.

Image
கடந்த சில மாதங்களாக பதுளை முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள்,சூழ்ச்சிகள்,இனவாத செயல்கள் கூர்மைபடுத்த பட்டுள்ளன. “ பொது பல சேனா ” என்ற  அமைப்பு நாடளாவிய ரீதியில் அதன் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஏக காலத்தில் முடுக்கி விட்டிருந்தாலும் அதன் பிரதான இலக்குகளில் ஒன்றாக பதுளை பிரதேசம் காணப்படுகிறது. இதற்கான பிரதானக் காரணம் இன்று பதுளை மாநகர எல்லையில் வாழும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு வீதம் முஸ்லிம்களாக இருந்தும், சுமார் ஒன்படயிரதிட்குமேல் வாக்களர் பலத்தை கொண்ட இரண்டாம் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் இருந்தும், காத்திரமான தலைமைத்துவம் ஒன்றிஇல்லாததே இந்த்நிலமைக்கு காரணம் என்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
       கடந்த சில மாதங்களுக்குமுன் “ ஊவா கொயும் மெத் சங்க்விதாணய” எனும்பவுத்த அடிப்படைவாத அமைப்பொன்றின் மூலம் ஐந்து பக்கங்களை கொண்டதொரு துண்டுப்பிரசுரத்தை தமது தொலைபேசி இலக்கங்களுடன் வெளியிட்டது . குறிப்பிட்ட இத்துண்டு பிரசுரத்தின் மூலம் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷக்கருத்துகளை வெளியிட்டிருந்தது.அதை தமிழ் மொழி மூலம் மொழிபெயர்த்து ஊடகங்களில் வெளியிட்டு உரிய சமூக தலைமைக…

அல் பஜ்ர் - அஹமத் ஜாபர் காஸாவில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டப்படுகின்றது!

Image
காஸா எட்டு நாள் யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்புகிறது.  இஸ்ரேலிய யுத்தம் அவர்கள் மீது திணித்த உடல் உள காயங்கள் ஒரு போதும் ஆறப்போவதில்லை.

அந்த எட்டு நாள் யுத்தத்தில் காஸா மக்களின் உறவுகள் வீழ்ந்தனர், பச்சிளம் பாலகர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். மக்களின் உடைமைகள் இடியோடு அழிந்தன.

என்றாலும் ஒருபோதும் இல்லாத புத்துணர்வு அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமிப்புச் செய்திருக்கின்றது. திருப்பித் தாக்கும் திராணி தம்மிடம் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை அவர்களை இடிபாடுகளிலிருந்து எழ வைத்திருக்கிறது.

திருப்பி அடித்ததின் மூலம் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எட்டே எட்டு நாட்களில் அவர்களால் முடிவுக்கு கொண்டு வர முடிந்திருக்கிறது.

அதுதான் அல் பஜ்ர்!  பெரும் இரைச்சலோடு பறந்து சென்று இஸ்ரேலிய நகரங்களை தொட்டுப்பார்த்த ஏவுகணை. எதிரிகளை கதிகலங்க வைத்து கண்ணாமூச்சி விளையாடிய அல் பஜ்ரை நினைத்து, நித்திரையை தொலைத்த இஸ்ரேலியர்கள்  கால்வாய், மதகுகளில் எல்லாம் கண்ணயர துவங்கினார்கள்.

தரையாலும், கடலாலும், ஆகாயத்தாலும் தாக்கி காஸாவை அழித்து விடுவோம் என்று கர்ஜித்த சிங்கங்கள் அல் பஜ்ரின் முன்னால் ந…

இலங்கை - பதுளையில் தொடரும் பௌத்த பல சேனா தொந்தரவுகள் !

Image
பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரண்டு வரும் பௌத்த பல சேனா என்ற அமைப்பு திட்டமிட்டு முஸ்லிம்களை சீண்டி வருவதை கடந்த பதிவுகளில் தந்திருந்தேன்.

நேற்றிரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான பத்து ஆடுகள் களவாடப்பட்டு அவற்றில் மூன்று ஆடுகளின் கழுத்தை வெட்டி  கொன்று போடப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பௌத்த பல சேனாஅமைப்பின் முக்கிய நபர்களை பதுளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செயதிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து நடாத்திய முக்கிய நபர்கள் என்று தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரங்க என்ற பெயருடைய பதுளை மீன் வியாபாரியும், தினேஷ் என்ற இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரும், கோமஸ் என்ற முச்சக்கர வண்டி ஓட்டுனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அறிய வருகிறது.

இவர்களின் கைதை எதிர்த்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் பௌத்த பல சேனா பதுளை கிளையின் முன்னணி செயற்பாட்டாளருமான தயாசிரியினதும், மற்றும் இரண்டு பௌத்த பிக்குகளினதும் தலைமயில் …

வீடியோ - குஜராத் கலவரம் ! ஊடகங்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடி ஒளியும் நரேந்திர மோடி!

இதோ ஆயிரகணக்கான உயிர்களை பலியிட்ட நரபலி நாயகன் ,சர்வதேச பயங்கரவாதி , நரேந்திர மோடி CNN TV இல் குஜராத்தில் நடந்த கொடுமைகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறுவதையும் , காமெராவை நிறுத்த சொல்லுவதையும் பாருங்கள் ..
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைகளில் மிக முக்கிய ஏழு சம்பவங்களில் ஒன்றாக ஒடே படுகொலைகள் கருதப்படுகிறது. மார்ச் 1, 2002 அன்று அஹமதாபாத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ஒடே என்ற இடத்தில் கலவர நெருப்பு கொழுந்துவிட்டது. ஒரே முஸ்லிம் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். மக்கள் பீதியடைகின்றனர். பிரவொலி பஹோல் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம்களை சங்பரிவாரக் கும்பல் உயிரோடு கொளுத்துகிறது. உயிரோடு எரிக்கப்பட்ட முஸ்லிம்களில் 9 பேர் குழந்தைகள், 9 பேர் பெண்கள், 5 ஆண்கள். 

1500க்கும் மேற்பட் சங்பரிவார குண்டர்கள் மோடி அரசின் முழு ஒத்துழைப்போடு இப்பகுதியைச் சூறையாடினர். இச்சம்பவத்தை உச்சநீதின்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தது. ஆனந்த் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து ஏப்.9, 2012 அன்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டோரில் 23 பேர் குற்றவ…

வீடியோ - இஸ்ரேலிய பயங்கரவாதம்...!

Image
சிறுவர்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்க அடிவருடியான ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ( யுனிசெப்) ஆழ்ந்த உறக்கத்தில்...! எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறு குழந்தை செய்த குற்றம் பலஸ்தீனில் பிறந்ததே!

சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! மீண்டும் பதுளையில் துண்டுப்பிரசுரம்.

Image
பௌத்த பல சேனாவின் துண்டுப்பிரசுரம்

அண்மையில் இலங்கை  பதுளை நகரில் முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்று குற்றஞ் சாட்டி, பதுளை பொலிஸார் அவரை  நீதி மன்றத்தில் நிறுத்தி பிணையில் அனுப்பியதை பத்ர் களம் கடந்த பதிவில் தந்தது.

இந்தச் சம்பவத்தின் பின்னர் பௌத்த பல சேனா அமைப்பு சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! என்ற ஒரு துண்டுப் பிரசுரத்தை மீண்டும் விநியோகித்து வருகின்றது.

அதன் தமிழ் வடிவம் இதோ!

இது இளைஞர்கள் நாகரீகமாக அணியும் ஒன்று (கையுறை). இதில் இருப்பது என்னவென்று பாருங்கள். புத்தரின் உருவம். இப்படி புத்தரின் படத்தை  அவமதித்து கையுறைகளில் பதித்து விற்பனை செய்வோர்  பதுளை தபால் நிலையத்திற்கு முன்பாக இருக்கின்ற டீன்ஸ் பென்ஸி பெலஸ் என்ற வர்த்தக நிலையமே.

பௌத்த பல சேனா அமைப்பின் இளைஞர் அணியின் முயற்சியால் நேற்று இந்த கடை உரிமையாளர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

என்றாலும் அவரை பிணையில் விடுவிப்பதற்கு வெட்கம் கெட்ட அதிகாரிகள் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

சிங்கள் பௌத்தர்களான எமக்க…

இலங்கை - பதுளை இனவாதமும் பௌத்த பல சேனாவும்!

Image
இலங்கையின் பதுளை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையில் புத்தரின் படம் பொறிக்கப்ட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்ற குற்றஞ்சாட்டி குறித்த கடை உரிமையாளரும் அந்தக் கடை ஊழியர் ஒருவரும்   கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தலா 5000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இது தொடர்பாக நேற்று பதுளை நகரில் முஸ்லிம்களை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.

முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்த வியாபாரியின் கைதை ஆதரித்தும் அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை பொது (பௌத்த) பல சேனா என்ற அமைப்பு பதுளை நகரில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை குறித்த கடையின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.

அவரிடம் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறைகளும் இருக்கவில்லை என்றும் அப்படி பௌத்தர்களின் மனதை நோகடிக்கும் வகையிலான வியாபாரத்தை செய்வதற்கு தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென்றும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முயற்சிகள…