Posts

Showing posts from March, 2014

துருக்கி தேர்தல்: பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி

Image
துருக்கி நாட்டில் இன்று நடந்த தேர்தலில் பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி 47 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது, முக்கிய எதிர்கட்சி 27 சதவீத வாக்குகள் மற்றுமே பெற்றுள்ளதாக பி.பி.சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பிரதமர் தயிப் எர்டோகன் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அண்மையில் சமூக வலைதளங்களுடாக எர்டோகனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக துருக்கிய  அரசு குற்றம் சாட்டியிருந்தது. அவற்றிலிருந்து மீளும் வகையில் அவரது தற்போதைய வெற்றி அமைந்திருப்பதாக  அறிய வருகிறது..

வீடியோ - பணத்திற்காக பிணத்திற்கு சிகிச்சை ?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை!

Image
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை, இலங்கை தொடர்பான தன்னுடைய அறிக்கையினை நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் சமர்பித்தார். அவருயைடய அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு;

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஆகிய நான் இலங்கையின் மனித உரிமைகள் மற்aறும் நல்லினக்க செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை (A/HRC/25/23) இச்சபையில் சமர்பிக்கின்றேன்.

இவ்வறிக்கையானது இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டினுள் நடைமுறைப்படுத்துவதற்காக அதாவது 2013ம் ஆண்டு ஆணைக்குழு கூட்டத்தொடரின் பின்னரான காலம் முதல் ஆவணி 2013 என்னுடைய இலங்கையிற்கான விஐயம் வரையிலான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24ம் கூட்டத்தொடரின் பொழுது இலங்கையில் மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளக அளவில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்தல், வடமாகாண சபைக்காக தேர்தல்களை நடாத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் அதாவது மும்மொழிக் கொள்கையினை அமுல்படுத்துதல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆணைக்குழு 22/1 தீர்மானத்தின் அடிப…

மனித உடல் உறுப்புகளின் சந்தை!

Image
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market.


நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market” புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் …

ஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ஆவணப்படம்!

Image
ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும், போரின் போது இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதையும் மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மகா பிரபாகரன் அவர்களால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் வந்து ஆவணப்படத்திற்கான தகவல்களை சேகரிக்கும் போது தமிழ் மகா பிரபாகரன் இராணுவத்தினரால் கைது செய்யப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வில் மீண்டும் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 25 வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகிற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு உப மாநாடுகள் இலங்கையின் மனித உரிமை…

CCTV சிசிரீவி காட்சி - மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மேல்மாகாண சபை வேட்பாளர் சுமதிபால மானவடு விபத்தில் சிக்கும் காட்சி

Image
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மேல்மாகாண சபை வேட்பாளரும், தொழிற்சங்க தலைவருமான சகோதரர் சுமதிபால மானவடு அவர்கள் கடந்த 25.03.2014 அன்று இரவு 8.10 மணியளவில் கொழும்பு கண்டி வீதியில் இபுல்கொட பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்துச் சம்பவம் சிசிரிவி கமெராவில் இப்படி பதிவாகியிருந்தது

.

அஸ்ஸாம் இனக்கலவரம் - 2012 குறித்த ஆவணப்படம் ‘THE WOLVES'

Image
கற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.
ஆய்வுகள், வரலாறு, வன்முறை நிகழ்வுகளின் பதிவுகள் என ஆவணப்படங்கள் பல்வேறு தளத்தில் எடுக்கப்படுகின்றன. உண்மைச் சம்பவங்கள் சினிமாக்களாக எடுக்கும்போது பாதிப்புகள் வர்ணிக்கப்பட்டாலும், வலிதனை உணரச் செய்வது ஆவணப்படங்கள் மட்டுமே. நாயகர்களின் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் இரத்தத்தின் சாட்சியல்லவா? அந்த வரிசையில் அஸ்ஸாமின் இருள் முகத்தினை விவரிக்கும் படமாய் வெளிவந்திருக்கிறது “ஓநாய்கள்” (The Wolves).
அஸ்ஸாமின் அவலம் ஜூலை 20, 2012… அந்தி  மாலைப்பொழுதில் அனைவரின்  கவனமும் ரமழான் முதல் பிறை பார்த்திடும் ஆவலில் இருக்கையில், திடீர் சப்தம் திடுக்கத்திற்கு உள்ளாக்கியது ஜோய்பூர் கிராம (கோக்ரஜார் மாவட்ட) மக்களை! பீதிக்குள்ளான மக்கள் ஒன்று கூடினர். இராணுவ சீருடையில் வானை நோக்கி துப்பாக்கியால்  சுட்டுக் கொண்டே சென்ற நால்வர்தான் வெடி சப்தத்திற்கு காரணம் என்றறிந்த மக்கள், அவர்களை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் போடோ லிபரேஷன் டைகர் (BLT ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டனர். இது…

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்போம்!

Image
'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு

' ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களுக்கு எதிராக குரலெழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குரல்வளையை நசுக்குவதற்காக எடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மார்ச் 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களான 'இன்போம்" நிறுவனத்தின் ருகீ பர்னாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டபை்பு சம்பந்தமான முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கைது இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கு சிறந்த உதாரணமாகும். 16ம் திகதி இரவு அவர்கள் இருவரு…

ஆயிரக்கணக்கான தாய்மாரின் குரலாயிருந்தோர் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

Image
அண்மையில் கிளிநொச்சி தருமபுரத்தில் பாலேந்திரா ஜெயகுமாரியும் அவரது மகள் சிறுமி விபூசிக்காவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரால் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணான்டோவும் மத குருவான பிரணவீனும் அதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் செப்ரம்பர் மாதத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் காணாமல் போனார். 

அண்மையில் மாங்குளத்தில் அவரது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதனை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு வடக்கில் தொடரும் மனித உரிமை மீறல்கள்களையும் அரசாங்கத்தின் இராணுவ முனைப்புடனான போரினவாத ஒடுக்குமுறையினையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. 

அதேவேளை கைது செய்யப்பட்டோர் உடன் விடுவிக்கப்படுவதையும், காணாமல் போய் எலும்புக் கூடாகக்கப்பட்ட ஆசிரியர் நிரூபன் பற்றி உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்பட வேண்டும் எ…

மலேசிய விமானம் தொடர்பாக செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது சீனா

Image
சீன அரச இணையதளம் ஒன்று காணாமல் போன மலேசிய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் தென்படும் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- 

வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில் கடந்த மார்ச் 9ம் தேதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் "மூன்று சந்தேகத்திற்குரிய மிதக்கும் பொருட்கள்" மாறுபட்ட அளவுகளில் தென்பட்டுள்ளன. காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் விமானத்தின் பாகங்கள் அதிகபட்சம் 22-24 மீட்டருக்குள் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது.

சிங்கள ராவணா பலய ஆர்ப்பாட்டத்திக்கு தடை

Image
சிங்கள பௌத்த இனவாத அமைப்பான ராவணா பலய  இன்று (12.03.2014 )ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றம் தடைசெய்தள்ளது.

ராவணா பலய அமைப்பும், சட்டக் கல்லூரிக்கு தோற்றிய  மாணவர்கள் சிலரும் இதை ஒழுங்கு படுத்தியிருந்ததாக அறிய வருகிறது.

கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற விருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மலேசிய விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை: விமானப்படை அதிகாரி

Image
தென் சீனக் கடலில் மாயமான மலேசிய விமானம் எந்த திசையில் சென்றிருக்கும் என்பது தெரியவில்லை என மலேசிய விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார். விமானத்தை தேடும் பணி தொடர்ந்தது நடைபெற்றுவருகிறது. 

தேடுதல் எல்லை விரிவாக்கப்பட்டு ஆயிரம் கடல்மைல் பரப்பில் 10 நாடுகளைச் சேர்ந்த 36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல் கள், நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.

இந்நிலையில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரேடர் தொடர்பில் இருந்து விலகுவதற்கு முன்னர் மீண்டும் மலேசியாவுக்கே திரும்ப முயற்சித்திருக்கலாம் என அந்நாட்டு விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார் இருப்பினும் விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை என கூறினார்.

கோட்டா பாரு என்ற பகுதியில் இருந்து விமானம் திசை மாறி மலாகா ஜலசந்தி பகுதியில் மிகவும் தாழ்வாகப் பறந்திருப்பது ரேடார் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக வெளியான செய்திகளை அந்த அதிகாரி மறுத்துள்ளார்.
நன்றி - தி இந்து

மலேசிய விமானத்தின் மர்மம் தொடர்கிறது...!

Image
தென் சீனக் கடலில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் என்னவானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதா, கடலில் மூழ்கியதா, தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனரா அல்லது கடத்திச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 நாள்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
தேடுதல் பணியில் 10 நாடுகள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்குப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.30 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்தது. இதைத் தொடர்ந்து மலேசியா முதல் வியட்நாம் வரையிலான கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை 3-வது நாளாக தேடுதல் பணி நீடித்தது. 40-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 36-க்கும் மேற்பட்ட விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் சல்லடை போட்டு தேடுகின்றன.

மலேசியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, நியூஸிலாந…

நாங்கள் அடிப்போம்! நீங்கள் அழக் கூடாது..!

Image
இலங்கையில் இடம் பெற்ற மற்றும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் , அடக்கு முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல்கள் வழங்குவதையும், வழங்குவோரையும்  நாட்டுக்கே துரோகம் இழைப்போராக  இன்று சிங்கள இனவாதிகள் அடையாளப்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக   யாரும் எவருக்கும் எந்த தகவலும் வழங்கக் கூடாது அப்படி வழங்குவது இந்த நாட்டையே காட்டிக் கொடுப்பதற்கு நிகரானது என்று பிரசாரம் செய்யப்படுகின்றது.

1988 1989 களில் ஜேவிபி போராட்டத்தின் போது  ஐ.தே.க அரசின் இராணுவ, பொலிஸ் மற்றும் துணைப்படைகளால்  கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான  இலங்கையின் தென்பகுதி  சிங்கள இளைஞர் யுவதிகளுக்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ததை யாரும் தேசத் துரோகமாக பார்க்கவில்லை.

அதற்கு காரணம் 88, 89 காலப்பிரிவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் இருசாராரும் சிங்களவர்கள்.  சிங்கள அரசுக்கு எதிராக சிங்கள இளைஞர…

படங்கள் : மலேசியன் எயார் லைன் விபத்தின் பிறகு ,கோலாலம்பூர் பீஜிங் விமானநிலையங்களில் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள்

Image

குஜராத் இனக்கலவர வேட்டைக்காரனும், இரையும் ஒன்றிணைந்த மேடை!

Image
2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் தோன்றினார்கள். சங்க்பரிவார வெறியர்களுக்கு முன்னால் உயிர் பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடது கையில் சூலமும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் சங்க்பரிவார ஹிம்சையின் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்கள். பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் “இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்” என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. முஸ்லிம் இனப்படுகொலையின் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி மனம் வெதும்பி இறுதியில் சங்க்பரிவாரத்தின் துவேச அரசியலுக்கு எதிராக குரல் எழுப்ப முதன் முதலாக மேடையில் தோன்றியுள்ளார். வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்…

ஆப்கான் போர், அமெரிக்கா,மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்க:கர்ஸாய் குற்றச்சாட்டு!

Image
ஆப்கான் போர், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்கவாகும் என்று அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்டிற்கு அளித்த பேட்டியில் கர்ஸாய் கூறியிருப்பது:ஆப்கானை பாதுகாக்கவோ, அங்குள்ள மக்களின் நன்மைக்காகவோ ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்படவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நலன்களை பாதுகாக்கவும், அமெரிக்காவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்பட்டது.நான் ஏமாற்றப்படுகிறேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு நாட்டிற்கு ஏற்படுத்திய நட்டங்கள் என்னை தனிப்பட்ட ரீதியாக பெருமளவு அலைக்கழித்தது.ஆப்கானில் தாலிபான் மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவ்தை விட பாகிஸ்தானில் உள்ள கிராமங்களையே இலக்காக கொள்ள அமெரிக்கா முயற்சிச் செய்தது.இவ்வாறு கர்ஸாய் கூறினார்.பேட்டியில் அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்த கர்ஸாய், அமெரிக்க அரசுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்றார்.
நன்றி - http://www.thoothuonline.com

உக்ரேனில் நடப்பது என்ன... ?

Image
சிரியாவில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் கடந்து, கடந்த சில வாரங்களாக உக்ரேன் செய்திகள் உலக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. அமைதியாக இருந்த உக்ரேனில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக என்ன நடக்கின்றது..? ஏன் அங்கு வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்தன..? 
காரணம் ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்று உக்ரேனில் ஒரு பகுதியினர் நடத்திவரும் போராட்டமும் அதற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகளும்தான் இந்த உச்ச வன்முறைக்கும், அந்நாட்டு அதிபரும், பிரதமரும் பதவியைவிட்டோடியுள்ள நிலைக்கும் காரணம்.
சோவியத் ஒன்றியக் கூட்டமைப்புக்குள் இருந்து பிரிந்து தனித்தேசமானதுதான் உக்ரேன். தனித் தேசமானபோதும் அது தமது செ(ர)ல்வாக்குக் கட்டுப்பட்ட தேசமாக இருக்க வேண்டும் என்பது ரஷ்ய ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்து ரஷ்யாவை ஓரங்கட்டிவிடுவதுடன், பொருளாதார நலன்களையும் அடையவேண்டும் என்பது மறுதரப்பின் எதிர்பார்ப்பு. இந்த இரு தரப்புக்கும் இடையில் சிக்கித்திணறுகின்றது உக்ரேன்.


உக்ரேன் நிலைமைகளைப் பார்ப்பதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் …