Tuesday, 6 April 2010

இரகசிய காணொளி ( Secret Video) - ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள்!

அமெரிக்க வான் படை ஈராக்கிய அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கும் படுகொலைக் காட்சிகளடங்கிய இரகசிய ஒளி நாடா ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும்  இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..WikiLeaks  என்ற இணையதளம் வெளியிட்டிருக்கின்ற அமெரிக்க இராணுவத்தின் கொலை இரகசியங்கள் அடங்கிய இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில் 2007 ம் ஆண்டு பக்தாத் நகரில் போராளிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்க இராணுவம் எப்படி குறி வைத்து தாக்குகின்றது என்ற உண்மையை உணர்ந்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

அமெரிக்க இராணுவத்தால் அப்பாவி ஈராக்கிய மக்கள்  மனிதாபிமானமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டது  மட்டுமல்லாமல், காயப்பட்ட சிறுமி ஒருவரையும்,  காயப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரையும்  அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல வந்த வாகனம் ஒன்றின் மீதும் மற்றும் உதவிக்கு வந்தவர்கள் மீதும் நடாத்தும்   மிலேச்சத்தனமான  தாக்குதல்களையும் இந்த காணொளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தனது ஆயுத வல்லமையினால் முழு உலகையும் அடக்கி ஒடுக்கி  தனது ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமையாக வைத்திருக்க முயற்சி செய்யும் அமெரிக்கா ஏனைய நாடுகளுக்கு மனித உரிமையை போதித்து வருவதோடு,  அதன் அடாவடித்தனங்களுக்கு அடிமைப்படாத நாடுகளுக்கு அச்சுறுத்தல்களையும் விட்டு வருகின்றது.

பல முஸ்லிம் நாடுகள் சுற்றி வர பார்த்திருக்க, பல முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவோடு மிகவும் நேசமாக உறவு வைத்திருக்கும் போதே  இந்த படுகொலைகள் அரங்கேறி வருவது எல்லாவற்றையும் விட கொடுமையானதாகும்.

2 comments:

 1. உலகின் முதன்மையான தீவிரவாதிகள் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் என்பதில் ஐயமில்லை. ஆயினும், இந்த தீவிரவாதிகளின் மனிதாபிமான முகத்திரையைக் கிழிக்கும் காலம் இன்னும் கைகூடாமல் இருப்பதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அரபு நாடுகளுக்கு உள்ளது.
  தீமைக்குத் துணை செல்பவன் அந்த தீமையைச் செய்தவன் போன்றவன் என்ற நபிமொழிக்கேற்ப அமெரிக்காவின் அனைத்து அக்கிரங்களுக்கும் ஆதரவாக இருக்கும் அரபு நாடுகள் அனைத்தும், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அடுத்து உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள முகிய சக்திகளாகும்.
  இந்த தீவிரவாதக் கும்பலின் கொடும்பிடியிலிருந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.
  Safeer Hafis

  ReplyDelete
 2. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறாகள், ஆட்சியாளர்கள் தான் தங்கள் சுக போகங்களுக்கு அடிமையாகி சொந்த மக்களை கொன்று குவிக்க துணை போகின்றனர். தெளிவாக அமெரிக்கன் தான் முஸ்லிகளை திட்டம் போட்டு கொலை செய்துவருகிறான். எங்கெங்கெல்லாம் அமெரிக்கன் ஆதிக்கம் இருக்கிறதோ அங்கு தான் முஸ்லிம் பெயரில் முஸ்லிம்களை கொலை செய்து வருகிறான். (உதாரணம்: இராக்,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்) சதாம் ஆட்சி எவ்வளவோ மேல்.இவர்கள் கொன்று குவிப்பதை பார்த்தால்.இப்படி கோழையாக ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இன்னும் அதிகமான கொலைகள் நடப்பதை யார் தடுக்க முடியும்.அல்லாஹ் ஒருவனைத்தவிர.

  தாஜுதீன்.

  ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...