Posts

Showing posts from July, 2012

விம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா

Image
விம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா

மன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம்-கைது செய்யப்பட்ட 13 பேரை விடுதலை செய்யுமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை!

Image
மன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த 13 பேரையும் விடுதலை செய்யுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். மன்னாரில் கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினைத் தொடர்ந்து மன்னார் உப்புக்குளம் மக்களால் கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது நீதிமன்றக் கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலரை பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் தேடி வருவதோடு மேலும் 35 பேரை நாளை திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி ஆகிய கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் கைது செய்யப்பட்டு தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் வி…

பத்ர் களம்: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்...

பத்ர் களம்: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்...: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono ந...

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

Image
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றே...ார்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்.

இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய ''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆ…

கொழும்பில் பள்ளிவாசல், குடியிருப்புகளை அப்புறப்படுத்துவது பாரிய பிரச்சினை : ஹக்கீம்

Image
கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட ஜும்மா பள்ளிவாசலும், அதன் அருகில் அமைந்துள்ள வீடுகளும் நீண்டகாலமாக அங்கு இருந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், கொழும்பு கொம்பனித்தெரு போன்ற இடங்களிலிருந்து மக்கள் குடியிருப்புகளை அகற்றி அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக பாரிய பிரச்சினைகள் தலை தூக்கியதாகவும் கூறினார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பீ. மிக்ஹெலோ அமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே, அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

பிரஸ்தாப பள்ளிவாசலுக்கும் அதன் அருகிலுள்ள குடியிருப்புக்கும் பக்கத்தில் உள்ள காணியில் ரஷ்யாவின் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய தூதரகக் கட்டிடம் நிர்மாணிக்…

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸாரைப் பணித்தார் : ஜம்இயத்துல் உலமா சபை

Image
மன்னாரில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மன்னர் நீதிபதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உப்புக்குளம் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸாரைப் பணித்தார் என்று அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் மன்னார் மாவட்டக் கிளை குற்றம் சுமத்தியுள்ளது .

அது வெளியிட்டுள்ள அதன் ஊடக அறிக்கை ஒன்றில் நீதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நீதிபதி அவர்கள் எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர் மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளது .

இது குறித்து குறித்த உலாமா சபை கடந்த 24-07-2012 திகதியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த எமது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டு 23 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மீள்குடியேற வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் பல்தேவைப்பாடுகள் உடையவர்களாக இருந்துவருகின்றனர். குறிப்பாக கடற்…

இலங்கையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது - எரிக் சொல்கெய்ம்

Image
இலங்கை வந்திருந்த போது தன்னை குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். 

இவர் 2000ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவை சந்திப்பதற்காக இலங்கை வந்திருந்தார். 

இதன் போதே தன்னை கொலை செய்யவதற்கு சிங்கள குழு ஒன்று திட்டமிடப்பட்டிருந்ததாக எரிக் சொல்கெய்ம் 12 வருடங்களின் பின்னர் தெரிவித்துள்ளார். 

பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது இவ்விடயம் தொடர்பாக எரிக் சொல்கெய்ம் இன்று தெரிவித்துள்ளார். 

தன்னை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததை இலங்கை பொலிஸாரும் உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். 

அந்த காலப்பகுதியில் இலங்கை பெரும் பாதுகாப்பு பிரச்சினைகளில் இருந்தது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வது பேராபத்தாகவே இருந்தது. 

இருந்த போதும் அந்நேரத்திலும் நான் பாதுகாப்பு படை இல்லாமலேயே பயணித்தேன். ஆனால் இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்கள் பலத்த பாதுகாப்புடனேயே இருந்தனர். 

தமிமீழ விடுதலைப் புலிகள் அந்நேரத்தில் இராணுவ பலம் மிக்கவர்களாக இருந்தனர். இதனால் கொழும்பில் பெரும் …

இலங்கை - பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் மற்றுமொரு எதிர்ப்பு!

குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது குறித்து வெல்லவ பொலிஸார் கூறுகையில், பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் …

பகுதி நேர முஸ்லிம் -கவிக்கோ அப்துல்ரஹ்மான்

Image
சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படிஆகிவிட்டாய்!

பிறைச்சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!

ஒருகாலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளையெல்லாம்
மதம் மாற்றியது

இருண்டு கிடந்த
ஐரோப்பாக்கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போனவிளக்காய்க்
கிடக்கிறாய்

மனிதமலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாயமாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்
ஒன்றாக இருக்க வேண்டியநீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
‘டக்ஆஃப்வார்’
விளையாடிக்கொண்டிருக்கிறாய்

நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம்போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்றுஅறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்

மறுமைக் கல்வி
கற்றால்போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையைஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின்மகசூலுக்கு
விதைக்கத்தானேஇம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடைசெய்வாய்?

இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?
நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியைவைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்தபோது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்

உன்மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அ…

ஜோன் பெர்கின்ஸ் - ஓர் அமெரிக்க ‘தாதா' வின் வாக்குமூலம்!

Image
”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…………….. நம்ம தலைவர் கிட்டயே மோதறியா? உன் நெஞ்சுல இருக்குற மாஞ்சா சோத்தை எடுக்காம விடமாட்டேன்….மவனே.” என்று கிடுகிடுக்க வைக்கும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்? “அடியாள்” “நம்மாள என்னனுடா நெனச்சே? சிங்கம்டா….. தில் இருந்தா வெளிய வாடா” என்று வீட்டின் மீது சோடா பாட்டில் வீசும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்? “அடியாள்” இறுகக்கட்டிய டை……. போர்த்தியிருக்கும் கோட்……. மாட்டியிருக்கும் சூட்……. நாக்கைச் சுழற்றும் ஆங்கிலத்தோடு…… ”உங்கள் நாட்டின் தொலைத்தொடர்பு வசதிகளைப் பெருக்குவதற்காக ஆயிரம் கோடி டாலர்களை கொடுத்து உதவலாம் என்று வந்திருக்கிறோம். எப்படி உங்க வசதி?” என்று கனிவாகக் கேட்கிற கண்ணியவானை ”அடியாள்” என்று சொன்னால் அடிக்கத்தானே வருவீர்கள்? ஆனால்…… அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படித்த…. அமெரிக்காவின் அதிஉயர் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட….. பொருளாதார ஆலோசனை நிறுவனமான  மெய்ன்(MAIN) என்கிற மாபெரும் வர்த்தக நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட…… ”ஜான் பெர்கின்ஸ்” தன்னை…

எலி ஒரு தலை வலி?

Image
எலி என்பது மனிதர்களுக்கு ஒரு தலைவலியாகத்தான் பார்க்கப்படுகின்றது.  அது தரும் தொந்தரவுகளும் தொல்லைகளும் அப்பப்பா.. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. எலி பற்றி வித்தியாசமான ஒரு தகவலை பிபிசி தமிழோசை தந்ததிருக்கின்றது படித்துப்பாருங்கள்.

மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம், செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பொதுவாக எலி இனம் என்றாலே அது கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் விளைந்த பயிர்களை நாசமாக்குவது முதல் நகர்ப்புறங்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் தானியங்களை தின்று தீர்ப்பது வரை, எலி இனம் என்றாலே மனிதர்களுக்கு பெரும் வெறுப்பும், விரோதமும் தான் நிலவுகிறது. ஆனால் இந்த எலி இனங்கள் இயற்கைக்கு ஒரு மிகப்பெரிய சேவை செய்வதாக கூறுகிறார் நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் ஜேன்சன். மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செ…

யாழ் குடாநாட்டில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்பது தவறானது! இராணுவத்தளபதி மறுப்பு

Image
யாழ் குடாநாட்டில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மறுத்துள்ளார்.யாழ் குடாநாட்டில் 5 இலட்சம் பொதுமக்கள் உள்ளனர். ஆனால், அங்கு 10 ஆயிரம் இராணுவ வீரர்களே உள்ளனர். இந்த நிலையில், குடாநாட்டிலுள்ள ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் வீதம் உள்ளதாக கூறப்படும் தரவு முற்றிலும் தவறானது என்றார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை பாதுகாப்பு செயலமர்வொன்று நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட செயலமர்வைப்போன்று இவ்வருடமும் செயலமர்வொன்று நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார். யாழ் குடாநாட்டிலுள்ள பொதுமக்கள் என்றுமே இராணுவத்தினரையே நம்பியுள்ளனர். இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேறுவதை அவர்கள் விரும்பவில்லை. யாழ் மாவட்ட வீதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நல்லிணக்கத் தேவைகள் உள்ளிட்ட மக்களின் உடனடி…