Monday 24 December 2012

புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !



கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகாசேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல்போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னிஅல்மார்ஹம் சுல்தான் ஓமர் அலி சாய்புதீன்சாஅதுல் காய்ரி வாத்தியன் ஜிசிபி, ஜிசிஎம்ஜி(கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க) என்ற பெயர் படைத்த புருணே சுல்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர்.

1946-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சுல்தானுக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர்.  ராணி அனக் சலேஹா முதல் மனைவியாக செயல்படுகிறார். சுல்தானது இரண்டாவது மனைவி ராணி மரியத்தை 2003-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்போதைய இரண்டாவது மனைவி அஸ்ரினாஸ் மஹர் ஹக்கீம் சுல்தானை விட 32 வயது இளையவர்.
சுல்தானின் 5 வது மகள் 32 வயதான ஹபிசா வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் 29 வயதான முகமது ருசானியை அவர் 2012 செப்டம்பர் 20-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு 40 மில்லியன் யூரோ (சுமார் ரூ 270 கோடி) செலவாகியிருக்கிறது. 3000 விருந்தினர்கள் கலந்து கொண்ட 4 நாட்கள் திருமணத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணைப் பறிக்கும் உடைகளில் மணமக்கள் ஜொலித்தனர்.
திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
புருணே சுல்தானிடம் $15 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1 லட்சம் கோடி) சொத்து உள்ளது. ஒரு காலத்தில் $20 பில்லியனுக்கும் அதிக சொத்துடன் உலகிலேயே முதல் பணக்காரராக இருந்த சுல்தான் அவற்றை எல்லாம் எப்படி சம்பாதித்தார், எப்படி செலவழிக்கிறார் என்று சில விவரங்களை பார்க்கலாம்.
சுல்தானின் அரண்மனையில் 2 லட்சம் சதுர அடியில் 1788 அறைகளும், 257 குளியலறைகளும் உள்ளன. பெரும்பாலான அறைகளில் தங்கத்தால் இழைக்கப்பட்ட சுவர் மறைப்புகள் தொங்குகின்றன. குளியலறைகளில் தங்கக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவரிடம் மொத்தம் 3,000 முதல் 5,000 கார்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகம் அவரிடம் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதில் முழுக்க வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காரும் உண்டு.
புருணே சுல்தானின் சகோதரர் ஜெப்ரி போல்கையா உலக அளவில் ஒரு பிளேபாயாக புகழ் பெற்றுள்ளார். அவர் புருணே அரசாங்கத்திலிருந்து $10 பில்லியன் டாலர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு சுல்தானுடன் பல ஆண்டுகள் வழக்கு நடத்தினார்.
புருனே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு
புருணே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு
சுல்தான் தனது தனிப் பயன்பாட்டுக்காக தங்கத்தால் இழைக்கப்பட்ட போயிங் 747-400 விமானம் ஒன்றையும், ஆறு சிறு விமானங்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் வைத்திருக்கிறார்.  போயிங் விமானத்தில் 400 பேர் பயணம் செய்ய முடியும். மேலும் விமானம் முழுக்க நட்சத்திர விடுதியின் அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
முடி வெட்டிக் கொள்வதற்காக 15,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (ரூ 12.7 லட்சம்) செலவழித்து லண்டனை சேர்ந்த ஒரு சிகை திருத்தும் தொழிலாளியை விமானத்தில் அழைத்து வரச் செய்கிறாராம். ஒரு முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி அறை பதிவு செய்து கென் மோடஸ்தோ என்ற சிகை திருத்துபவரை லண்டனிலிருந்து வரவழைத்தாராம். அவருக்கு பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக கொடுக்கிறார். லண்டனில் 30 பவுண்டுகள் மட்டுமே வசூலிக்கும் கென் சுல்தானுக்கு 16 ஆண்டுகளாக முடி வெட்டுகிறார்.
மத்தியதரைக் கடலில் மிதக்கும் மாளிகை, உலகின் பல பெரு நகரங்களில் தங்குவதற்காக சொந்த மாளிகைகள் என்று உலகெங்கும் தனது ஜாகைகளை போட்டிருக்கிறார் சுல்தான். லண்டனில் அவருக்கே மட்டுமான மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக சொத்து கொஞ்ச கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு சொத்தும் எங்கிருந்து வந்தது, அவற்றை யார் சம்பாதித்து கொடுக்கிறார்கள், சுல்தான் அவற்றை எப்படி பராமரிக்கிறார் என்று பார்க்கலாம்.
சுல்தான் 1959-ம் ஆண்டு புருணேயின் அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டின் தலைமை ஆட்சியாளராகவும் 1962-ம் ஆண்டு எடுத்துக் கொண்ட அவசர நிலை அதிகாரங்களுடனும் ஆட்சி புரிகிறார். அவரே புருணேயின் பிரதம மந்திரியாகவும் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சராகவும் செயல்படுகிறார்.
புருணேயின் எண்ணெய் வளத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம்.
அதாவது உலகின் எண்ணெய் உற்பத்தி மதிப்பு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பில் உள்ளது. புருணேயில் தனி நபர் உற்பத்தியின் மதிப்பு அதை விட சுமார் 30 மடங்கு அதிகமாக ஆண்டுக்கு ஒரு நபருக்கு கிடைக்கும் எண்ணெய் மதிப்பு ரூ 7.45 லட்சமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ 1,500 மதிப்பிலான எண்ணெய் கிடைக்கிறது. புருணேயின் பக்கத்து நாடுகளான மலேசியாவில் ரூ 47 ஆயிரம் மதிப்பு எண்ணெயும், இந்தோனேஷியாவில் ரூ 12 ஆயிரம் மதிப்பிலும் எண்ணெய் ஒரு நபருக்கு ஆண்டுக்கு உற்பத்தியாகிறது.
புருணேயில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.  பெரும்பான்மை மக்கள் அரசுப் பணியில் உள்ளனர். அபரிதமான எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் பெரு வருமானத்தில் பெரும்பகுதியை தனக்கு வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார் சுல்தான்.
புருனே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்
புருணே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்
புருணேயின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனமான ஷெல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எண்ணெய் அகழ்வதற்கான பொறுப்பை ஷெல் புருணே என்ற பெயரில் செய்கிறது.  சுல்தானுக்கு போய்ச் சேர வேண்டிய பங்கை கொண்டு சேர்த்து விடுகிறது. அதன் மூலம் புருணே சுல்தான் தனது சொத்துக்களை சேர்த்திருக்கிறார்.
ஷெல் எண்ணெய் நிறுவனம் புருணேவில் 20,000 மைல்களுக்கும் அதிக நீளமான எண்ணெய் குழாய்களை பராமரிக்கிறது. ஒவ்வொன்றும் 40,000 பேரல் பிடிக்கும் சுமார் 50 அடி விட்டத்திலான டாங்குகளில் எண்ணெய் சேமித்து வைக்கப்படுகின்றது. காடுகளின் நடுவில் ஒரு முழுமையான பெட்ரோ வேதி குழுமத்தை ஷெல் உருவாக்கியிருக்கிறது.
புருணே ஷெல் (பிஎஸ்பி) புருணே அரசாங்கமும், ராயல் டச்/ஷெல் குழுமமும் சம அளவு பங்கு வைத்துள்ள கூட்டு நிறுவனம். அது நாட்டின் ஒரே சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறது. பிஎஸ்பியும் அதன் துணை நிறுவனங்களும் நாட்டின் மிகப்பெரிய வேலை தருபவர்களாக இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக. பிஎஸ்பியின் சிறு சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 10,000  பேரல்களை சுத்திகரிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
தொழிற்சாலை பகுதியைத் தாண்டி ஷெல் தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் வசிக்கும் சேரியா என்று நகரீயம் உள்ளது. சேரியா ஒரு கார்ப்பரேட் நகரீயம். ஷெல் விமான நிலையத்தில் சிங்கப்பூர், குவாலாலம்பூர், பாங்காக், பாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற இடங்களிலிருந்து ஷெல் ஊழியர்கள் வந்து இறங்குகின்றனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கேஎல்எம் விமானத்தில் ஷெல் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வந்து சேருகின்றனர். ஷெல் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, ஷெல் ஊழியர்களுக்கான பள்ளிக்குப் போய், ஷெல் கிளப்பில் ஓய்வெடுத்து, ஷெல் பீச்சில் விளையாடி, ஷெல் கடையில் பொருட்கள் வாங்கி வாழலாம். ஷெல் வானொலி நிலையம் கூட இருக்கிறது.
நாடு முழுவதும் மது பானங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஷெல் ஆயில் இடங்களில் மது பானங்கள் வழங்கப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஷெல் நீச்சல் கிளப்பில் நீந்தி விட்டு, ஷெல் டென்னிஸ் கிளப்பில் விளையாடி விட்டு, ஷெல் உணவு கூடத்தில் சாப்பிட்டு விட்டு ஷெல் பேருந்தில் ஏறி ஷெல் விமான நிலையம் போய்ச் சேரலாம்.
புருணேயில் இயற்கை வாயு, 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புருணே லிக்விபைட் நேச்சுரல் கேஸ் தொழிற்சாலையில் திரவமாக்கப்படுகிறது. அது உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு) ஆலைகளில் ஒன்று. ஒப்பந்தப்படி புருணே ஜப்பானுக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எல்என்ஜி வழங்க வேண்டும். ஜப்பானிய நிறுவனம் மிட்சுபிஷி, ஷெல் மற்றும் புருணே அரசாங்கத்துடன் கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995 முதல் அந்த நிறுவனம் 7 லட்சம் டன் கொரியா வாயு நிறுவனத்துக்கு சப்ளை செய்துள்ளது.  உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது.
புருணேவில் இது வரை உறுதி செய்யப்பட்ட எண்ணெய் வளம் 2015 வரை போதுமானது. ஆழ்கடல் தேடலின் மூலம் கூடுதல் கையிருப்புகள் கிடைக்கலாம் என்று தெரிய வருகிறது. பொருளாதாரத்தை வேறு திசைகளில் வளர்ப்பதற்கான முயற்சிகள் பெருமளவு வெற்றி பெறவில்லை. எண்ணெய் துறையைத் தவிர விவசாயம், காடுகள், மீன் பிடித்தல், வங்கி ஆகியவையும் சிறிதளவு நடைபெறுகின்றன.
புரூனே வரைபடம்புருணேயின் எண்ணெய் உற்பத்தி 1979ல் 2,40,000 பேரல்களாக இருந்தது. அதன் பிறகு வேண்டுமென்றே குறைக்கப்பட்டு இப்போது ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேரல் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து புருணே எல்என்ஜி ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. புருணேயின் எண்ணெய் ஏற்றுமதியில் ஜப்பானின் பங்கு 1982ல் 42 சதவீதத்திலிருந்து 1998ல் 19 சதவீதமாக குறைந்தது. தாய்வான், ஆசியான் நாடுகள், அமெரிக்கா ஆகியவை புருணே நாட்டின் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளும் மற்ற முக்கிய நாடுகள்.
அரபு நாடுகள், நைஜீரியா, கொலம்பியா, ஈக்வேடர், பர்மா, காஸ்பியன் கடல் என்று எங்கெங்கு நுழைந்தாலும் தனது கறையை படியச் செய்து விடும் பன்னாட்டு எண்ணெய் வியாபரத்தின் இன்னொரு பெருங்கறைதான் புருணே. அந்த எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன.  புருணே சுல்தானும் அவரது சகோதரரும் உலகின் மிகப் பெரிய ஊதாரிகளாகவும் கேடு கெட்ட மனிதர்களாகவும் உருவெடுத்துள்ளனர்.
புருணே சுல்தானின் அரசுக்கும் அரசியலுக்கும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் குடை பிடித்து நிற்கின்றன. சுல்தானின் பாதுகாப்புக்காக பிரிட்டிஷ் அரசு கூர்க்கா படையணி ஒன்றை கொடுத்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய எண்ணெய் வழங்கல் சங்கிலியின் ஒரு கண்ணியாக சுல்தான் ஒழுக்கமான முஸ்லீமுக்கு பரலோகத்தில் கிடைப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தை இகலோகத்திலேயே அனுபவிக்கிறார்.
வீடியோ - திருமண வைபவம்

நன்றி- வினவு

Saturday 22 December 2012

கொழும்பில் சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது . முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய !


கொழும்பில்  சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது . 
முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய !
(ஏ எம் எம் முசம்மில் பதுளை )
 “இன்று இந்தநாட்டில் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளை வழங்கப்படவில்லை எனும்  சர்வதேச அழுத்தங்கள் இந்தநாட்டின் மீது பிரயோகிக்கப்படும் நிலையில் , இந்தநாட்டு சிரும்பான்மையினத்தவர்களின் இனப்பரம்பலை குறிப்பிடும் போது கொழும்பில் பௌத்தர்களை விட முஸ்லிம்களினதும் தமிர்களினதும் விகிதாசாரம் கூடியுள்ளதை பிறநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதன் மூலமாக இந்தநாட்டில் சிறும்பான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் நான் எடுத்துக்காட்டிஇருக்கின்றேன்.” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷே அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர் “முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் ஒரு சிறு எண்ணிக்கையை கொண்டவர்கள். அவர்களைப்பற்றி தூக்கிப்பிடித்து நாங்கள் செயற்படுவதால் அவர்களை வீரர்களாக்கும் செயலையே நாங்கள் செய்வதாகி விடும்.

பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. இணைய தளங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு செயல் படுகின்றார்கள். ஜனாதிபதிக்கும் எனக்கும் சேறு பூசுவதற்கே இவ்வாறு திட்டமிட்டு செயபற்டுகின்றார்கள் .வெளிநாடுகளில் இருந்தது செயற்படும் அவர்களின் இணையதளங்களை முடக்குவது முடியாத காரியமாக உள்ளது.
இந்நாட்டிலிருந்து செயற்படும் அவ்வாறான இணையதளங்களை பற்றி தகவல்களை தந்தால் அவற்றிற்கு எதிராக எடுக்கவேண்டிய  நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து பார்க்கலாம்.

முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. 

அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள். உதாரணமாக வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம்மூடி செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் . முன்பு பல்கலைகழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள்.

ஆகவே அதை தடுங்கள் என்று கூறுகின்றார்கள் . நாங்கள் எப்படி அதை தடுப்பது.? ........? என்றும் கேள்வி எழுப்பிய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், “ பொது பல சேனா” எனும் அமைப்பு பௌத்த மதத்தின் வேறு பல முக்கிய காரணங்களுக்காக தொற்றுவிக்கப்பட்டதொரு  அமைப்பு. இன்று அதை தோற்றுவித்தவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அது சென்று கொண்டிருக்கின்றது. பெரும்பான்மையான பௌத்த மக்கள் இதன் போக்கை விரும்பவில்லை. ஆகவே நீங்கள் உங்கள் மக்களுக்கு சொல்லுங்கள் அச்சப்பட தேவையில்லை என்று . இந்தநாட்டின் உளவு துரையின் பிரதான அதிகாரியாக உள்ளவர் ஒரு முஸ்லிம் ஆவார்” என்றும் குறிப்பிட்டார்.

 இந்த நிகழ்வில் ஜம்மியதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ,செயலாளர் முபாரக் மதனி, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன், அகில இலங்கை வை. எம். எம். ஏ. தலைவர் டீன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர் அ ரஹ்மான், யங் ஏசியா டெலிவிசன்   . எம் ஹில்மி, மலையக முஸ்லிம் மாநாட்டின் செயலாளர் ஏ எம் எம் முசம்மில், பதுளை டீன் பென்சி உரிமையாளர் நளீம் டீன் (பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரி) கண்டி ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்கள்  உட்பட முப்பது பேர் அடங்கலான குழு இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.                            

Monday 3 December 2012

“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .


“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .




எ எம் எம் முஸம்மில்.
 பதுளையில் முஸ்லிகள் தற்போது எதிர் நோக்கி உள்ள இனவாத செயற்பாடுகளுக்கும் இலங்கையில் பிற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும்  இனவாத செயற்பாடுகளுக்கும் வெளிநாட்டு உதவிகளே காரணம்  என்று இவ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக உள்ள விமல் வீரவன்ச என்னிடம் தெரிவத்தார். இந்நாட்டின் எந்த ஒரு அரசாங்கமும் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. ஆகவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் இன்று இவ்வாறு சில தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் வீறுகொண்டு எதிர்க்க மாட்டாது என்றும் இச்செயற்பாடுகளுக்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கநேரிடும் ஆகவேதான் ஒரு அசட்டுத் தனமான தைரியத்தில் தமது தீவிரமான செயற்பாடுகளில் ஈடு பட்டுள்ளனர். எவ்வாறாயினும்  பதுளையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவேன். முஸ்லிம்களுக்கு எதிரான இவ் அசாதாரண நிலை நாடெங்கிலும் வியாபித்துள்ளது . என்று அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார் .பதுளைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தத வேளையில் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் பதுளை அல் அதான் மா வி யிலும் பதுள்ளை ஜூம்மாப்பள்ளியிலும் நடைபெட்ட்ற சந்திப்புகளிள் கருத்துகளை தெரிவிக்கும் போது மேற்படி கூறிய அமைச்சர் தொடர்ந்ததும் கருத்து தெரிவிக்கும் போது, பதுளை முஸ்லிம்கள் ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாவிடினும் பல அபிவிருத்தி நிலைகளை எட்டியுள்ளனர். ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண நிலையை சாமர்த்தியமாக பதுளை முஸ்லிம்கள் கையாண்டுள்ளது பாராட்டுகுரயது. இன்று ஒரு முஸ்லிம் மகளிர் கல்லூரியை பெற்றுக்கொள்ளவும் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் அல் அதான் மா வி யை சேர்க்கவும் உங்களால் முடிந்துள்ளது. ஆகவே இப்பாடசாலைகளின் எதிர்கால தேவைகளுக்கு நிச்சயமாக என்னாலான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
  ஜனாதிபதியவர்களுக்கு எழுத்தப்பட்ட பதுளை முளிம்கள் எதிர்நோக்கயுள்ள பொது பல சேனாவின் நெருக்குதல்கள் பற்றிய எழுத்துமூல முறைப்பாட்டின் பிரதின்றையும் அழ அதான் மா வி யின் கனிஷ்ட பிரிவிற்க்கான காணி யொன்னரின்தேவைப்பாடு அடங்கிய மகஜர் ஒன்ரையும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.                     


Sunday 2 December 2012

இலங்கை -பதுளை முஸ்லிம்கள் இலக்கு வைக்க பட்டுள்ளார்கள் !!! , காத்திரமான தலைமைத்துவம் இன்மையே காரணம் !!!!.



கடந்த சில மாதங்களாக பதுளை முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள்,சூழ்ச்சிகள்,இனவாத செயல்கள் கூர்மைபடுத்த பட்டுள்ளன. பொது பல சேனா என்ற  அமைப்பு நாடளாவிய ரீதியில் அதன் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஏக காலத்தில் முடுக்கி விட்டிருந்தாலும் அதன் பிரதான இலக்குகளில் ஒன்றாக பதுளை பிரதேசம் காணப்படுகிறது. இதற்கான பிரதானக் காரணம் இன்று பதுளை மாநகர எல்லையில் வாழும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு வீதம் முஸ்லிம்களாக இருந்தும், சுமார் ஒன்படயிரதிட்குமேல் வாக்களர் பலத்தை கொண்ட இரண்டாம் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் இருந்தும், காத்திரமான தலைமைத்துவம் ஒன்றிஇல்லாததே இந்த்நிலமைக்கு காரணம் என்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

       கடந்த சில மாதங்களுக்குமுன் ஊவா கொயும் மெத் சங்க்விதாணயஎனும்பவுத்த அடிப்படைவாத அமைப்பொன்றின் மூலம் ஐந்து பக்கங்களை கொண்டதொரு துண்டுப்பிரசுரத்தை தமது தொலைபேசி இலக்கங்களுடன் வெளியிட்டது . குறிப்பிட்ட இத்துண்டு பிரசுரத்தின் மூலம் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷக்கருத்துகளை வெளியிட்டிருந்தது.அதை தமிழ் மொழி மூலம் மொழிபெயர்த்து ஊடகங்களில் வெளியிட்டு உரிய சமூக தலைமைகளை தெளிவு படுத்த எடுத்த முயற்சியை ஒரு சமூக விரோத செயலாக சித்தரித்து சிலர் விமர்சித்ததுடன்  இதை மொழி பெயர்த்தன் மூலம் சமூக பிரச்சினை உருவாகலாம் என்று குற்றம் சுமத்தினர்.குறிப்பிட்ட அதே காலத்தில் பதுளை ஜும்மாபள்ளிவாயலில் தொப்பி அணிவது சுன்னத்தா இல்லையா என்ற கருப்பொருளில் கொத்துபா உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட துண்டு பிரசுரத்தின் தமிழ் ஆக்கத்தினை வாசித்தறிந்த வெளிப்பிரதேச முஸ்லிம்கள் அதிர சிக்கு உள்ளாகினர்.  நாட்டின் நாலபக்கங்களில் இருந்தும் இது பற்றி தகவல் அறிந்தவர்கள் விசாரிக்கத் தொடனங்கினர். கொழும்பில் இது விடயமாக பல முஸ்லிம் சிவில் அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள்   பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி ஊவா கொயும் மெத் சங்க்விதானயவிட்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிழக்கு மாகாணசபை தேர்தல் மேடைகளில் முஸ்லிம் அரசியல்   தலைமைகளால் இவ்விடயம் பிரதான பேசுபொருளாக சிலாகிக்கப்பட்டது.

    அனால் உள்ளூரில் இது விடயமாக எந்தவித எதிர் நடவடிக்கையும் காத்திரமாக மேற்கொள்ளப் படவில்லை. இந்தநிகழ்வுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பதுளை ஜும்மா பள்ளியில்  நடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வில் பதுளை முதியங்கனை விகராதிபதியையும்,பதுளை மாவட்ட செயலாளரையும், இன்னும் சில சிங்கள  உள்ளூர் அரசியல் தலைவர்களையும் பங்குபெற செய்தது இதற்காகத்தான் என்று குறிப்பிட்ட இப்தார் நிகழ்வை இதற்கான பதில் நடவடிக்கையாக கூறப்பட்டது.
  மேலும் நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிராக உலகளாவிய ரீதியில் ஒன்று திறண்டு தமது எதிப்பை காட்டி மாபெரும் எதிர்ப்பு பேரணிகளை பாரிய அளவில் மேற்கொண்டனர்.   

   இவ்வெதிர்புக்களை கண்டு உலகமே தகைத்து நின்றது. எமது நாட்டிலும் நாளா பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது. ஏன் பதுளைக்கு பக்கத்தில் உள்ள சிறிய முஸ்லிம் குக்கிராமங்களான ஹாலிஎல,பஸ்சர, பண்டாரவெள, வெளிமட போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் ஆர்பாட்டங்களை  நடத்தி தமது ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.

   அனால் பதுளையில் மட்டும் இவ்வெதிர்ப்பு ஆர்பாட்டங்கள் யாவுமே தம்மை பெயர்போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்தளுக்காக செய்வதாகக் கூறி முஸ்லிம்களின் மனவெழுச்சி கொச்சை படுத்த பட்டது. குறித்த ஆர்பட்டங்களின் போது நடைபெறும் அடவடிததனங்களை நாம் இஸ்லாத்தின் பார்வையில் வன்மையாக எதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருதில்லை. அனால் ஆர்ப்பாட்டம் என்பது தமது கருத்துகளை வெளிப்படுத்தக் கூடிய உயரிய ஊடகமாகவே கருதப்படுகிறது. அதனாலதான் இவூடகமுறையை சட்டத்தாலும் தடைசெய்ய முடியாதுள்ளது.இன்று பதுளை முஸ்லிம்களுக்கு இது சட்டப்படி குற்றமாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்யவும் முழங்காலுக்கு கீழ் சுடவும் முடியும் என்று அறிவுறுத்ததப் பட்டுள்ளது.

  நபி (ஸல்) அவர்களுக்காகவும் ,இஸ்லாதிற்க்காகவும் ஓரணியில் திரண்ட முஸ்லிம் உம்மாஹ்வின் மனவெழுச்சியை நாம் கொச்சை படுத்த முடியாது. சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் முஸ்லிம்கள் இஸ்லாதிற்க்காகவும், நபி (ஸல்) அவர்களுக்காகவும் ஓரணியில் ஒன்று திரண்ட வேளையில் பதுளை முஸ்லிம்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டிருந்ததால் முடங்கி இருந்த பதுளை முஸ்லிம்களின் பலஹீனத்தை புத்த அடிப்படைவாதிகள் கண்டுகொண்டு கொண்டதால் பதுளை மாநகரில் அடிக்கடி இரண்டு அரபட்ட பேரணிகளை பொது பல சேணாஅமைப்பு வெள்ளிக்கிழமைகளை இலக்காக கொண்டுநடத்தியது.
   “பதுளை முஸ்லிம் வியாபார நிலையங்களில் பொருட்களை வாங்கவேண்டாம்,முஸ்லிம்கள் பவுத்தர்களின் ஊழியத்தை சுரண்டுகிறார்கள் சிங்கள யுவதிகளை திட்டமிட்டு கடததிச் சென்று அபாயாஅணிவிக்கின்றகள் ,இவர்களது ஷரியா சட்டத்தை அமுல் படுத்தி எதிர்கால எமது சந்ததிகளை கொன்றொழிக்க திட்டம் போட்டுள்ளர்கள்போன்ற கருத்துக்களை ஊவா மாகாணம் எங்கும் தீவிரமாக பரப்பிக் கொன்ன்டிருந்த வேளையில் தான்  பதுளை முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடையில் புத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்று விற்கப்பட்டதாக கிளப்பப்பட்ட புரளியாகும் .

   இது திட்டமிட்டு செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை  துள்ளியமாக விளங்கலாம்.  குறித்த முஸ்லிம் வியாபாரியை சந்தேகத்தில் கைதிசைய வரும் போது, பல இனம்தெரியாத முகங்களும், ஊடகவியலாளர்கள்  என கூறக்கூடியவர்களும் அங்கே ஏற்கனவே வதிருந்தது திட்டமிட்டு புகைப்படங்களை எடுத்ததும்,கைது செய்யப்பட்டவர்களை போலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது  ஊவா கொயும் மெத் சங்விதானையவினால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் குறிக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தையுடைய பொல்வத்த பன்சலையின் பிரதம தேரோ சகிதம் இன்னும் பலரும் அங்கு ஏற்கனவே கூடியிருந்ததும் இச்சதியின் பின்னணியையும் சதிகாரர்களையும் கோடிட்டு காட்டுகின்றது.

   ஆனால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் போலீசில் ஆஜராவதற்கோ நியாயத்தை எடுத்துரைக்கவோ பதுளை நகரில் முஸ்லிம்கள் மத்தியில் பரந்துபட்டதொரு அமைப்போ அல்லது காதிரமனதொரு பிரதிந்திதுவ குழுவோ இயங்க வில்லை என்பதையும் கோடிட்டு காட்டுகின்றது. ஏனெனில் அடுத்தநாள் வெள்ளிக்கிழமை குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க வேண்டாம் என்று ஆர்பாட்டம் செய்தபோதும்  , ஜும்மாதொழுகையின் பின் இரு முஸ்லிம் சகோதரர்கள் போலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போதும் இதற்கெதிராக  எவ்வித பதில் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் சமாதானமாகவேநிகழ்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. ஆகவே அடுத்தநாள் மீண்டும் ஒரு  துண்டு பிரசுரம் தொலை பேசி இலக்கங்கள் சகிதம்   பௌத்தர்களுக்கு மத்தியில் விநியோகிக்கப் பட்டது . அதில் தாங்கள் பௌத்த மதத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளதாகவும் , உண்மையான பௌத்தர்கள் மேலும் மேலும் தங்களுடன் இணைந்துகொள்ளுமாரும்வேண்டப்பட்டிருந்த்தது. அதை தொடர்ந்து  அடுத்தநாள் மீண்டும் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆடுகளை கடத்திச் சென்று அதில் சிலதை கொன்று விட்டு தொலைவில் வீசி எறியப்பட்டிருந்தது .

  இவ்வளவு நிகழ்ந்தும் இதுவரை பதுளைவாழ முஸ்லிம்கள் ஒன்றிணைத்து சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி காத்திரமானதொரு செயற்குழு அமைக்கப்படவில்லை.  பதட்டமான நிலையலும் கூட கடந்த வெள்ளிக்கிழமை (3௦.11.2012) குத்பா உரை கூட்டு துவாவிற்கான ஆதாரங்களை அலசுவதற்காக பயன்படுத்தபடுவது எமது துரதிர்ஷ்டவசமான நிலைமையையே எடுத்துக் காட்டுகின்றது .
    முஸ்லிம்களின் வியாபாரம் இலக்கு வைக்கப்படுள்ளது, ஆனால் முஸ்லிம் வியாபாரிகளின் கூட்டமைப்பொன்று எம்மத்தியில் இல்லாத அதே வேளை ஊவா வர்த்தக சங்க முஸ்லிம் பிரதிநிதிகளின் வகிபாகம் இவ்விடயத்தில் எந்தளவு பெறப்பட்டுள்ளது என்பதை அறியமுடியாதுள்ளது. ஆரம்பத்தில் குறிப்பட்ட துண்டு பிரசுரத்தை மொழிபெயர்த்த போது அதற்கெதிராக வெகுண்டெழுந்தவர்கள், முஸ்லிம் வியாபார சகோதரர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்ட போது போலீசில் நியாயம் பேச எவரும் முன்வரவில்லை.

    வெள்ளிக்கிழமை ஜூம்மாவிற்குப்பிறகு பொது பல சேனாஆர்பாட்ட பேரணியின் போது தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் அப்பாவிகள் . அவர்களை போலீசில் ஆஜர் படுத்தி நியாயம் பெற்றுத்தரவோ அவர்களி வாகனதிட்கு ஏற்பட்ட சேதம் உரிய முறைப்பாடு செய்ய எவரும் முன்வரவில்லை. ஆனால் போலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆலோசனை கூறினார் என்பதற்காக நடந்த அடாவடித்தனங்களை போலீசில் எவ்வித முறைப்பாடும் செய்யாமல்,மரம் வீழ்ந்த தால்தான் முச்சக்கர வண்டி சேதமானது என்று பொலிசாரிடம் புகார் எழுதிகொடுத்து சமாதானம் பேச முன்வருகிறது முஸ்லிம்தலைமைத்துவம்.
       பல் சமுக அமைப்பை கொண்ட இலங்கை நாட்டில் முஸ்லிம்களும் கௌரவமான பிரஜைகளே. ஒரு குடிமகனின் பிரஜா உரிமை என்பது இலகுவாக மதிக்கதக்கதல்ல. இந் நாட்டில்  வாழவதற்க்கும் சாவதற்கும்,குடும்பம் நடத்தவும்,கொடுக்கல் வாங்கல் செய்யவும் , மதத்தை பின்பற்றவும் , மதத்தை துறக்கவும்,கருத்துக்களை வெளியிடவும் ,சமூகத்துடன் சேரவும் பிரியவும் மனித வாழ்வின் இன்னோரன்ன அனைத்துவிடயங்களிலும் உரிமை பெற்றவனாவான்.பிரஜா உரிமை மறுக்கப்பட்டவன்  இவ்வுரிமைகள் அனைத்தையும்  மறுக்கப்பட்டவனாவான்.    இந் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பிரஜா உரித்துடைய இந் நாட்டின் கண்ணியமிக்க குடிமக்களாவர். ஆனால் எமது உலமாக்கள் அநேகமான குத்பா உரைகளில் நாம் அந்தனிய நாட்டில் வாழுகின்றோம் ஆகவே நாம் நிதானமாகவும் எடுத்துகாட்டாகவும் வாழ வேண்டும்என்று முழங்குகின்றார்கள். இக்கருத்தானது முஸ்லிம்களை பல் சமூக அமைப்பிலிருந்து ஒதுங்கி வாழ வைக்கும். முஸ்லிம்களின் மனவெழுட்ச்சியை கீழே போட்டு மிதித்து விடும். தாமே தம்மை இரண்டாம் பிரஜையாக எண்ணவைக்கும். ஆகவே இந் நாட்டு முஸ்லிம்பிரஜைகள் இந் நாட்டு குடிமகன் என்ற வகையில் வியாபாரம் செய்யவும் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உரிதுடயவர்களே.
இந்த வகையில் அனுமதிக்கப்பட்டவொரு வியாபாரம் செய்வதற்காக  உரிய அனுமதி பத்திரங்கள் பெற்று வருமான வரிகளை உரிய முறையில் செலுத்தி இந்தநாட்டு சட்டவிதிகளுக்குஅமைய மேற்கொள்ளும் ஒரு வியாபார நிலையத்தில் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம்என்பது சட்டப்படி குற்றமாகும். ஒருவன் தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்தலாம், அதேவேளையில் இன்னாரின் கடையில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று எவராவது உத்தியோகபூர்வமாக விளம்பரப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

ஆகவே முஸ்லிம்களுக்கு காணிகளை விற்காதீர்கள் என்று கூறுவதும் இந்தநாட்டு முஸ்லிம்களுக்கு தேவைக்கதிகமாக உரிமைகள் வழங்கப்படுள்ளது  என்று கூறுவதும், விரும்பினால் இருங்கள் அல்லது வேறு நாடுகளுக்கு சென்றுவிடுங்கள் என்று கூறுவதும் எமது பிரஜாஉரிமைக்கு விடுவிக்கப்படும் அச்சுறுத்தல்களாகும். பதுளை முஸ்லிம்களை பொறுத்தவரையில் பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ பிரதிநிதித்துவம் இல்லாத சமூகம் , ஆன்மீக ரீதியாகவும் ஏகோபித்த தலைமைத்துவம் ஒன்றை பெறாத சமூகம். தலைமைதத்துவம் அற்ற சமூகம், பாதுகாப்பற்ற சமூகமாகவே கருதப்படும். இதனால் தான் பதுளை ஜும்மா பள்ளிக்கு அழைத்துவரப்பட்ட உள்ளூர் அரசியல் பிரமுகரான மகாண சபை உறுப்பினர் சுஜீவ ஜெயசிங்க அவர்களும், அமைச்சர் நிமல் சிறிபால தி சில்வா அவர்களின் இணைப்பு செயலாளர் பர்சி விஜெதாசே அவர்களும் இந்நிகழ்வுகளை பற்றி குறிப்பிடும் போது இது ஒரு சிறிய கும்பலின் செயற்ற்பாடு, அடையாளம் இல்லாத இவர்களின் செயற்பாடுகள் பற்றி நீங்கள் அச்சப்பட தேவையில்லை, எங்களது ஜனாதிபதியும், அமைச்சரும் இனவாத அரசியல் செய்பவர்கள் அல்லர், இதுவரை செயற்பட்டது போல் நீங்கள் பொறுமையாக செயற்படுங்கள்.என்று கூறி செல்லும் போதும் கூடியிருந்தவர் ஏகோபித்த மனதாக ஆமோதித்து தலைஅசைத்து செல்ல வேண்டியிருந்தது.



    இந்தநிலையை கருத்திற்கொண்டு அண்மையில் ஜூம்மாப்பள்ளி நிர்வாக சபை மூலம் கூட்டப்பட்ட அவசர கூட்டத்தின் போது இந்த விடயத்தில் நாம் ஊடகத்தை உச்ச கட்டமாக பயன்படுத்துவதால் எமது பிரச்சனையை மேலிடத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று ஆலோசனை செய்யப்ப்ப்பட்டு ஒரு ஊடக சந்திப்பைஉள்ளூரிலோ கொழும்பிலோ செய்யலாம் என கருத்து முன்வைக்கப்பட்டது. அததற்கான அனுசரணையை பெற்றுத்தர உரிய அமைப்புகள் முன்வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது தேசிய அமைப்பிலும், சர்வதேச மட்டத்திலும் பல நன்மைகளை ஏற்ற்படுத்தக்கூடும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது. அனால், சபையில் இருந்தோர் இக்கருத்தை ஆதரித்தபோதும் ஒருவரின் தனிப்பட்ட முடிவால் அது நடைமுறை படுத்த முடியாது போனது.
ஆகவே......
   இன்னும் தாமதமாகவில்லை, பதுளை நகரில் மூன்று ஜும்மா பள்ளி வாசல்கள் உட்பட 20க்கும் மேற்ற்பட்ட பள்ளிகள் உள்ளன. முஸ்லிம் பாடசாலைகளும் பல சமூக  சேவை அமைப்புகளும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஜம்மியத்துல் உலமா சபையொன்றுள்ளது. ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரயும் ஒன்றிணைத்து ஒரு சிவில் பாதுகாப்பு அமைப்பொன்றை அமைத்து இனிவரும் காலங்களில் நாம் எமது செயற்பாடுகளை முன்வைப்போம் என்றல் அதற்கு ஒத்துழைத்து செயற்ற்பட இன்றும் தயாராக உள்ளோம். அல்லது ஒரு சிலரின் தான்தொன்றித்தனத்தால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்புக்குகள்ளாகுமானால் அதன் முழு பொறுப்பையும் நிர்வாக சபையே ஏற்கவேண்டும். பதுளையில் ஏற்றப்பட்டுள்ள இந்தநிலையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் போன்ற அமைப்புகள் கவனத்தில் ஏற்று பதுளைக்கு தங்களாலான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்!
ஏ எம் எம் முஸம்மில்,
இணை செயலாளர்,
மலையக முஸ்லிம் மாநாடு
பதுளை ,

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...