Saturday 30 October 2010

ஒரு சோகமான பாடல் ! இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010 அக்டோபர் மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.

ஒரு சோகமான  பாடல் !


இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இவ்வருட 2010  அக்டோபர்  மாதத்தோடு இருபது வருடங்கள் கடந்து விட்டன.  

சிங்கள இனவாதம் தமிழர்களை நசுக்கிய போது அதற்கு எதிராக எழுந்த விடுதலைப் போராட்டம் தனது பூமியில் வாழ்ந்த சகோதர சிறுபான்மையான முஸ்லிம்கள் மீது தனது அடக்கு முறையை ஆயுத ரீதியாக பிரயோகிக்க ஆரம்பித்தது.  

சிங்கள பெரும்பான்மை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை அதே பாணியில் தமிழ் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு  மிக மோசமாக  இழைத்தது.

இருபது வருடங்களுக்கு  முன்  முஸ்லிம்கள் தமது  தாயக பூமியிலிருந்து புலிகளால் விரட்டி அடிக்கப்பட்டனர். 

Sunday 17 October 2010

ஈரானோடு மோத தாலிபான்களோடு இணங்கிப்போகிறது அமெரிக்கா?



ஈரான் இஸ்லாமியக் குடியரசோடு  யுத்தம் ஒன்றுக்கு தயாராகி வரும் அமெரிக்கா அதன் கள நிலவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் இப்போது இறங்கி இருக்கிறது.

ஈரானை தாக்குவதற்காக தனது நேச நாடான சஊதி அரேபியாவிற்கு கோடிக்கணக்கான  டொலர்களுக்கு  ஆயுதங்களை விற்பனை செய்து சஊதியை இராணுவ மயப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா.  ஆப்கானில் தனது வியுகத்தை தலை கீழாக மாற்றி  இருக்கிறது.  தாலிபான்கள் விடுதலை பேச்சுவார்த்தை என்ற பின்னணியில் அமரிக்காவிற்கு எதிராக இருக்கும் ஆப்கான் தளத்தை ஈரானுக்கு எதிராக திருப்பும் ஒரு முயற்சியாக இதை பார்க்க முடியும்.  
அதன் முதற் கட்ட நடவடிக்கையாக தாலிபானின்  முக்கிய  தலைவர்களில் ஒருவரான  முல்லா அப்துல் கனியை பாகிஸ்தான் அரசு மூலம் விடுதலை செய்திருக்கிறது.

 பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தத்திற்கு பக்க பலமாக நின்று தாலிபான்களோடு போராடிய பாகிஸ்தான்  தற்போது அமெரிக்காவின் தேவைக்காக அந்த அமைப்போடு சுமுகமான உறவைப் பேண முயற்சி செய்து வருகின்றது.

தாலிபான்களை அழித்து உலகையே பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றி விட்டே ஊர் திரும்புவோம் என்று சபதமிட்டு வந்த அமெரிக்கா வின் தாலிபான்கள்தொடர்பான போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது.                                                                        

அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் அண்மைய நிலைப்பாட்டில் பெரும் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

அண்மைக்காலமாக  தாலிபான்களின் தாக்குதல்களுக்கு  முகம்கொடுக்க முடியாமல் நேட்டோ படைகள் திண்டாடுவது போன்ற ஒரு நிலையை  மேற்கத்தைய ஊடகங்கள் பரப்பி வருகின்றன்.

பல ஆண்டுகள் போராடி ஒழித்த தாலிபான்களின் பலம் மீண்டும் புதிய வேகத்தில் வளர்வது போன்ற ஒரு பிரமையை அமெரிக்க ஊடக்ஙகள் ஏற்படுத்தி வருகின்றன.    

எனவே அமைதியான ஆப்கான் ஒன்றின் உருவாக்கத்திற்கு  அமைதிப் பேச்சுவார்த்தை அவசியம் என்ற  ஒரு மாயையை தோற்றுவித்து  தாலிபான்களின்  பயங்கரவாதத்தை உட் பிளவுகளை வைத்து  ஈரானுக்கு எதிராக திருப்பிவிடும்  ஓரு சதியையும் அமெரிக்கா செய்து வருகிறது.

விடுதலை செய்யப்பட்டிருக்கும் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனியை வைத்து பேச்சுவார்த்தை நாடகத்தை ஆரம்பித்து அவர்களை அமைதி படுத்தி தனது பொது எதிரியான ஈரானோடு தனது யுத்தத்தை ஆரம்பிக்கவும் அதற்கேற்ற தளமாக ஆப்கானையும் ஏனைய  முஸ்லிம் நாடுகளையும்  உருவாக்க அமெரிக்கா பல வழிகளில் முயற்சித்து வருகிறது.

Thursday 7 October 2010

அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ... இனிமேல் மனிதர்களுக்கு எருமை என்று திட்டி எருமைகளை அவமானப்படுத்துவதை விட்டு விடுவோம்!

அநீதிக்கு எதிராக எழுந்து வந்த எருமைகள் ...



இனிமேல் மனிதர்களுக்கு எருமை என்று திட்டி எருமைகளை  அவமானப்படுத்துவதை விட்டு விடுவோம்!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...