Posts

Showing posts from October, 2014

சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் சக்தி ஓரம் போகுமா?

Image
சிங்கள பௌத்த பேரினவாதம் கூர்மையடைந்த நிலையில், 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் வரப்போகின்றது. 2004ல் வன்னிமக்களின் வாக்குரிமையை தடுத்து நிறுத்தி, ஒரு சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஐ.தே.க வை தோற்கடித்து ஆட்சியமைத்த மஹிந்த ராஜபக்ஸ, 2009ல் புலிகளை அடியோடு அழித்த பெருமிதத்தில் சிங்கள மக்களின் விடுதலை வீரராக தன்னை அடையாளப்படுத்தி ஆட்சியைப் பிடித்தார். 2015 தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு ‘வழி’ வரப்பிரசாதமாக வந்திருக்கின்றது. ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் புலிகள் இயக்கத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கியதால், தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு மையப்புள்ளி மஹிந்தவின் மடிமீதே வந்து வீழ்ந்திருக்கின்றது. பெரஹர ஊர்வலத்திற்கு முன்னால் கசையடிப்பவன் வந்து செய்தி சொல்வது போல், அரசு அச்சிட்ட ‘புலி’ ரணில் போஸ்டர்கள் முன்னால் வெளிவந்து செய்தியை சொல்லி விட்டது. எதிர்வரும் 2015 ஜனாதிபதித் தேர்தல் புலி பற்றி ஒரு கிலியை தெற்கின் சிங்கள பிரதேசங்களில் பரப்பும் தேர்தலாகத்தான் தடம்பதிக்கப் போகின்றது. ஐரோப்பிய யூனியன் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியிருப்பது. மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவப்போகின்றது. இந்தத் தட…

கொழும்பா? கொஸ்லந்தையா ? அரசாங்த்திற்கு எந்த நிலம் பெறுமதியானது?

Image
பதுளை கொஸ்லந்தையில் ஏற்பட்ட மண் சரிவிற்கு ஏழைத் தமிழ் தோட்டத் தொழிலாளா்கள் இரையாகியிருக்கின்றாா்கள். இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகவும் சோகமான ஒரு நிகழ்வுதான் இந்த கொஸ்லந்த சம்பவம். 2004 ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு மனதை உலுக்கிய ஒரு உருக்கமான நிகழ்வு.

இந்த அனா்த்த சம்பவத்திற்குப் பின்னால் அரச அதிகாரிகளின் பொடுபோக்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியாமல் இருக்கிறது. 2005ம் ஆண்டு மற்றும் 2011 ஆண்டுகளில் நிலச்சரிவுக்கான எச்சரிக்கை தொடா்பான அறிவுருத்தல்கள் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இரண்டு தடவைகள் எச்சரிக்கை விடுத்த அரச அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன? அவர்களுக்கான அடிப்படை வசதிகளுடனான புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தி ஏன் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வில்லை. தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் என்ன நடவடிக்கையை மேற்கொண்டன. இன்று 31.10.2014 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இப்பிரதேச அரசாங்க அதிபா் கூட ஏற்கனவே இவா்களுக்கு அறிவுரு…

பொதுபலசேனாவையும் மஹிந்தவையும் திட்டும் பௌத்த பிக்கு மாணவன்!

அனைத்து பல்கலைக்கழக மாணவா்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கடந்த 21.10.2014 அன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்றது. இந்த அா்ப்பாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஒரு பௌத்த பிக்கு மாணவர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட உரையே இது.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது பொலிஸாா் நடாத்திய தாக்குதலில் பல மாணவா்கள் படுகாயமுற்றனா். அரசாங்கத்தையும் அது போஷித்து வளா்க்கும் இனவாத சக்திகளான பொதுபலசேனாவையும் இந்த மாணவா்கள் கடுமையாக தாக்கி உரையாற்றினா்.

பொதுபலசேனாவின் வன்முறை சாா்ந்த ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதியளிக்கும் மஹிந்த அரசு, மாணவர்களின் இந்த போராட்டத்தை பொலிஸாரின் மூலம் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களைத் தொடுத்து கலைத்தது.
மஹிந்த அரசு தனக்கு சாா்பான இனவாத கூலிப்பட்டாளங்களின் ஆா்ப்பாட்டங்களுக்கோ கூட்டங்களுக்கோ தடைவிப்பதில்லை. மாறாக அவா்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கி வருகின்றது.

கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களின் பல உயிர்களையும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான உடமைகளையும் அழித்த பொதுபலசேனாவின் ஊா்வலத்தை தடை செய்யவில்லை, தடுத்து நிறுத்தவில்லை.
ஆனால் ஜனநாயக ரீதியிலான தொழலாளா்களின…

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !

Image
சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !


நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மூலம் 150 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாக நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒத்துக்கொண்டது.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹா்ஷ டி சில்வா எட்டு மாதங்களுக்கு முன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்றுதான் மின்சார எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பதிலளித்தாா்.

அரசாங்க கொள்வனவு தொடர்பான விதிமுறைகளை மீறி இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் தரம் குறைந்த இந்த நிலக்கரி கொள்வனவினால் சுமாா் 150 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் ஏற்றுக் கொண்டாா்.  இந்த நிகழ்வு  தான் அமைச்சராக பொறுப்பேற்க முன்னர் இடம் பெற்றதாகவும் அவா்  கூறினாா்.

முன்னாள் எரிசக்தி அமைச்சா் சம்பிக்க ரணவக்க கூட ஊடகங்களுக்கு இன்று தனது கருத்தை தெரிவித்தாா். ஊழல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்ட இவா் விதி முறைகளை மீறி கப்பல் கூட்டுத்தாபனம் தான்தோன்றித்தனமாக இந்த கொள்வனவில் ஈடுபட்டதாகவும் அரசாங்கத்தின் உயரதிகாாிகள் சிலரது போக்கே இதற்கு காரணம் என்றும் கூறினாா்.

நடக்கின்ற இந்த சம்பவங்களைப் பாா்க்கின்ற போது  இதன்…