கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
இமாம் ஹுசைனை
இழந்த நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!
கர்பலாவின்
கண்ணீர்த் துளியே
நெஞ்சில் பாரமனதே!
கொடுமை நிறைந்த
கர்பலா என்
கல்பில் என்றும் ஈரமே!
(இது இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான என்னால் இயற்றப்பட்ட பாடல்)
கர்பலா உன்
ஷஹாதத் காயம்
உம்மத்திற்கு பாரமே!
கர்பலாவின்
கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
கண்கள் பூத்துப்போனதே!
கல்பில் என்றும் ஈரமே!
தீனை காக்க
கொடியைத் தாங்கி
உங்கள் கைகள் உயர்ந்ததே!
தீய மனிதர்கள்
செய்த கொடுமையில்
உங்கள் தலையும் வீழ்ந்ததே!
பேரர் பூவே
களத்தில் கசங்கி
வீழ்வதா?
அந்த துயரை
மறந்து நாங்கள்
மயங்கி இன்னும் வாழ்வதா?
பூக்கள் நொந்து போனதே!
தென்றல் வெந்து போனதே!
அன்பு நபியின்
பேரர் பூவை
தீமை கொண்டு போனதே!
வஹி தந்த கிலாபத்தை (இமாமத்தை)
உலகம் இன்று இழந்ததே!
தலைமை இல்லா
அனாதை போல
உம்மத் இன்று ஆனதே!
றஸுலுல்லாஹ் (ஸல்)
தந்த ஒளியை
ஊதி அணைக்க முடியுமா?
தலைவன் இன்றி
தவிக்கும் எங்கள்
வாழ்க்கை என்று விடியுமோ?
தீமை ஒழிந்து போகுமே!
தீயில் எரிந்து போகுமே!
உண்மை எழுந்து வாழுமே!
உலகம் தன்னை ஆளுமே!
இமாம் ஹுஸைனை
இழந்த நெஞ்சம்
மீண்டும் எழுந்து ஆளுமே!
கர்பலாவின் கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
இமாம் ஹுசைனை
இழந்து நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!
பாடல் கர்பலாவின் துயரை சொல்கிறது
ReplyDeleteகர்பலாவின் நிகழ்விக்கே இந்த உம்மத்தில் உதித்த சீயாக்கள் தான் முழுக்காரணம். இபுனு உமர் கூரியதைப் போன்று ஹுசைனை றிழி அவர்கள் இந்த கூபா வாசிகளை நம்பாமலிருந்தால் இந்த துயர் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எல்லாம் அல்லாஹ்வுடைய நாட்டம் நடக்கவேண்டி ஏற்பட்டது இந்த சீயாக்களை சமூகத்திற்கு கோடிட்டுக்காட்டப்பட..
ReplyDeleteஅருமையான பாடல்! கர்பலாவின் கொடுமையை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
ReplyDeleteகஹடோவிட சொல்வது சரி! கர்பலாவில் இப்படி ஒன்றும் நடக்கவில்லை இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. யஸீத் (ரழி) அவர்கள் ஹுஸைன் (ரழி)யை கொல்ல உத்தரவிடவும் இல்லை.
ReplyDeleteஹுஸைன் ரழி அவர்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல் சென்றதால் பிள்ளைக் குட்டிகளோடு கொலை செய்யப்பட்டார்கள்.
அதைப்பாடுவதால் எந்த பலனும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தவர்களில் ஒருவரே இமாம் ஹுஸைன் அவர்கள்.
ReplyDeleteறஸுல் (ஸல்) அவர்களின் மடியில் பாசத்தோடு வளர்க்கப்பட்டவர்கள். தனது இறுதி நேரத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் இமாம் ஹஸனையும், ஹுஸைனையும் கவனமாக பார்த்துக் கொள்ளும் படி உத்தரவிட்டு சென்றார்கள். அந்த ஹதீஸ் புகாரி கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
அப்படியான கண்ணியமிக்க குடும்பத்தை கொலை செய்ததில் நியாயம் காணும் ககோதரர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
குறுகிய சுயநல நோக்கங்கொண்ட உமையா ஆட்சியாளர்களின் அரசியல் வரலாற்றுத் தகவல்கள் போதிக்கும் விடயங்களை பக்கச்சார்பின்றி அலசி ஆராய்ந்து படித்தால் கர்பலா நிகழ்வின் உண்மைகள் தெளிவாகும்.
மௌலானா மௌதூதி ரஹிமஹுல்லாஹ் எழுதிய இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலை வாசிப்பதன் மூலம் வரலாற்றின் மறைக்கப்பட்ட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம்.
அநீதியான அரசனுக்கு எதிராக சத்தியத்தை எடுத்துச் சொல்வது சிறந்த ஜிஹாத் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதையே இமாம் ஹுஸைன் அவர்கள் செய்தார்கள்.
அவர்கள் யஸீதோடு யுத்தத்திற்கு செல்லவில்லை. யுத்ததத்திற்கு செல்பவர் சிறுவர் பெண்களை அழைத்து செலவதில்லை.
இங்கு யஸீதை பாதுகாப்பதற்காக நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தை இழிவு படுத்துவது பெரும் பாவமாகும்.
கருத்துகளை வழங்கும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.
உண்மையான முகத்தோடு கருத்துக்கள் வழங்கும் அத்தனை கருத்துக்களையும் பதிவிலிட்டிருக்கிறேன்.
ஒருசிலவற்றை தவிர்த்திருக்கின்றேன். அவை வேறு பெயர்களுக்குள் ஒழிந்து மறைந்து கோழைத் தனமாக வந்த கருத்துக்கள்.
அவர்களின் இஸ்லாத்திற்கு மாற்றமான ஹராமான செயற்பாடுகளை நான் நேரடியாக விமர்சிப்பதனால் என்னோடு முரண்பட்டு நிற்பவர்கள்.
ஓரினச் சேர்க்கையை அந்த இயக்கத்தின் தலைவர் ஆதரிப்பவர், ஈடுபடுபவர் அவரின் சிஷ்யர்களும் அதனை ஆதரிப்பவர்கள்.
என்னோடு விவாதிக்கும் போது லூத் நபியின் சமூகம் ஓரின சேர்க்கைக்காக தண்டிக்கப்பட்டதற்கு குர்ஆனில் எந்த ஆதாரமுமில்லை என்று என்னோடு வாதிட்ட இந்த இயக்க அங்கத்தவர்கள் என்னோடு தனிப்பட்ட முறையில் முரண்பட்டு நிற்கின்றார்கள்.
அவர்கள் எனக்கெதிராக பல பொய் பிரசாரங்களை மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பி வருகின்றார்கள்.
எனது தளத்தில் நான் முன்வைக்கும் கருத்துகள் தவறானவை என்றால் அது சுட்டிக்காட்டப்படும் வேளையில் நான் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இதற்கு மாற்றமாக வந்த பல பின்னூட்டங்களை நான் தவிர்த்திருக்கின்றேன். அவை ஒழிந்து, மறைந்து வந்தவை. எனக்கு அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு கூட பதிலளிக்க வாய்ப்பு மட்டுறுத்தப்பட்டடிருப்பவை.
அப்படி வந்த ஓரினச் சேர்க்கை தாஈகளின் பெயர்களை நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ஸெய்த் முஹம்மத் (இவர் பேஸ் புக்கில் வேறு புகைப்படத்தில் வேறு பெயரில் மறைந்து வாழ்பவர்) மாற்று மதத்தவரைக் கூட தன் (ஓரினச் சேர்க்கை) தஃவாவிற்கு அழைப்பு விடுப்பவர். மற்றவர்கள் அத்ஹம் பியாஸ், கியாஸ் ராபி இவர்களின் கருத்துக்களை நான் தவி்ர்த்திருக்கிறேன்.
The lyrics are very clear to understand the history of Karbala martyrs’. Your effort and talent should be appreciated.
ReplyDeleteThe truth seeking people will understand that Imam Hussain (as) is a member of Holy Prophet’s (sal) family (Ahululbyth). See in the Al Quran 33:33 for the evidence. What else we want to justify to love the family of Ahlulbyth (Al Quran 42:23).
Don’t worry about the Munafiqeens, they never realize or accept the truth of the Islamic history. They always with the followers of Yazeed. Also definitely these followers of Yazeed will say Mahdi (al) is a terrorist and not a family chain of Holy Prophet (sal).
Keep it up your good work.
Hussain Athas
arumai...
ReplyDeleteஉங்கள் பாடலுக்குப் பிறகு கர்பலா வரலாற்றை கொஞ்சம் தேடிப்படித்தேன்.
ReplyDeleteநவீன உலகில் இன்று நடக்கும் அக்கிரமம் அன்று நடந்தெறியுள்ளது.
ஸஹாபாக்களையும் அவர்களைப் பின் தொடர்ந்தவர்களையும் நல்லவர்களாகவே பார்க்கும் ஒரு மரபு முஸ்லிம்களிடத்தில் இருக்கிறது.
அது வரவேற்கப்பட வேண்டிய ஒரு அம்சமும் தான். ஆனால் நபி(ஸல்) அவர்கள் தனது ஸஹாபாக்கள் தொடர்பாக முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸ் மூலம் ஸஹாபாக்களில் ஒரு சிலர் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னர் பழைய படி அவர்கள் இருந்த நிலைக்கே சென்று விடுவார்கள் என்று கூறியிருக்கின்றார்கள்.
எனவே ஸஹாபாக்களை தொடர்ந்து வந்த யஸீதைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.
இந்த அக்கிரமத்தை நபி (ஸல்) அவர்கள் அன்றே கூறிவிட்டு சென்றார்கள்.
ஹஸ்ரத் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள் நான் எனது (ஹவ்லுல் கவ்ஸர்) தடாகத்தின் அருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக உங்களில் சிலர் என்னை நெருங்கவிடாமல் தடுக்கப்படுவார்கள். அப்போது நான் இறைவா இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன்.
அதற்கு இறைவன் இவர்கள் உமக்குப்பின் செய்தததை நீர் அறிய மாட்டீர் இவர்கள் தம் குதிகால்கள் மீது தம் (பழைய மதத்திற்கு) திரும்பிக் கொண்டே இருந்தனர் என்று கூறுவான்.
(முஸ்லிம் 4600)
நன்றி! சகோதரி
ReplyDeleteபுஹாரி, முஸ்லிம் உட்பட ஹதீஸ் கிரந்தங்கள் இன்று தமிழில் வெளிவந்திருக்கின்றன. எந்த ஒரு தகவலையும் இணையத்தில் ஆதாரத்தோடு தேடிப்படிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அல்லாஹ்வின் வேத நூலான அல்குர்ஆனையும், அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டல்களை சுமந்திருக்கும் புகாரி, முஸ்லிம் மற்றும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களை புரட்டடிப்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும்.
உங்களின் தேடலுக்கும் கருத்துக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹு கைரன்
யஜீதை இந்த வஹ்ஹாபிகளும், தேவ்பந்திகளும் தாபிஈ என்றும் அவனை திட்டக்கூடாது என்றும் கூறுகின்றார்கள். ஆனால் இமாம் அஹமத் அவர்களின் மகனார் இமாம் அஹமதிடம் யஜீதை ல'அனத் அனுப்புவதைப்பற்றிய தங்களின் கருத்து என்ன என்று கேட்கும் போது, அல்லாஹ் எவனை சபிக்கின்றானோ, அவனை நான் சபிக்காமல் இருப்பேனா என்று கேட்டார்கள். (பிதாயா வன் நிஹாயா). மேலும் ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்...) அவர்களின் அவையில் ஒரு மனிதர் யஜீதை அமீருல் மூமினீன் என கூறினார். அதை கேட்ட ஹழ்ரத் உமர் யஜீதை போய் அமீருல் மூமினீன் என்கின்றாயே என கேட்டு 20 கசையடி வழங்கினார்கள் (தஹ்தீபுத் தஹ்தீப்). அதனால் யஜீதை திட்டலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ReplyDeleteயஜீதுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றாலும் அவன் இதில் நேரிடையாக ஈடுபடவில்லை அதனால் அவனை திட்டக்கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். அவன் ஆட்சியில் நடைபெற்றால் அவன் சம்பந்தமில்லையா. இதே நேரத்தில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் அது யஜீத் ஆட்சியில் தான் நடைபெற்றது என்று சொந்தம் கொண்டாட வர மாட்டார்களா? (அவன் தான் இந்த சம்பவத்தை நடத்தினான் என்பது வேறு விஷயம்). இந்த சம்பவத்தால் யஜீத் சந்தோஷித்தான் என்பது தான் அவன் பாடிய எங்கே என்னோடு மூதாதையர்கள்? பத்ரில் கொல்லப்பட்டார்களே அவர்கள்! அவர்களுக்கு பகரம் வாங்கி உள்ளேன் என்று பாடிய கவிதை இன்றும் பாதுகாக்கப்பட்டு அவனுடைய முகத்திரையை கிழித்துக்கொண்டிருக்கின்றதே? பத்ருப்போருக்கு பகரம் என்ற இவனின் வார்த்தை இவனின் ஈமானையும் கேள்வி குறி ஆக்கிக்கொண்டிருக்கின்றதே? மேலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுடைய இரு உதடுகளுக்கு மத்தியில் கம்பை வைத்து இது தான் எனக்கும் ஹுஸைன் க்கும் மத்தியில் உள்ள தரஜா என்று கூறினானே இதை எல்லாம் என்னவென்பது. யஜீதை திட்டக்கூடாது, தாபிஈ என்பவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
நபிகளார் ஸல்... அவர்கள் இமாம் அவர்களை பற்றி பல விஷயங்களை கூறி உள்ளார்கள்.
• சுவனத்து இளைஞர்களின் தலைவர்.
• மணம்தரும் நறு மலர்.
• ஹுஸைன் என்னிலிருந்தும் நான் ஹுஸைன் யிலிருந்தும் இருக்கின்றோம்.
• ஹுசைனை யார் நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிப்பான்.
• யார் என்னையும், இந்த இருவரையும், இவர்களின் தந்தை, மற்றும் தாயையும் யார் நேசிப்பரோ அவரும் நானும் சுவனத்தில் ஒரே இடத்தில் இருப்போம்.
• யா அல்லாஹ் இவர்களை நான் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக, யார் இவர்களை நேசிக்கின்றாரோ அவரை நானும் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக.
• எனக்கு பின்னால் இரண்டை விட்டு செல்கின்றான். அதை பின்பற்றி நடக்கும் காலம் எல்லாம் வழி தவற மாட்டீர்கள். 1 . இறை வேதம் 2 . எனது குடும்பத்தவர்கள். என்னிடம் ஹவுளுள் கவுசரில் என்னிடம் சேர்க்கும் இவை ஒன்றை விட்டு ஒன்று பிரிய மாட்டாது.
நபி பொருமானாரின் குதைபியா உடன்படிக்கை எப்படி எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் வெற்றியாக அமைந்ததோ அவ்வாரே இமாம் ஹ{ஸைன் அவர்களின் கொடூரக் கொலைகள் ஷ{ஹதாவாக பிரதிபழித்தது முஸ்லிம் உம்மாவுக்கு. அந்த குதைபியா உடன் படிக்கையை செய்தபோது நபிகளாரை எத்தனை பேர் மறுப்பளித்தார்கள். முஸ்லிம்களுக்கு பாதமாக உள்ள போது நபிகளார் அதில் கைசாத்திட்டார்கள் என்பதாக. அதே நிலை இமாம் ஹ{ஸைனுடைய எழுற்சி நேரத்தில் குறிக்கிட்டது. ஆனால் தூர நோக்கும் ஞானங்கள் கூடிய ரிஸாலத் விட்டில் இஸ்லாத்தினதும் உம்மாவினதும் எதிர்காலத்தையே இமாமவர்களும் எதிர் பார்த்தார்கள்.
ReplyDeleteஅநீயாயம் அட்டூலியம், வாக்கு மீறுதல் கொடூரம், கொடுமை, பெண்களை துன்புறுத்துதல், சிறுவர்களுக்கு கருணை காட்டாமை இவையெல்லாம் இஸ்லாத்தின் நல்லொழுக்கங்களா? நபி பொருமானார் அவர்கள் ஒரு யுத்தம் ஒன்று செல்லும் போது பெண்களை குழந்தைகளை கொடுமைப்படுத்துங்கள் என்றார்களா? இவையெல்லாம் இந்த கர்பலா யுத்தத்தில் நடந்திருந்து எவ்வாறு சிலரின் உள்ளங்கள் அரசியல் காரணி அரசியல் யுத்தமென்று சொல்ல முடிகிறது.? நன்மையை ஏவி தீமையை அழிக்கவே நாட்டவே செல்கின்றேன் என்ற இமாமவர்களின் வாக்குதலுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்.?
ஆரம்பத்திலிருந்தே இமாம் யசீதின் நிட்பந்தமாய் வந்த ஆட்சியை ஆதரிக்க வில்லை. ஆனாலும் தனது குடும்பத்தின் இமாமத் பணியை திறன்பட செய்தே வந்தார்கள். மக்கள் யசீதின் ஆட்சியில் விரக்தியடைந்து இஸ்லாத்தின் மீது பற்று கொண்டு இதனை தட்டிக் கேட்கும் கடமை உங்களுக்கே இருக்கிறது என்ற இலட்சக் கணக்கான மக்களின் வேண்டுதலுக்கு பின்னரே தனது போராட்டத்தை(யசீதை) வெளிப்படையாக எதிர்ப்பதற்கு களமிறங்கினார்கள். ஆனால் அந்த மக்களே யசீதின் அடக்கு முறைக்கு நிட்பந்திக்கப்ட்டு தங்களது துரோகச் செயலை காட்டினார்கள். இதனை அரசியல் யுத்தம் என்று சொல்ல முடியுமா?
http://kviala.blogspot.com/2010/12/blog-post.html
யஸீத் போன்ற கொடியவனை ஈமான் கொன்டவர்கள் இமாம் ஹுஸைனை ஏளனம் செய்து கொண்டு தமக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். இமாம் ஹுஸைனை அவமதிப்பது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தை அவமதிப்பதாகும். அப்படி இமாம் ஹுஸைனை அவமதிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் லஅனத் உண்டாகட்டும்.
ReplyDeleteமக்களில் நிறைய பேர் எல்லாவற்றிற்கும் விலை நிர்ணயம் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால் யாருக்குமே அதன் நிஜமான பெறுமதி தெரியாது. இதேபோல எம்மில் சிலர் சில விடயங்கள் பற்றி நிறையவே பேசுகிறார்கள்.பரிதாபம், அவர்களால் தாங்கள் பேசும் விடயம் பற்றியும் அதன் உண்மை அர்த்தம் பற்றியும் ஒன்றுமே தெரியாது. படு கொலை தளம் கர்பலாவும் அதன் கொடுமையும் பற்றி அதனை இலேசாக கருதுபவர்களுக்கு கர்பலாவின் உயிரோட்டமும் அதன் யதார்த்தமும் புரியாது.
ReplyDeleteநிசர்டீன் கர்பலா பற்றி உணர்வுபூர்வமாக கவி பாட, யஜீதின் கூட்டம் அவருக்கு எதிராகவும், இமாம் ஹுசைனின் கூட்டம் அவருக்கு ஆதரவாகவும் களம் இறங்கி எம் முன்னால் கருத்துக் களம் என்ற போர்வையில் தங்களின் உண்மையான சுயருபத்தைக் காட்டுகிறார்கள்.
நபிகளார் சொன்ன ஹதீஸின் உயிரோட்டம் இன்னும் உயிர்வாழும் அதிசயம் நிசர்டீனின் கர்பலா பாடல் முலம் தெளிவாகின்றது.
அம்மார் பின் யாசிரின் கூட்டத்தில் இமாம் ஹுசைன் இருந்த விடயம் யாவரும் அறிந்த ஒன்று.யாஜீத் முஅவியாவின் பக்கம் என்பதும் நாம் அறிந்த உண்மை.நல்லவர்களின் கூட்டமும் சதிகாரர்களின் கூட்டமும் அம்மார் பின் யசிர்முலம் தெளிவாகும் என்ற நபிகளாரின் வாக்கு இன்று மீண்டும் ஒருமுறை இந்த கர்பலா பாடல் முலம் எம் முன் பிரிந்து நின்று தங்களை இனம் காட்டும் அதிசயத்தை கவனியுங்கள்.