Showing posts with label wahhabi. Show all posts
Showing posts with label wahhabi. Show all posts

Saturday 28 August 2010

பணிப் பெண்ணின் உடம்பிற்குள் 23 ஆணிகள். சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்

பணிப் பெண்ணின் உடம்பிற்குள்  23 ஆணிகள்.
சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்.





அமெரிக்க குவான்டானமோ மற்றும் ஈராக்கிய அபூ கிரைப் சிறைகள் மட்டும் தான்  மனிதாபிமானத்திற்கு முரணான, மிருகத்தனமான சித்திரவதைகள் செய்யப்படும்  வதைமுகாம்கள் என வாசித்திருப்பீர்கள். 

ஆனால் இஸ்லாத்தின் புனித பூமியாகிய சவூதி அரேபியாவில் பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தால் ஜாஹிலிய்யா என்ற அறியாமைக்காலத்தில் தான் தொடர்ந்தும் அந்த நாடு இருந்து வருகின்றது என்ற உண்மை புலனாகும்.




(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)


சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.





இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர்  வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர்.  இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.

Sunday 9 August 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.







அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...