Showing posts with label obama. Show all posts
Showing posts with label obama. Show all posts

Sunday, 8 May 2011

ஒசாமாவின் மரணமும் ஒபாமாவின் கரணமும்!

ஒசாமாவின் மறைவும் 10 ஆண்டு நிறைவும்?
ஓபாமாவின் அரசியல் காய் நகர்த்தல்
மே 3ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளின் படங்கள்



ஒபாமா அரசியல் சாகச விளையாட்டில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

கரணம் தப்பினால் மரணம் என்றவொரு பழமொழி இருக்கிறதே! ஒபாமாவின் சாகச விளையாட்டைப் பார்க்கும் போது அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

கொஞ்சம் சறுக்கினால் அவர் தனது அரசியல் சாகச விளையாட்டிலிருந்து கீழே விழுந்து நொருங்கி விடும் அபாயம் நெருங்கியே இருக்கிறது.

ஒசாமாவை வைத்து அமெரிக்கா அதிகம் லாபமீட்டியது.

ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்டியது முதல் ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்பு வரை அதன் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஆதாரமாக ஒசாமாவின் செயற்பாடுகளைத்தான் காரணமாக முன்வைத்தது.

புஷ்ஷின் அடிச்சுவட்டை அதே பாணியில் பின்பற்றும் ஒபாமா இன்று சரிந்துக்கொண்டிருக்கும் தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒசாமாவின் மரணத்தை(?) ஓர் ஆயுதமாக பாவிக்கும் தந்திரத்திற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ஒசாமாவின் மரணத்தைப் பற்றி கருத்துத்தெரிவிக்கும் போது இது ஒசாமாவின் இரண்டாவது மரணம் என்று குறிப்பிட்டதோடல்லாமல் ஒசாமாவின் மரணச் செய்தி ஏப்ரல் 1ம் திகதி வந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கர்களின் அரசியலுக்காக, அதன் வெளிநாட்டு சுரண்டல் கொள்கைக்காக உலகம் எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்து இருக்கிறது.

ஒரு நாட்டின் வளங்களைச் சுரண்ட திட்டமிட்டால் அது எத்தகைய அநீதிகளையும் அந்நாட்டின் மீது கட்டவிழ்த்து விடும்.

மத்திய கிழக்கு தொடர்பான அதன் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆயுதமாக  இஸ்லாத்தை பயன்படுத்திக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் ஹிக்மதியார், ரப்பானி முதல் ஒசாமா வரை அதன் தூண்டிலில் சிக்கி சிதைந்து போனவர்களே.

இன்று பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதத்தின் பண்ணை யாக உருமாறுவதற்கு  அமெரிக்காவின் கைகள் பக்கபலமாக இருந்திருக்கின்றன.

தாலிபான்கள் போன்ற பாமரத்தனமான ஆன்மிகவாதிகளான பிற்போக்குவாதிகளை உருவாக்கி அவர்களை மறைமுகமாக நிர்வகிப்பதின் மூலம் பயங்கரவாதத்திற்கெதிரான போரை தேவையான காலத்திற்கு நீடிக்க முடியும் என்பதே அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்

ஒபாமாவிற்கு அடுத்து வரும் தேர்தலில் வெற்றிக்குத் தடையாக இருப்பது
பயங்கரவாதத்திற்கெதிரான இந்த யுத்தம்தான்.

நாட்டு மக்களின் வரிப்பணத்தை வேறு நாடுகளில் யுத்தத்திற்காகவும், தமது அரசியல் அபிலாஷைகளுக்காகவும் கொட்டுவதை இப்போது அந்த மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

எனவே திடீரென்று ஒபாமா நிகழ்ச்சி நிரலை மாற்றி தனது பயணத்தை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார். தனது அரசியல் சாகச விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.

எதிர் வரும் செப்டம்பர் 11 திகதி இரட்டைக் கோபுர தாக்குதல் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைகினறன. அந்த நிகழ்வை முன்வைத்து தனது சரிந்து போகும் பெயரை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாகவே அவரின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

ஒசாமாவைத் தாக்கியதாக சொல்லப்படும் மே 2ம் திகதியின் சூடு தணிவதற்கு முன் , மே மாதம் 3ம் திகதி செப்டம்பர் 11 தாக்குதலில் கொல்லப்பட்ட தீயணைப்பு படையினரின் குடும்பத்தினரோடு ஞாபகார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

எச்சரிக்கைமிகுந்த ஒரு சாகச விளையாட்டில் ஒபாமா ஈடுபட்டிருப்பதை அமெரிக்க மக்கள் தற்போது புரிந்து வருகிறார்கள் என்பதை அவர்களின் ஊடகங்கள் ஊடாக புரிந்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

இரட்டைக் கோபுர சரிவிலிருந்து அமெரிக்கா தனது ஏகாதிபத்தியத்திற்கான ஒரு புதிய முகமூடியைத் தேடிக்கொண்டது. யாருக்கும் கட்டுப்படாத ஏகாதிபத்திய சக்தியாய் எழுந்துக் கொண்டது.

இன்று ஒபாமா விழுந்த இரட்டைக் கோபுரத்தின் நிகழ்வை வைத்து எழுந்து நிற்க முயற்சி செய்கிறார்.

ஒசாமாவை வீழ்த்தியதாகச் சொல்லி ஒபாமா தனது அரசியல் சாகசத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

ஒபாமா ! ஜாக்கிரதை கரணம் தப்பினால் மரணம்!

Thursday, 5 May 2011

ஒபாமாவின் ஒசாமா வேட்டை.. கசிந்துள்ள புகைப்படங்கள்!

எச்சரிக்கை !  கொடுரமான காட்சிகள் இளகிய மனமுள்ளவர்கள் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.




ஒசாமாவின் இருப்பிடம் என்று கூறப்படும் அபோத்தாபாத்தில் உள்ள வீட்டின் மீது அமெரிக்க படை தாக்கியதில் இறந்த மூவரின் உடலங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தாக்குதல் இடம்பெற்று சரியாக ஒரு மணித்தியாலத்தின் பின்னர் எடுக்கப்பட்ட படங்கள் இவை.

பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் இந்தப் படங்களை எடுத்துள்ளனர். நிராயுத பாணிகளான இவர்கள் மீது பயங்கரமாக சுட்டு தள்ளியிருப்பது இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள இவர்களது உடலங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வீடியோ : ஒசாமா உண்மையில் கொல்லப்பட்டாரா? சந்தேகம் வலுக்கிறது




ஒசாமா வாழ்ந்ததாக கூறப்படும் அப்போதாபாத் பிரதேச மக்களின் கருத்தை பிரஸ் ரிவி ஒளிபரப்பியது.  அப்பிரதேச மக்கள் ஒசாமா அங்கு வாழவில்லை என்று கூறுகின்றார்கள்.

இது விடயமாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி வருகிறது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறிவருவதாக 04.05.2011 அன்று இரவு பிபிஸி தமிழோசை செய்தி வெளியிட்டது.

இதுதான் அந்த செய்தி:

பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது. அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.
        அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால்          விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.

Tuesday, 6 April 2010

இரகசிய காணொளி ( Secret Video) - ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள்!

அமெரிக்க வான் படை ஈராக்கிய அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கும் படுகொலைக் காட்சிகளடங்கிய இரகசிய ஒளி நாடா ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும்  இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..




போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...