“எனது பிள்ளைகள் இரவில் நித்திரையில் இருக்கும் போது யாராவது எனது வீட்டுக்குள் எறிகணை (ரொக்கட்) களை அனுப்பினால் அதனை தடுப்பதற்கு என்னால் ஆன அத்தனையையும் செய்வேன். அதைத்தான் இஸ்ரேல் செய்திருக்கிறது.”
மேலே குறிப்பிடப்பட்டது எனது கருத்தல்ல 2008 டிஸம்பர்27ம் திகதி காஸா மீது தொடுக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதலின் பின்னர் தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஹுஸைன் பராக் ஒபாமாவின் கூற்று.
சட்ட விரோத இஸ்ரேல் நாட்டின் தென்பகுதி நகரான செதரத் நகருக்கு விஜயம் செய்த ஒபாமா இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான படுகொலைகளை இந்த வார்த்தைகளைக் கொண்டுதான் ஆசிர்வதித்தார்.
சுமார் பதினைந்து லட்சம் மக்கள் வாழுகின்ற காஸா பிரதேசம், மனித உரிமைகள் மறுக்கப்படுகின்ற அக்கிரமம் நிகழ்த்தப்படுகின்ற ஒரு திறந்த வெளிச் சிறை. அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க யாரும் இந்த உலகில் இல்லை. காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.
தனது வீட்டுக்கு எறிகணை அனுப்புபவர்களைப் பற்றி கதைக்கும் ஒபாமா, 60 வருடங்களுக்கு மேலாக தனது நாடும், வீடும், உரிமைகளும் அபகரிக்ப்பட்டு, தனது சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதியாக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? எப்படியெல்லாம் போராட நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்ற யதார்த்தத்தை மறந்து சிறு பிள்ளைத்தனமாக பேசி இருந்தார்.
தனது வீட்டுக்கு வருகின்ற எறிகணையை தடுக்க ஒபாமாவிற்கு இருக்கும் அதிகாரம் மற்றவர்களுக்கும் இருக்கிறது என்ற உண்மையைதான் பலஸ்தீன, லெபனானிய, ஈராக்கிய போராளிகள் இன்று நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பலஸ்தீன் மீது தொடுக்கப்படுகின்ற எறிகணைத் தாக்குதல்கள் தனது தாய் மண் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்களாக, தனது பிள்ளைகள் உறங்கும் போது வந்து விழுகின்ற எறிகணைகளாக தான் பலஸ்தீனர்கள் பார்க்கின்றார்கள்.
ஒபாமாவின் கருத்துப்படி பார்த்தால்.... பலஸ்தீனை அபகரித்து இன்று அந்த ம்களை, அந்த மண்ணின் மைந்தர்களை அகதி முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கின்ற, அந்த மக்கள் மீது அநியாயம் புரிகின்ற இஸ்ரேலை தாக்குகின்ற, அழிக்கின்ற தார்மீக உரிமை பலஸ்தீனர்களுக்குத் தான் இருக்கிறது.
இந்த ஒபாமாவின் தத்துவப் படி...
எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ஈராக்கிற்குள் புகுந்திருக்கும் அமெரிக்கப் படைகளை தாக்குகின்ற, அழிக்கின்ற தார்மீக உரிமை உரிமை ஈராக்கியர்களுக்கு இருக்கிறது.
தனது பிராந்திய அரசியல் நலனை ஸ்த்திரப்படுத்த ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்க கூலிப்படையான நேட்டோ படைகளை அழிக்கின்ற ஒழிக்கின்ற உரிமை ஆப்கானியருக்கு இருக்கிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் ஒற்றை ஏகாதிபத்தியம் ஒன்றுக்குள் உலகை சிக்க வைக்கும் அமெரிக்க அரசியலுக்கும், அதன் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக எழுகின்ற உரிமை அனைவருக்கும் இருக்கிறது.
மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் என்ற நாட்டை சட்டவிரோதமாக உருவாக்கி சகல ஆயுத வல்லமைகளுடனும், அதிகாரத்துடனும் செயற்படுகின்ற ஒரு நாடாக அதனை உருவாக்கி தனது ஏகாதிபத்திய ஏஜன்ட் ஆக இஸ்ரேலை அந்த பிராந்தியத்தில் நிலை நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா.
மத்திய கிழக்கில் இஸ்ரேலை நேசக்கரங்களோடு அணைத்து போஷித்து வரும் அமெரிக்கா, அதே நேசக்கரங்களோடு அரபு நாடுகளையும் அரவணைத்து நிற்கிறது.
150 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்த சர்வதேசிய சமூகம். சுமார் 150 இலட்சம் (ஒன்றரை கோடி) யூதர்களின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கிடக்கிறது. விகிதாசாரத்தில் 100 க்கு ஒன்று. சனத்தொகை 100 முஸ்லிம்களுக்கு ஒரு யூதர்.
ஏன் இந்த நிலை? எங்களை நாங்களே கேட்டுக்கொள்வோம்.
இதை காஸா படுகொலையின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி தந்த செய்தியாக மனதில் பதித்து வைத்துக் கொள்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...
காஸா படுகொலை ஞாபகார்த்தமாக நீங்கள் இணைத்தள்ள பாடல் கண்களில் கண்ணீரை கொண்டு வந்தது. பலஸ்தீன் மக்கள் அனாதைகளாக அவதி படுகிறார்கள்.
ReplyDeleteபண பலமுள்ள அரபிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த அரபுகளுக்கு அல்லாஹ் தண்டனையை இறக்க வேண்டும். ஆமீன்.