Friday, 28 September 2012

அமெரிக்க தூதரகத்தைத் தாக்கியவர்கள் சடலமாக மீட்பு?


லிபிய பெங்காஸி நகரிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தைத் தாக்கி தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீவன் உட்பட மூன்று அமெரிக்க உளவhளிகளை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் அன்சாருல் ஷரீஆ ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஆறு பேரின் சடலங்கள் பெங்காஸியின் வயல் வெளியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதுவராலய தாக்குதலைக் கண்டித்து மற்றுமொரு ஆயுதக்குழு அன்சாருல் ஷரீஆ காரியாலயத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடாத்தியது.

இரவு முழுவதுமாக இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அன்சாருல் ஷரீஆ அலுவலகம் முற்றாக சேதமடைந்து அதிலிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன..

மற்றுமொரு ஆயுதக் குழுவின் எதிர்ப்பைத் தொடர்ந்து துற்போது அன்சார் அல் ஷரீஆ அமைப்பினர் தலைமறைவாகி இருப்பதாக அறிய வருகிறது.

கத்தாபியியை வீழ்த்துவதற்காக மேற்குலக நாடுகளும் அவர்களின் ஏஜன்டுகளாக செயற்படும் அரபு நாடுகளும் லிபிய மக்களை ஆயுதமயப்படுத்தின.

சுமார் 40 மேற்பட்ட ஆயுதக் குழுக்களுக்கு தாராளமாக ஆயுத்ங்கள் விநியோகிக்கப்பட்டன. 

இந்த அத்தனைக் குழுக்களிடையேயும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருப்பதாகவும், அவற்றை மீளப்பெறுவதற்கான ஓர் ஆய்வை மேற்கொள்ளவே  அமெரிக்காவால் அனுப்பப்பட்ட சீஐஏ உளவாளிகள் மூவர் பெங்காஸி வந்ததாகவும் இந்த தூதுவராலய தாக்குதலில் கிறிஸடோபர் ஸ்டீவனோடு அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

கத்தாபியை கொலை செய்தவர் கடத்தப்பட்டு படுகொலை?


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் லிபியத் தலைவர் கத்தாபியைப் பிடித்து கொலை செய்து புகழ்பெற்ற ஒம்ரான் ஷhபான் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் பிரான்ஸ் நாட்டிலுள்ள அமெரிக்க வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமாகியுள்ளார்.


1992ம் ஆண்டில் மிஸ்ராட்டா நகரில் பிறந்த ஒம்ரான் ஷhபான் மிஸ்ராடா விடுதலை அணியில் முக்கிய நபராக கருதப்பட்டவர். திரிப்போலி மற்றும் மிஸ்ராட்டா நகரங்களை லிபிய இராணுவத்திடம் இருந்து மீடபதற்காக  போராடியவர்களில் முக்கியமானவராக ஒம்ரான் கருதப்படுகிறார்.

கத்தாபி ஆதரவாளர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட ஒம்ரான் 57 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு பிரான்ஸிலுள்ள அமெரிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சுpகிச்சை பலனளிக்காமல் கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஓம்ரானோடு சேர்த்து இன்னும் பலர் கடத்தப்பட்டடிருப்பதாகவும் அவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளிவராமல் இருப்பது  பலரை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

Tuesday, 25 September 2012

தினக்குரலில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் புகைப்படங்கள்!அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தின் படங்களை பிரசுரித்த இலங்கையின் தமிழ் தேசிய நாளிதழான தினக்குரல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

இது தொடர்பாக இலங்கை ஷரீஆ கவுன்ஸில் தினக்குரல் பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கண்டனக் கடிதத்தையும் , துருவம் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியையும் கீழே தருகின்றேன

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் இலங்கை ஊடகங்கள்

Published On: Sunday 23 September, 2012
 
( முஹம்மட் பிறவ்ஸ் )
உலக முஸ்லிம்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை இலங்கையிலிருந்து தமிழ்பேசும் மக்களின் தனித்துவக்குரல் எனும் நாமத்துடன் வெளிவருகின்ற ‘தினக்குரல்’ பத்திரிகையும் பிரசுரித்துள்ளது. நேற்று சனிக்கிழமை வெளியான தினக்குரல் (22.09.2012) பத்திரிகையில் புதிய பண்பாடு எனும் அரசியல் பகுதியில் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் எழுதியுள்ள கட்டுரைக்கே இப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
(துருவம் வாசகர்கள் பார்க்காதவண்ணம் இப்படம் தணிக்கைக்கு உட்படுத்தப்‌பட்டுள்ளது)
முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் தினக்குரல் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுத்துள்ளது. இரண்டுபக்கக் கட்டுரையில் இப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை முஸ்லிம்களிடையே பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பொருமுறை தினக்குரலின் ஆங்கில இலவச வெளியீடான ஜூனியர் ஸ்டார் இதழில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கார்ட்டூன் படத்தை பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இது முஸ்லிமல்லாத ஒருவரினால் செய்யப்பட்டதாகவும், அது நேரடியாக தினக்குரலில் வெளிவராமல் யாழ்.தினக்குரலில் வெளிவந்ததாகவும் குறிப்பிட்டு அதற்கு ஆசிரியர்பீடம் மன்னிப்பும் கேட்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிந்திருந்தும், இவ்வாறு புகைப்படங்களை பிரசுரித்து முஸ்லிம்களின் எதிர்ப்பையும் விசனத்தையும் தினக்குரல் ஏன் சம்பாதிக்க நினைக்கிறது? தினக்குரல் ஆசிரியர் பீடத்தில் முஸ்லிம்களாகிய இருவர் கடமையாற்றியிருந்தும், ஒரு முஸ்லிம் இக்கட்டுரையை எழுதியிருந்தும் அவர்களையும் தாண்டி இக்கட்டுரைக்கு சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளமை தினக்குரலின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது.
இன்று அல்லது நாளை தினக்குரல் இதற்காக மன்னிப்புக்கோரலாம். தினக்குரலின் வளர்ச்சியை சகிக்கமுடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சக்திகள்தான் இந்த விசமக் கருத்துகளைப் பரப்புவதாகவும், தினக்குரல் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லையென்றும் மன்னிப்புக்கோரும். அவ்வாறாயின், இது மக்களை தினக்குரலின் பக்கம் திசைதிருப்புவதற்கான ஒரு விளம்பரமாகக்கூட இருக்கலாம்.
சுவர்ணவாஹினியின் செய்தியறிக்கை:

அத்துடன் கடந்த புதன்கிழமை இரவு சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் ‘லைவ் 8′ எனும் இரவுநேரச் செய்தியறிக்கையில் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் சிலகாட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் சுவர்ணவாஹினி நிர்வாகத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுவர்ணவாஹினி நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த காட்சிகளின் பாரதூரம் தமக்கு தெரியாது என்றும் அதற்காக தாம் மனம் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தது. அத்துடன் இத்திரைப்படம் சுவர்ணவாஹினியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக குறுஞ்செய்திகள் பரவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அறிக்கை:
சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் முஸ்லிம்களை புண்படுத்தும் எந்த படத்தையும் ஒளிபரப்புவதற்கு எந்தவொரு கட்டத்திலும் தீர்மானம் ஒன்று எடுத்திருக்கவில்லை என்று அதன் நிர்வாகம் தம்மிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக எனது தொலைபேசிக்கும், அதே போன்று இன்னும் எத்தனையோ பேர்களுக்கும் குறுஞ் செய்தியொன்று வந்தது. அது சுவர்ணவாஹினியில் முஹம்மத் நபிக்கு எதிரான அந்த திரைப்படம் காணப்பிக்கப்பட போகின்றார்களாம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறே இந்த செய்தி அமைந்திருந்தது .தனக்கு இந்த செய்தி கிடைத்ததும் உரிய ஊடக நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் இதனை தெரிவித்தாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை இந்த குறுஞ்செய்தி குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்தாக கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தமக்கு வரும் குறுஞ்செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டதன் பின்னர், அதனை ஏனையவர்களுக்கு தெரிவிப்பதே நல்லது என்றும் கூறினார்.

அதேவேளை, இஸ்லாத்தையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதத்தில் அமெரிக்கா அரசின் உதவியுடன் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில கூடிய கட்சியின் அதியுயர் பீடம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாவும் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் கூறினார். இதனை அமெரி்க்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டும் இணையத்தளம்:
அத்துடன் ‘கொஸிப் லங்கா நியூஸ்’ எனும் இணையத்தளத்தில் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ எனும் திரைப்படத்துக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன், வாசர்களின் பார்வைக்கான அந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தையும் (ட்ரெய்லர்), திரைப்படத்தையும் தனது இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. யூடியூப் இணையத்தளத்திலுள்ள இந்தப் படத்தின் 13:51 நேரம் கொண்ட முன்னோட்டமும், 1:14:14 நேரம் கொண்ட திரைப்படமும் ‘கொஸிப் லங்கா நியூஸ்’ எனும் இந்த இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (துருவம் வாசகர்களும் இதனைப் பார்கக்கூடும் என்ற காரணத்தினால் அதன் இணைப்பு இங்கு தரப்படவில்லை)
Saturday, 22 September 2012

அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!முஸ்லிம் உம்மத் மீது அரசியல், பொருளாதார, ஆன்மிக ரீதியில் தாக்குதல் தொடுத்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது உலக முஸ்லிம்களின் ஈமானில் கைவைத்திருக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தையும், இஸ்லாத்தையும் சீர்குலைக்கும் வகையில் அமெரிக்காhவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் இப்போது உலக முஸ்லிம்களின் கோபாவேசத்தினால் அமெரிக்காவையே அதிரவைத்திருக்கிறது.

முஸ்லிம்களின் பலத்த கண்டனத்திற்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகி வரும் பல நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் பொலிஸ், இராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் இயங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது இலங்கையின் தலைநகர் கொழும்பில் 21.09.2012 அன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்.

Thursday, 13 September 2012

எரிகிறது அமெரிக்க தூதரகம்!இஸ்லாத்திற்கும் இறை தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிராக மிக மோசமாக அமெரிக்கர் ஒருவரால் தயாரிக்கப்பட்டுள்ள விவரணம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

லிபியாவிலும் எகிப்திலும் அதற்கு எதிராக ஏற்பட்ட உணர்வலைகள் அந்நாட்டு அமெரிக்க இராஜதந்திரிகளை குறிவைத்திருக்கிறது.

லிபியாவின் பெங்காஸியிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆத்திரம் கொண்ட முஸ்லிம்களால் தாக்கப்பட்டபோது பெங்hகாஸியின் அமெரிக்கத் தூதுவரும் ஏனைய ஐந்து இராஜ தந்திரிகளும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

லிபியாவின் அமெரிக்க தூதுவர் கிரிஸ்டோபர் ஸ்டீவன் காயமுற்று கிடந்த போது லிபிய பிரஜைகளால் அடையாளம் காணப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்தான் இது.
Saturday, 1 September 2012

அழவைத்த ஆயிஷா – இரா.நடராசனின் சின்னஞ்சிறு நாவல்
அழவைத்த ஆயிஷா – இரா.நடராசனின் சின்னஞ்சிறு நாவல் பதிவிரக்கத்துடன்

ஜப்பான் நெருப்பாற்றில் நீந்தி வந்த ஒரு நாடு!

ஜப்பான் நெருப்பாற்றில் நீந்தி வந்த ஒரு நாடு! எரிந்து விழுந்து, சாம்பலில் இருந்து எழுந்து வந்து சரித்திரம் படைக்க முடியும் என்பதற் கு ஜப...