Sunday, 21 March 2010

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும் “இளிச்ச”வாயர்களைக்கொண்ட இஸ்லாமிய சமூகமும்!

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும்
இளிச்சவாயர்களைக்கொண்ட  
இஸ்லாமிய சமூகமும்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு விஜயம் செய்து அதன்  தலைவர் உட்பட அதன் செயலாளருடன் “மகிழ்ச்சி”கரமாக கருத்துப்பறிமாறுகின்றார்.


முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா. அதன் அடாவடித்தனத்தாலும், ஆக்கிரமிப்பாலும், அநியாயத்தாலும்  இராணுவ பலத்தாலும் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இலடசக் கணக்கானோர் காயங்களோடு கப்றுகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்க இராணுவத்தால் கணவன்மார் கொலை செய்யப்பட்டு விதவைகளான ஆயிரக்கணக்கான எங்கள் உடன் பிறவா சகோதரிகள் ஈராக் வீதிகளில் விபசாரத்தை தனது தொழிலாக மாற்றியிருக்கின்றார்கள்.

தாய், தந்தையை இழந்த அனாதைச் சிறுவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்ற போர்வையில் அமெரிக்கா வடிவமைக்கும்  குண்டு வெடிப்புகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்  பல உயிர்களை காவு கொள்ள காரணமாய் இருந்ததும் காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பு அரசியலை முஸ்லிம் நாடுகளில் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் இரத்தத்தையும், அந்நதந்த  நாடுகளின் வளங்களையும்  உறிஞ்சிக் குடிப்பதை குறிக்கோளாய் கொண்டு அதன் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமானது.

அதன் இராணுவ சப்பாத்துகளின் கீழ் நசுங்குண்டு ஈராக் தன் இன்று இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்களை பாதுகாக்கும் அமெரிக்காவின்  வீட்டோ அதிகாரத்தில் சிக்குண்டு பலஸ்தீன் திறந்த வெளிச்சிறையொன்றில் தவித்துக் கொண்டிருக்கிறது.  உணவு, மின்சாரம், தண்ணீர் என்று அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அவர்கள் வாழ்வுக்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆப்கான் அழிந்துக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம்  உலகின் மீது இவ்வளவு அக்கிரமங்களையும் நிகழ்த்திக் கொண்டு ஒரு சில முஸ்லிம் நாடுகளோடும், ஒரு சில  முஸ்லிம் இயக்கங்களோடும், அமைப்புகளோடும் மறைமகமாவும், நேரடியாகவும் கொலைகார அமெரிக்கா நட்பை பேணி வருகிறது.

இந்த அமெரிக்க முஸ்லிம் (?) நட்பின் மூலம் முஸ்லிம் உலகை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை  இந்தக் கைக்கூலி கும்பல்கள்  சாதுர்யமாக செய்தும் வருகின்றன.பனிப்போருக்கு பின்னரான அமெரிக்க அரசியல்  நகர்வும், ஆதிக்கமும் இஸ்லாத்தையும், முஸ்லிம் நாடுகளையுமே இலக்கு வைத்தது.

ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை  ஒழிக்கும் போர்வையில்  தனது கைக்கூலிகளுக்கு ஜிஹாத் என்ற போர்வையில் ஆயுதங்களையும், பணத்தையும் அள்ளி வழங்கி  அந்நாட்டு சிவில் சமூக கட்டமைப்பை சீரழித்த அமெரிக்கா , ஆப்கானிலிருந்து  ரஷ்யாவை விரட்டும் வரை இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய போராட்டமாக  ஜிஹாதை  தனது ஊடகங்கள் மூலம் பிரசாரப்படுத்தியது.

ரஷ்யாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் தனது கூலிப்பபட்டாளங்களான ஜம்இயத்தே இஸ்லாமி,  ஹிஸ்பே இஸ்லாமி போன்ற இதர இயக்கங்களுக்கிடையே உட்பூசல்களை உருவாக்கிய அமெரிக்க சீ.ஐ.ஏ. தனது நேரடி கண்காணிப்பில் விஷேடமாக தயாரிக்கப்பட்ட மூளைச்சலவை செய்யப்பட்ட தாலிபான்கள் (மாணவர்கள்) என்று பெயர் சூட்டப்பட்ட  கிழட்டுப் படையணி ஒன்றை களமிறக்கி  தான் ஏற்கனவே உருவாக்கிய அமைப்புகளை இல்லாதொழித்து  தாலிபான்களுக்கு ஆப்கானை தாரை வார்த்து கொடுத்தது.

இஸ்லாமிய அரசு சிந்தாத்தை கொச்சைப்படுத்திய பாமர தாலிபான் அமைப்பினால்  அமெரிக்காவிற்கு இரண்டு விதமான வெற்றி கிடைத்தது.

1. கொள்கை ரீதியாக இஸ்லாமிய ஆட்சியமைப்மை உலகில் உருவாக்க வேண்டும் என்ற ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் வழிகாட்டுதலுடனும், அமெரிக்க நிதியுதவியுடனும் களத்தில் போராடிய ஹிஸ்பே இஸ்லாமி அமைப்பை தாலிபான்களை வைத்து விரட்டியடித்தது.

2. தாலிபான்களை வைத்து இஸ்லாமிய அரசு சார்ந்த கோட்பாட்டை கொச்சைப்புடுத்தியது. ( பெண்கள் மீதான அடக்கு முறை, பாடசாலைகளை இழுத்து மூடல்,  ஷரீஆ சட்டம் என்ற போர்வையில் பகிரங்கமான இஸ்லாம் விரும்பாத பிற்போக்குத்தனமான அதன் நிலைப்பாடுகள்.)

தாலிபான்களைின் செயற்பாடுகளை தனது ஊடகங்கள் மூலம் அமெரிக்க உலகம் முழுவதும் பிசாரப்படுத்தியது.

இஸ்லாமிய அரசு ஒன்று உருவானால்  (ஆப்கானில் போன்று ) இத்தகைய கொடுமைகளுக்கு உலகம் உள்ளாக்கப்படும் என்ற மறைமுகமான தகவலை
அது பிரசாரப்படுத்தியது. வெற்றியும் கண்டது.

சுருக்கமாக சொன்னால்  சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு , பனிப்போரின்  நிறைவுக்குப் பின்னர், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கும் திட்டத்தை ஆப்கானில் இருந்தே அது ஆரம்பித்தது.

தனது பொது எதிரியான ரஷ்யாவை வீழ்த்த, இன்னொரு  எதிரியான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அது பயன்படுத்தியது.  இன்றும் பயன்படுத்தி வருகிறது.

தனது காட்டுமிராண்டித் தனமான, கொள்ளை அரசியலுக்கு முஸ்லிம்களை பயன்படுத்தும் அதன் படலம் மீண்டும் ஆரம்பமாவதை அமெரிக்காவின்  அண்மைய நடவடிக்கைள் எமக்கு உணர்த்தி வருகின்றன.

தான் வளர்த்த தாலிபான்களிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் அமெரிக்க இராணுவம்  இப்போது தல்லாடிக் கொண்டிருக்கிறது.  தாலிபான்களை ஒழிக்க மீண்டும் “முஸ்லிம் சினேகம் ”  என்ற தனது பழைய “ பொலிசியை ”
அமெரிக்கா தூசு தட்டி எடுத்திருக்கிறது.

அதுதான் ஜமாஅதே இஸ்லாமி சார்பு ஹிஸ்பே இஸ்லாமியை மீண்டும் பணம் பொருள் கொடுத்து  ஆப்கானில் தாலிபான்களுக்கு எதிராக களமிறக்கும் அதன் வியூகம்.

இதன் முதற் கட்ட நடவடிக்கையாக ஹிஸ்பே இஸ்லாமி தலைவர் குல்புத்தீன் ஹிக்மத்தியாரின் மருமகன்மார் இருவர் ஆபகானின் பக்ராம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.

அன்று ஹிக்மத்தியாரின்  ஹிஸ்பே இஸ்லாமி அமைப்பை ஒழிக்க தாலிபான்களை உருவாக்கிய  அமெரிக்கா,  இன்று தாலிபான்களை ஒழிக்க மீண்டும் ஹிஸ்பே இஸ்லாமிக்கு உயிர் கொடுத்து எழுப்பி வருகிறது.

தாலிபான்களுக்கு எதிரான ஹிஸ்பே இஸ்லாமியின் ஜிஹாத் நாடகம் மீண்டும் கடந்த வாரம் அரங்கேறியது.

அதில் இரண்டு தரப்பிலும்  சுமார் 70 பேர் கொல்லப்பட்டடிருப்பதாக  ஊடகங்களில் செய்தி வெளியாகின. அமெரிக்க ஊடகங்கள் ஹிஸ்பே இஸ்லாமி இயக்கதை்தை மிகப் பலம் வாய்ந்த அமைப்பாக பிரசாரம் செய்து தாலிபான்களுக்கு எதிராக உளவியல் ரீதியிலான ஊடக யுத்தம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறது.

இலங்கையிலும் இனி அமெரிக்க சார்பு, அமெரிக்காவினால் லைசன்ஸ் வழங்கப்பட்ட“  ஜிஹாத் ”  பிரசாரம் முடுக்கி விடப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ஏற்கனவே அமெரிக்க பல்தேசிய கம்பனிகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கி அமெரிக்காவிற்கு சிறந்த சந்தை வாய்ப்பை முஸ்லிம்களின் நுகர்வு மூலம் ஏற்படுத்திக் கொடுத்த உலமா சபைக்கு அமெரிக்க தூதுவரே நேரடியாக விஜயம் செய்து முஸ்லிம் உலகின் நிலை பற்றி கலந்தாலோசித்ததாக அறிய வருகிறது.

முஸ்லிம்களின் உயிரையும் இரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் இராட்சத பேய் அரசின் பிரதிநிதி ஒருவர்  முஸ்லிம்கள் பற்றி கலந்தாசிப்பதற்கு உலமா சபைக்கு வந்திருக்கிறார்.

இந்தப் பிணம் தின்னி பேய்க்கு முஸ்லிம்க்ள பற்றி பேச என்ன அருகதை இருக்கின்றது?  அமெரிக்கா தொடர்பாக முஸ்லிம் உம்மத்தின் ஆதங்கத்தை உலமா சபை வெளியிட்டிருக்குமா?

ஈராக் முஸ்லிம்களின் கொலைக்காக, பலஸ்தின் முஸ்லிமகளின் பரிதாபத்திற்காக , ஆப்கான் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட அநியாயத்திற்காக உலமா சபை பேசியிருக்காது என்பதை அமெரிக்கத் தூதுவரோடு மகிழ்ச்சிகரமாக  கொடுக்கப்பட்ட “ போஸ் ” இலிருந்து  நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது மீண்டும் முளைத்திருக்கும் ஆப்கான் தாலிபான்களுக்கெதிரான ஹிஸ்பே இஸ்லாமியின் ஜிஹாதை உயிர்ப்பிக்க கடந்த காலத்தைப் போல் அமெரிக்காவிற்கு இஸ்லாமிய இயக்கங்களும், உலமா சபையும்   மீண்டும் தேவைப்படும் காலம் நெருங்கி வருகின்றது.

அன்றிருந்த (80 களில்) உலமா சபை தலைவர்களின் கடிதமொன்றுக்கு மட்டுமே இலங்கையருக்கு பாகிஸ்தான் ஊடாக ஆப்கான் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும்.  ஜிஹாதைப் பார்க்க, பழக அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஆதாரங்களுடன் அறிய முடிகிறது.

1987 களில் போன்று மீண்டும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆப்கான் ஜிஹாதை  அங்கு சென்று பார்க்க,  ரசிக்க, பழக  ஹிக்மத்தியாரோடு பக்கத்தில் இருந்து புகைப்படமெடுக்க  சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது.

இனி மீண்டும் அப்படி ஒரு நிலை தோன்றப் போகிறது என்பதற்கு சான்றாக அமெரிக்கத் தூதுவரின் உலமா சபைக்கான திடீர் விஜயத்தை  சந்தேகமின்றி குறித்துக் காட்டலாம்.


எது எப்படியிருப்பினும்  இந்த சந்திப்பு உலமா சபை தலைவருக்கும், செயலாளருக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும், இலங்கையில் எரியும் முஸ்லிம்களின் பிரச்சினையை மறந்து வெளிநாட்டில் தஃவா செய்ய,  சூறாவளி சுற்றுப்பயணம் புரிய காத்துக்கொண்டிருக்கும்   “தாஈ” (?)களுக்கும் மறுப்பில்லாமல் அமெரிக்க வீசா கிடைக்கும்  வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

ஆனால், தொடர்ந்தும் ஈராக், பலஸ்தீன், ஆப்கான் முஸ்லிம்களுக்கு மரண வீசா மட்டும் மறக்காமல் கிடைக்கும் வாய்ப்புகள்  நிறையவே இருக்கின்றன.

இன்று உலகில் பெறுமதி அற்றவையாக முஸ்லிம்களின் உயிரும் உடமைகளும் இருக்கின்றன.

அதேநேரம்  எதிரியின்  பணத்திற்கு இலகுவில் சோரம் போகின்ற சொத்தாகவும்  முஸ்லிம்களே இருக்கின்றனர் என்ற வெட்கமான தகவலை வெளியிடாமல் இருக்க முடியவே  முடியாது.

1 comment:

 1. As a one of the responsible Muslim service personal in Sri Lanka, I would like to input my comments for the interest of Muslims in Sri Lanka.

  I have been frequently monitoring couple of Islamic sites to understand some critical subjects among Muslims in Sri Lanka. But I never came a cross such a site like Badrakalam. Its providing a wide information and preventative measure to safe guard the Muslim community in Sri Lanka from Arab sponsored or funded movements’ activities in Sri Lanka. In this comments I am not going to analyze or fact finding the articles constantly appeared in this site.

  The all Communities in Sri Lanka are living very peacefully and without any fear after defeating the LTTE terrorism in this land, the whole world knows the secret of this Military victory. This victory gained without any ‘super powers’ help including USA and other developed countries.

  The well coordinated and strategic plans of the present government of Sri Lanka pledged to develop the country without any conditional foreign aid and pressures from any country. Some western and European countries are aiding or supporting to destabilize the peaceful environment in Sri Lanka.

  In our intelligence confirmed some Islamic organizations in Sri Lanka receiving millions of funds and guidance from Arab Countries since years in the pre text of propagate of Islamic fundamental teaching and other ritual including Kurban (Animal sacrifice) during the month of Haj. In this regard certain media has given high priority for their journal based on the senior commander in the armed forces in Sri Lanka.

  After the heartbreaking incidents in Beruwala last year, the intelligence sharpening the findings in these Islamic organizations with the help of some of their members. Some organizations are very close surveillance of our unit. I am unable to reveal more information in this regard.

  My kind advice to Muslims in Sri Lanka particularly those who living in Colombo and suburbs, please refrain from these Arab funding organizations even a prominent Moulavies are representing these organizations. Our main priorities are safe guard the Muslim communities as well as the security and stability of Sri Lanka.

  May God bless and protect the mother Sri Lanka and their people.

  ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...