Sunday, 6 February 2011

சவுதி அரேபியா : சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி அணிதிரளும் பெண்கள்


சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையிருந்த போதிலும் மத்திய ரியாதிலுள்ள சவுதி உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னால் சனிக்கிழமை அணிதிரண்ட பெண்கள் எவ்வித விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறையில் வாடும் தமது உறவினர்களை விடுவிக்குமாறு சவுதி அரசை கோரியிருக்கின்றனர். ஏஎப்பி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்சட்டதின் போர்வையில் மனித உரிமையை மிக மோசமாக மீறும் நாடான சவுதியில் மன்னர்களுக்கும், அமெரிக்காவிற்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் தள்ளப்படுகின்றனர்.

 மனித உரிமை அமைப்பான Human Rights Watch  தனது வருடாந்த அறிக்கையில்  சவுதியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏகாதிபத்தித்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் சவுதி அரசு, கடந்த காலங்களில் அமெரிக்காவோடு இணைந்து ஜிஹாத் போராட்டம் என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் ஆயதப்போராட்டங்களை உருவாக்கியது. இதில் ஆப்கான், செச்னியா, பொஸ்னியா, காஷ்மீர் போன்ற நாடுகளின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

இஸ்லாம் விரும்பாத பாதக செயல்களில் ஈடுபடும் அல்கைதா, தாலிபான்  போன்ற அமைப்புகள்  நூற்றுக்கு நூறு சவுதியும், சீஐஏ யும் இணைந்து பிரசவித்தவையாகும்.

இன்று சவுதி மக்கள் மன்னர்களின் இந்த இஸ்லாத்திற்கு முரணான செயற்பாட்டை உணர்ந்து வருகின்றார்கள் என்பதையே இந்தப் பெண்களின் பேரணி உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் !
அடுத்த
புரட்சியின் கைகள்
தட்டும் கதவு
உன்னுடையதாக இருக்கலாம்!
புறப்பட தயாராய் இரு!

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...