அமெரிக்க, இஸ்ரேலின் நேச நாடுகளான அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டங்களினால் தனது நாட்டுக்கு தேவையான எரி சக்தியைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் குறையலாம் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.
”மத்திய கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் நிலை எங்களின் எதிர்கால எரிசக்தி பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒருமுறை எங்களை சிந்திக்க வைத்திருக்கிறது. எரி சக்தி பயன்பாட்டில் மற்றவர்களை தங்கியிராத ஒரு நிலைக்கு நாங்கள் நகர வேண்டும்” இப்படி கூறியிருக்கிறார் இஸ்ரேலிய தேசிய உட்கட்டமைப்பு அமைச்சரான உஸிலந்தோ. ஏஎப்பி செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.
இஸ்ரேல் தனது எரிபொருள் தேவையின் 40 வீதத்தை எகிப்திலிருந்து பெற்று வருகிறது. எகிப்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினால் தடுமாறிப் போயிருக்கும் இஸ்ரேல் தனது நாட்டின் எதிர்காலம் மற்றும் இருப்பு தொடர்பாக கடும் பீதியில் திணறிக்கொண்டிருக்கிறது.
கடந்த டிஸம்பர் மாதம் நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள் எகிப்தோடு பல பில்லியன் டொலர்களுக்கான எரிவாயு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்கான எரிபொருள் ஏற்றுமதிக்கான இந்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு இப்போது அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு மிகவும் துணையான நேசமான நாடாக எகிப்தை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அமெரிக்காவின் நிதி உதவி பெறும் நாடாக எகிப்து திகழ்கிறது.
No comments:
Post a Comment