Friday 11 February 2011

சவூதி அரேபியா - முதலாவது அரசியல் கட்சி ஆரம்பம்!


சவூதியில் முதலாவது உருவாகியிருக்கும் அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்

அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, சவூதி மன்னனின் ஷரீஆவிற்கு மாற்றமான, அமெரிக்க, இஸ்ரேலிய நலன்சார்ந்த அரச சிம்மாசனமும் ஆட்டங்கண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லாத அந்த சவூதி நாட்டில் முதலாவது அரசியல் கட்சியொன்று உருவாகி இருப்பதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இஸ்லாமிய உம்மாஹ் கட்சி என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்தக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், சவூதி மன்னன் அப்துல்லாஹ்விற்கு இந்தத் தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திக்கின்றார்கள்.



தமது கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி அவர்கள் அப்துல்லாஹ்வை கேட்டுள்ளார்கள்.

சட்டத்தரணிகளும், பேராசிரியர்களும், வர்த்தகப் பிரமுகர்களும் தற்போதைய செயற்பாட்டாளர்களாக இருக்கும் இந்தக் கட்சியின் செயற்பாடு மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் அரசியல், சமூக பிரச்சினைகளை அணுகுவதற்கான தளத்தை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

"மக்களின் அரசியல் உரிமைகளையும், சுதந்திரத்தையும் அங்கீகரிப்பதற்கான காலம் உதயமாகி விட்டது. அந்த உரிமையினூடாக அவர்களுக்குத் தேவையான அரசியல் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி ஆட்சியில் பங்கும் கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்" என்று  அக்கட்சியின் நிறுவனர் ஷேய்க் முஹம்மத் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.

சவூதியில் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற முறை இல்லை. சூரா என்ற ஆலோசனை சபை ஒன்றே அரசியல் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருக்கின்றது.

இந்த சூரா சபையின் நிர்வாகிகள் அத்தனைப் பேரும் மன்னனின் குடும்ப வாரிசுகள். மன்னனால் தெரிவு செய்யப்படுபவர்கள்.

இஸ்லாமிய வரலாறு குறிக்கும் ஹிஜாஸ் என்ற நாட்டை சிதைத்து விட்டு பிரித்தானியர்களால் 1932ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாடுதான் சவூதி அரேபியா.

முஸ்லிம்களின் ஒரே தலைமைத்துவமாக இருந்த, துருக்கியிலிருந்த உதுமானியபேரரசை வீழ்ச்சியுறச் செய்ய பிரித்தானியாவிற்கு ஒத்துழைத்ததற்கான நன்றிக் கடனாக பிரித்தானிய உளவு நிறுவனங்களினால் அன்றைய பாலைவனக் கொள்ளை கோஷ்டியின் தலைவனான, தற்போதைய அப்துல்லாஹ்வின் பாட்டனான இப்னு சுஊதுக்கு சவூதி என்ற பெயரில் இந்த நாடு லஞ்சமாக வழங்கப்பட்டது.

மத்திய கிழக்கில் இஸ்லாத்தின் எதிரிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட சவூதி அரேபியாவும், இஸ்ரேலும் தன்னை உருவாக்கிய மேற்கு நாடுகளுக்கு இன்றுவரை மிகவும் விசுவாசமாக கருமமாற்றி வருகின்றன.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...