Saturday, 5 February 2011

ஜோர்ஜ் புஷ் கைது செய்யப்படலாம் - ஜெனீவா பயணம் ரத்து!

          
ஈராக் மக்களைக் கொன்று குவித்த புஷ்ஷும் அந்த கொலைகளுக்கு சவூதியை தளமாக  அமைத்துக்கொடுத்த அப்துல்லாஹ்வும்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அடுத்த வார ஜெனீவா பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக BBC இன் சிங்கள சேவையான 'சந்தேஷய' தெரிவித்துள்ளது.

ஜெனீவா செல்லவிருந்த ஜோர்ஜ் புஷ்ஷை கைது செய்யுமாரு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இப்பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜோர்ஜ் புஷ்ஷிற்குஅழைப்பு விடுத்த யூத அமைப்பு அறிவித்துள்ளது


                                                                   குவாண்டனாமோ வதைமுகாம்


ஜோர்ஜ் புஷ் ஈராக், ஆப்கானிஸ்தான் மக்களை சித்தரவதை செய்வதற்கு இராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கும் தகவல்கள் வெளிவந்திருப்பதால் புஷ்ஷிற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சித்தரவதைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு கடந்த வாரம் சுவிஸ் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.

எண்ணெய் வளங்களை கொள்ளையிட ஜோர்ஜ் புஷ் தொடுத்த ஈராக் மீதான யுத்தத்தில் சுமார் 14 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...