Monday, 7 February 2011

எகிப்தை நோக்கி விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல்!

800 படையினரை ஏற்றிக்கொண்டு அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று எகிப்தை நோக்கி விரைவதாக பிரஸ் ரீவி இணைய தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எகிப்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா தயாராகிறது என்று பரவிவரும் செய்தியை மறுத்துள்ள பென்டகன் எகிப்தில் பிரச்சினை உக்கிரமடைந்தால் தனது நாட்டு பிரஜைகளை எடுத்துச் செல்லவே இந்தப் போர்க்கப்பல் அனுப்பப்படுவதாக அறிவித்திருக்கிறது.

எகிப்தின் மக்கள் எழுச்சியோடு, மத்திய கிழக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்துள்ள அமெரிக்கா தனக்கு விசுவாசமான, சவுதி, குவைத், கத்தார் போன்ற ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளைப் பின்பற்றும்,அவர்களின் அனுசரணையில் வாழும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை பொம்மைகளாக எகிப்தில் ஆட்சி பீடமேற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

முபாரக்கின் வீழ்ச்சியோடும், எகிப்தின் மக்கள் எழுச்சியோடும் கதி கலங்கிப் போயிருக்கும் இஸ்ரேலின் நிலையைப் பார்க்கும் போது,  மத்திய கிழக்கு அரபு நாடுகளின் ஆதரவு, உதவியின் மூலம் தான் அது தன் இருப்பை பாதுகாத்து வந்திருக்கிறது என்ற உண்மை உலகறிய வந்திருக்கிறது. அதன் மூலம்தான் பலஸ்தீன் மக்கள் மீதான அடாவடித்தனங்களையும், அட்டகாசங்களை அரங்கேற்றி வந்திருக்கிறது என்ற உண்மையும் புலனாகின்றது.

மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அந்த நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் மன்னர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருப்பது அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் விருப்பமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் அங்கு உருவானால் அவர்களின் ஆக்கிரமிப்பு, சுரண்டல் அரசியலுக்கு அது பெரும் தடையாக அமையும்.

அந்த மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி என்ற சாதகமான அரசியல் சூழ்நிலை அரபு நாடுகளில் தற்போது சரிந்து வருவதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிர்ந்து போய் இருக்கின்றன. 

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...