Saturday, 26 February 2011
Tuesday, 22 February 2011
லிபிய கொலைக்களம் - குண்டு மழை பொழியும் கதாபி!
லிபியாவில் ஆர்ப்பாட்டம் செய்து வரும் பொதுமக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு மிருகத்தனமான தாக்குதல்களை கதாபி நடாத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
திரிப்பொலி நகரம் பிணக்காடாய் மாறி இருப்பதாகவும், 400க்கு மேற்பட்டோர் இதுவரை பலியாகியிருப்பதாகவும், நிராயுதபாணிகளான மக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு தாக்கும் கதாபியின் மிருகத்தனமான இந்த உத்தரவிற்கு கீழ்படியாத இரண்டு லிபிய விமானிகள் தமது விமானங்களை பக்கத்து நாடான மால்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியிருக்கின்றனர்.
இதேவேளை கதாபியின் ஆதரவாளர்களும், இராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படிப்படியாக மக்களோடு இணைந்து வருவதாக அறியவருகிறது.
கதாபியின் மகன் ஸைபுல் இஸ்லாம், ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்றால் லிபியாவில் இரத்த ஆறு ஓடும் என்று அச்சுறுதத்தல் விட்டிருக்கின்றார்.
தனது தந்தையின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கடைசி ஆண், ஒரு கடைசி பெண், கடைசி தோட்டா இருக்கும் வரை போராடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார்.
லிபியாவின் ஒவ்வொரு நகரங்களும் மக்களிடம் வீழ்ச்சியடைந்து வருவதைப் பார்க்கும் போது கதாபி பதுங்குவதற்கு இடம்தேடி ஓட்டமெடுக்கும் நாள் விரைரவில் வரத்தான் போகிறது.
Sunday, 20 February 2011
பஹ்ரைன் - வெளிநாட்டு கூலிப்படையின் கொடுமை!
பஹ்ரைன் விபரீதமான அரசியல் உள்ள வித்தியாசமான நாடு.
ஏகாதிபத்தியத்தின் எடுப்பார்க் கைப்பிளள்ளைகளான மன்னர் குடும்பங்கள் 200 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.
அந்த நாட்டின் அரச நிர்வாகத்தில் சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கு இடமில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவும் தமது அரசியல் தேவைகளுக்காக பயன் படுத்தும் ஒரு தளமாகவே பஹ்ரைன் பாவிக்கப்பட்டு வருகின்றது.
வெளிநாட்டவரின் அங்கீகரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பின் உதவியில் ஆட்சி செய்யப்பமடும் ஒரு நாடாக பஹ்ரைனை குறிப்பிட்டால் அதில் தவறே இல்லை.
உலகில் எங்குமில்லாதவாறு முற்று முழுதாக இராணுவத்தில் வெளிநாட்டவர்களே வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.
மனித உரிமைகள் முடக்கப்பட்ட ஒரு நாடாக அது மிளிர்ந்துக் கொண்டிருக்கிறது.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால்,
இன்று மனித உரிமைக்காக குரல் கொடுக்கின்ற அமெரிக்காவும், பிரித்தானியாவும் தான் பஹ்ரைன் என்ற ஜனநாயக விரோத நாட்டை பாலூட்டி வளர்த்து வருகின்றன.
வாக்குரிமையைப் பற்றி வாய்க்கிழிய கத்தும் இந்த நாடுகள், 80 வீதமான ஆதிகாரத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு 20 வீத அதிகாரத்தை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் கேலிக்குரிய பஹ்ரைன் பாராளுமன்ற முறையை ஆதரித்து வருகின்றன.
அண்டை நாடுகளான பஹ்ரைனுக்கும் சவுதிக்குமுள்ள உறவு மிகவும் இறுக்கமானது. ஈ என்ற அசுத்தத்தை மொய்க்கும் பிராணிக்கும் அசுத்தத்திற்கும் உள்ள உறவு அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கிறது.
தனது நாட்டில் இறுக்கமான சட்டங்களை வைத்துக்கொண்டுள்ள சவுதி நாடு, அதன் மன்னர் குடும்பங்களுக்கும், மேட்டுக்குடிகளான எண்ணெய் ஷேக்குகளுக்கும் மது, மாது போன்ற ஷைத்தானிய சேட்டைகளுக்கான சிறந்த தளமாக பஹ்ரைனை பாவித்து வருகிறது.
பிரித்தானியா கூலிப்படையான பஹ்ரைனின் இராணுவத்திற்கு பயிற்சி வழங்குகிறது. அமெரிக்கா 4500 படையினரைக் கொண்ட மிகப்பெரிய கடற்படைத் தளத்தை இங்கு வைத்துள்ளது.
பஹ்ரைன் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கு ஏதுவாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அந்த நாட்டை நவீன ஆயுத வல்லமையுள்ள நாடாக மாற்றியிருக்கிறது.
பஹ்ரைனை நாட்டு மக்களின் ஆதரவு அறவே இன்றி பல நூறு ஆண்டுகள் தொடராக ஆட்சி செய்வதற்கு அடித்தளமாக இந்த சாத்தானிய சக்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி போன்ற கூட்டுக்கம்பனிகள் அந்த நாட்டின் அராஜகங்களை கட்டிக்காத்து வருகின்றன.
இன்று அந்த நாட்டில் எழுந்து வரும் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு மேல் குறித்த மூன்று சாத்தானிய சக்திகளும் முயன்று வருகின்றன.
நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கூலிப்படையான இராணுவம் செய்யும் கொலைகளுக்கும் , மனித உரிமை மீறல்களுக்கும் அனுசரணையாளர்கள் யார் என்ற விடயம் உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.
Saturday, 19 February 2011
எழுச்சியில் பஹ்ரைன் - அதிர்ச்சியில் அமெரிக்காவும் அரபுநாடுகளும்
எகிப்தின் எழுச்சியை வரவேற்று அந்த எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா பஹ்ரைன் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ளது. பஹ்ரைனின் எல்லை நாடான சவுதி நாட்டின் மன்னன் அப்துல்லாஹ்வின் வயிற்றிலும் இது புளியைக் கரைத்திருக்கிறது.
புரட்சி தனது நாட்டிற்குள்ளும் புகுந்து விடுமோ என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் சவுதி மன்னர் குடும்பங்கள் நடுநடுங்கிப்போயுள்ளன.
Thursday, 17 February 2011
பஹ்ரைன் எழுச்சி- நான்கு பேர் மரணம் 60 பேரைக் காணவில்லை!
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பேர்ல் சதுக்கத்தில் அரசாங்கத்திற்கெதிராக திரண்டிருந்த மக்கள் மீது பாதுகாப்புப் படை தாக்கியதில் 4 பேர் மரணமாகியுள்ளதாகவும், 60 பேர் காணமாகியுள்ளதாகவும் பிரஸ் ரிவி இணையதளம் தெரிவிக்கிறது.
நகரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ கவச வாகனங்கள் மக்கள் பேர்ல் சதுக்கத்தில் ஒன்று கூடுவதை தடுத்து வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் அந்நாட்டின் அந்நாட்டு மன்னரின் உறவினரான கலீபா பின் ஸல்மான் அல் கலீபாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டுமக்கள் கோரி வருகின்றனர்.
எகிப்தின் முபாரக்கின் இராஜினாமாவைத் தொடர்ந்து, பஹ்ரைன் மக்கள் கடந்த திங்கட் கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கடந்த 200 வருடங்களாக பஹ்ரைனை ஆளும் மன்னர் குடும்பத்திற்கு எதிராக மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். மன்னர் ஆட்சியை தமது நாட்டிலிருந்து துடைத்தெறிநந்து விட்டு மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற அரசு ஒன்று உருவாக வேண்டுமென்று அவர்கள் கோரி வருகின்றனர்.
25 அமைச்சர்களைக் கொண்ட பஹ்ரைன் அரச சபையில் 80 வீதமானவர்கள் அரச குடும்பத்தினால் தெரிவு செய்யப்படுகின்றனர். மிகுதி 20 வீதமானவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான நண்பர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா பற்றியதொரு ஆக்கம் கிடைக்கப்பெற்றது. அதனை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா
இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 01
அறிமுகம்
இவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம்.
லிபியா - நாற்பதாண்டு ஆட்சியும் நடுங்கும் கதாபியும்
தூனீசியா, எகிப்து போராட்ட வரிசையில் லிபியாவும் இணைந்து கொள்கிறது.
நாற்பதாண்டுகளாக லிபிபாவை ஆண்டு வரும் அந்நாட்டின் ஜனாதிபதி கதாபிக்கு எதிர்ப்பு தெரிவித்து லிபிய மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸியில் மக்கள் அணிதிரண்டு இருக்கின்றார்கள்.
மனித உரிமை சட்டத்தரணி ஒருவரின் கைதையும், கதாபியின் ஊழல், மோசடி மிகுந்த ஜனநாயகமில்லாத ஆட்சியையும் எதிர்த்து மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு பெங்காஸி நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த போது பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் சண்டை மூண்டது.
Monday, 14 February 2011
காலித் சயீத்! புரட்சிக்காக புதைந்து போன ஒரு விதை!
காலித் சயீத்!
எகிப்தின் கரையோர நகரமான அலக்சாந்திரியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞன்.
கடந்த வருடம் 2010 ஆகஸ்ட் மாதம் முபாரக்கின் இரும்புக் கரங்களாய் செயற்பட்டு வந்த எகிப்திய காவல் துறை பொலீசார் இவனை ஒரு 'இன்டர் நெட் கபே' இலிருந்து கைது செய்தனர்.
அவனை கதறக் கதற பலர் முன்னிலையில் பயங்கரமாக தாக்கினர். அவனது தலையை வேகமாக சுவரில் மோத வைத்தனர். அடித்து உதைத்தனர்.
அடித்து துன்புறுத்தப்பட்டு குற்றுயிராய்க் கிடந்தஅவனை பாதையில்நெடுக இழுத்துச் சென்று, வாகனத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்து சென்றனர்.
இது எகிப்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்ததனால் யாரும் இதனை அலட்டிக் கொள்ள வில்லை. காரணம், கைதும், கொலையும் சாதாரண சம்பவங்களாக எகிப்தின் நிலையை மாற்றி இருந்தது.
காலித் சயீத் என்ற இளைஞன் இப்படி மிருகத்தனமாக, கொடுரமாக தாக்கப்படுவதற்கு கொலை செய்யப்படவதற்கு என்ன குற்றம் இழைத்திருப்பான்?
பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்த காலிதின் படம்
இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் போதை பொருள் பாவனை தொடர்பான ஒரு வீடியோவை அவன் அவனது புளக்கில் பதிவிட்டிருந்தான். அதனை உலகறியச் செய்திருந்தான்.
அவன் செய்த குற்றம் அதுதான்.
இணையத்தின் ஊடாக அநீதிக்கு எதிராக செயற்பட்ட அந்தக் குற்றம் தான் அவனுக்கு சித்திர வதையையும், மரணத்தையும் பரிசாக வழங்கியது.
கடந்த காலங்களில் பொலிசாரின் கெடுபிடிகளில், சித்திர வதைகளில் மரணிக்கும் எகிப்தியர்களின் மரணங்கள் புதைகுழியோடு புதைந்து போகும் ஒரு கதையாகவே இருந்து வந்திருக்கிறது.
Saturday, 12 February 2011
எகிப்திய எழுச்சியின் பின்னணியிலிருந்த இளம் பெண்மணி அஸ்மா மஹ்ஃபூஸ்
முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியிலல் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.
எகிப்தின் இந்த எழுச்சி இப்படித்தான் ஆரம்பமானது.
அஸ்மா மஹ்ஃபூஸ் தஹரீர் சதுக்கத்தில் ஒன்று சேர்ந்து முபாரக்கின் அடக்குமுறைக்கு எதிராக 2011 ஜனவரி 25ம் திகதி அன்று அணி திரளுமாறு எகிப்திய மக்களை உருக்கமாக அழைக்கும் ஒரு வீடியோவை தனது வலைப்பூவில் (புளக்கில்) பதித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு எகிப்தின் அல்மஹல்லா அல் குப்ரா நகரத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் இந்த அஸ்மா மஹ்ஃபூசும் ஒருவர்.
Friday, 11 February 2011
தஹ்ரீர் சதுக்கத்தில் கொண்டாட்டம் : Latest Photo Updates
3 தசாப்த சர்வதிகாரத்திற்கு எதிராக நடைபெற்ற 18 நாள் போராட்டத்தின் வெற்றியை எகிப்தியர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கொண்டாடும் புகைப்படங்கள்
Reuters இடமிருந்து...
Reuters இடமிருந்து...
3 தசாப்த முபாரக் ஆட்சி முற்றுப் பெற்றது!
ஹுஸ்னி முபாரக் இன் பதவி விலகலை கைரோவில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன் கொண்டாடும் மக்கள்
எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனது பதவியை இராஜனாமா செய்துள்ளதாக எகிப்திய உப அதிபர் உமர் ஸுலைமான் அரச தொலைக்காட்சியில் எகிப்து மக்களுக்கு அறிவித்தார். மேலும் அதிகாரங்கள் அனைத்தும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.
சவூதி அரேபியா - முதலாவது அரசியல் கட்சி ஆரம்பம்!
சவூதியில் முதலாவது உருவாகியிருக்கும் அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்
அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, சவூதி மன்னனின் ஷரீஆவிற்கு மாற்றமான, அமெரிக்க, இஸ்ரேலிய நலன்சார்ந்த அரச சிம்மாசனமும் ஆட்டங்கண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லாத அந்த சவூதி நாட்டில் முதலாவது அரசியல் கட்சியொன்று உருவாகி இருப்பதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இஸ்லாமிய உம்மாஹ் கட்சி என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்தக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், சவூதி மன்னன் அப்துல்லாஹ்விற்கு இந்தத் தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திக்கின்றார்கள்.
''ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதற்கு 5000 பவுன்ட்ஸ் வழங்கினார்கள்" - ஒரு கைதியின் வாக்குமூலம்
கடந்த வாரம் எகிப்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை தஹ்ரீர் சதுக்கத்திற்குள் புகுந்து தாக்கிய முபாரக்கின் ஆதரவாளர்களைப் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள்.
அவர்கள் யார்? உண்மையில் முபாரக் போன்ற அடக்கு முறை ஆட்சியாளனுக்கு ஆதரவாக பொதுமக்கள் எழுவார்களா?
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல குற்றவாளிகளை வெளியே எடுத்து, அவர்களுக்குப் பணத்தை வழங்கி ஆர்பாட்டக்காரர்களை தாக்குவதற்கு முபாரக் அரசும்அதன் அடிவருடிகளாக இருக்கும் எகிப்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் உத்தரவிட்டிருக்கின்றார்கள்.
தாக்குதலுக்கு வந்த அந்த சிறைக் கைதிகளில்ஒருவரைப் பிடித்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்தக் கைதியின் வாயிலாகவே உண்மையை உலகறியச் செய்திருக்கின்றார்கள்.
இணைப்பை கிளிக் செய்து அந்த வீடியோவைப் பாருங்கள்.
http://observers.france24.com/content/20110204-i-was-paid-5000-pounds-wreak-havoc-cairo-protests-egypt-mubarak-baltgias
Thursday, 10 February 2011
எழுச்சிக்காக இன்னுயிர் நீத்த எகிப்திய கலைஞன்.
அஹ்மத் பாஸியூனி !
எகிப்தின் அடக்குமுறையை எதிர்த்து எழுந்த அந்தப் பேரலயைில் அவனும் ஒரு மௌனப் புயலாய் மறைந்து தான் இருந்தான்.
எகிப்தின் எழுச்சிக்குப் பின்னால் உலக ஊடகங்கள் அடக்கி வாசிக்கும் ஓர் உண்மை இருக்கிறது. அது அடித்தட்டில் அமுங்கிக் கிடக்கிறது.
அது இந்த எழுச்சிக்குப் பின்னால் இருக்கும் இலத்திரனியல் ஆயுதமேந்திய ஓர் இளைஞர் படை. அதன் பெயர் 'ஏப்ரல் 6 ' போராட்டக்குழு.
மேற்குலகின் கைக்கூலியான அல்பராதியும், மத்திய கிழக்கின் அரபு ராஜாக்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கின்ற எகிப்தின் எதிர்க்கட்சியும் ஆழ்ந்து உறங்கும் போது... ''ஏப்ரல் 6 " என்ற இளைஞர் இயக்கம் தான் மக்களைத் தட்டி எழுப்பி தஹ்ரீர் சதுக்கத்திற்கு அணியணியாய் அழைத்து வந்தது.
தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டெழுந்த அந்த "ஏப்ரல் 6 " டிஜிட்டல் புரட்சியின் அங்கமாகத்தான் அவனும் அடையாளமானான்.
இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில்....
அஹ்மத் பாஸியூனி என்ற
புரட்சிக்குப் பூ தூவிய அவனை மட்டும் எதிரிகளின் துப்பாக்கி எப்படி இனம் கண்டுக்கொண்டது?
அவனது நெற்றியைக் குறி பார்த்து
நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது அந்தத் துப்பாக்கிச் சூடு.
புகைப்படக் கருவியோடு அமைதியாக நிராயுதபாணியாக நின்றுக்கொண்டிருந்த அவனை அடக்குமுறையின் கொடிய கரங்கள் அடையாளம் கண்டன.
புரட்சிக்காக இன்னுயிர் நீத்த முதலாவது எகிப்தின் கலைஞனாக அவன் புதைக்கப்படுவான் என்று நினைத்திருக்கவே மாட்டான்.
அவன், மக்கள் பலம் எழுந்துக் கொண்டிருந்த தஹ்ரீர் சதுக்கத்தில்
விழுந்துபோன முதலாவது காட்சி ஊடகக் கலைஞன்.
அஹ்மத் பாஸியூனி!
முபாரக்கின் ஆட்சியில் மூன்று தசாப்தங்களாய் முடங்கிப்போயிருந்த மானுடத்தை மீட்டெடுக்க மிருதுவான தனது கலையுணர்வால் அவன் கற்பனைக் கோட்டைகளைக் கட்டியிருக்கிறான்.
காட்சி ஊடக கலைஞனான அஹ்மத் பாஸியூனி கலைவடிவங்களை படித்திருக்கிறான். படைத்திருக்கிறான். படிப்பித்திருக்கிறான்.
கலை வடிவங்களுடே சுதந்திர காற்றை சுவாசிக்க அவனது மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கின்றான்.
ஓவியன், பாடகன் என்று பல துறைகளில் தடம் பதித்த அஹ்மத் பாஸியூனி எகிப்தின் புகழ்பெற்ற இளம் கலைஞராக திகழ்ந்தவன்.
தனது முதுகலைமானி பட்டப்படிப்பிற்காக மின்னியல் கலை வடிவம் தொடர்பான ஆய்வை தொடந்திருந்த வேளையில் எகிப்து அவனை இழந்திருக்கிறது. எழுச்சி அவனைப் பிரிந்திருக்கிறது.
அடக்குமுறையை வெறுத்து புரட்சியை நேசித்த அஹ்மத் பாஸியூனி என்ற கலைஞன் தன் கனவுகளோடு மறைந்திருக்கிறான்.
அவன் தனது பேஸ் புக்கில் இறுதியாக பதித்த வார்த்தைகள்
"If they want war, we want peace. We are better: I’ll practice restraint till the end."
அல்ஜீரியா: தூனிசிய பாணியில் தீக்குளிப்பு
அல்ஜீரியாவின் வடக்கு நகரமான பாலிதாவில் பொலிசாரின் நடவடிக்கையை எதிர்த்து ஓர் இளைஞர் தன்னைத்தானே தீ மூட்டிக்டகொண்டுள்ளார்.
25 வயதான இந்த இளைஞன் தனது முறைப்பாட்டை பொலிஸார் ஒழுங்காக விசாரணை நடாத்தாத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டிருப்பதாக பிரஸ் ரிவி இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
தூனிசியாவில் ஓர் இளைஞனின் மரணம் அந்த நாட்டு தலைவனை நாட்டை விட்டே ஓட வைத்தது. எகிப்தில் பொலிசாரின் தாக்குதலுக்கிலக்காகி மரணித்த ஒரு இளைஞனுக்காக தஹரீர் சதுக்கத்தில் அணி திரண்ட இளைஞர்கள் அந்த நாட்டையே இன்று செயலிழக்கச் செய்திருக்கின்றனர்.
அல்ஜீரியாவின் அடக்குமுறை ஆட்சி தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் அதிர்ந்து போக வாய்ப்புமிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரமான அல்ஜியர்ஸில் உள்ள தொழில் வாய்ப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முன்னால் தொழிலற்ற நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு துணைபோன அரபு நாடுகளில் உள்ள அடக்குமுறை ஆட்சியும், ஊழல், பட்டினி,வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் மக்களை போராட்டத்திற்கு தள்ளியிருக்கிறது.
Tuesday, 8 February 2011
எகிப்தின் ஒமர் சுலைமான் ஒரு மொசாட் ஏஜன்ட் ! விக்கிலீக் அம்பலம்
Monday, 7 February 2011
எகிப்தை நோக்கி விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல்!
800 படையினரை ஏற்றிக்கொண்டு அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று எகிப்தை நோக்கி விரைவதாக பிரஸ் ரீவி இணைய தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
எகிப்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா தயாராகிறது என்று பரவிவரும் செய்தியை மறுத்துள்ள பென்டகன் எகிப்தில் பிரச்சினை உக்கிரமடைந்தால் தனது நாட்டு பிரஜைகளை எடுத்துச் செல்லவே இந்தப் போர்க்கப்பல் அனுப்பப்படுவதாக அறிவித்திருக்கிறது.
எகிப்தின் மக்கள் எழுச்சியோடு, மத்திய கிழக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்துள்ள அமெரிக்கா தனக்கு விசுவாசமான, சவுதி, குவைத், கத்தார் போன்ற ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளைப் பின்பற்றும்,அவர்களின் அனுசரணையில் வாழும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை பொம்மைகளாக எகிப்தில் ஆட்சி பீடமேற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
முபாரக்கின் வீழ்ச்சியோடும், எகிப்தின் மக்கள் எழுச்சியோடும் கதி கலங்கிப் போயிருக்கும் இஸ்ரேலின் நிலையைப் பார்க்கும் போது, மத்திய கிழக்கு அரபு நாடுகளின் ஆதரவு, உதவியின் மூலம் தான் அது தன் இருப்பை பாதுகாத்து வந்திருக்கிறது என்ற உண்மை உலகறிய வந்திருக்கிறது. அதன் மூலம்தான் பலஸ்தீன் மக்கள் மீதான அடாவடித்தனங்களையும், அட்டகாசங்களை அரங்கேற்றி வந்திருக்கிறது என்ற உண்மையும் புலனாகின்றது.
மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அந்த நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் மன்னர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருப்பது அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் விருப்பமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் அங்கு உருவானால் அவர்களின் ஆக்கிரமிப்பு, சுரண்டல் அரசியலுக்கு அது பெரும் தடையாக அமையும்.
அந்த மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி என்ற சாதகமான அரசியல் சூழ்நிலை அரபு நாடுகளில் தற்போது சரிந்து வருவதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிர்ந்து போய் இருக்கின்றன.
எகிப்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா தயாராகிறது என்று பரவிவரும் செய்தியை மறுத்துள்ள பென்டகன் எகிப்தில் பிரச்சினை உக்கிரமடைந்தால் தனது நாட்டு பிரஜைகளை எடுத்துச் செல்லவே இந்தப் போர்க்கப்பல் அனுப்பப்படுவதாக அறிவித்திருக்கிறது.
எகிப்தின் மக்கள் எழுச்சியோடு, மத்திய கிழக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்துள்ள அமெரிக்கா தனக்கு விசுவாசமான, சவுதி, குவைத், கத்தார் போன்ற ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளைப் பின்பற்றும்,அவர்களின் அனுசரணையில் வாழும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை பொம்மைகளாக எகிப்தில் ஆட்சி பீடமேற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
முபாரக்கின் வீழ்ச்சியோடும், எகிப்தின் மக்கள் எழுச்சியோடும் கதி கலங்கிப் போயிருக்கும் இஸ்ரேலின் நிலையைப் பார்க்கும் போது, மத்திய கிழக்கு அரபு நாடுகளின் ஆதரவு, உதவியின் மூலம் தான் அது தன் இருப்பை பாதுகாத்து வந்திருக்கிறது என்ற உண்மை உலகறிய வந்திருக்கிறது. அதன் மூலம்தான் பலஸ்தீன் மக்கள் மீதான அடாவடித்தனங்களையும், அட்டகாசங்களை அரங்கேற்றி வந்திருக்கிறது என்ற உண்மையும் புலனாகின்றது.
மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அந்த நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் மன்னர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருப்பது அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் விருப்பமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் அங்கு உருவானால் அவர்களின் ஆக்கிரமிப்பு, சுரண்டல் அரசியலுக்கு அது பெரும் தடையாக அமையும்.
அந்த மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி என்ற சாதகமான அரசியல் சூழ்நிலை அரபு நாடுகளில் தற்போது சரிந்து வருவதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிர்ந்து போய் இருக்கின்றன.
Sunday, 6 February 2011
காஸா எல்லையில் எகிப்து இராணுவம் பட்டினியில்
காஸா எகிப்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளில் ஒன்று
பன்னிரெண்டு நாட்களாக தொடரும் மக்கள் போராட்டத்தினால் எகிப்தின் அனைத்து நிர்வாக செயற்பாடும் முடங்கி நிற்கின்றன.
காஸா எல்லையில் கடமையிலிருக்கின்ற எகிப்திய இராணுவத்திற்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்பட்டிருப்பதால் காஸா மக்கள் தமது சுரங்கப்பாதை ஊடாக வந்து உணவுப்பொருட்களை இராணுவத்திற்கு வழங்கி வருகின்றனர்.
2006ம் ஆண்டு முதல் காஸாவிற்கு இஸ்ரேல் தரை, கடல் வழிகளை மூடி பொருளாதார த் தடையை விதித்திருக்கிறது.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஆதரவாக செயற்பட்ட முபாரக் எகிப்து காஸா எல்லையான ரபா வாயிலைமூடி இஸ்ரேலின் பொருளாதாரத் தடைக்கு உதவினார்.
இந்தத் தடையை சமாளிக்க காஸா மக்கள் சுரங்கப் பாதைகளை உருவாக்கி எகிப்துக்குள் நுழைந்து தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதனூடாக எடுத்துச் சென்றனர்.
காஸா மக்களுக்கு இந்தச் சுரங்கப் பாதைகள் இஸ்ரேலின் பொருளாதார தடைக்கு முகம் கொடுக்கும் மாற்று வழிகளாக மாற்றம் பெற்றன.
இன்று அந்தச் சுரங்கப் பாதைகளின் செயற்பாடுகள் தலைகீழாக மாறியிருக்கின்றன.
கடந்த பல வருடங்களாக பொருளாதார நெருக்கடியில் வாழும் காஸா மக்கள் இன்று எகிப்தின் காஸா எல்லையில் நிர்க்கதியாக இருக்கும் இராணுவத்தினருக்குஉணவுப்பொருட்களை சுரங்கப்பாதையுடாக கொண்டு வந்து விநியோகித்து வருகின்றனர்.
பன்னிரெண்டு நாட்களாக தொடரும் மக்கள் போராட்டத்தினால் எகிப்தின் அனைத்து நிர்வாக செயற்பாடும் முடங்கி நிற்கின்றன.
காஸா எல்லையில் கடமையிலிருக்கின்ற எகிப்திய இராணுவத்திற்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்பட்டிருப்பதால் காஸா மக்கள் தமது சுரங்கப்பாதை ஊடாக வந்து உணவுப்பொருட்களை இராணுவத்திற்கு வழங்கி வருகின்றனர்.
2006ம் ஆண்டு முதல் காஸாவிற்கு இஸ்ரேல் தரை, கடல் வழிகளை மூடி பொருளாதார த் தடையை விதித்திருக்கிறது.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஆதரவாக செயற்பட்ட முபாரக் எகிப்து காஸா எல்லையான ரபா வாயிலைமூடி இஸ்ரேலின் பொருளாதாரத் தடைக்கு உதவினார்.
இந்தத் தடையை சமாளிக்க காஸா மக்கள் சுரங்கப் பாதைகளை உருவாக்கி எகிப்துக்குள் நுழைந்து தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதனூடாக எடுத்துச் சென்றனர்.
காஸா மக்களுக்கு இந்தச் சுரங்கப் பாதைகள் இஸ்ரேலின் பொருளாதார தடைக்கு முகம் கொடுக்கும் மாற்று வழிகளாக மாற்றம் பெற்றன.
இன்று அந்தச் சுரங்கப் பாதைகளின் செயற்பாடுகள் தலைகீழாக மாறியிருக்கின்றன.
கடந்த பல வருடங்களாக பொருளாதார நெருக்கடியில் வாழும் காஸா மக்கள் இன்று எகிப்தின் காஸா எல்லையில் நிர்க்கதியாக இருக்கும் இராணுவத்தினருக்குஉணவுப்பொருட்களை சுரங்கப்பாதையுடாக கொண்டு வந்து விநியோகித்து வருகின்றனர்.
சவுதி அரேபியா : சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி அணிதிரளும் பெண்கள்
சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையிருந்த போதிலும் மத்திய ரியாதிலுள்ள சவுதி உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னால் சனிக்கிழமை அணிதிரண்ட பெண்கள் எவ்வித விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறையில் வாடும் தமது உறவினர்களை விடுவிக்குமாறு சவுதி அரசை கோரியிருக்கின்றனர். ஏஎப்பி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.
இஸ்லாமிய மதத்சட்டதின் போர்வையில் மனித உரிமையை மிக மோசமாக மீறும் நாடான சவுதியில் மன்னர்களுக்கும், அமெரிக்காவிற்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் தள்ளப்படுகின்றனர்.
மனித உரிமை அமைப்பான Human Rights Watch தனது வருடாந்த அறிக்கையில் சவுதியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏகாதிபத்தித்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் சவுதி அரசு, கடந்த காலங்களில் அமெரிக்காவோடு இணைந்து ஜிஹாத் போராட்டம் என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் ஆயதப்போராட்டங்களை உருவாக்கியது. இதில் ஆப்கான், செச்னியா, பொஸ்னியா, காஷ்மீர் போன்ற நாடுகளின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
இஸ்லாம் விரும்பாத பாதக செயல்களில் ஈடுபடும் அல்கைதா, தாலிபான் போன்ற அமைப்புகள் நூற்றுக்கு நூறு சவுதியும், சீஐஏ யும் இணைந்து பிரசவித்தவையாகும்.
இன்று சவுதி மக்கள் மன்னர்களின் இந்த இஸ்லாத்திற்கு முரணான செயற்பாட்டை உணர்ந்து வருகின்றார்கள் என்பதையே இந்தப் பெண்களின் பேரணி உணர்த்துகிறது.
அப்துல்லாஹ் !
அடுத்த
புரட்சியின் கைகள்
தட்டும் கதவு
உன்னுடையதாக இருக்கலாம்!
புறப்பட தயாராய் இரு!
எகிப்து : ஊமையாக நிர்ப்பந்திக்கப்டும் ஊடகங்கள்!
எகிப்தின் அல் தாவுன் பத்திரிகையின் படப்பிடிப்பாளர் 36 வயதான அஹ்மத் முஹம்மத் மஹ்மூத் ஸ்னைப்பர் தாக்குதலுக்குள்ளாகி நான்கு தினங்களின் பின்னர் நேற்று மரணமானதாக அரச செய்திப் பத்திரிகையான அல் அஹ்ரம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
முபாரக்கின் கையாட்களுக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலை படம் பிடித்துக்கொண்டிருந்த போதே இவர் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானார். எகிப்தின் போராட்டத்தில் மரணமான முதல் ஊடகவிலாளர் இவராகும்.
எகிப்தின் போராட்டம் தொடர்பான செய்திகள் வெளியுலகிற்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக முபாரக் அரசு பலத்த கெடுபிடிகளை ஊடகங்கள் மீது திணித்து வருகிறது. சகல இணைய தள சமூக வலைப்பின்னல்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
பிரேஸில், பிரான்ஸ், போலந்து, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாட்டின் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
வியாழக்கிழமையன்று கத்திக்குத்துக்கு இலக்கான சுவீடன் நாட்டு தொலைக்காட்சி ஊடகவியலாளர் கெய்ரோ வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை அல் ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
போலந்து தொலைக்காட்சி நிறுவனமான ரிவிபி தனது நிருபர்களை பாதுகாப்புக் கருதி மீள அழைத்துக்கொண்டது.
Saturday, 5 February 2011
ஜோர்ஜ் புஷ் கைது செய்யப்படலாம் - ஜெனீவா பயணம் ரத்து!
ஈராக் மக்களைக் கொன்று குவித்த புஷ்ஷும் அந்த கொலைகளுக்கு சவூதியை தளமாக அமைத்துக்கொடுத்த அப்துல்லாஹ்வும்
ஜெனீவா செல்லவிருந்த ஜோர்ஜ் புஷ்ஷை கைது செய்யுமாரு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இப்பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜோர்ஜ் புஷ்ஷிற்குஅழைப்பு விடுத்த யூத அமைப்பு அறிவித்துள்ளது
குவாண்டனாமோ வதைமுகாம்
ஜோர்ஜ் புஷ் ஈராக், ஆப்கானிஸ்தான் மக்களை சித்தரவதை செய்வதற்கு இராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கும் தகவல்கள் வெளிவந்திருப்பதால் புஷ்ஷிற்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சித்தரவதைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு கடந்த வாரம் சுவிஸ் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.
எண்ணெய் வளங்களை கொள்ளையிட ஜோர்ஜ் புஷ் தொடுத்த ஈராக் மீதான யுத்தத்தில் சுமார் 14 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
எகிப்து - இஸ்ரேல் இயற்கை வாயுக் குழாய் தகர்க்கப்பட்டது
எகிப்தில் அல் எரிசா பகுதியில் உள்ள எகிப்தில் இருந்து இஸ்ரேலுக்கான இயற்கை வாயு குழாய், இனம் தெரியாதோரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குழாயில் அங்காங்கே வெடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளதுமாக எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவத்துள்ளது. எகிப்திய இராணுவம் குழாயின் பிரதான இடங்களை அடைத்து தீப்பற்றி எரிதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. தீச்சுவாலை வானில் 20 கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.
1979 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் எகிப்து, இஸ்ரேலின் 40 சதவீத இயற்கை வாயுத் தேவையை நிறைவு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-PressTV
Friday, 4 February 2011
ஹுஸ்னி முபாரக் - இது வெளியேறும் வெள்ளிக் கிழமை
(பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் பொதுமக்களை தாக்குகின்றனர்)
எகிப்தின் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றும் வெள்ளிக்கிழமை உதயமாகி விட்டது.
இன்று ஜும்ஆ தொழுகைக்காக கூடும் பல லட்சம் மக்கள் முபாரக்கின் ஜனாதிபதி மாளிகையை நோக்கி படையெடுக்கவிருக்கின்றனர்.
இதே நேரம் இராணுவம் பொதுமக்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடாத்தாது என்று இராணுவம் அறிவித்திருக்கிறது. எகிப்தில் ஒரு அரசியல் மாற்றம் உருவாவதை இராணுவம் விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பத்து நாட்களை எட்டியிருக்கும் எகிப்தின் போராட்டம் கடந்த புதன் கிழமை வேறு வடிவில் திசை திரும்பியது.
பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் சாதாரண மக்கள் போல் உடையணிந்து பேரணி இடம் பெறும் தஹரீர் சதுக்கத்திற்குள் நுழைந்து பொது மக்களை தாறுமாறாக தாக்கினர். இதில் பத்து பொதுமக்கள் பலியாகி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலை நடாத்தியதன் மூலம் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் முபாரக் அரசு மீண்டுமொரு முறை உலகளாவிய ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளானது.
எகிப்தில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் கைது!
சர்வதேச மன்னிப்புச் சபையின்( Amnesty International )முக்கியஸ்தர்கள் மூவரை எகிப்தின் இராணுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
அடக்கு முறைக்கு எதிரான மக்களின் போராட்டம் எகிப்தில் வலுப்பெற்று வரும் இத்தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களின் செயற்பாட்டிற்கு தடைவிதிக்காமல் நிபந்தனையுமின்றி அவர்களை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வீழ்ந்துக் கொண்டிருக்கும் முபாரக் அரசிடம்வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கிய உறுப்பினரோடு ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch)அமைப்பைபின் பிரதிநிதியான ஸைபுல் இஸ்லாம் காலித் அலீயும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரை தமக்கு தெரியாமல் இருப்பதாகவும் மேற்படி சபை அறிவித்திருக்கிறது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் சலில் ஷெட்டி (Salil Shetty )தமது உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடையூறாகசெயற்படவேண்டாமென்றும் எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Thursday, 3 February 2011
எரிபொருள் தடை ! மனமுடைந்திருக்கிறது இஸ்ரேல்!
அமெரிக்க, இஸ்ரேலின் நேச நாடுகளான அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டங்களினால் தனது நாட்டுக்கு தேவையான எரி சக்தியைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் குறையலாம் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.
”மத்திய கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் நிலை எங்களின் எதிர்கால எரிசக்தி பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒருமுறை எங்களை சிந்திக்க வைத்திருக்கிறது. எரி சக்தி பயன்பாட்டில் மற்றவர்களை தங்கியிராத ஒரு நிலைக்கு நாங்கள் நகர வேண்டும்” இப்படி கூறியிருக்கிறார் இஸ்ரேலிய தேசிய உட்கட்டமைப்பு அமைச்சரான உஸிலந்தோ. ஏஎப்பி செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.
இஸ்ரேல் தனது எரிபொருள் தேவையின் 40 வீதத்தை எகிப்திலிருந்து பெற்று வருகிறது. எகிப்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினால் தடுமாறிப் போயிருக்கும் இஸ்ரேல் தனது நாட்டின் எதிர்காலம் மற்றும் இருப்பு தொடர்பாக கடும் பீதியில் திணறிக்கொண்டிருக்கிறது.
கடந்த டிஸம்பர் மாதம் நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள் எகிப்தோடு பல பில்லியன் டொலர்களுக்கான எரிவாயு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்கான எரிபொருள் ஏற்றுமதிக்கான இந்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு இப்போது அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு மிகவும் துணையான நேசமான நாடாக எகிப்தை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அமெரிக்காவின் நிதி உதவி பெறும் நாடாக எகிப்து திகழ்கிறது.
Subscribe to:
Posts (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...