Monday, 26 November 2012

அல் பஜ்ர் - அஹமத் ஜாபர் காஸாவில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டப்படுகின்றது!


காஸா எட்டு நாள் யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்புகிறது.  இஸ்ரேலிய யுத்தம் அவர்கள் மீது திணித்த உடல் உள காயங்கள் ஒரு போதும் ஆறப்போவதில்லை.

அந்த எட்டு நாள் யுத்தத்தில் காஸா மக்களின் உறவுகள் வீழ்ந்தனர், பச்சிளம் பாலகர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டார்கள். மக்களின் உடைமைகள் இடியோடு அழிந்தன.

என்றாலும் ஒருபோதும் இல்லாத புத்துணர்வு அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமிப்புச் செய்திருக்கின்றது. திருப்பித் தாக்கும் திராணி தம்மிடம் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை அவர்களை இடிபாடுகளிலிருந்து எழ வைத்திருக்கிறது.

திருப்பி அடித்ததின் மூலம் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எட்டே எட்டு நாட்களில் அவர்களால் முடிவுக்கு கொண்டு வர முடிந்திருக்கிறது.

அதுதான் அல் பஜ்ர்!  பெரும் இரைச்சலோடு பறந்து சென்று இஸ்ரேலிய நகரங்களை தொட்டுப்பார்த்த ஏவுகணை. எதிரிகளை கதிகலங்க வைத்து கண்ணாமூச்சி விளையாடிய அல் பஜ்ரை நினைத்து, நித்திரையை தொலைத்த இஸ்ரேலியர்கள்  கால்வாய், மதகுகளில் எல்லாம் கண்ணயர துவங்கினார்கள்.

தரையாலும், கடலாலும், ஆகாயத்தாலும் தாக்கி காஸாவை அழித்து விடுவோம் என்று கர்ஜித்த சிங்கங்கள் அல் பஜ்ரின் முன்னால் நாய்களாய் முடங்கிப் போனார்கள்.

காஸாவிலிருந்து சீறிப்பாய்ந்து சென்று டெல்அவிவ் நகரை பதம் பார்த்த அல் பஜ்ர் ஏவுகணைகள்.  IDF என்ற இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பு பதறிப்போனது.

டெல்அவிவ் நோக்கிப் பறந்து இடியாய் இறங்கிய அல் பஜ்ரின் அதிர்வுகளால் அதி நவீன யுத்த ஆயுத தொழிற்சாலையாய் வர்ணிக்கப்படுகின்ற இஸ்ரேலின் தலைநககரம் ஆடட்ம் கண்டது.

அனைத்து இஸ்ரேலியர்களும் எலிகளைப் போல் ஓடிச்சென்று பதுங்கு குழிகளுக்குள் படுத்துக்கொண்டனர்.

போராட்டத்திற்கும் மரணத்திற்கும் பழகிப்போன காஸா மக்களுக்கு மரணம் என்பது மகா பெரிய ஒரு விஷயமல்ல.  மழையாய் வந்து விழுந்த இஸ்ரேலிய ஏவுகணைகளைக் கண்டு அவர்கள் மிரண்டு, விரண்டு ஓடுவது என்பது அவர்களுக்கு பழக்கமில்லாத ஒன்று.

இடியைக் கூட மடியில் தாங்கும் இரும்பு இதயங்களாக அவர்கள் இன்று மாறியிருக்கின்றார்கள்.

இப்போது , காஸாவில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கு பெற்றோர் அல் பஜர், அஹமத் ஜாபர் ஆகிய பெயர்களை வைத்துள்ளார்கள்.

புதிதாக பிறக்கும் பிள்ளைகளுக்கு அல் பஜ்ர் ஏவுகணையின் பெயரையும், ஹமாஸின் இராணுவ தலைவர் அஹ்மத் ஜாபர் அவர்களது பெயரையும், பல பெற்றோர் தமது பிள்ளைச் செல்வங்களுக்கு சூட்டி மகிழ்கின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் !
காஸாவை  இனிமேல் கருவறுக்க முடியாது... அஹமத் ஜாபரிகளும், அல் பஜ்ரகளும்  அதிகமாகவே இருப்பார்கள்.



2 comments:

  1. பொருத்தமான பாடலை இணைத்திருக்கிறீர்கள். நன்றாகவும் உறசாகப்படுத்துவதாகவும் உள்ளது .

    ReplyDelete
  2. சகோதரர் ஹஸீர், உங்கள் கருத்து என்னை உற்சாகப்படுத்துகின்றது.. நன்றி!
    ஜஸாக்கல்லாஹு கைர்!

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...