Sunday, 11 November 2012

காணொளி - அட்டகாசம் புரியும் அதிபர்கள் !



கற்பித்தல் சேவை காலத்தால் அழியாத கௌரவமான தொழிலாகும்.

ஆசிரியர்கள் என்போர் அனைவராலும் போற்றப்படுபவர்கள்.  காரணம் அவர்கள் இவ்வுலகில் அனைத்து அறிஞர்களையும் உருவாக்குபவர்கள்.

வர்த்தகமயமான இன்றைய சூழ்நிலை ஆசிரியர்களை மோசமான நிலைக்கு தள்ளியிருப்பதை அண்மையில் வெளியான ஊழல் சம்பந்தமான ஒரு கணிப்பீடு தெளிவு படுத்தியது.

இலஞ்சம் வாங்குவதில் இலங்கையில் பொலீஸ் உத்தியோகத்தர்களை விட ஒரு படி மேல் பாடசாலை நிர்வாகம் அதாவது அதிபர்களும், ஆசிரியர்களும் இருப்பதாக அதிர்ச்சித் தரும் தகவல் ஒன்றை“ ட்ரான்ஸ்பெரஸி இன்டர் நெஷனல்” வெளியிட்டது.

எதிர்கால சமுகத்தை செதுக்கின்ற சிற்பிகளாக கௌரவமான சமூகமாக கருதப்பட்ட இந்த ஆசிரியர் வர்க்கம் எதிர்கால சமூகத்தை சிதைக்கின்ற சின்னத்தனம் கொண்டர்களாக மாறி வருவதை இந்த காணொளி எடுத்துக் காட்டுகின்றது.

பாடசாலை நிர்வாகத்தை தனது இஷ்டம் நடாத்தும் சில அதிபர்கள் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக  பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற ஓர் அநாகரீக அவதாரமாக மாற்றம் எடுக்கின்றார்கள்.

இந்த காணொளி அத்தகைய ஒரு மோசமான அதிபரைப் பற்றி பேசுகிறது.


1 comment:

  1. Dear Editor,

    you have posted a WRONG CLIP here... please add the right clip to suit the subject ..காணொளி - அட்டகாசம் புரியும் அதிபர்கள் !
    pl......

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...