1500க்கும் மேற்பட் சங்பரிவார குண்டர்கள் மோடி அரசின் முழு ஒத்துழைப்போடு இப்பகுதியைச் சூறையாடினர். இச்சம்பவத்தை உச்சநீதின்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தது. ஆனந்த் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து ஏப்.9, 2012 அன்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டோரில் 23 பேர் குற்றவாளிகள் என்று கூறியது. 23 பேரை சாட்சியமில்லாததால் விடுதலை செய்தது. ஏப்.12, 2012ல் சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என சந்தேகமற உறுதி செய்யப்பட்ட 23 பேரில், 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளித்துள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு வலிமையாக வாதிட்டபோது, நீதிபதி பூணம் சிங் அதை ஏற்கவில்லை. மரணதண்டனை மிக அபூர்வ வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு இதற்கு முந்தைய குற்ற வரலாறுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கு, ரூ.5,800 அபராதமும், கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட 5 பேருக்கு ரூ.3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க சிறப்பு புலனாய்வுக்குழு மேல்முறையீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. கொடிய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் போதுமானதல்ல என்ற ஆதங்கம் ஒருபுறம் என்றாலும், அவர்கள் பெயரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது லேசான ஆறுதல்தான். இவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் இத்தகைய கொடிய சம்பவங்கள் தடுக்கப்படும் என்பது நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி தீர்ப்பை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 1, 2002ல் நடந்த சம்பவத்துக்கு, 2009 இறுதியில்தான் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. எதிரிகள் 47 பேரில் ஒருவர் இறந்துவிட 46 பேர் மீது விசாரணை தொடர்ந்தது. 2011ம் ஆண்டு இவ்வழக்கு முடியும் தருவாயில் திடீரென நீதிபதி பதவி விலகினார்..!
இப்போது 1252 பக்கத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் இவ்வழக்குச் செய்தியை முக்கியத்துவத்தோடு வெளியிட்டன. தினமணி உள்ளிட்ட சில தமிழ் ஏடுகள் இவ்வழக்கை குட்டிச் செய்தியாக்கின.
No comments:
Post a Comment