வீடியோ - அமெரிக்க பயங்கரவாதம்.

அமெரிக்கா தனது பயங்கரவாத ஆக்கிரமிப்பு சார்ந்த இராணுவக் கட்டமைப்பை மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைநிறுத்தி வருகின்றது.

மத்திய கிழக்கில் புதைந்துள்ள எண்ணெய் வளத்தை கொள்ளையிடும் நோக்கத்தில் உலகில் மிக சக்திவாய்ந்த எண்ணெய் நிறுவன முதலாளிகளான
புஷ் வகையறாக்கள் இந்த எண்ணெய்க்கான போரை அப்பாவி மக்கள் மீது திணித்து மனித உயிர்களை காவு கொண்டு வருகின்றனர்.

ஜனநாயகத்தை நிலை நிறுத்த தாம் உதவி புரிவதாகக் கூறி தனக்கு தேவையான நாடுகளில் போராட்டங்களை ஊக்குவிக்கும் அமெரிக்கா, அந்த நாட்டு  மக்களையும், ஏனைய வெளிநாட்டுக் கூலிப்படைகளையும் ஆயுதமயமாக்கி அந்தந்த நாடுகளில் சிவில் யுத்தங்களை தோற்றுவித்து வருகின்றது. ஆட்சிமாற்றம் என்ற போர்வையில் தனது தாளத்திற்கு ஆட்டம் போடுகின்ற அரபு மன்னர்களையொத்த தலைவர்களை அந்தந்த நாட்டில் தலைவர்களாக ஆக்குவதன் மூலம் தனது சுரண்டல் அரசியலை அமெரிக்கா மிகவும் கச்சிதமாக செய்து வருகின்றது.

இந்த சிறிய விவரணம் அமெரிக்காவின் இந்த பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகிறது.

Comments

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !