பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரண்டு வரும் பௌத்த பல சேனா என்ற அமைப்பு திட்டமிட்டு முஸ்லிம்களை சீண்டி வருவதை கடந்த பதிவுகளில் தந்திருந்தேன்.
நேற்றிரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான பத்து ஆடுகள் களவாடப்பட்டு அவற்றில் மூன்று ஆடுகளின் கழுத்தை வெட்டி கொன்று போடப்பட்டிருக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பௌத்த பல சேனாஅமைப்பின் முக்கிய நபர்களை பதுளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செயதிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து நடாத்திய முக்கிய நபர்கள் என்று தெரிய வருகின்றது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரங்க என்ற பெயருடைய பதுளை மீன் வியாபாரியும், தினேஷ் என்ற இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரும், கோமஸ் என்ற முச்சக்கர வண்டி ஓட்டுனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அறிய வருகிறது.
இவர்களின் கைதை எதிர்த்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் பௌத்த பல சேனா பதுளை கிளையின் முன்னணி செயற்பாட்டாளருமான தயாசிரியினதும், மற்றும் இரண்டு பௌத்த பிக்குகளினதும் தலைமயில் பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெறுவதாக பதுளையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்பு ஜீவகாருண்யம் தொடர்பாக பேசுகின்ற அதை வைத்து ஏனைய மதங்களை சாடுகின்ற பௌத்த இனவாத அமைப்புகள், இப்படி ஆடுகளைக் கடத்திச் சென்று கொன்று போடுவதை எப்படி அங்கீகரிக்கின்றனர்?
No comments:
Post a Comment