Thursday, 19 July 2012

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை



இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் முடிவெடுத்துள்ளது. முன்னதாக இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் பங்கீடு தொடர்பில் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தன.


இதில் இழுபறி நிலையே தொடர்ந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். எனினும் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியில் தமது கட்சி தொடர்ந்து பங்கெடுக்க போவதாகவும், தேர்தலின் போதும் அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு அளித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், இது தொடர்பில் தெரிவிக்கையில், முஸ்லீம் காங்கிரஸ் தலைமை எடுத்திருக்கும் முடிவை நாம் வரவேற்கிறோம். இறுதியாக ஏமாற்றப்படாது இப்போதே புத்திசாலித்தனமான முடிவை அவர்கள் எடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட தீர்மானித்த முஸ்லிம் காங்கிரஸ் தனித்து செல்லும் முடிவை எடுப்பதற்கு முன்னர் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...