இலங்கை - வடக்கில் ஒவ்வொரு 5 பொது மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு படைச் சிப்பாய்!இலங்கையின் வடக்கில் ஒவ்வொரு ஐந்து பொது மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு படை வீரர் காணப்படுவதாக இந்தியாவின் சஞ்சிகை ஒன்று நடத்திய கணிப்பில் தெரியவந்துள்ளது. 

வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இகொனமிக் என்ட் பொலிடிகள் வீக்லி (Economic and Political Weekly) என்ற சஞ்சிகை இந்த கணிப்பீட்டை நடத்தியுள்ளது. 

குறித்த சஞ்சிகையின் விசேட செய்தியாளர் பாதுகாப்புச் செயலாளர், அரசாங்க மற்றும் இராணுவ இணையங்களில் இருந்து பெற்றுக் கொண்ட தகவலின்படி வடக்கில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடற்படை மற்றும் விமானப்படையை அதில் சேர்த்தால் மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரம் படையினர் வடக்கில் நிலை கொண்டுள்ளதாக அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. 

அரசாங்கத்தின் 2011 குடிசன மதிப்பீட்டின்படி வடக்கின் சனத்தொகை 9 லட்சத்து 97 ஆயிரத்து 754 (9,97,754) ஆகும். 

அதன்படி வடக்கில் ஒவ்வொரு 5.04 பொது மக்களுக்கும் ஒரு பாதுகாப்புப் படை சிப்பாயும் ஒவ்வொரு ஆயிரம் பொது மக்களுக்கும் 194.8 பாதுகாப்பு படை சிப்பாயும் நிலை கொண்டுள்ளதாக இந்தியாவின் இகொனமிக் என்ட் பொலிடிகள் வீக்லி (Economic and Political Weekly) என்ற சஞ்சிகையின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(அத தெரண - தமிழ்) 

Comments

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !