இலங்கை வந்திருந்த போது தன்னை குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார்.
இவர் 2000ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவை சந்திப்பதற்காக இலங்கை வந்திருந்தார்.
இதன் போதே தன்னை கொலை செய்யவதற்கு சிங்கள குழு ஒன்று திட்டமிடப்பட்டிருந்ததாக எரிக் சொல்கெய்ம் 12 வருடங்களின் பின்னர் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது இவ்விடயம் தொடர்பாக எரிக் சொல்கெய்ம் இன்று தெரிவித்துள்ளார்.
தன்னை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததை இலங்கை பொலிஸாரும் உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
அந்த காலப்பகுதியில் இலங்கை பெரும் பாதுகாப்பு பிரச்சினைகளில் இருந்தது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வது பேராபத்தாகவே இருந்தது.
இருந்த போதும் அந்நேரத்திலும் நான் பாதுகாப்பு படை இல்லாமலேயே பயணித்தேன். ஆனால் இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்கள் பலத்த பாதுகாப்புடனேயே இருந்தனர்.
தமிமீழ விடுதலைப் புலிகள் அந்நேரத்தில் இராணுவ பலம் மிக்கவர்களாக இருந்தனர். இதனால் கொழும்பில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அங்கிருந்து வரும் செய்திகள் உலகிற்கு உணர்த்தின.
2000ஆம் ஆண்டு மோ மாதம் 21-24 காலப்பகுதியில் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மீது இனந்தெரியாத நபர்கள் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர்.
இத்தாக்குதல் நோர்வேக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கும் பொருட்டே நடாத்தப்பட்டதாக நம்பக் கூடியதாக அமைந்தது.
2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையில் நோர்வேயின் பங்கு கணிசமான அளவு இருந்தது.
இக்காலப்பகுதியில் எரிக் சொல்கேம் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றினார்.
2005ஆம் ஆண்டு இவர் தனது பதவியிலிருந்து விலகி சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார்.
எனினும் 2009ஆம் ஆண்டு மீண்டும் யுத்தம் என இலங்கை அரசு திடீர் முடிவிற்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)

No comments:
Post a Comment