Tuesday, 17 July 2012

பாதாள உலக பௌத்த மதகுரு?


இலங்கையில் பாதாள உலக குழுக்களோடு சேர்ந்து பல கொள்ளைகளுக்கும், சட்டவிரோத செயல்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேசக்ப்படும் ஒரு பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்துருவ பண்டாரிகொட ஸ்ரீ சுனந்தாராமய விகாரையின் பிரதம பிக்குவான  மீகெட்டுவத்தே சுமித்த ஹிமி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

இந்த பௌத்த பிக்குவிடமிருந்து போதை மாத்திரைகளும், பொலீஸ் சீருடைகள் இரண்டும் கைப்பற்றப்பற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மீகெட்டுவத்தே சுமித்த ஹிமியின் உடலின் பல பாகங்களிலும் கேடிகளைப் போன்று பச்சை குத்தியிருப்பதாகவும் சிறைச் சாலை அதிகாரிகளின் தகவல்களிலிருந்து  தெரிய வந்திருக்கிறது. சந்தேக நபர்களை சிறையிலடைப்பதற்கு முன்னர் மேற்கொள்ளும் உடல் அடையாள பரிசோதனைகளின்  போது இதுபற்றி தெரிய வ்ந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

அண்மைக்காலமாக பல சட்டவிரோதச் செயல்களுக்கு பௌத்த பிக்குகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததை ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாய் இருக்கின்றது.

அஹிம்சையை போதிக்கும் பௌத்த மதத்தின் காப்பாளர்களாக இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களால் போற்றப்படுகின்ற இவர்கள் சிலரிடம் ஹிம்சையும், இனவாதமுமே குடிகொண்டிருக்கின்றன.

இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகளின் நேரடி செயற்பாடு தீவிரமடைந்ததன் பின்னர் மாற்று மதங்களுக்கு எதிரான அவர்களின் சிந்தனை கூர்மையடைந்து வருகின்றது.

 இந்த நிலையில் சட்டவிரோத சக்திகளோடு இணைந்து செயற்படும் பிக்குகளின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

ஒரு புறம் பிக்குகளின் இனவாதம் மறு புறம் பிக்குகளின் சட்டவிரோத குற்றச்செயல்கள்.

இரண்டும் இணைந்தால் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...