Monday, 23 May 2011

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்! இக்வான்களின் 'புதிய இஸ்லாமிய' அரசியல்(?)



எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது. 

இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது.
‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  துற்றியும் வந்தனர்.
இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சிப் பயணத்தை அரம்பித்திருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

3 comments:

  1. எகிப்தில் இக்வான்களின் முடிவு சரியானது.
    "இஸ்லாம்தான் தீர்வு" என்று எதன் அடிப்படையில் அவர்கள் சொல்லி வந்தார்கள் என்று உங்களைக் கேட்க விரும்புகிறோம்.
    "இஸ்லாம்தான் தீர்வு" என்று சொல்ல அவர்கள் இஸ்லாத்தை சொல்லவில்லையே.
    அவர்கள் சொல்லிவந்த இஸ்லாம் சரியான தீர்வு இல்லை என்று இப்பொழுதாவது புரிந்துக் கொண்டார்களே.
    உண்மையை உணர்ந்த அவர்களை மனமார வாழ்த்துவோம்............

    ReplyDelete
  2. anyone would like to learn Arabic language free and download free Arabic learning books please visit al3arabya.blogspot.com

    ReplyDelete
  3. Dear Bro...
    To public they might have gave this solution. We can't see their heart. Allah is the All-Knower.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...