ஒசாமா இறந்தது 2006-06-26 அன்று செச்னிய சீ.ஐ.ஏ உளவாளி தகவல்!


ஒசாமாவை அபோத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொன்று உடலத்தை கடலில் எரிந்து விட்டதாக அமெரிக்க கூறியிருக்கும் நிலையில் செச்னிய சீஐஏ உளவாளியான பெர்கன் அஷர் Berkan Ashar  ரஷ்ய தொலைக்காட்சியான Channel One Russia விற்கு ஒசாமா 2006 ம் ஆண்டு இறந்ததாகவும் அவரது உடலம் பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.ஒசாமா சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் செச்னியாவிற்கு வந்ததாகவும் அந்த நேரம் அவரை தான் சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய தொலைக்காட்சி ஊடகவியலாளரான என்டன் வெர்னிட்ஸ்கி Anton Vernitski என்பவருக்கு பெர்கன் அஷர் அளித்த நேர்முகம் ஒன்றில் இத்தகவல் வெளிவந்திருக்கிறது.


1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் செச்னியாவில் இருந்தபோது ஒசாமாவை முதன் முதல் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.
''குரஸ்னி நகரிலுள்ள ஒரு இரு மாடிக்கட்டிடத்தில் நாங்கள் சந்தித்தோம். அதில் முதலாம் மாடியில் ஜோர்ஜியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த நாட்டின் ஜனாதிபதி கம்சாஜுரியாவின் Gamsajuria குடும்பம் இருந்தது. நான் ஓசாமா இருந்த கீழ்மாடியில் அவரைச் சந்தித்தேன்" 
என்று கூறியிருக்கிறார் பெர்கன் அஷர் .
பிரீடம் ரேடியோ  Freedom Radio என்ற ஊடக நிறுவனத்தில் அந்நேரம் தான் கடமையாற்றியதாகவும், அமெரிக்க சீஐஏ நிறுவனம் தனக்கு அபு பக்கர் என்ற பெயரை அப்போது சூட்டியிருந்ததாகவும் பெர்கன் அஷர் தெரிவித்திருக்கிறார்.

ஒசாமா பாகிஸ்தானில் இருந்ததாக அமெரிக்கா சொல்வதைப் பற்றி வினவப்பட்டபோது, முழு உலகும் அதை நம்பினாலும் தான் ஒருபோதும் அதனை நம்பப்போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்

ஒசாமாவின் பாதுகாப்புக்காக இருந்த செச்னிய போராளிகளை தனக்கு நன்கு தெரியுமென்றும், சமீ, ஐயுப், மஜ்முத் ஆகிய இவர்கள் ஒசாமாவோடு கடைசி வரை இருந்தார்கள் என்றும் ஒசாமா நோயுற்று மெலிந்து இருந்ததாகவும், அவர்கள் மூவருமே ஒசாமா மரணமான பின்னர் அவரை அடக்கம் செய்ததாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

Comments

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !