மேலே நீங்கள் காண்பது அமெரிக்கா வெளியிட்ட போலியான படம்
இது ஒசாமாவின் டிஷ் எண்டனா பொறுத்தப்பட்ட வீடுஇவை உண்மையான படங்கள்
டிஷ் எண்டனா எங்கே போனது?
ஒசாமாவின் வீட்டின் படம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட படங்கள் கணினியில் மாற்றி வடிவமைக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.
உலகின் பலம் பொருந்திய ஒரு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக பெயர் சூட்டப்பட்டதே ஒசாமாவின் அல்காயிதா அமைப்பு.
அந்த அமைப்பின் தலைவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் இல்லாத வெறுமையில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.
பின்னர் அமெரிக்கா அவரது வீடு என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்தில் ஒரு டிஷ் எண்டெனா பொருத்தப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டது.
ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இந்த டிஷ் எண்டனா இல்லாமல் இருந்தது. பிறகு வந்த படங்களில் டிஷ் எண்டனாசேர்க்கப்பட்டிருக்கிறது.
நவீன தகவல் தொழிற் நுட்பத்துடனும், மனித குலத்தை நொடியில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடிய அதி நவீன ஆயுதங்களுடனும் ஆதிக்கச் சக்தியாக எழுந்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுகின்ற ஒரு பயங்கவாதியிடம் (?) சாதாரண மக்களிடம் இருக்கின்ற தொடர்பு சாதன வசதிகள் கூட இல்லாமல் உலகோடு தொடர்புகள் அறுந்து தனிமைப்பட்டு இருந்தது உலகிற்கே ஓர் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது.
உலக தொடர்புகள் அறுந்த நிலையில் இருந்த அபோத்தாபாத் வீடு ஒசாமா பற்றியும் அல்கைதா பற்றியும் அமெரிக்கா இதுவரை உலகிற்கு சொல்லி வந்த பிம்பம் தலை கீழாக மாறியிருந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர். இதை உணர்ந்த அமெரிக்கா அவசர அவசரமாக கணினியின் மூலம் ஒரு டிஷ் எண்டனாவை பொருத்தியிருக்கிறது.
அல்காயிதா என்ற அமைப்பு அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அமைப்பு என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அல்காயிதா தலைவரை அழித்து விட்டதாக உலகிற்கு கூறி, தனது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய செயல் வடிவத்தை உருவாக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவதாக எழும் சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை.
வெகு விரைவில் வெள்ளை மாளிகை அதற்கான ஒரு புதிய தலைவரை நியமித்து செயல் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும்.
எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தையும், தனது கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற போலி வாதங்களை முன்வைத்து எதிரிகளிடம் உதவிபெற்றவர்களின் கதைகள் புஜ்யமாய் முடிந்திருக்கின்றன.
புலியாய் பாய்ந்து தாக்குவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த சதாம் எலியாய் பொந்திலிருந்து இழுத்து வரப்பட வில்லையா?
ஒன்று மட்டும் தெளிவு
தீயவர்களிடம் நட்பு வைத்து அவர்களின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட அத்தனை பேரும் முகவரியில்லாமல் முடங்கிப்போயிருக்கின்றார்கள்.
சதாமும் ஒசாமாவும் சிறந்த சான்றுகள்!
No comments:
Post a Comment