Showing posts with label ALQAIDA. Show all posts
Showing posts with label ALQAIDA. Show all posts

Sunday, 22 May 2011

ஒசாமாவின் வீடு? வெள்ளை மாளிகையின் போலியான வடிவமைப்பு


மேலே நீங்கள் காண்பது அமெரிக்கா வெளியிட்ட போலியான படம்
                      இது ஒசாமாவின் டிஷ் எண்டனா பொறுத்தப்பட்ட வீடு


                                              இவை உண்மையான படங்கள்



                                           
                                           டிஷ் எண்டனா எங்கே போனது?

ஒசாமாவின் வீட்டின் படம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட படங்கள் கணினியில் மாற்றி வடிவமைக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.

உலகின் பலம் பொருந்திய ஒரு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக பெயர் சூட்டப்பட்டதே ஒசாமாவின் அல்காயிதா அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் இல்லாத வெறுமையில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.

பின்னர் அமெரிக்கா அவரது வீடு என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்தில் ஒரு டிஷ் எண்டெனா பொருத்தப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டது.

ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இந்த டிஷ் எண்டனா இல்லாமல் இருந்தது. பிறகு வந்த படங்களில் டிஷ் எண்டனாசேர்க்கப்பட்டிருக்கிறது.

நவீன தகவல் தொழிற் நுட்பத்துடனும், மனித குலத்தை நொடியில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடிய அதி நவீன ஆயுதங்களுடனும் ஆதிக்கச் சக்தியாக எழுந்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுகின்ற ஒரு பயங்கவாதியிடம் (?) சாதாரண மக்களிடம் இருக்கின்ற தொடர்பு சாதன வசதிகள் கூட இல்லாமல் உலகோடு தொடர்புகள் அறுந்து தனிமைப்பட்டு இருந்தது உலகிற்கே ஓர் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது.

உலக தொடர்புகள் அறுந்த நிலையில் இருந்த அபோத்தாபாத் வீடு ஒசாமா பற்றியும் அல்கைதா பற்றியும் அமெரிக்கா இதுவரை உலகிற்கு சொல்லி வந்த பிம்பம் தலை கீழாக மாறியிருந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதை உணர்ந்த அமெரிக்கா அவசர அவசரமாக கணினியின் மூலம் ஒரு டிஷ் எண்டனாவை பொருத்தியிருக்கிறது.

அல்காயிதா என்ற அமைப்பு அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அமைப்பு என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அல்காயிதா தலைவரை அழித்து விட்டதாக உலகிற்கு கூறி, தனது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய செயல் வடிவத்தை உருவாக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவதாக எழும் சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை.

வெகு விரைவில் வெள்ளை மாளிகை அதற்கான ஒரு புதிய தலைவரை நியமித்து செயல் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும்.

எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தையும், தனது கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற போலி வாதங்களை முன்வைத்து எதிரிகளிடம் உதவிபெற்றவர்களின் கதைகள் புஜ்யமாய் முடிந்திருக்கின்றன.

புலியாய் பாய்ந்து தாக்குவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த சதாம் எலியாய் பொந்திலிருந்து இழுத்து வரப்பட வில்லையா?

ஒன்று மட்டும் தெளிவு

தீயவர்களிடம் நட்பு வைத்து அவர்களின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட அத்தனை பேரும் முகவரியில்லாமல் முடங்கிப்போயிருக்கின்றார்கள்.

சதாமும் ஒசாமாவும் சிறந்த சான்றுகள்!

Sunday, 16 August 2009

ஜுன்துல்லாஹ் ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!


ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!

பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?

சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.

2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.

ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.

பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...