Tuesday, 7 June 2011

உலகமயமாக்கலும் எதிர்ப்பும்: நோம் சொம்ஸ்கியுடனான உரையாடல்




INTERVIEW: TRANSLATION BY GIFFRY HASSAN


உலகில் பலராலும் அறியப்பட்ட சிந்தனையாளரான நோம் சொம்ஸ்கி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்க தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மொழியியற்துறைப் பேராசிரியராகப் பணிபுரிபவர். அமெரிக்காவின் ஜனநாயக விரோதப் போக்குகளை மக்கள் விரோதப் போக்குகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருபவர். இதனால் பல அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருபவர். பல்துறைசார்ந்த அறிவுஜீவியான இவர் அண்மையில் சீனாவுக்குச் சென்றபோது ளுழரவாநசn ஆநவசழிழடவையn னுயடைல  என்ற சீனப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை பிரசுரித்திருந்தது. அந்த நேர்காணலை நமது வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம். இப்பேட்டியில் அவர் சர்வதேச அரசியலில் சீனா பெற்று வரும் முக்கியத்துவம், அமெரிக்கா மற்றும் உலகமயமாக்கல் குறித்து தெளிவுபடுத்துகிறார்.
தமிழில்: ஜிஃப்றி ஹாஸன்
———————————————————————————————————————-
SMD– அதிகமான சீனர்கள் உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்டுவிட்டனர். கடந்த மூன்று தசாப்தங்களில், குறிப்பாக உலக வர்த்தக ஸ்தாபனத்தில் (றுவுழு) சீனா இணைந்ததையடுத்து அநேகமான சீனர்கள் அதிகம் நன்மையடைந்தார்கள். ஆனால், நீங்களோ ஓர் மங்கிய ஒளியில் உலகமயமாக்கலைப் பார்ப்பதாகத் தோன்றுகின்றதே.

சொம்ஸ்கி – சீனாவின் பொருளாதார அடைவென்பது உலகமயமாக்கலோடு குறைந்தளவிலேயே தொடர்பு கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி வர்த்தகத்துடனேயே தொடர்புபட்டுள்ளது. சீனா ஒரு ஏற்றுமதி மைய நாடாக படிப்படியாக மாறி வருகிறது. நான் உட்பட எவரும் இந்த ஏற்றுமதிகளுக்கு எதிரானவர்களல்ல் ஆனால் இதுவல்ல உலகமயமாக்கல், உண்மையில் சீனா வட-கிழக்காசிய உற்பத்தி முறையில் ஒரு தொழிற்சாலையாக மாறியுள்ளது. முழுப்பிராந்தியத்தையும் நீங்கள் எடுத்து நோக்கினால், நீங்கள் ஒரு பாரிய சக்தியைக் காண்பீர்கள.; சீனாவின் ஏற்றுமதி அளவு அளவிட முடியாததாகவுள்ளது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விடயமொன்றும் இங்குள்ளது. சீனாவுடைய ஏற்றுமதி பாரியளவில் ஜப்பான், கொரியா, அமெரிக்கா  போன்ற நாடுகளின் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. இந்நாடுகள் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்குகின்றன. சீனா இத்தொழில்நுட்ப உற்பத்தியில் இங்கு வெறும் ஒன்றியமாகத்தான் செயற்படுகின்றது. இவைகளைப் பயன்படுத்தி அது மேற்கொள்ளும் இறுதி உற்பத்தியில் ‘அயனந in உhiயெ’ என்ற முத்திரையைக் குத்தி விடுகிறது அவ்வளவுதான்!
அறிவுபூர்வமான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சீனா வேகமாக அபிவிருத்தி அடைகின்றது. மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்ற போதிலும் சூழலியல் அழிவு போன்ற இழப்புக்கள் உயர்வாக உள்ளன. இவை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றன. பொருளியலாளர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால் இறுதியில் இந்த இழப்புகளுக்காக சிலர் விலை கொடுக்க வேண்டியுள்ளது. அது உங்களுடைய பிள்ளையாக அல்லது பேரப்பிள்ளையாக இருக்கலாம். இது உலகமயமாக்கலுடனோ அல்லது றுவுழு உடனோ  எந்த விதத்திலும் தொடர்புபட்டதல்ல.

Monday, 6 June 2011

போர்க் குற்ற அறிக்கை - உலமா சபையும் இஸ்ரேலும் ஒரே நிலைப்பாட்டில்?


               இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் (Mark Sofer )

ஜூன் மாதம் முதலாம் திகதி இந்தியாவிலிருந்து செயற்படும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் Mark Sofer  கொழும்பு பிளஸ் பார்க் ஸ்டீட் ஹோட்டலில் plush Park Street Hotel நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.நா நிபுணர் குழுவினால் (தருஸ்மான் அறிக்கை)Darusman report முன்வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரசு யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கையை மனித உரிமை என்ற போர்வையில் வெறும் அரசியல் சுய லாபங்களுக்காக மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஒன்று என்று சாடியுள்ளார்.


இதேமாதிரியான ஒரு அறிக்கையை இலங்கையில் உலமாக்களின் சபையான ஜம்இய்யதுல் உலமாவும் அண்மையில் வெளியிட்டது. 


இந்த ஐநாவின் அறிக்கை தொடர்பாக இஸ்ரேலின் கருத்தும், ஜம்இய்யதுல் உலமா சபையின் கருத்தும் ஒரு மையப் புள்ளியில் சந்தித்திருக்கின்றன.


இஸ்ரேலின் இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன் உலமா சபையின் முக்கிய அங்கத்தவரான பிரபலமான மார்க்கமேதையும், நவீன சிந்தனையாளர் என்று சிலரால் போற்றப்படுகின்ற அகார்முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உலமா சபையின் அறிக்கை தொடர்பாக தெளிவு பெற முயற்சித்தேன். 


அவர் பதிலளிக்கவில்லை. எனது தொலைபேசி இலக்கத்தை இனம் கண்டுகொண்ட அவர் பதிலளிக்க வில்லை. பின்னர் மேல்மாகாண சபை அங்கத்தவர் சகோதரர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் தொலைபேசியில் கதைத்த போது அவரின் இலக்கம் அகார் முஹம்மதின் தொலைபேசியில் இல்லாமல் இருந்ததன் காரணமாக அவர் பதிலளித்தார்.


நான் அறிஞர் அகார் முஹம்மதிடம் 2009 ம் ஆண்டு இஸ்ரேல் காஸா மீது தொடுத்த கொடிய யுத்தத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறி யுத்தக் குற்றம் புரிந்திருப்பதாக இதேமாதிரியிலான ஒரு அறிக்கையை கோல்ட் ஸ்டோன் அறிக்கை  Goldstone Report  என்ற பெயரில் கொண்டு வந்ததை ஞாபகப்படுத்தி அது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டேன்.

Sunday, 5 June 2011

அமெரிக்காவும் பாகிஸ்தானும் உருவாக்கிய அடுத்த பலிகடா இலியாஸ் காஷ்மீரி!


பாகிஸதானும், அமெரிக்காவும் தனது அரசியல் தேவைக்காக உருவாக்கிய அடுத்த பலிகடாவான இலியாஸ் காஷ்மீரி கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிஙது.

ஆம் ! இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க உளவு விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

அமெரிக்காவின் கைக்கூலியும் இஸ்லாமிய ஜிஹாதின் (?) முன்னோடியுமான பாகிஸ்தான் வழமைப் போல தனக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது என்று கையை விரித்திருக்கிறது.

மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவரும், பாகிஸ்தானின் பயங்கரவாத முக்கியத் தலைவருமான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானின் பிராந்திய அரசியலுக்காக ஜிஹாதிய பாலுாட்டி வளர்க்கப்பட்டவர்.

Friday, 3 June 2011

பின் லாடன் – பிரபாகரன் : ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல்

                                                                                              யமுனா ராஜேந்திரன்-



விநோதமாக இவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஓசாமா பின்லேடனும், பிரபாகரனும் ஒன்றுதான் என்கிறார் ரோபர்ட் பிளாக். உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாதிகள் பின்லாடனும் பிரபாகனும் என இலங்கை மண்ணில் வைத்து அதிகாரபூர்வமாகப் பேசியிருக்கிறார் ரோபர்ட் பிளேக். ஆமாம், ஆமாம் ஒன்றுதான் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது எனும் அளவி மௌலானா பின் லேடனின் யுத்தம் புனித யுத்தம் என்கிறார். பிரபாகரன் வெறும் பயங்கரவாதி என்கிறார்.
இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அபத்தம் நமக்குப் புரிகிற அதே பொழுதில், இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல் ஒரு ஒற்றுமையைக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் மாறுபாடுகள், கருத்தியல், இலக்குகள் என்பதனைத் தாண்டிய வகையில் நிச்சயமாகவே சே குவேரா-பின் லாடன்- பிரபாகரன் போன்றோரின் ‘படுகொலைகள் நிகழ்ந்த விதம்’ ஒப்பீட்டுக்கு உகந்ததும் ஒற்றுமை கொண்டதும்தான் என்பதை நாம் திட்டவட்டமாக நிறுவ முடியும்.

Wednesday, 25 May 2011

ஒசாமா - அபோதாபாத் வீடு, சீ.ஐ.ஏ., ஐ.எஸ்ஐ. யின் நண்பனான தாவுத் இப்றாஹீம் நிர்மானித்தது!

தாவுத் இப்றாஹிம்

ஒசாமா பதுங்கியிருந்ததாக அமெரிக்கா கூறிவரும் பாகிஸ்தான் அபோதாபாத் நகரத்தில் அமைந்துள்ள வீடு, அமெரிக்க இராணுவ தொழில் நுட்பவல்லுனர்களினால் இராணுவ கட்டட இரகசியங்களை உள்ளடக்கியதாக மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு , மும்பாய் பாதாள உலக தலைவனான தாவுத் இப்றாஹிமின் Safari constructions என்ற நிறுவனத்தினால் கட்டப்பட்டதாக அறிய வருகிறது.




ஆபோதாபாத் நகரில் உள்ள இராணுவ அதிகாரிகளின் அத்தனை வீடுகளும் அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களினால் வடிவமைக்கப்பட்டவையென்றும் , இரகசிய பதுங்கு குழிகளும், குண்டு துளைக்காத ஜன்னல்களும், குண்டு தாக்குதல்களுக்குத் தாக்குப்பிடிக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.


இந்தியாவிற்கு மிகவும் வேண்டப்படும் நபரான தாவுத் இப்றாஹீம் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் உதவியுடன் சீஐஏ வோடு மிகவும் நெருக்கமான உறவு வைத்திருப்பவராவார்.  


இராணுவத்தினருக்கான வீடுகளை அமைப்பதில் ஈடுபட்ட Safari constructions நிறுவனத்தின் உரிமையாளர்கள் தாவுத் இப்றாஹீமும் அவரது சகாவான சோட்டா ஷகீலுமாகும்.


தாவுத் இப்றாஹிமின் கட்டட நிறுவனமான Safari constructions பாகிஸ்தானிலும், மத்திய கிழக்கிலும் இராணுவ ரீதியிலான கட்டட தொழிற் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக பெயர்பெற்றிருக்கிறது.

Monday, 23 May 2011

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்! இக்வான்களின் 'புதிய இஸ்லாமிய' அரசியல்(?)



எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது. 

இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது.
‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  துற்றியும் வந்தனர்.
இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சிப் பயணத்தை அரம்பித்திருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

Sunday, 22 May 2011

ஒசாமாவின் வீடு? வெள்ளை மாளிகையின் போலியான வடிவமைப்பு


மேலே நீங்கள் காண்பது அமெரிக்கா வெளியிட்ட போலியான படம்
                      இது ஒசாமாவின் டிஷ் எண்டனா பொறுத்தப்பட்ட வீடு


                                              இவை உண்மையான படங்கள்



                                           
                                           டிஷ் எண்டனா எங்கே போனது?

ஒசாமாவின் வீட்டின் படம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட படங்கள் கணினியில் மாற்றி வடிவமைக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.

உலகின் பலம் பொருந்திய ஒரு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக பெயர் சூட்டப்பட்டதே ஒசாமாவின் அல்காயிதா அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் இல்லாத வெறுமையில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.

பின்னர் அமெரிக்கா அவரது வீடு என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்தில் ஒரு டிஷ் எண்டெனா பொருத்தப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டது.

ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இந்த டிஷ் எண்டனா இல்லாமல் இருந்தது. பிறகு வந்த படங்களில் டிஷ் எண்டனாசேர்க்கப்பட்டிருக்கிறது.

நவீன தகவல் தொழிற் நுட்பத்துடனும், மனித குலத்தை நொடியில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடிய அதி நவீன ஆயுதங்களுடனும் ஆதிக்கச் சக்தியாக எழுந்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுகின்ற ஒரு பயங்கவாதியிடம் (?) சாதாரண மக்களிடம் இருக்கின்ற தொடர்பு சாதன வசதிகள் கூட இல்லாமல் உலகோடு தொடர்புகள் அறுந்து தனிமைப்பட்டு இருந்தது உலகிற்கே ஓர் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது.

உலக தொடர்புகள் அறுந்த நிலையில் இருந்த அபோத்தாபாத் வீடு ஒசாமா பற்றியும் அல்கைதா பற்றியும் அமெரிக்கா இதுவரை உலகிற்கு சொல்லி வந்த பிம்பம் தலை கீழாக மாறியிருந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதை உணர்ந்த அமெரிக்கா அவசர அவசரமாக கணினியின் மூலம் ஒரு டிஷ் எண்டனாவை பொருத்தியிருக்கிறது.

அல்காயிதா என்ற அமைப்பு அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அமைப்பு என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அல்காயிதா தலைவரை அழித்து விட்டதாக உலகிற்கு கூறி, தனது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய செயல் வடிவத்தை உருவாக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவதாக எழும் சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை.

வெகு விரைவில் வெள்ளை மாளிகை அதற்கான ஒரு புதிய தலைவரை நியமித்து செயல் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும்.

எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தையும், தனது கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற போலி வாதங்களை முன்வைத்து எதிரிகளிடம் உதவிபெற்றவர்களின் கதைகள் புஜ்யமாய் முடிந்திருக்கின்றன.

புலியாய் பாய்ந்து தாக்குவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த சதாம் எலியாய் பொந்திலிருந்து இழுத்து வரப்பட வில்லையா?

ஒன்று மட்டும் தெளிவு

தீயவர்களிடம் நட்பு வைத்து அவர்களின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட அத்தனை பேரும் முகவரியில்லாமல் முடங்கிப்போயிருக்கின்றார்கள்.

சதாமும் ஒசாமாவும் சிறந்த சான்றுகள்!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...