உலகில் பலராலும் அறியப்பட்ட சிந்தனையாளரான நோம் சொம்ஸ்கி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்க தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மொழியியற்துறைப் பேராசிரியராகப் பணிபுரிபவர். அமெரிக்காவின் ஜனநாயக விரோதப் போக்குகளை மக்கள் விரோதப் போக்குகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருபவர். இதனால் பல அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருபவர். பல்துறைசார்ந்த அறிவுஜீவியான இவர் அண்மையில் சீனாவுக்குச் சென்றபோது ளுழரவாநசn ஆநவசழிழடவையn னுயடைல என்ற சீனப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை பிரசுரித்திருந்தது. அந்த நேர்காணலை நமது வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம். இப்பேட்டியில் அவர் சர்வதேச அரசியலில் சீனா பெற்று வரும் முக்கியத்துவம், அமெரிக்கா மற்றும் உலகமயமாக்கல் குறித்து தெளிவுபடுத்துகிறார்.
தமிழில்: ஜிஃப்றி ஹாஸன்
———————————————————————————————————————-
SMD– அதிகமான சீனர்கள் உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்டுவிட்டனர். கடந்த மூன்று தசாப்தங்களில், குறிப்பாக உலக வர்த்தக ஸ்தாபனத்தில் (றுவுழு) சீனா இணைந்ததையடுத்து அநேகமான சீனர்கள் அதிகம் நன்மையடைந்தார்கள். ஆனால், நீங்களோ ஓர் மங்கிய ஒளியில் உலகமயமாக்கலைப் பார்ப்பதாகத் தோன்றுகின்றதே.
சொம்ஸ்கி – சீனாவின் பொருளாதார அடைவென்பது உலகமயமாக்கலோடு குறைந்தளவிலேயே தொடர்பு கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி வர்த்தகத்துடனேயே தொடர்புபட்டுள்ளது. சீனா ஒரு ஏற்றுமதி மைய நாடாக படிப்படியாக மாறி வருகிறது. நான் உட்பட எவரும் இந்த ஏற்றுமதிகளுக்கு எதிரானவர்களல்ல் ஆனால் இதுவல்ல உலகமயமாக்கல், உண்மையில் சீனா வட-கிழக்காசிய உற்பத்தி முறையில் ஒரு தொழிற்சாலையாக மாறியுள்ளது. முழுப்பிராந்தியத்தையும் நீங்கள் எடுத்து நோக்கினால், நீங்கள் ஒரு பாரிய சக்தியைக் காண்பீர்கள.; சீனாவின் ஏற்றுமதி அளவு அளவிட முடியாததாகவுள்ளது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விடயமொன்றும் இங்குள்ளது. சீனாவுடைய ஏற்றுமதி பாரியளவில் ஜப்பான், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. இந்நாடுகள் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்குகின்றன. சீனா இத்தொழில்நுட்ப உற்பத்தியில் இங்கு வெறும் ஒன்றியமாகத்தான் செயற்படுகின்றது. இவைகளைப் பயன்படுத்தி அது மேற்கொள்ளும் இறுதி உற்பத்தியில் ‘அயனந in உhiயெ’ என்ற முத்திரையைக் குத்தி விடுகிறது அவ்வளவுதான்!
அறிவுபூர்வமான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சீனா வேகமாக அபிவிருத்தி அடைகின்றது. மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்ற போதிலும் சூழலியல் அழிவு போன்ற இழப்புக்கள் உயர்வாக உள்ளன. இவை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றன. பொருளியலாளர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால் இறுதியில் இந்த இழப்புகளுக்காக சிலர் விலை கொடுக்க வேண்டியுள்ளது. அது உங்களுடைய பிள்ளையாக அல்லது பேரப்பிள்ளையாக இருக்கலாம். இது உலகமயமாக்கலுடனோ அல்லது றுவுழு உடனோ எந்த விதத்திலும் தொடர்புபட்டதல்ல.
SMD: சீனாவின் எழுச்சி உலக ஒழுங்கமைப்பை மாற்றும் என்று நினைக்கிறீர்களா? அமெரிக்கா இன்று வகித்துக் கொண்டிருக்கும் பங்கினை சீனா வகிக்குமா?
சொம்ஸ்கி: நான் அவ்வாறு நினைக்கவுமில்லை, நம்பவுமில்லை. உண்மையிலேயே, கடல் கடந்த 800 இராணுவத் தளங்கள், ஏனைய அரசாங்கங்களை பதவி கவிழ்த்தல், ஆக்கிரமித்தல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்ட ஒரு சீனாவையா நீங்கள் காண விரும்புகிறீர்கள்? இவற்றைத்தான் அமெரிக்கா இப்போது செய்து கொண்டிருக்கிறது. நான் நினைக்கிறேன், இது சீனாவினால் நடக்காது, நடக்கவும் முடியாது. அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவுமில்லை.
சீனா ஏற்கனவே உலகில் மாறிக்கொண்டு வருகிறது. சீனாவும் இந்தியாவும் உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியைக் கொண்டுள்ளன. அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள், அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒப்பிட்டுரீதியாகப் பேசும்போது அவர்களுடைய செல்வம் என்பது உலகில் ஒரு சிறிய பகுதிதான். இரு நாடுகளுமே இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. மேலும் இரு நாடுகளுமே மிகவும் சீரியஸான உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கிறது. அவை படிப்படியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். இந்நாடுகளின்; உலக செல்வாக்கினை ஏனைய செல்வந்த நாடுகளுடன் ஒப்பீட்டுப் பார்ப்பதென்பது அர்த்தமற்றது. இந்த நாடுகள் உலகத்தின் மீது சில சாதகமான செல்வாக்குகளை செலுத்துவார்கள் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. ஆனால் இது மிக அவதானமாக கவனிக்கப்பட வேண்டும்.
உலகில் தான் என்ன பங்கை வகிப்பது என்பதை சீனா தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும். அதிர்ஸ்டவசமாக, பாரிய இராணுவச் செலவினங்களுடன்கூடிய ஒரு ஆக்கிரமிப்பாளன் பாத்திரத்தை சீனா பாவனை செய்யவில்லை. ஆனால் சீனா ஒரு வகிபங்கை வகிக்க வேண்டியுள்ளது. அது பாரிய நுகர்வாளன் என்ற பாத்திரம். இந்தப் பாத்திரம் சாதகங்களையும் அதேநேரம் பாதகங்களையும் கொண்டது. உதாரணமாக- பிரேசில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தால் அது பொருளாதாரரீதியாக நன்மையடைகிறது. மறுதலையாக, அதனுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும். மிகை வளங்களைக் கொண்ட பிரேசில்,பெரு போன்ற நாடுகளில் ஒரு பிரச்சினை இருக்கிறது, அதாவது இந்நாடுகளின் பொருளாதாரம் மூல வளங்களின் ஏற்றுமதியில்தான் தங்கியுள்ளது. இது ஒரு சிறந்த அபிவிருத்தி முறைமையல்ல் அவர்களுடைய அபிவிருத்தி முறைமையை மாற்றுவதற்கு அவர்கள் முதலாவதாக அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அடுத்து ஏனைய உற்பத்தி நாடுகளுக்கு வெறுமனே தமது மூல வளங்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவன்றி சுயமான உற்பத்தியாளர்களாக அவர்களே மாற வேண்டும்.
SMD: சீனாவின் எழுச்சி மேற்கு ஜனநாயத்துக்கு சவாலாக அமையுமா?
சொம்ஸ்கி: வரலாற்றுரீதியாக ஒப்பீட்டுப் பார்ப்போமேயானால், ஐக்கிய அமெரிக்காவின் எழுச்சி ஜனநாயகப் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்ததா? சுதேச மக்கள் மீதான படுகொலைகள், அடிமை முறை, என்பன ஐக்கிய அமெரிக்காவில் காணப்பட்டன. இந்த முறைமை ஏனைய நாடுகளுக்கு பொருத்தமானதா? இந்த மாதிரியிலிருந்து சீனா கற்றுக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அமெரிக்கா இன்று ஒரு ஜனநாயக நாடாக வளர்ச்சியடைந்திருப்பது உண்மை. ஆனால் அதனுடைய ஜனநாயகம் இந்த முறையிலிருந்து விருத்தியடையவில்லை. அறிவுபூர்வமான எந்தவொரு நபரும் இதனைப் பிரதி பண்ணவும் மாட்டார்கள்.
சீனா அபிவிருத்pயடைந்து வருகிறது. ஆனால் அதனுடைய உள்நாட்டு அபிவிருத்தி மேற்குக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதற்கான எந்தத் தடயங்களுமில்லை. அமெரிக்காவுக்குச் சவாலாக அமைவது சீனாவின் அபிவிருத்தியல்ல் அதனுடைய சுயாதீனம்தான் (ஐனெநிநனெநnஉந). அதுதான் உண்மையான சவால்.
ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் இன்று முக்கிய கவனத்துக்குட்படுவது ஈரான் என்பதை இன்று தினசரிகளின் தலைப்புச் செய்திகளிலிருந்து கண்டுகொள்ளமுடியும். 2010 ‘ஈரானின் ஆண்டு’ (வுhந லுநயச ழக ஐசயn) என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கும் உலக ஒழுங்கமைப்புக்கும் ஈரான் அச்சுறுத்தலாக வர்ணிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா கடினத்தன்மையையும், ஒரு தலைப்பட்ச நிலைப்பாடுகiயும் பிரயோகித்தது. ஆனால் சீனா இதனைப் பொருத்தமானதாக கைக்கொள்ளவில்லை. சீனா ஒருபோதும் அமெரிக்க வழிகாட்டலைப் பின்பற்றவில்லை. முhறாக, அது ஐ.நா வின் நிலைப்பாடுகளுக்குத்தான் ஆதரவளிக்கிறது. நான் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ள ஒரு சில நாட்களுக்கு முன் அமெரிக்கத்திணைக்களம் சீனா மிகவும் கவனத்தைக் கவரக்கூடிய ஒரு வழியில் இருப்பதாக கூறி எச்சரித்தது. சீனா சர்வதேசப் பொறுப்புணர்வுகளுக்கு கட்டுப்படவேண்டி இருக்கிறது என்று அது கூறியது. அதாவது சீனா அமெரிக்க ஒழுங்கமைப்பை பின்பற்ற வேண்டும் என அது கருதுகிறது. இதுதான் அமெரிக்கா கருதும்; சீனாவின் சர்வதேசப் பொறுப்புணர்வுகள்.
இது ஒரு வகை நியம ஏகாதிபத்தியமாகும் (ளுவயனெயசன iஅpநசயைடளைஅ). இதன்படி ஏனைய நாடுகள் நமது கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும். அப்படி அவர்கள் இயங்கா விட்டால் பொறுப்புணர்வற்றவர்கள். நான் நினைக்கிறேன் சீன வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இதனைக் கேட்டபோது கட்டாயம் சிரித்திருப்பார்கள். ஆனால் இது ஏகாதிபத்தியத்தின் நியமத் தர்க்கமாகும் (ளுவயனெயசன டுழபiஉ ழக ஐஅpநசயைடளைஅ).
உண்மையில், அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காததனால்தான்; ஈரான் அமெரிக்காவுக்கு ஓர் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அமெரிக்காவின் ஒழுங்குகளை மறுக்கும் ஒரு மாபெரும் சக்தி என்ற வகையில்தான் சீனாவும் அமெரிக்காவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்;. இதுதான் அமெரிக்காவுக்குள்ள சவாலாகும்.
நன்றி- http://pmgg.org/
No comments:
Post a Comment