Monday, 6 June 2011

போர்க் குற்ற அறிக்கை - உலமா சபையும் இஸ்ரேலும் ஒரே நிலைப்பாட்டில்?


               இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் (Mark Sofer )

ஜூன் மாதம் முதலாம் திகதி இந்தியாவிலிருந்து செயற்படும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் Mark Sofer  கொழும்பு பிளஸ் பார்க் ஸ்டீட் ஹோட்டலில் plush Park Street Hotel நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.நா நிபுணர் குழுவினால் (தருஸ்மான் அறிக்கை)Darusman report முன்வைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரசு யுத்தக் குற்றம் தொடர்பான அறிக்கையை மனித உரிமை என்ற போர்வையில் வெறும் அரசியல் சுய லாபங்களுக்காக மேற்கு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஒன்று என்று சாடியுள்ளார்.


இதேமாதிரியான ஒரு அறிக்கையை இலங்கையில் உலமாக்களின் சபையான ஜம்இய்யதுல் உலமாவும் அண்மையில் வெளியிட்டது. 


இந்த ஐநாவின் அறிக்கை தொடர்பாக இஸ்ரேலின் கருத்தும், ஜம்இய்யதுல் உலமா சபையின் கருத்தும் ஒரு மையப் புள்ளியில் சந்தித்திருக்கின்றன.


இஸ்ரேலின் இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன் உலமா சபையின் முக்கிய அங்கத்தவரான பிரபலமான மார்க்கமேதையும், நவீன சிந்தனையாளர் என்று சிலரால் போற்றப்படுகின்ற அகார்முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உலமா சபையின் அறிக்கை தொடர்பாக தெளிவு பெற முயற்சித்தேன். 


அவர் பதிலளிக்கவில்லை. எனது தொலைபேசி இலக்கத்தை இனம் கண்டுகொண்ட அவர் பதிலளிக்க வில்லை. பின்னர் மேல்மாகாண சபை அங்கத்தவர் சகோதரர் முஜீபுர் றஹ்மான் அவர்களின் தொலைபேசியில் கதைத்த போது அவரின் இலக்கம் அகார் முஹம்மதின் தொலைபேசியில் இல்லாமல் இருந்ததன் காரணமாக அவர் பதிலளித்தார்.


நான் அறிஞர் அகார் முஹம்மதிடம் 2009 ம் ஆண்டு இஸ்ரேல் காஸா மீது தொடுத்த கொடிய யுத்தத்தில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறி யுத்தக் குற்றம் புரிந்திருப்பதாக இதேமாதிரியிலான ஒரு அறிக்கையை கோல்ட் ஸ்டோன் அறிக்கை  Goldstone Report  என்ற பெயரில் கொண்டு வந்ததை ஞாபகப்படுத்தி அது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டேன்.இலங்கை மீது போர்க் குற்றம் சுமத்தியிருக்கும் தருஸ்மான் அறிக்கையை நிராகரித்து அறிக்கை விடும் உலமா சபை, பலஸ்தீன் காஸா மக்கள் மீது போர்க்குற்றம் புரிந்ததாக இதே ஐநா சபையினரால் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் கோல்ட் ஸ்டோன் அறிக்கையின் குற்றச்சாட்டை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேட்டேன்.


இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இந்த போர்க் குற்ற அறிக்கையை நிராகரித்து அறிக்கை வெளியிடடதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் பெண்களை, சிறுவர்களை, முதியவர்களை, நிராயுதபாணிகளை கொல்லாமல், மரங்கள், மதஆலயங்களை, அழிக்காமல் மனித உரிமைகளுக்குமதிப்பளித்து இஸ்லாம் சொல்கின்ற போரியல் விதிமுறைகளை பின்பற்றி நடந்தது என்ற ஒரு கருத்தை உலமா சபையின் அறிக்கை மறைமுகமாக கொடுக்கும் அபாயம் இருப்பதையும் நான் அவருக்கு சுட்டிக்காட்டினேன்.


80களில் அகார் முஹம்மத் போன்ற உங்களால் அடிக்கடி ஆப்கான் போராட்டத் தளங்களுக்கு விஜயம் செய்து உங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட அன்று அமெரிக்காவிற்கு ஆதரவான தாலிபான்களின் போராட்டம் கூட ஜிஹாத் என்ற போலி நாமம் தாங்கி பாமரத்தனமாக, மிருகத்தனகாக போர்க் குற்றங்களை இழைக்கும் போது ..


இஸ்லாத்தின் போரியல் விதிமுறைகளை உலகிற்கும், இலங்கை அரசிற்கும் எடுத்துச் சொல்ல உங்களுக்கு அருகதையில்லாத அவமான நிலையில் நாங்கள் வாழ்வதை அவருக்கு ஞாபகமூட்டினேன்.


அது மட்டுமில்லாமல் பலஸ்தீன் மக்களின் உரிமைகள் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள போர்க்குற்ற கோல்ட் ஸ்டோன் அறிக்கை உலமா சபையின் இந்த அறிக்கையால் பலமிழந்து போவதையும் சுட்டிக் காட்டினேன்.


இலங்கை முஸ்லிம்கள் ஆயிரமாயிரம் எரியும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது அவற்றிற்கு பரிகாரம் தேடி ஊடக சந்திப்புக்கு முன்வராத உலமா சபை வரலாற்றில் முதல் தடவையாக தருஸ்மான் அறிக்கைக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு முன் வந்ததில் அரசியல் இரகசியங்கள் ஆயிரம் இருக்கின்றன. 


அவ்வப்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரச அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் தருவாயில், உரிமைகள் மறுக்கப்படும் தருவாயில் இதேபோன்று ஊடகங்களின் முன்னால் தோன்றி உலமா சபையின் கோரிக்கைகளை அச்சமின்றி ஏன் முன்வைக்கவில்லை என்றும் கேட்டேன்.


அனைத்திற்கும் வழமைப் போல் அவரது மலுப்பல் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.


இன்று இஸ்ரேலிய தூதுவர் தனது போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இஸ்ரேலின் நிலைப்பாட்டை வெளியிட்டு இருக்கிறார். 


உலமா சபையின் அறிக்கைக்கும் இஸ்ரேலின் அறிக்கைக்கும் ஒரேயொரு வித்தியாசம் இருக்கிறது.


இஸ்ரேலிய தூதுவர் இலங்கை மீதான போர்க்குற்றத்தை மறுத்ததோடு மட்டுமல்லாமல் காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் போர்க்குற்றத்தை போலியானது என்று பகிரங்கமாக மறுத்துள்ளார். 


உலமா சபை இலங்கை மீதான ஐநாவின் போர்க்குற்றத்தை மறுத்ததோடு காஸா தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக ஐநா கொண்டு வந்த . போர்க்குற்றச் சாட்டை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவுமில்லை. மறுக்கவுமில்லை.


இஸ்ரேலுக்கு எதிரான காஸா போர்க்குற்றம் தொடர்பாக கோல்ட்ஸ்டோன் கொண்டு வந்த ஐநா அறிக்கை தொடர்பாக கட்டாயம் உலமா சபை தனது கருத்தையும் அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சமூகத்திற்கு சொல்லியிருக்க வேண்டும்.


அதுவும் இல்லை, 


இன்று இஸ்ரேலிய தூதுவர் காஸாவில் போர்க்குற்றம் நிகழவில்லை என்றும் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட கோல்ஸ்டோன் அறிக்கையும்,  இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தருஸ்மான் அறிக்கையும் போலியானவை என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார். 


இந்தக் கருத்தை உலமா சபை ஏற்றுக்கொள்கிறதா?


தருஸ்மான் அறிக்கை எப்படி பிழையானது என்பதையும், கோல்ஸ்டோன் அறிக்கை எப்படி உண்மையானது என்பதையும் உலமா சபை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.


1400 சிவிலியன்களைப் பலியெடுத்த அந்தக் கொடிய தாக்குதல் பற்றி அது தொடர்பாக ஐநா வெளியட்ட அறிக்கை பற்றி இஸ்ரேலிய தூதுவரின் கண்மூடித்தனமான அறிக்கையை உலமா சபை கண்டிக்க வேண்டும்.


உலமா சபை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மீண்டும் ஏற்பாடு செய்து காஸா மீதான இஸ்ரேலின் போர்க்குற்றம் உண்மையானது என்று அரசியல் லாபங்களுக்கும், அழுத்தங்களுக்கும் அஞ்சாமல் முழு உலகிற்கும் அச்சமின்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.

1 comment:

 1. YAA.......I KNOW THESE SELF NAMED MUFTHIS AND SHEIKS ARE NOW LABELED WITH ISLAAM.....Thats all.

  we must call the correct name for ULAMA SAPAI is ,
  "" உல ( க ) மா ( டுகள் ) சபை ""

  ""ALL CEYLON U L A ( K A ) M A A (D U K A L ) S A P A I ""

  SO ,EDITOR whenever you denote all ceylon ulama sapai, weite the correct name as ,,,,, ""உல ( க ) மா ( டுகள் ) சபை ""

  ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...