பாகிஸதானும், அமெரிக்காவும் தனது அரசியல் தேவைக்காக உருவாக்கிய அடுத்த பலிகடாவான இலியாஸ் காஷ்மீரி கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிஙது.
ஆம் ! இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க உளவு விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
அமெரிக்காவின் கைக்கூலியும் இஸ்லாமிய ஜிஹாதின் (?) முன்னோடியுமான பாகிஸ்தான் வழமைப் போல தனக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது என்று கையை விரித்திருக்கிறது.
மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவரும், பாகிஸ்தானின் பயங்கரவாத முக்கியத் தலைவருமான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானின் பிராந்திய அரசியலுக்காக ஜிஹாதிய பாலுாட்டி வளர்க்கப்பட்டவர்.
அமெரிக்க படையினரின் குண்டுவீச்சில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுள் ஹர்கத்-உல் ஜிஹாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் தலைவரான இலியாஸ் காஷ்மீரியும் ஒருவர் என பிபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது.
பாகிஸ்தானிய தீவிரவாதிகளில் மிகவும் மூத்தவர்களில் ஒருவராக கருதப்படும் இவர் அல்கைதாவுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவராவார்.
இலியாஸ் காஷ்மீரி ஹர்க்கத்துல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற அமைப்பின் தலைவராக செயற்பட்டிருந்தார்.
தெற்கு வசிரிஸ்தானில் லாமன் என்ற கிராமத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் இவரும் இவரோடு மேலும் 9 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் கடற்படைத்தளத்தின் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் மூன்று வருடங்களுக்கு முன்னர் மும்பாய் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து இவர் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.
சமீபத்தில் அமெரிக்கா 5 பயங்கரவாதிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் நேட்டோ படைகள் தேடி வரும் பாகிஸ்தானும் அமெரிக்காவும் கடந்த காலங்களில் உருவாக்கிய அந்த 5 பயங்கரவாதிகளையும் பிடிக்க பாகிஸ்தான் தமக்கு உதவ வேண்டும் என்றும், கோரியிருந்தது.
அந்தப்பட்டியலில் இலியாஸ் காஷ்மீரி, ஐமன் ஜவாஹிரி, ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி யிடம் காஷ்மீரி இலியாஸ் கொல்லப்பட்டாரா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு , இது தொடர்பாக இதுவரை எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி யிடம் காஷ்மீரி இலியாஸ் கொல்லப்பட்டாரா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு , இது தொடர்பாக இதுவரை எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இலியாஸ் கடந்த 2009 செப் 7ம் தேதி கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment