Wednesday 11 May 2011

பாகிஸ்தான் - பயங்கரவாதத்தின் பண்ணை


(ரொனால்ட் றேகனின் காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆப்கான் ஜிஹாத் வடிவமைக்கப்படுகிறது. முஜாஹிதீன்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடல்)



(80களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹாமித் குல், (இடதுபக்கம்) அப்போதைய சீ.ஐ.ஏ யின் பணிப்பாளர்  வில்லியம் வெப்ஸ்ரர் , சீ.ஐ.ஏ யின் நடவடிக்கைளுக்கான உதவிப் பணிப்பாளர்  கிளயார் ஜோர்ஜ் ,சீ.ஐ.ஏ இன் பாகிஸ்தான் பெஷாவர் நிலைய முஜாஹிதீன்களுக்கான பயிற்சிக்குப் பொறுப்பான மில்ட் பெயார்டன் ஆகியோர் 1987ம் ஆண்டு பெஷாவரில் எடுத்துக்கொண்ட படம்)

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.''

இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்துகிறது.

அமெரிக்கா என்ற பயங்கரவாதத்தோடு உறவு வைத்து அதன் ஏகாதிபத்திய நிகழ்ச்சிக்கு ஏற்ற தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் இன்று ஆடிப்போய் நிற்கிறது.


ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ரஷ்யாவை விரட்டுவதற்கு பாகிஸ்தானின் பெஷாவரைத்தான் அமெரிக்கா ஆயுதக் களஞ்சியமாக்கியது அந்நாட்டு மக்களை வயது வித்தியாசமின்றி ஆயுதம் தாங்கிய போராளிகளாக்கியது.  

அமெரிக்க சீஐஏயும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ 

(Inter-Services Intelligence) யும் மிகவும் திட்டமிட்டு பெஷாவரை இராணுவமயப்படுத்தின.


பாகிஸ்தான் 'அமெரிக்க ஜிஹாதின் ' கேந்திர நிலையமாக பரிணாமம் பெற்றது. உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு வந்து குவிக்கும் இடமாக பாகிஸ்தான் உருமாறியது.

அரபு நாட்டு பெற்றோலிய டொலா்கள் பாகிஸ்தானுக்குள்  கொட்டப்பட்டன. பாகிஸ்தானின் பிரபலமான தஃவா இயக்கமொன்று  இந்த ஜிஹாதை மக்கள் மயப்படுத்தியது.  ஜிஹாதிற்கு உலகின் அனைத்து பாகங்களிலிருந்தும் ஆட்களைத் திரட்டுகின்ற புனிதப் பணியினை இந்த தஃவா இயக்கமே பொறுப்பேற்று நடாத்தியது.

அரபு நாடுகளிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் இளைஞர்கள் பலிகடாக்களாக பெஷாவருக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

அமெரிக்கா, மத்திய கிழக்கு, பாகிஸ்தான் கூட்டுக் கம்பனியே இந்த ஜிஹாதிய பண்ணைகளை பாகிஸ்தானில் உருவாக்கிட காரணியாய் இருந்தது.

இஸ்ரேலிய யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன்  போரட்டத்தை மலினப்படுத்தி விட்டு, மிகப்பாாிய பிரசாரத்தை மேற்குலக ஊடகங்கள் ஆப்கான் போராட்டத்திற்கு வழங்கின.  திட்டமிட்ட அடிப்படையில் பலஸ்தீன் போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டது. கம்யூனிஸ ரஷ்யாவை இல்லாதொழிப்பதே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை கடமை என்று பாடம் நடாத்தப்பட்டது.

காஷ்மீாிலும், ஆப்கானிலும் நடப்பது மட்டும்தான் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஜிஹாதிய போராட்டங்களாக  பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அன்று சீஐஏ யினால் மூளைச்சலவை செய்யப்பட்ட தேசிய மற்றும் சா்வதேசிய தாஈகளும், புத்தி ஜீவிகளும் பிரசாரம் செய்தார்கள். மத்திய ஆசியாவில் ஒரு இஸ்லாமிய கிலாபா உருவாகப் போகிறது என்ற ஒரு கனவை இவா்கள் இளைஞா்களின் மனங்களில்  விதைத்தாா்கள்.

பாகிஸ்தான் அமெரிக்காவின் இந்த உதவியை தனக்கு எதிரியாய் இருக்கும் இந்தியாவிற்கு எதிராகவும் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டது. அமொிக்க ஜிஹாதின் ஏஜன்ட்களாக  இயங்கிய பெற்றோல் டொலா்களினால் போஷிக்கப்பட்ட இயக்கங்கள்  அனைத்து நாடுகளிலிருந்தும்  இளைஞர்களை பாகிஸ்தானின் பெஷாவருக்கும், அஸாத் காஷ்மீருக்கும் ஆயுதப் பயிற்சிக்காக அனுப்பி வந்தனா்.

இந்த அமொிக்க ஏஜன்ட்களின் உதவியால் லஷ்கர் -இ -தைபா போன்ற இந்திய எதிர்ப்பு இயக்கங்கள் புதுப்பொலிவுடன் வளந்தன.

பாகிஸ்தானின் இந்த இருமுனைப் போராட்டம்,  சீ.ஐ.ஏ மற்றும் மத்திய கிழக்கின் பெற்றோல் டொலா்களின் உதவினால் உரம்பெற்றன. அஸாத் காஷ்மீரில் இந்தியாவோடும், பெஷாவரில் ரஷ்யாவோடும் முஜாஹிதீன்கள் முரசரைந்துக் கொண்டு முன்னேறி சென்றனா்.

சமகாலத்தில்   உலகு எதிர்கொள்கின்ற பயங்கரவாத, தீவிரவாத செயற்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளுக்கும் அவப்பெயா்களுக்கும்  அடித்தளமாக அமைந்தது அமொிக்கா வடிவமைத்த இந்த தீவிரவாதமே. 

இன்று இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் ஏற்பட்டுள்ள வெறுப்புகளுக்கும், நெருக்குதல்களுக்கும் அச்சாணியாக அமைந்தது  இந்த ஆப்கான் போராட்டத்தின் பயனாக வளா்ந்த பயங்கரவாதமே. 

இந்த ஆப்கான் போராட்டத்தின் மூலம் அமெரிக்கா தனது இரண்டு எதிாிகளான ரஷ்யாவையும், இஸ்லாத்தையுமே இலக்கு வைத்தது. நேரடியாக ரஷ்யாவை தாக்கி வீழ்த்திய அமொிக்கா மறைமுகமாக இஸ்லாத்தை இலக்கு வைத்தது.  இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீவிரவாதிகளை செயற்பட வைத்தது.   முஸ்லிம் நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்கும், அழிப்பதற்கும், அச்சுறுத்துவதற்கும்  அமொிக்கா தான் வளா்த்து விட்ட தீவிரவாதத்தையே இன்று காரணம் காட்டி வருகிறது.

அல் கைதா, தாலிபான்கள் போன்ற இன்ன பிற அமைப்புகளின் பிறப்பிற்கு காரணமான அமொிக்கா,  பயங்கரவாதத்தை நசுக்கப் போவதாகக் கூறி  தனது வெளிநாட்டு கொள்கையை ஓா் ஆக்கிரமிப்பாக வடிவமைத்து இருக்கிறது.

ஆப்கானிலிருந்து  ரஷ்யாவை விரட்டுவதற்கு  அல்கைதா, தாலிபான் போன்ற தீவிரவாதிகளை  வளர்த்து போஷித்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்த போது மௌனம் காத்தது.  இது இந்த நாடுகள் அரங்கேற்றிய  “ஜிஹாத்” அரசியல் நாடகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு பாகிஸ்தான் மிகவும் உறுதுணையாக இருந்து செயற்பட்டது மட்டுமல்லாமல்  தன்னால் போஷித்து வளர்க்கப்பட்ட அமைப்பபுகளையே  காட்டிக்கொடுத்து அழிக்கும் நடவடிக்கைக்கும் அமொிக்காவுக்கு கைகொடுத்து உதவியது.

அன்று ஜிஹாத் போராட்டம் ரஷ்யாவுக்கு எதிரான போராட்டம்  என்று மட்டுமே அா்த்தப்படுத்தப்பட்டது. ஜிஹாத்  போராட்டம் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய போது அது பயங்கரவாதம் என்று அா்த்தப்படுத்தப்பட்டது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஆப்கானில் போராடுவதை ஜிஹாதாக புனிதப் போராக அங்கீகாித்த, பிரகடனம் செய்த  தேசிய, சா்வதேசிய சீ.ஐ.ஏ முல்லாக்கள் கூட ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது, அந்த மக்கள் மீது நாசகார  குண்டுகளை வீசிய போது அதற்கெதிராக போராடுவது ஜிஹாத் என்று சொல்ல முன் வரவில்லை. 

இன்று அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒசாமா விவகாரத்தில் முறுகல் நிலைதோன்றியிருப்பதாக தோற்றப்பாடு உருவாகியிருக்கிறது. இது எந்தளவு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்று பாகிஸ்தான் தனது இறைமை பற்றி பேசுகிறது.

இறைமையுள்ள ஒரு நாடு உலகெங்கிலுமிருந்து முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு வந்து தனது நாட்டில் முகாம்களை அமைத்து, ஆயுதப் பயிற்சி வழங்கி பயங்கரவாதத்தைத் தோற்றுவித்தது.  இன்று உலகிலேயே சட்டம், ஒழுங்கு சீர் குலைந்த நாடுகளில் முக்கிய நாடாக திகழ்வது பாகிஸ்தான் தான்.
தீவிரவாதத்தை உருவாக்கி பாகிஸ்தான் அன்று விதைத்ததை இன்று அறுவடை செய்து வருகிறது.

பாகிஸ்தான் பாதாள உலகம் ஆளுகின்ற ஒரு நாடாக உருவாகியிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படப்போய் மரணப் பொறியில் இந்த நாடு இன்று மாட்டிக்கொண்டிருக்கிறது.

எந்த தீய பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரலின் தேவைக்காக இந்த நாடு கைக்கூலியாக செயற்பட்டடு தீவிரவாதத்தை வளா்த்ததோ  அந்த தீய சக்தியின் கரங்களே இன்று அதன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால்,
அமெரிக்கா என்ற நாயொடு உறங்கப்போய் பயங்கரவாத ஒட்டுண்ணியோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்!

5 comments:

  1. அப்படி என்றால் பாக்கிஸ்தான் ஜமாத்தே இஸ்லாமியின் ஆப்கான் ஜிகாதை நியாயப் படுத்தி,உங்கள் வார்த்தையில் சொன்னால், இரத்த நாளங்களை விம்மிப் புடைக்கைச் செய்து ஆப்கான் ஜிகாதுக்கு வேலை செய்த அகார் சேரும் , உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரும் ,சகோதரர் அனீசும், வைத்தியர் மஹேஷும் C.I.A. யின் ஏஜென்ட் என்கிறீர்களா?

    அப்படி என்றால் அவர்களின் பின்னால் செல்லும் எங்களின் கதி????

    யதார்த்தத்தை புரிய வைத்த உங்கள் ஆய்வுரைக்கு ஒரு சபாஷ்.

    உங்களுக்கு ஒரு செய்தி.

    பாக்கிஸ்தானின் I.S.I. யையும், ஜமாத்தே இஸ்லாமியையும், அதன் அரசியல் தலைவர்களையும் -இம்ரான் கான் இல்லாமல்- அமெரிக்க 'மறைமுக' சக்திகளும், 'ப்ரீ மேசன்களும் ' விலைக்கு வாங்கி விட்டார்கள்.

    இனி, பாகிஸ்தான் உலகுக்கு ஒரு பிரச்சினை அல்ல.

    பிரச்சினையே பாகிஸ்தானுக்கு இனி மேல் தான் ஆரம்பம்.

    ReplyDelete
  2. அருமையான தகவல்

    //அமெரிக்கா என்ற நாயோடு உறங்கப்போய் பயங்கரவாத ஒட்டுண்ணியோடு எழுந்திருக்கிறது பாகிஸ்தான்.!//

    பாகிசதானோடு உறங்கியவர்களின் நிலைமை என்ன?
    அதை மறைத்து விட்டது ஏன்?

    ReplyDelete
  3. மேற்கூறிய உங்கள் கூற்று முற்றிலும் உண்மையே. ஆப்கான் முஜாஹிதீன்களின் ஆரம்பம் சி.ஐ.ஏ. பின்னணியில் இயங்கிய கொடுங்கோலன் சியா உல் ஹாக், அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் வழிகேட்டு ஷஊதிக் குடும்பத்தினரின் பணமுமாகும். ஆனால் இதன் பின்னணியை நிறையப்பேருக்கு தெரியாது. உலக வாள்ளருசுகளுக்கு எதிராக ஈரானிலே இஸ்லாமியப்புராட்சி வெடித்ததும் கதிகலங்கிய சவூதிக் குடும்பத்தினர் தங்கள் எஜமானர்கலான அமெரிக்காவுடன் செய்த சதியின் வெளிப்பாடே இது. இந்த சதியை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் ஆயுதம் தான் ஷீயா - சுன்னிப் பிரட்சினை ஆகும். இவ்வேலையை அவர்கள் தங்கள் ‘தாஈக்கள்’ மூலம் மிக கட்சித மாகவே செய்தனர்; செய்து வருகின்றனர் . இதன் வேளிப் பாடே இன்று நாம் காணும் முஸ்லிம் உலகின் இரத்தக்கலரிகள். முஸ்லிம் சமூகம் உணருமா?

    ReplyDelete
  4. இன்று பூதாகரமாக தலை எடுத்திருக்கும் ஷீயா-ஷுன்னிப் பிரச்சினை உண்மையில் ஒரு பிரச்சினையே அல்ல.மாறாக அது ஒரு வல்லரஷுப் பிரச்சினையே அன்றி வேறில்லை . முஸ்லிம் உலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்கள் போடும் வேஷம் . பிரித்தாளும் தந்திரம் .
    விஷயம் விளங்குவதில் எப்பொழுதும் பின் நிற்கும் முஸ்லிம் பாமரர்களை ஏமாற்றிப் பிழைக்கும் முஸ்லிம் நாட்டு இஸ்லாம் விரோத மன்னர்களும், அவர்களின் சில்லறைக்காக தவம் கிடக்கும் தாஈக்களும் , ஏகாதிபத்திய மேட்கத்தயர்களும்; கூட்டாக செய்யும் சதியின் வெளிப்பாடே இது.

    ReplyDelete
  5. அப்படி என்றால் பாக்கிஸ்தான் ஜமாத்தே இஸ்லாமியின் ஆப்கான் ஜிகாதை நியாயப் படுத்தி,உங்கள் வார்த்தையில் சொன்னால், இரத்த நாளங்களை விம்மிப் புடைக்கைச் செய்து ஆப்கான் ஜிகாதுக்கு வேலை செய்த அகார் சேரும் , உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரும் ,சகோதரர் அனீசும், வைத்தியர் மஹேஷும் C.I.A. யின் ஏஜென்ட் என்கிறீர்களா?

    அப்படி என்றால் அவர்களின் பின்னால் செல்லும் எங்களின் கதி????

    யதார்த்தத்தை புரிய வைத்த உங்கள் ஆய்வுரைக்கு ஒரு சபாஷ்.

    உங்களுக்கு ஒரு செய்தி.

    பாக்கிஸ்தானின் I.S.I. யையும், ஜமாத்தே இஸ்லாமியையும், அதன் அரசியல் தலைவர்களையும் -இம்ரான் கான் இல்லாமல்- அமெரிக்க 'மறைமுக' சக்திகளும், 'ப்ரீ மேசன்களும் ' விலைக்கு வாங்கி விட்டார்கள்.

    இனி, பாகிஸ்தான் உலகுக்கு ஒரு பிரச்சினை அல்ல.

    பிரச்சினையே பாகிஸ்தானுக்கு இனி மேல் தான் ஆரம்பம்.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...