Tuesday 3 May 2011

ஒசாமா கொலை! இன்றல்ல அன்று...?




ஒசாமா பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாஸிர் பூட்டோ 2007ம் ஆண்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஒசாமாவின் கொலை தொடர்பாக அமெரிக்கா சொல்கின்ற “கதை”கள் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.  பாகிஸ்தானில் எவ்வித பாதுகாப்பும் (?) இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை தாக்கியழித்தாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பாதுகாப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை உயிருடன் பிடித்து நிறைய தகவல்களை பெற முடியுமான நிலையை அமெரிக்கா உளவு நிறுவனம் ஏன் அவசரப்பட்டு இல்லாமல் செய்து கொண்டது என்ற கேள்வி மறுபுறம் எழுகின்றது.

ஒசாமாவைப் பிடிக்கச் சென்ற களநிலவரங்களைப் பார்த்தால் அவரை ஒரு எலியைப் பிடிப்பது போன்று இலகுவாக உயிருடன் பிடித்திருக்க முடியும்.

அமெரிக்க சீ.ஐ.ஏ வடிவமைத்த நிகழ்ச்சி நிரல் என்பதால் ஒசாமாவின் போராட்டம் பல சிக்கல்களையும், சந்தேகங்களையும் கொண்ட  ஒரு புதிராகவே இன்றுவரை இருந்து வருகிறது.

ஒசாமா அமெரிக்க சீ.ஐ.ஏ என்ற உளவு நிறுவனத்தினால் பயிற்றப்பட்ட ஒரு தீவிர உளவாளி!. அவர் அமெரிக்காவோடு நேசம் வைத்திருந்த காலத்தில் அவரால் எத்தகைய பிரயோசனங்களைப் பெற்றதோ அதற்கும் அதிகமான பலனை அவரை எதிரியாக்கி அமெரிக்கா பெற்றுக்கொண்டது.

ஒசாமாவைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால் ...

அமெரிக்காவிற்கு ஒசாமா இருந்தாலும் ஆயிரம் பலன், இறந்தாலும் ஆயிரம் பலன்.

நண்பனாகவும், எதிரியாகவும் இருந்து அமெரிக்காவிற்கு அதிக லாபங்களை ஈட்டுக் கொடுத்தவர்.

இன்றைய அமெரிக்காவின் மோசமான ஜனநாயக விரோத செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு ஒசாமா என்ற கதாபாத்திரம் ஒன்றே காரணமாக இருக்கிறது.

இரண்டு வல்லாதிக்க சக்திகளாக எழுந்து, பனிப்போர் ஒன்றுக்குள் புதைதந்திருந்தன அமெரிக்காவும், ரஷ்யாவும்.  ரஷ்யாவை ஆப்கானிஸ்தானில் நிஜமான யுத்தக் களமொன்றில் தோற்கடிப்பதற்கு ஒசாமா என்ற கதாபாத்திரம் தேவையாக இருந்தது.


அமெரிக்கா தானே திட்டமிட்டு நடாத்தியதாக அமெரிக்கர்களாலேயே குற்றஞ்சாட்டப்படுகின்ற செப். 11 தாக்குதலை நடாத்தி விட்டடு ஒசாமாவை குற்றஞ்சாட்ட முடியாது போயிருக்கும்.

செப். 11 தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு யுத்தம் என்ற அடிப்படையில் பயங்கரவாதிகளைத் தேடி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க முடியாது போயிருக்கும்.


ஒசாமா என்ற ஒரு நபரும் அவரது “ஜிஹாதும்” இல்லையென்றிருந்தால் இன்றைய அமெரிக்காவின் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்த முடியாமல் போயிருக்கும்.

ஒசாமா இல்லையென்றிருந்தால் அரபு நாடுகளுக்கு பாதுகாப்பை காரணம் காட்டி தனது புதுப்புது ஆயுதங்களை அமெரிக்காவினால் சந்தைப்படுத்த முடியாது போயிருக்கும்.


ஒசாமாவும், அவர் உருவாக்கிய தாலிபானும் இல்லாதுபோனால் தற்கொலைக் குண்டு என்ற போர்வையில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்களை கொன்று குவிக்க முடியாது போகும்.

ஒசாமா இல்லையென்றிருந்தால் இஸ்லாத்தை தீவிரவாதம், பிற்போக்குவாதம், பழமைவாதம் என்று கூறி அரசியல் அரங்கிலிருந்து ஓரம் கட்ட முடியாமல் போயிருக்கும்.

அமெரிக்கா தனது அரசியல் தேவைக்காக பயங்கரவாதத்தை பிறப்பித்து, வளர்ர்து, பாதுகாக்கும் ஒரு நாடு.

சுரண்டல் முதலாளியத்தை அடிப்படைக் கொள்கையாக பின்பற்றும் அந்த நாடு தனக்கு எதிரான சோஷலிஸத்தை இல்லாதொழிக்க 80களில் இஸ்லாமிய வாதிகளை திட்டமிட்டுப் பயன்படுத்தியது.

முற்போக்கு சிந்தனையற்ற முல்லாக் கூட்டம் இந்த சதிவலையில் நல்லாவே மாட்டிக்கொண்டது.

விளைவு அமெரிக்கா மூட்டிய ஜிஹாத் நெருப்பு அமெரிக்காவிற்கு எதிராக இருந்த ரஷ்ய சார்பு நாடுகளில் பற்றத்தொடங்கியது.

அமெரிக்காவின் சதியினால் ஆப்கானிஸ்தானில் ஹிக்மத்தியார், ரப்பானி வகையறாக்களால் (யுத்தப் பிரபுகளால்) கொள்ளி வைக்கப்பட்ட ஜிஹாதிய நெருப்பு சர்வதேச மட்டங்களில் மட்டுமல்லாது அரபு நாடுகளையும் ஏன் இலங்கையைக் கூட உஷ்ணப்படுத்தியது என்றால் அதன் பாரிய தாக்கத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்கா வடிவமைத்த இந்த ஜிஹாதிய அனலில் இலங்கையின் இஸ்லாமிய இயக்க முல்லாக்களின் நரம்புகள் கூட விம்மிப் புடைத்தன.

மத்ரஸாக்கள் என்ற போர்வையில் பாகிஸ்தானில் ஜிஹாதிய பண்ணைகள் உருவாக்கப்பட்டன.  தாலிபான்களும், தற்கொலைப்போராளிகளும் கொத்துக் கொத்தாக யுத்தக் களங்களில் குவிக்கப்பட்டார்கள்.

ஆப்கானின் விடுதலைப் போராட்டம் என்பது இடது சாரகளான  இறைமறுப்பாளர்களுக்கு எதிரான போராட்டமாகவும் அல்லாஹ்வால் இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய உம்மாவிற்குக் கிடைத்த போராட்டக்களமாகவும் இன்றைய புகழ்பெற்ற “அஷ்ஷெய்க்” மார்கள் அடித்துச் சொல்லினர். அன்று இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றி மகிழ்ந்தனர்.

அமெரிக்க அரசியல் உலக முஸ்லிம்களின் ஆன்மீகத்தை எவ்வாறு தனது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது என்பதைப் புரிந்துகொள்ள இந்நிகழ்வுகள் சிறந்த சான்றுகளாக திகழ்கின்றன.

இப்போது விஷயத்திற்கு வருவோம். பெனாஸிர் பூட்டோ ஒசாமா பற்றி, அவரது கொலைப் பற்றி தகவல்களை வெளியட்ட சிறிது காலத்தில் அவரும் கொலை செய்யப்படுகிறார்.

பெனாஸிரின் கருத்து உண்மையாக இருந்தால், இன்று ஒசாமாவைக் கொன்று விட்டதாகக் ஒபாமா நிருவாகம் சொல்வது வெறும் நடிப்பாக இருக்கலாம்.

அமெரிக்கர்களின் வரிப்பணம் வெளிநாட்டு யுத்தங்களுக்காக செலவிடப்படுவதை இப்போது அந்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர்.  தனது நாட்டுப் பிரஜைகள்வேறுநாடுகளில் மரணப்பொறியில் சிக்கியிருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.

செப். 11 தாக்குதலை புஷ் நிர்வாகமே திட்டமிட்டு செய்ததாக அந்நாட்டு புத்தி ஜீவிகள் பலத்த குற்றத்தைச் சுமத்தி வருகின்றனர்.   அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தகுந்த விஞ்ஙான, தொழில் நுட்ப ஆதாரங்களை அவர்கள் ஊடகங்கள் மூலம் நிரூபித்தும் வருகின்றனர்.

இந்த இக்கட்டான அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் அதன் நிகழ்ச்சி நிரலில் அவசர மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது.

அமெரிக்காவில் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்டு வரும் மக்கள் அழுத்தங்களை குறைக்க வெண்டும் என்றிருந்தால் வெளிநாட்டு அக்கிரமிப்பு யுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

ஒசாமாவைத் தேடி ஆரம்பித்த பயங்கரவாத ஒழிப்பு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒசாமாவை ஒழிக்க வேண்டும். அது இன்று நிகழ்ந்திருக்கிறது.

அரபு, மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஆதிக்கத்திற்கான, ஆக்கிரமிப்பிற்கான தனது புதிய நிகழ்ச்சி நிரலை வெள்ளை மாளிகை வெகு விரைவில் வெளியிட இடமிருக்கிறது.

அதை இப்படியும் யூகிக்கலாம்...!

இறந்த ஒசாமாவை அரசியலுக்காக உயிர் வாழ வைத்திருந்ததை மாற்றி
மீண்டும் இறக்க வைப்பது..!

எங்கள் நாட்டில் யானைக்கு சொல்லும் ஒரு பழமொழி ஒன்றிருக்கிறது.

யானை இருந்தாலும் ஆயிரம் இறந்தாலும் ஆயிரம்!

ஒசாமாவைப் பொறுத்தவரை

அமெரிக்காவிற்கு இருந்த போதும் ஆயிரம்
இறந்த போதும் ஆயிரம்.!

4 comments:

  1. நிகழ்கால நிஜங்களை அப்படியே புடம் போட்டு காட்டும் ஆய்வுரை.

    மூடப் பட வேண்டிய 'பைல்கள்' நிறைய இருப்பதால் பின் லேடன் என்கிற கதா பாத்திரம் கொல்லப் படுவதில் அமெரிக்க தரப்புக்கு நியாயம் இருக்கிறது.

    இந்த நிஜங்களின் பின்னணியில் இன்னுமொரு பின் லேடனின் பிறப்பு விரைவில் அரங்கேற்றப் படலாம்.

    பின்லேடன் குடும்பத்தினருக்கு உண்மையில் சவூதியில் சரியான ஆளுமை இருக்கும் என்றால், ஜோர்ஜ் புஷ் ஒபாமாவுடன் பின் லேடன் 'காபி' அருந்திக் கொண்டு அவரது மரண செய்தியை டி. வீயில் பார்த்துக் கொண்டு இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    ReplyDelete
  2. yelam unmay makala seethiugal

    ReplyDelete
  3. "ஆப்கானின் விடுதலைப் போராட்டம் என்பது இடது சாரகளான இறைமறுப்பாளர்களுக்கு எதிரான போராட்டமாகவும் அல்லாஹ்வால் இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய உம்மாவிற்குக் கிடைத்த போராட்டக்களமாகவும் இன்றைய புகழ்பெற்ற “அஷ்ஷெய்க்” மார்கள் அடித்துச் சொல்லினர். அன்று இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றி மகிழ்ந்தனர்."
    meitkooriya ungal vatham mutrilum unmai.
    Athey neiraththil awargal innum ontrayum sheithaarkal. Athuthan Unmayana Islamiya Shakthikalai oram kattuwathu.Appadi sheithu wittu pilayana amerikka nikalchchi niraluukku erppa oru thalamaithuwaththukku keelal ani thiralwathu.Meelavum Wethalam Murungai maraththil!
    Parithapam Muslim Shamookam!

    ReplyDelete
  4. inthakkolam intru netralla mika kaalamakave arangu eri warum oru nadakamakum. Inda osamakkalellam wahabiya chinthanayal moolai chalavai sheiyappatta pitpokkuwathikalana Saudi kudumpaththinaral Americca CIA udanthayudan Iranil nadantheriya Islamiyappuratchikku ethiraka porada uruwakkam petra oru kootamakum.
    Intha unmayai padiththavarkalum paamararkalum intru padippadiyaka arinthu warukirarkal.
    Unmai oru naal wellum! Baathil alinthey theerum! Ithu Theiwa Waaku.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...