Thursday, 3 June 2010

இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

Freedom Flotilla  என்ற  பெயரில் காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற  துருக்கியின் மனிதாபிமான நடவடிக்கை கப்பல் மீது தொடுக்கப்பட்ட  இஸ்ரேலின்  காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து 04.06.2010 அன்று கொழும்பில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.



இஸ்ரேலின் மிருகத்தனமான கொலைகளுக்கு  எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையிலுள்ள சமூக நல இயக்கங்கங்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் முற்போக்கு அரசியல் கட்சிகள் இணைந்து நடாத்தவிருக்கின்றன.

Saturday, 15 May 2010

இஸ்ரேலின் பாதையில்..... இலங்கை?

இஸ்ரேலின் பாதையில் ... இலங்கை?


பலஸ்தீன் மேற்குக்கரையில் சட்டவிரோதக் குடியிருப்புகள் என்ற போர்வையில் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்படுவதை ஊடகங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பலஸ்தீனில்


அண்மையில் இலங்கையில் அரங்கேறிவரும் அரச அட்டசாகங்களைப் பார்க்கும் போது மற்றுமொரு இஸ்ரேலாக இது மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

கொழும்பு கொம்பனித்தெரு மிவ்ஸ் வீதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அந்த இடத்திலிருந்து பலாத்கதரமாக பாதுகாப்பு தரப்பினரால் அடித்து உதைத்து வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டு அவர்களின் கண் முன்னாலேயே அவர்களின் வீடுகளை புல்டோசர்களை வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.

இலங்கையில்




பாதுகாப்பு,  பொலிஸ் படைகளின் உதவியினால் நடாத்தப் பட்ட இந்த வேட்டையை எந்த ஊடகமும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் தேர்தல்களின் போது கொழும்பு முஸ்லிம்கள் ஆளும் மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது வாக்குகளை அளித்து வந்திருக்கின்றனர். தமது தேர்தல் பிரசார காலங்களில் ஆளும் தரப்பினரும், அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும்  முஸ்லிம்களும் இதை அடிக்கடி பல இடங்களில் குற்றச்சாட்டாய் முன் வைத்தும் இருந்தனர்.

இன்று முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.


அண்மைய இலங்கையின் இந்த நகர்விற்கு பின்னணியில் முஸ்லிம் விரோத வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் செயற்படுகிறதா  என்ற அச்சமும்  ஏற்பட்டு வருகிறது.

இதற்குச் சான்றாக கடந்த 12ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இஸ்ரேல் நாட்டின் 62வது சுதந்திர தின விழாவை குறிப்பிடலாம். காலி முகத்திடலிலுள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இந்த விழா இடம்பெற்றது.  இஸ்ரேல் நாடு பகிரங்கமாக இலங்கையில் கொண்டாடிய ஒரு விழாவாக இதனை சுட்டிக்காட்ட முடியும்.
2010 மே மாதம் 12ம் திகதி கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இஸ்ரேலிய சுதந்திர தின விழாவிற்காக  மேற்படி ஹோட்டல் வாசலில் ஏற்றப்பட்டிருந்த இஸ்ரேலிய தேசிய கொடி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இந்த இஸ்ரேலிய சுதந்திர விழா இலங்கையில் அவரது ஜனாதிபதி அலுவலகத்திற்கு மிக அண்மையில் நடைபெற்றிருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.

காரணம் பலஸ்தீன் மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர் என்று ஜனாதிபதி தன்னை அடிக்கடி சொல்லி வருபவர்.

பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ  இலங்கை பலஸ்தீன் நட்புறவு கமிட்டியில் பல ஆண்டுகளாக தலைமை வகித்தவர். இத்தகைய பின்னணிகளுக்கு மத்தியில் மஹிந்த அரசாங்கத்தின் அண்மைய நகர்வுகள் பலருக்கு சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.

Wednesday, 12 May 2010

சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில் கோல் பேஸ் ஹோட்டலில் தனது 62 வது சுதந்திர தினத்தை (12.05.2010) இன்று கொண்டாடுகிறது .


சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில்  கோல் பேஸ் ஹோட்டலில் தனது  62 வது சுதந்திர தினத்தை (12.05.2010)  இன்று  கொண்டாடுகிறது .

இலங்கை  பாலஸ்தீன் மக்களோடு , அந்த மக்களின் போராட்டத்தோடு  மிகவும் நெருங்கிய உறவை வைத்திருக்கும் ஒரு நாடாகும் .  இலங்கை ஜனாதிபதி திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர். இதற்கு சான்றாக பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ வீதி என்று கூட பெயரிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று ( 12.05.2010 )இலங்கையில் இஸ்ரேலின் சுதந்திர தின வைபவம் இடம்பெறுவது இவை அனைத்தையும்  கேள்விக் குறியாக்கி இருக்கிறது.

பாலஸ்தீன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட  அந்த மக்களின் தாயக பூமியை சுதந்திர நாடாக அறிவிக்கும் உரிமை இந்த கொலைக்கார  நாட்டுக்கு அறவே இல்லை.

Tuesday, 20 April 2010

19.04.2010 அன்று தடுப்புக் காவல் நீடிக்கப்பட்ட நிலையில்.....அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”



அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”

“இருளிலிருந்து ஒளி”க்கு என்ற இஸ்லாம் சார்ந்த சிங்கள் நூலை வெளியிட்டு இலங்கை காவல் துறையினரால் கடந்த ஒரு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சாரா மாலினி பெரேரா.

19.04.2010 அன்று  சகோதாரி சாரா மாலினி பெரேரா கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும், அவருக்கு சரீர பிணை நிற்பதற்கு கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இருவர் தேவைப்படுவதாகவும் சதோரரர்கள் இம்ராஸ், கலீலுர் ரஹ்மான் ஆகியோரிடமிருந்து தகவல் கிடைக்க நீதிமன்றை நோக்கி விரைந்தேன்..

சாரா மாலினி  சிறை வைக்கப்பட்ட நாள் முதல் இந்தப் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாய் நினைத்து ஒரு மாத காலமாக முயற்சி செய்து வரும் சகோதரர் அஜ்மல், மேமன் இனத்தைச் சேர்ந்த சகோதரர் அபூ ஆகியோர் சாரா மாலினியின் விடுதலைக்கான பெரும் எதிர்பார்ப்போடு நீதிமன்றில் காத்திருந்தனர். கூடவே கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இரண்டு சகோதரர்கள்  பிணை நிற்பதற்காக காத்திருந்தனர்.

செய்தி கேசரிக்க வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரும்  காலை முதல் மாலை வரை காத்திருந்தனர்.

ஆனால் அன்று மாலை வரை அவரை காவல் துறை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல், தடுப்புக் காவலை   மீண்டும் ஒரு மாத காலத்திற்கான நீடிப்பதற்கான ஆணையைப் பாதுகாப்பு  அமைச்சிடமிருந்து பெற்றிருப்பதாக  எமக்கு அறியக் கிடைத்தது.

இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மூன்று இன மக்களில் அதிகப்படியான அரசியல் கட்சிகளையும், அதிகப்படியான இயக்கங்களையும் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றது.

ஆனால், சாரா மாலினி இன்று தனிமைப்பட்டிருக்கிறார்.

Tuesday, 6 April 2010

இரகசிய காணொளி ( Secret Video) - ஈராக்கில் அதிர்ச்சி தரும் அமெரிக்க படுகொலைகள்!

அமெரிக்க வான் படை ஈராக்கிய அப்பாவி மக்களை பச்சை பச்சையாக கொன்று குவிக்கும் படுகொலைக் காட்சிகளடங்கிய இரகசிய ஒளி நாடா ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அராஜகத்தை வெளியுலகிற்கு மீண்டும் ஒரு முறை கசிய வைத்திருக்கும்  இந்த புதிய வீடியோவினால் பென்டகன் தடுமாறிப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..




Tuesday, 23 March 2010

யெஹுதிகளைப் பாதுகாக்கும் சஊதியின் நிகழ்ச்சி நிரல்!

22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது.


எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண்பரொருவரின் சகோதரர் ஒருவருமான றஸீன் மாஸ்டர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சகோ. ரஸீனின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக மையவாடியில் நண்பர்களொடு காத்திருந்தேன்.

அமைதி உலாவும் இடமான அந்த மையவாடியில் அந்த காலை வேளையில்... அமைதியை சிதைத்துக்கொண்டு.. சர்ச்சையொன்று புகைவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

தனது சகோதரரின் ஜனாஸாவை  வழமைக்கு மாற்றமாக சுமந்து வரும் முறையில் அதிருப்தியுற்ற எனது நண்பன் ஜனாஸா ஊர்வலத்திலிருந்து விலகி முச்சக்கர வண்டியில் ஏறி  ஜனாஸா வருவதற்கு முன்பே மையவாடிக்கு வந்து விட்டார்.

அவரின் அதிருப்தியை விசாரித்த போது தனது சகோதரரின் ஜனாஸாவை தனது குடும்ப அங்கத்தவர்களின் விருப்பத்தையும் மீறி,  ஒரு கும்பல் “சுன்னத்தான” முறையில் அடக்கம் செய்யப்போவதாக கூறி, சந்தூக்கில் வைத்து, வழமைக்கு மாறாக சந்தூக்கை துணி ஒன்றால் மூடாமல் கபனிடப்பட்ட ஜனாஸா தெரியும் படி ஊர்வலமாக சுமந்து வருவதாக அறிய வந்தது.

Sunday, 21 March 2010

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும் “இளிச்ச”வாயர்களைக் கொண்ட இஸ்லாமிய சமூகமும்!

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும்
இளிச்சவாயர்களைக்கொண்ட  
இஸ்லாமிய சமூகமும்!




இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு விஜயம் செய்து அதன்  தலைவர் உட்பட அதன் செயலாளருடன் “மகிழ்ச்சி”கரமாக கருத்துப்பறிமாறுகின்றார்.


முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா. அதன் அடாவடித்தனத்தாலும், ஆக்கிரமிப்பாலும், அநியாயத்தாலும்  இராணுவ பலத்தாலும் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இலடசக் கணக்கானோர் காயங்களோடு கப்றுகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்க இராணுவத்தால் கணவன்மார் கொலை செய்யப்பட்டு விதவைகளான ஆயிரக்கணக்கான எங்கள் உடன் பிறவா சகோதரிகள் ஈராக் வீதிகளில் விபசாரத்தை தனது தொழிலாக மாற்றியிருக்கின்றார்கள்.

தாய், தந்தையை இழந்த அனாதைச் சிறுவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்ற போர்வையில் அமெரிக்கா வடிவமைக்கும்  குண்டு வெடிப்புகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்  பல உயிர்களை காவு கொள்ள காரணமாய் இருந்ததும் காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பு அரசியலை முஸ்லிம் நாடுகளில் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் இரத்தத்தையும், அந்நதந்த  நாடுகளின் வளங்களையும்  உறிஞ்சிக் குடிப்பதை குறிக்கோளாய் கொண்டு அதன் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமானது.

அதன் இராணுவ சப்பாத்துகளின் கீழ் நசுங்குண்டு ஈராக் தன் இன்று இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்களை பாதுகாக்கும் அமெரிக்காவின்  வீட்டோ அதிகாரத்தில் சிக்குண்டு பலஸ்தீன் திறந்த வெளிச்சிறையொன்றில் தவித்துக் கொண்டிருக்கிறது.  உணவு, மின்சாரம், தண்ணீர் என்று அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அவர்கள் வாழ்வுக்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆப்கான் அழிந்துக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம்  உலகின் மீது இவ்வளவு அக்கிரமங்களையும் நிகழ்த்திக் கொண்டு ஒரு சில முஸ்லிம் நாடுகளோடும், ஒரு சில  முஸ்லிம் இயக்கங்களோடும், அமைப்புகளோடும் மறைமகமாவும், நேரடியாகவும் கொலைகார அமெரிக்கா நட்பை பேணி வருகிறது.

இந்த அமெரிக்க முஸ்லிம் (?) நட்பின் மூலம் முஸ்லிம் உலகை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை  இந்தக் கைக்கூலி கும்பல்கள்  சாதுர்யமாக செய்தும் வருகின்றன.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...