Monday, 23 May 2011

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்! இக்வான்களின் 'புதிய இஸ்லாமிய' அரசியல்(?)



எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது. 

இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது.
‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  துற்றியும் வந்தனர்.
இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சிப் பயணத்தை அரம்பித்திருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

Sunday, 22 May 2011

ஒசாமாவின் வீடு? வெள்ளை மாளிகையின் போலியான வடிவமைப்பு


மேலே நீங்கள் காண்பது அமெரிக்கா வெளியிட்ட போலியான படம்
                      இது ஒசாமாவின் டிஷ் எண்டனா பொறுத்தப்பட்ட வீடு


                                              இவை உண்மையான படங்கள்



                                           
                                           டிஷ் எண்டனா எங்கே போனது?

ஒசாமாவின் வீட்டின் படம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட படங்கள் கணினியில் மாற்றி வடிவமைக்கப்பட்ட படங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகின்றது.

உலகின் பலம் பொருந்திய ஒரு வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பலம் வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக பெயர் சூட்டப்பட்டதே ஒசாமாவின் அல்காயிதா அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு எவ்வித தொலை தொடர்பு சாதனங்களும் இல்லாத வெறுமையில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.

பின்னர் அமெரிக்கா அவரது வீடு என்று சொல்லப்படுகின்ற கட்டிடத்தில் ஒரு டிஷ் எண்டெனா பொருத்தப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டது.

ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இந்த டிஷ் எண்டனா இல்லாமல் இருந்தது. பிறகு வந்த படங்களில் டிஷ் எண்டனாசேர்க்கப்பட்டிருக்கிறது.

நவீன தகவல் தொழிற் நுட்பத்துடனும், மனித குலத்தை நொடியில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தக் கூடிய அதி நவீன ஆயுதங்களுடனும் ஆதிக்கச் சக்தியாக எழுந்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுகின்ற ஒரு பயங்கவாதியிடம் (?) சாதாரண மக்களிடம் இருக்கின்ற தொடர்பு சாதன வசதிகள் கூட இல்லாமல் உலகோடு தொடர்புகள் அறுந்து தனிமைப்பட்டு இருந்தது உலகிற்கே ஓர் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது.

உலக தொடர்புகள் அறுந்த நிலையில் இருந்த அபோத்தாபாத் வீடு ஒசாமா பற்றியும் அல்கைதா பற்றியும் அமெரிக்கா இதுவரை உலகிற்கு சொல்லி வந்த பிம்பம் தலை கீழாக மாறியிருந்ததை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதை உணர்ந்த அமெரிக்கா அவசர அவசரமாக கணினியின் மூலம் ஒரு டிஷ் எண்டனாவை பொருத்தியிருக்கிறது.

அல்காயிதா என்ற அமைப்பு அரபு நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அமைப்பு என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அல்காயிதா தலைவரை அழித்து விட்டதாக உலகிற்கு கூறி, தனது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய செயல் வடிவத்தை உருவாக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவதாக எழும் சந்தேகத்தில் நியாயமில்லாமல் இல்லை.

வெகு விரைவில் வெள்ளை மாளிகை அதற்கான ஒரு புதிய தலைவரை நியமித்து செயல் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும்.

எது எப்படியிருப்பினும் இஸ்லாத்தையும், தனது கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற போலி வாதங்களை முன்வைத்து எதிரிகளிடம் உதவிபெற்றவர்களின் கதைகள் புஜ்யமாய் முடிந்திருக்கின்றன.

புலியாய் பாய்ந்து தாக்குவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்த சதாம் எலியாய் பொந்திலிருந்து இழுத்து வரப்பட வில்லையா?

ஒன்று மட்டும் தெளிவு

தீயவர்களிடம் நட்பு வைத்து அவர்களின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட அத்தனை பேரும் முகவரியில்லாமல் முடங்கிப்போயிருக்கின்றார்கள்.

சதாமும் ஒசாமாவும் சிறந்த சான்றுகள்!

Saturday, 21 May 2011

ஒசாமா இறந்தது 2006-06-26 அன்று செச்னிய சீ.ஐ.ஏ உளவாளி தகவல்!


ஒசாமாவை அபோத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொன்று உடலத்தை கடலில் எரிந்து விட்டதாக அமெரிக்க கூறியிருக்கும் நிலையில் செச்னிய சீஐஏ உளவாளியான பெர்கன் அஷர் Berkan Ashar  ரஷ்ய தொலைக்காட்சியான Channel One Russia விற்கு ஒசாமா 2006 ம் ஆண்டு இறந்ததாகவும் அவரது உடலம் பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

Friday, 20 May 2011

நரேந்திர மோடியும் குஜராத்தும்!! வெளிவரும் உண்மைகள்!!


 

2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. 


இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன.

தமிழின உரிமை பேசும் தோழர்களும் கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று.

Thursday, 19 May 2011

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!


மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது.
சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.

இலங்கை பல்கலைக்கழக மாணவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி ! இடி விழுந்த நிலையில் இஸ்லாமிய சமூகம்!


இவ்வருடம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இராணுவத்தில் பயிற்சி வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

பயிற்சியில் கலந்து கொள்ளாதோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற மாட்டார்கள் என்று உயர் கல்வி அமைச்சர் எச்சரித்திருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவை சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவ அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இராணுவத் தளங்களுக்கு பெண் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புவதை, அந்தத் தளங்களில் பிள்ளைகளைத் தங்க வைப்பதை நினைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல இன பெற்றோரும் அச்சமுற்று இருக்கின்றனர்.

இந்த இராணுவப் பயிற்சி இஸ்லாமிய சமூகத்திற்கோ பெரும் இடியாக வந்திறங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களின் கலாசாரம் இதற்குக் காரணமாகும்.

உயர் கல்வியில் கீழ் நிலையில் இருந்த இந்த சமூகம் தவழ்ந்து வந்து உயர் கல்வியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யும் இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு இடையுறாக தடையாக இந்த இராணுவப் பயிற்சி வந்திருக்கிறது.

Wednesday, 18 May 2011

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!



இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் சகோதர மத்ததைச் சேர்ந்த சகோ.ஆத்மார்த்தி என்பவரால் எழுதப் பட்டது.


இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...